a_Pen

முதற்பக்கம

மணிக்குரல்

யாழ்மாநகரசபை

ஆனந்தசங்கரி

ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈ.பி.டி.பி

நெருப்பு

புளொட்

தூ

டெலோ நியூஸ் 

இலங்கைநெற் 

மீன்மகள்

 சூத்திரம்   

மகாவலி 

உண்மைகள்  

கவிமலர்

 பூந்தளிர்   

 எங்கள்தேசம்

நோயல்நடேசன் 

விடிவெள்ளி

எங்கள்பூமி 

புயல்   

யாழமுஸ்லீம் 

புண்ணியாமீன் 

பஷீர்      

கவசங்களைதல்  

இலங்கை முஸ்லீம்

எதுவரை

அறிக்கை நியூஸ்

தாய் நாடு

அதிரடி

சுபீட்சம்

தினமுரசு

காத்தான்குடி இன்போ

ARRR

சிறிலங்கா புளொக்

என்தேசியம்

யாழ்நாதம்

Asientribune

The lka academic

Tamil Week 

The Hindu

Daily News

Sunday Times

Daily Mirror

The island

The Sunday Leader

ColomboPage

Sunday Times

CNN

BBC

Newsnow

Thendral Radio

Thenee_head02

Online Newspaper in Tamil                         Vol.  14                               23.08.2014

மெல்பனில் முருகபூபதியின்  சொல்லமறந்த கதைகள்

 நூல் வெளியீட்டு   அரங்கு   23-08-2014 - Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria - 3175)

               படைப்பிலக்கியவாதியும்   பத்திரிகையாளருமான   மெல்பனSollamarantha Kathaikal  Book Cover 02ில்   வதியும்   திரு. லெ.   முருகபூபதியின்   புதிய    புனைவிலக்கிய  கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த   கதைகள்  நூல் வெளியீட்டு   அரங்கு   எதிர்வரும்   23-08-2014 ஆம்  திகதி சனிக்கிழமை  மாலை  மணியிலிருந்து   மணிவரையில்   மெல்பனில்  Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria - 3175)   மண்டபத்தில்  நடைபெறும். கலை, இலக்கிய   ஆர்வலர்   திரு. கந்தையா  குமாரதாசன்   தலைமையில் நடைபெறவுள்ள  சொல்ல  மறந்த   கதைகள்  நூல்  தமிழ்  நாடு  மலைகள் பதிப்பகத்தின்   வெளியீடாகும். இலங்கை - தமிழக - அவுஸ்திரேலியா - கனடா   மற்றும்   ஜெர்மனியில் வெளியாகும்   இதழ்கள்  -  இணைய   இதழ்கள்   ஆகியனவற்றில்   பதிவான படைப்புகளின்   தொகுப்பு   சொல்ல  மறந்த  கதைகள்.    இலங்கையில் நீடித்த   போர்க்காலத்தில்   அரசியலிலும்   மூவீன    மக்களிடத்திலும்   ஏற்பட்ட மாற்றங்களையும்  ஒரு    ஊடகவியலாளனின்   மனிதநேய   -  மனித உரிமைப் பார்வையில்    இலக்கிய   நயமுடன்   பதிவுசெய்த   புதிய    தொகுப்பு   நூல் சொல்ல மறந்த கதைகள். 1972  காலப்பகுதியில்  படைப்பு   இலக்கியம்   மற்றும்   பத்திரிகைத்துறையில் பிரவேசித்த   முருகபூபதியின்   இருபதாவது   நூல்   சொல்ல  மறந்த கதைகள்.    அன்பர்களும்  கலை,  இலக்கிய  ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும்  அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு : முருகபூபதி - மின்னஞ்சல்: letchumananm@gmail.com  தொலைபேசி எண்கள்: 04 166 25 766

___________________________________________________________________________________________________________

மாஸ்கோவில் உள்ள மூன்று மக்டொனால்ட்ஸ் கிளைகள் மூடப்பட்டுள்ளதால், ரஷ்யா முழுவதிலுமுள்ள மக்டொனால்ட்ஸ் உணவகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன

 (Mc donalds-Russia

ரஷ்யா முழுவதிலுமுள்ள மக்டொனால்ட்ஸ் உணவகங்களின் செயற்பாடுகள் பற்றி விசாரணைகள் நடத்தப்படுகின்றன. ரஷ்யாவில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட உணவகம் உட்பட மாஸ்கோவில் மூன்று உணவகங்கள் சுகாதார பிரச்சினைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மாஸ்கோவில் உள்ள ஐந்து மக்டொனால்ட்ஸ் உணவகங்களில் தற்சமயம் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் நுகர்வோர் கண்காணிப்புக்கான நுகர்வோர் உரிமைகள் கட்டுப்பாடு மற்றும் மனித நல்வாழ்வு துறையான ‘றொஸ்போட்ரேபனடோசர்’, கருத்து தெரிவிக்கையில் சோதனைகளின் போது சுகாதார மற்றும் நுகர்வோர் சேவைக்கான விதிகள் மீறப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளது. மாஸ்கோ பிராந்தியத்திலுள்ள மக்டொனால்ட்ஸ் உணவகங்கள்தான் ‘றொஸ்போட்ரேபனடோசர்’ இனால் முதன் முதலாக பரிசோதிக்கப் பட்டவையாகும். “மாஸ்கோ பிராந்தியத்திலுள்ள அனைத்து மக்டொனால்ட்ஸ் உணவகங்களும் இன்னமும் திறந்தே உள்ளன. ‘றொஸ்போட்ரேபனடோசரினது’ பரிநதுரைகளுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் ஆய்வுகளை தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம் நடத்தி வருகிறோம்” என,மாஸ்கோ பிராந்திய கண்காணிப்பகத்தின் தலைவர் ரஷ்யாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான இற்றார் - டாசுக்கு தெரிவித்தார். மேலும்) 23.08.14

___________________________________________________________________________________________________________

இனப்பிரச்சினையால ஆருக்கு லாபம்.

- வடபுலத்தான்

இனப்பிரச்சினையால ஆருக்கு அதிக லாபம்? தமிழர்களுக்கா, சிங்களவTamil landர்களுக்கா, அரசியல்வாதிகளுக்கா, ஊடகக்காரர்களுக்கா, இந்தியாவுக்கா, அமெரிக்காவுக்கா, ஐ.நாவுக்கா, அரசியலை வாய் ஓயாமல் கதைச்சுக்கொண்டிருக்கிற ஆட்களுக்கா, அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்களுக்கா சொல்லுங்கோ பாப்பம்.  என்னப் பொறுத்தவரயில, இனப்பிரச்சினையால மற்ற எல்லாத் தரப்புக்கும் கொள்ள லாபம் கிடைக்கும். ஆனால், சனங்களுக்கோ முழு நட்டமும் பெரும் பாதிப்புமே கிடைக்கும். ஆனால், இதை இந்த பாழாய்ப்போன சனங்கள் உணருகிறதாய் தெரியேல. பாருங்கோ, இதுவரையில நடந்த இனப்பிரச்சினையால சனங்கள் என்னமாதிரி எல்லாம் கஸ்டங்களைப் பட்டதுகள். ஆனால், இதுக்குள்ள அரசியல்வாதிகள் நல்லா திண்டு கொழுத்திருக்கினம். இனவாதத்தை வளர்த்து வளர்த்தே தங்கள் வயிற்றையும் வளர்த்திருக்கினம். இனமானம் எண்டு சொல்லிச் சொல்லியே சனங்களை ஒட்டாந்தியாக்கிப் போட்டு தாங்கள் மட்டும் செழிப்பாய் இருக்கினம். . மேலும்) 23.08.14

___________________________________________________________________________________________________________

தமிழர் விடயத்தில் ஆக்கப்பூர்வமாக செயற்படுங்கள்; சுஷ்மாவிடம் த.தே.கூ வலியுறுத்தல்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயற்பட வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம், இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இரா.சம்பந்தன் கூறுகையில், 'வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது. தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயற்பட வேண்டும் என அவரிடம் நாங்கள் வலியுறுத்தினோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்' என்று சம்பந்தன் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் நாளை சந்தித்து பேசவுள்ளனர்.

___________________________________________________________________________________________________________

ஜப்பான் நாட்டு அனுபவத்துடன் உயர வளரும் பனைச் சபை!

பனை அபிவிருத்தி சபையின் உற்பத்திப் பொருட்களை மிகவும் வெற்றிகரமாக சந்தைப்படுத்துகின்ற நுட்பங்களை கற்பித்துக் கொடுக்கின்றமைக்கு ஜப்பான் நாட்டில் இருந்து துறை சார்ந்த நிபுணர் ஒருவர் வருகை தந்து உள்ளார். ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிறுவனத்தின்  பெண் அதிகாரிகளில் ஒருவரான யோகோ கவாஸ் என்பவரே இரு வருடங்களுக்கு நாட்டில் தங்கி இருந்து சந்தைப்படுத்தல் உத்திகளின் நுட்பங்களை கற்பித்துக் கொடுக்க உள்ளார். இவர் சந்தைப்படுத்தல் துறையில் 14 வருட கால அனுபவம் உடையவர். அத்துடன் சரளமாக தமிழ் பேசக் கூடியவர். பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்துக்கும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பலனாகவே இம்முகவர் நிறுவனத்தின் தொண்டர் சேவைத் திட்டத்தின் கீழ் இவரின் சேவை கிடைக்கப் பெற்று உள்ளது. இவரை பனை அபிவிருத்தி சபை ஊழியர்களுக்கு தலைவர் பசுபதி சீவரத்தினம் நேற்று சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார். தலைவரின் உரையின் முக்கிய பகுதி வருமாறு:- “ யுத்தத்தால் அழிவுற்ற ஜப்பான் தேசத்தை ஜப்பானிய மக்கள் கடின உழைப்பாலும், கடமை உணர்வாலும், தேசப் பற்றாலும் கட்டி வளர்த்தனர். ஜப்பான் அரசாங்கம் அழித்தவர்களை பழி வாங்குகின்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக இணக்க அரசியல் வழிமுறைகள் மூலமே ஜப்பானை உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக கட்டி எழுப்பியது. எனவே ஜப்பானியர்களிடம் இருந்து சுறுசுறுப்பு, கடமை உணர்வு, தேசப் பற்று ஆகியவற்றை கற்று நாமும் எமது பனை அபிவிருத்தி சபையை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வோம். ”

___________________________________________________________________________________________________________

சுற்றுலா அல்லது கல்வி வீஸாவில் வேலைவாய்ப்புக்காக செல்ல வேண்டாம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்காது

சுற்றுலா அல்லது கல்வி வீஸாவில் டுபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக ஆட்களை அனுப்பும் மோசடி வியாபாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அவர்களை அந்த நாடுகளில் தவிக்க விட்டுவிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது. இத்தகைய குழுக்கள் குறித்து பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்தார். கடந்த காலங்களில் இவ்வாறான பல சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பணியக விசேட விசாரணை பிரிவு தகவல் திரட்டியிருந்தது. இவ்வாறு சட்டவிரோதமாக சுற்றுலா மற்றும் கல்வி வீஸாவில் சென்று தொழில் செய்து நட்டாற்றில் விடப்படுபவர்கள் தொடர்பில் பணியகம் எதுவித பொறுப்பும் ஏற்காது எனவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஏமாற்று நபர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் எனவும் அத்தகையோர் குறித்து பணியகத்துக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

___________________________________________________________________________________________________________

ரூபா 27,100 உடன் ஒரு குடும்பம் வாழ்க்கை நடத்த முடியுமா?

எந்த ஒரு மனிதனுக்கும் நியாயான தேவையாக இருப்பது, அவன் அல்லது அcost of livingவளுடைய குடும்பத்துக்கு நாளாந்தம் மூன்றுவேளை வயிறார உணவு, வாழவும் மற்றும் வசதியாகவும் உடையணியதல், அவனும் மற்றும் அவன் அல்லது அவளுடைய குடும்பம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்தல், அவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்குதல், அமைதியாகவும் பாதுகாப்புடனும் வாழ்க்கை நடத்துதல் மற்றும் எதிர்கால அவசர தேவைகளுக்கு வேண்டிய சிறிதளவு சேமிப்பு என்பனவே. ஒரு சமூக பொருளாதார கண்ணோட்டத்தில் மேற்குறிப்பிட்டவைகள் சாதாரண வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளாக கருதப்படுகின்றன. இந்த சௌகரியங்களை அனுபவிப்பதற்கு ஒரு குடும்பத்துக்கு அமைதி மற்றும் பாதுகாப்புடன் கூடிய ஒரு நல்ல வருமானம் தேவையாக உள்ளது. நிச்சயமாக ஒரு நல்ல வருமானத்தை தேடுவதற்கு ஏற்ற முக்கியமான ஒன்றாக இருப்பது, ஒரு வேலை. பெரும்பான்மையான மக்கள், அவர்கள் ஸ்ரீலங்காவிலோ அல்லது வேறெங்கேயோ வாழ்ந்தாலும் அவர்கள் ஊதியம் பெறுபவர்களாகவோ, அல்லது அதற்கு வேண்டி தங்கள் சொந்த வியாபாரங்களை நடத்துபவர்களாகவே உள்ளார்கள், எனவே அவர்களுடய தேவை தங்களுடைய அவசியங்களை பூர்த்தி செய்வதற்கு வேண்டிய உண்மையான ஊதியத்தை சம்பாதிப்பதாகவே உள்ளது. மேலும்) 22.08.14

___________________________________________________________________________________________________________

முருகபூபதியின்   சொல்ல மறந்த கதைகள் அல்ல; சொல்லியே தீர வேண்டிய கதைகள்

முக்காலத்தையும்   உணர்ந்துகொள்வதற்கான  சிந்தனைப்புலத்துக்கு  இட்டுச்செல்லும் சமூகக் கரிசனைக் கதைகள்

                                                                       கருணாகரன்

முருகபூபதி     எழுதியிருக்கும் “சொல்ல மறந்த கதைகள்“   நம்முடைய solla marantha kathaigal சமகால எழுத்துகளில்   மிகுந்த  கவனத்திற்குரியதாக  உள்ளது.    இதற்குப் பல காரணங்கள் உள்ளன.   இந்தக் கதைகள்  ஒரு  காலகட்டத்தின்  உண்மை  மனிதர்களையும் உண்மையான  நிகழ்ச்சிகளையும்   மையமாகக்   கொண்டு   எழுதப்பட்டுள்ளன.   நமது சமகால   அரசியல்,   பொருளாதார,  சமூக,  பண்பாட்டு  அம்சங்களை   உள்ளடக்கியதாக   இவை  உள்ளன.  அத்துடன்   சர்வதேச   ரீதியான அனுபவங்களையும்  நிகழ்ச்சிகளையும்    வரலாற்றுச்  சம்பவங்களையும் உள்ளடக்கியுள்ளன.  வரலாற்றின்   முக்கியமான   ஆளுமைகள்,  முக்கியமான சம்பவங்கள்,  வரலாற்று மனிதர்கள்   முதற்கொண்டு  மிகச்  சாதாரண  மனிதர்கள்  வரையில் சகலதரப்பினருடைய  கதைகளும்   பேசப்பட்டுள்ளன. . முருகபூபதி   இவற்றை ஒரு பத்திரிகையாளராகவும்  ஒரு   இலக்கியப்படைப்பாளியாகவும்  இணைந்து  நின்று நல்லதோர்  வெளிப்பாட்டு  மொழியில்   எழுதியிருக்கிறார்.   இதேவேளை  ஏறக்குறைய முருகபூபதி   சுய வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.  இப்படிப்பல  காரணங்கள்   “சொல்ல மறந்த கதைகளைக் கவனப்படுத்துகின்றன.  இது  இந்தக் கதைகளின்பால்   சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.  மேலும்) 22.08.14

___________________________________________________________________________________________________________

யாரை எங்கே வைக்கிறது எண்டு யாருக்கும் தெரியலே

வடபுலத்தான் -

வவுனியாவில உள்ள அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகம் இது. ஆனால் Awantha cartoonவட மாகாணசபையின்ர நிர்வாகத்துக்கு கீழ இயங்குது. இந்த அலுவலகத்தின்ர பணிகள் நோய்தடுப்புச் செய்வது. இந்தப் பணிமனையில் அதிகாரிக்கும், பணியாளருக்கும் இடையில் ஒரே கசமுசா இந்தக் கசமுசாவுக்கு முடிவே இல்லை. இந்தக் கசமுசா முத்தி சுகாதார மந்திரியின் கதவடிக்குப் போய்விட்டது. சுகாதார மந்திரி தனக்கு விசுவாசமான ரண்டு பேரை ரண்டு பக்கத்தால விட்;டு பிரச்சினை என்ன எண்டும் எப்பிடி இருக்கெண்டும் அறிய முற்பட்டார். இதுக்கிடையில அதிகாரி ஒரு தரப்பாகவும், பணியாளர்களின் ஒரு தொகுதியினர் இன்னொரு தரப்பாகவும் தனித்தனிப் பாதைகளால் அமைச்சரைச் சந்திக்க முயற்சி எடுக்கினம். மந்திரி அனுப்பின ஆட்களில் ஒராள் இந்த அதிகாரியின்ர கயித்திலையோ, வலையிலையோ விழுந்திட்டார். விழுந்தது மட்டுமல்ல வசமாகச் சிக்கியும் போட்டார். இதால அதிகாரி சொல்லுறது எல்லாத்தையும் சரியெண்டும், ஓம் எண்டும் தலையாட்டத் தொடங்கியிருக்கிறார் இந்த வேவுப் புலி. இப்ப பணியாட்களின்ர பாடு பெரிய திண்டாட்டமாப் போச்சு.  எண்டாலும் இதற்குள்ளும் கெட்டிக்கார ஆடுகள் இல்லாமலா போகும்? இந்தக் கெட்டிக்கார ஆடுகள் தங்களை வேவுபார்க்க வந்த மற்றப் புலியை மடக்கப் பாக்கினம். இதால இப்ப ரண்டு புலிகளுக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகியிருக்கு.  மேலும்) 22.08.14

___________________________________________________________________________________________________________

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின்  செயலாளர் நாயகம் மீது தாக்குதல்

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவர் கொண்ட இனந்தெரியாத குழுவினரே அவர் மீது இன்றிரவு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யபட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செயலாளர் நாயகம் விஜயகாந் தலைமையிலான முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

___________________________________________________________________________________________________________

அமெரிக்க பத்திரிகையாளர் தலையை துண்டித்தது பிரிட்டிஷ் ஜிகாதியா?- ஆய்வில் பரபரப்பு தகவல்kill isi

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவை தலையை துண்டித்து கொலை செய்தது பிரிட்டனைச் சேர்ந்த ஜிஹாதியாக இருக்கலாம் என பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்த கிளர்ச்சியாளரின் அடையாளத்தை விசாரணை அதிகாரிகள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தெரிகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து மீண்ட ஒருவர் அளித்த தகவலின்படி, தன்னை ஜான் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோவில் உள்ள அந்த கிளர்ச்சியாளர் பிரிட்டிஷ் ஜிகாதிகளின் ரிங் லீடர் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க உளவு நிறுவனமான எக்.பி.ஐ-யுடன் இணைந்து பிரிட்டனின் எம்-15 புலனாய்வு நிறுவனமும், ஸ்காட்லாந்து நிறுவன போலீசாரும் போலே தலையை துண்டிக்கும் கிளர்ச்சியாளர் அடையாளத்தை காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக 'தி கார்டியன்' செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  மேலும்) 22.08.14

___________________________________________________________________________________________________________

சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் நிராகரிப்பு: வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐநாவுக்கு எழுதிய கடிதம் தீர்மானமாகிறது

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன. வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது. இதன்போது, சிவாஜிலிங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் வர அனுமதிக்க வேண்டும், மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் காலத்தை நீடித்தல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பிற தவறுகள் தொடர்பில் மனித உரிமைப் பேரவை விசாரணை செய்து சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் போன்ற பிரேரணைகள் கொண்டு வரப்படவிருந்தன. இந்தப் பிரேரணைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்ற பிரேரணைகள் என்பதால் இவற்றை ஏற்க முடியாது எனவும் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை ஏற்க முடியாது எனவும் கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும்) 22.08.14

___________________________________________________________________________________________________________

இலத்திரனியல் அடையாள அட்டை : துரித சேவை பெறுவதே நோக்கம்

இலத்திரனியல் அடையாள அட்டை முறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் தனிப்பட்ட விபரங்கள் வெளியாகும் என எவரும் அச்சப்படத் தவையில்லை. அரச மற்றும் தனியார் துறைகளின் ஊடாக காலதாமதமின்றி துரித சேவையை பெற்றுக்கொள்வதற்காகவே புதிய முறை அறிமுகப்படுத்தப்படுவதாக பிரதமர் தி.மு.ஜயரட்ண தெரிவித்தார். இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து அஜித் குமார எம். பி கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்குப் பதிலளித்த பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது. இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்காக 16 ஆயிரம் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டு தேவையான பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஆட்பதிவுத்திணைக்கள உயரதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் விரல் அடையாள அட்டை தொடர்பான அனுபவமுள்ள பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரினூடாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்படவில்லை. இந்தத்திட்டத்தின் கீழ் 16 மில்லியன் பேருக்கு குறுகிய காலத்தினுள் இலத்தினியல் அடையாள அட்டை வழங்கப்படும். மக்களின் தகவல்கள் இலத்திரனியல் அடையாள அட்டையில் உள்ளடக்கப்படுவதால் சேவைகளை துரிதமாக பெற முடியும். அவசர சந்தர்ப்பங்களில் அடையாள அட்டை இல்லாத நிலையிலும் தமது ,அடையாளத்தை உறுதி செய்ய முடியும். மோசடியாக வேறுநபர்கள் அடையாள அட்டையைப் பாவிப்பதைத் தடுக்க வாய்ப்பு ஏற்படும். இந்தத்திட்டத்திற்கு 2011 இல் அமைச்சரவை அனுமதி வழங்கியது. அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டு இது குறித்து ஆழமாக ஆராயப்பட்ட பின்னரே தேவையான சட்ட திருத்தங்கள் தயாரிக்கப்பட்டன. இலத்திரனியல் அடையாள அட்டை முறையினால் நபர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படுகிறது என்றார்.

___________________________________________________________________________________________________________

புதுடில்லிக்கு பயணமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இந்திய தலைநகர் புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யுஎல்195 விமானத்தின் மூலம் பயணமானது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் பொன்.செல்வராஜா மற்றும் சுபாஸ் சந்திரன் ஆகியோரடங்கிய அறுவர் கொண்ட உயர் மட்டக்குழுவே பயண மேற்கொண்டுள்ளது.  புதுடில்லி செல்லும் இவ்வுயர் மட்டக்குழுவானது நாளை வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாசுவராஜை சந்திக்கவுள்ளது. மறுநாள் சனிக்கிழமையன்று இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியுடன் கூட்டமைப்பு முதன்முதலாக விசேட சந்திப்பில் பங்கேற்கவுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் புதிய இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுடனும் விசேட பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவுள்ளது.

___________________________________________________________________________________________________________

எபோலா நோய்க்கு இதுவரை 1,350 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

எபோலா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை, தற்போதைய நிலையில் 1,350 ஆக அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எபோலா வைரஸ் அபாயகரமாக பரவி வரும் ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா மற்றும் சீயேரா லியோனா ஆகிய நாடுகளில், இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், எபோலா வைரஸ் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,350 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது. இதில், அதிக அளவாக லைபீரியாவில் மட்டும் 576 உயிரிழந்துள்ளனர். இங்கு எபோலா வைரஸ் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நோய் கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில், லைபீரியாவில் சிக்கல் நீடிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்தாக, கினியாவில் 396 பேரும், சீயேரா லியோனாவில் 374 பேரும், நைஜீரியாவில் 4 பேரும் பலியாகியதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எபோலாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 2,473- ஆக உயர்ந்துள்ளது. இதில், லைபீரியாவில் 972 பேருக்கும், சீயேரா லியோனில் 907 பேருக்கும், கினியாவில் 579 பேருக்கும், நைஜீரியாவில் 15 பேருக்கும் எபோலா நோய் இருப்பது உறுதியாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

___________________________________________________________________________________________________________

ஐநா தீhமானத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பங்கு (2)

-  கமெலியா நாதானியேல்

ஹரியின் அறிக்கை எல்.ரீ.ரீ.ஈ பரப்புரையாளர்களின் நவீன சிந்தனைகளை எதிரொலிக்கிறLtte Training-2து. எனினும் கிட்;டத்தட்ட 300,000 தமிழ் பொதுமக்கள் முனனேறி வரும் ஸ்ரீலங்கா இராணுவத்தை நோக்கி தங்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து தப்பி ஓடினார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் ஒரு இனப்படுகொலை நடத்தப் பட்டிருந்தால் தமிழ் பொதுமக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தை நோக்கி ஓடி வந்திருக்க மாட்டார்கள். இந்தக் கள நிலமைகளின் யதார்த்தத்தை வைத்துப் பார்க்கும்போது, ஸ்ரீலங்கா அரசாங்கம் இனப்படுகொலை நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது மற்றும் நகைப்புக்கிடமானது. மேலும் தலைவர்களை கொலை செய்தது, பொதுமக்களை கொலை செய்தது, பொது இடங்களில் குண்டுத்தாக்குதல் நடத்தியது போன்ற எல்.ரீ.ரீ.ஈயின் அட்டூழியங்களை ஹரி ஒருபோதும் அம்பலப் படுத்தவில்லை. மதிப்புமிக்க தமிழ் அரசியல்வாதியும் 2006ல் யுனெஸ்கோவினால் சகிப்புத்தன்மை மற்றும் வன்முறையற்ற தன்மை என்பனவற்றை மேம்படுத்தியதற்காக வழங்கப்படும் மதன்ஜீத் சிங் பரிசினை வென்றவருமான அவரது தந்தை வி.ஆனந்த சங்கரி என்கிற வீரசிங்கம் ஆனந்த சங்கரியை போலல்லாது ஹரி தொடர்ச்சியாக எல்.ரீ.ரீ.ஈ யினை பாதுகாத்ததுடன் அதன் இலட்சியங்களையும் மதித்து வந்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈயினையும் அதன் கொலைகளையும் தொடர்ந்து எதிர்த்து வரும் அவரது தந்தையான வீ.ஆனந்தசங்கரி வெட்கப்படும் விதத்தில் ஹரி பின்வருமாறு எழுதியிருந்தார். மேலும்) 21.08.14

___________________________________________________________________________________________________________

சனங்களைப் பற்றிக் கவலையில்லை. தங்களைப்பற்றியே கரிசனை

-    வடபுலத்தான்

வடக்கு மாகாணசபைக்குள்ள முறுகல் எண்டால் அதைப்பற்றிச் சொல்லி TNA_NPC_Jaffnaவேலையில்லை. அந்த அளவுக்கு ஏகப்பட்ட போட்டிகளும் பிரச்சினைகளும் உள்குத்து வெட்டுகளும் கழுத்தறுப்புகளுமாக மாகாணசபையே உச்ச வெப்பத்திலதான் இருக்கு. எந்த நேரமும் மாகாணசபைக் கட்டிடமே தீப்பிடிக்கலாம் எண்ட நிலைதான் இப்ப இருக்கு எண்டு சொல்லிக் கவலைப்படுகிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்ரை மாகாணசபை உறுப்பினர் ஒருவர். இந்த வயசாளியான மாகாணசபை உறுப்பினருக்கு இதையெல்லாம் பார்க்க வெட்கமாகவும் கவலையாகவும் இருக்கு. இதை இப்பிடியே விட்டால் நாளைக்கு கூட்டமைப்பின்ரை எதிர்காலமும் பாதிப்படையும். சனங்களின்ரை வாழ்க்கையும் மண்ணாய்ப்போகும் எண்டு தன்ரை அபிப்பிராயங்களை சக மாகாணசபை உறுப்பினர்களுக்குச் சொல்லிப்பார்த்தார். எவரும் இதற்கு நல்ல பதிலைச் சொல்லக்காணோம். அப்பிடியே கூட்டமைப்பு எம்பி மாருக்கும் முதலமைச்சருக்கும் மாவையருக்கும் சம்மந்தருக்கும் தனித்தனியாகக் கடிதங்கள் எழுதிப்பார்த்தார். அதற்கும் பதிலில்லை . மேலும்) 21.08.14

___________________________________________________________________________________________________________

திரும்பிப்பார்க்கின்றேன்

மல்லிகை ஜீவா  வருணித்த  அச்செழு  பண்ணையார் தம்பையா   அண்ணன்.

உரும்பராய் மண்ணில்   உழைப்பின்  உபாசகர்

- முருகபூபதி

தி.ஜானகிராமன்  எழுதிய  கதையொன்றிலே  ஒரு  வசனம்  இப்படி வந்ததாக   ஞாபகம்Thambaiya. தரையில்  வரைந்த   கோலம்   எழுந்து  நின்றதுபோல்--- சௌந்தர்ய உபாசகரான  அவர்  -  ஒரு  பெண்ணை   அவ்வாறு   வர்ணிப்பார்.  எங்கள்  அச்செழு  பண்ணையார்  -   என   நண்பர்  மல்லிகை  ஜீவா வர்ணிக்கும்  தம்பையா   அண்ணர்   தமது   நினைவின்  அலைகள் சுயசரிதை   நூலை  இவ்வாறு   ஆரம்பிக்கின்றார்.  உரும்பராய்ச்சந்தி  –  சிலுவையை   நிலத்தில் கிடத்திவைத்தாற்போன்றதொரு  சந்தி.  ஜானகிராமன்   கோலத்தை  நிமிர்த்துகிறார்.   தம்பையா   சந்தியை கிடத்துகிறார்.   படைப்பாளிகளுக்கு   இப்படி    அபூர்வமாகவே   கற்பனை தோன்றும்.   லா.ச.ரா.  எழுதுவார் -   அவள்    இடுப்பின்   வளைவில்    குடத்தின் வளைவு    ஏறியது  -  என்று.  அபூர்வமாக   வந்து விழும்  சித்திரங்களை  எம்மால்   எப்படி மறக்கமுடியாதோ   அப்படித்தான்  தம்பையா  அண்ணர்  என்ற   அபூர்வ மனிதரையும்   மறக்கமுடியாது. மேலும்   ஐந்துவருடங்கள்   வாழ்ந்திருப்பாராகில்   நாம்   அவருக்கு பவளவிழா    கொண்டாடியிருப்போம்.   நான்  போகிறேன்  நண்பர்களே  –  நீங்கள்   கொண்டாடுங்கள் -  என்று அவர்  தனக்குள்   நினைத்துக்கொண்டு ஆழந்ததுயில்  கொண்டிருக்கவேண்டும்.   அது    மீளாத்துயில்.  ஒருவரது  மரணத்தை  கொண்டாட முடியுமா?   முடியும்.    நிச்சயமாக முடியும். மேலும்) 21.08.14

___________________________________________________________________________________________________________

காலநிலை மாற்றம்: 'இலங்கைக்கு பெரும் பாதிப்பு வரும்'

- பி.பி.சி

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான காலநிலை மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்ற மழைவீழ்ச்சியை நம்பிய வருமான மூலங்களில் தங்கியிருக்கிறார்கள் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், அறிவு முகாமைத்துவம் மற்றும் நீடித்த அபிவிருத்திக்கான துணைத் தலைவர் பிந்து லொஹானி தெரிவித்துள்ளார். ஆகவே, கடுமையான காற்றின் அதிகரிப்பு, வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றம் ஆகியவை அவர்களது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.  மேலும்) 21.08.14

___________________________________________________________________________________________________________

புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கிய இந்தியாவின் தீர்மானம் வரலாற்றுத் தவறு

 - சுப்பிரமணியம் சுவாமி

இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை swamy-2மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார். இந்தியாவை பொறுத்த மட்டில் தேசிய மட்டத்திலான நலனை கருத்திற் கொண்டே தனது வெளிநாட்டு மற்றும் தேசிய கொள்கையை வகுக்குமே தவிர பிராந்திய அல்லது ஒரு தரப்பினரின் தேவையை கருத்திற் கொண்டல்ல என்று தெரிவித்த அவர், இலங்கையும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்தார். இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நாள் நேற்றாகும். நிறைவு நாள் நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில், தமிழ் நாட்டிலுள்ள சிலரது அழுத்தங்கள் காரணமாகவே இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் அப்போது காணப்பட்டன என்றாலும் எப்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கவும் இல்லை ஒத்துழைக்கவும் இல்லை. இதனை இந்தியாவில் நடைபெற்ற சகல தேர்தல்களின் போதும் மக்கள் நிரூபித்து காண்பித்துள்ளனர்.  மேலும்) 21.08.14

___________________________________________________________________________________________________________

வடமாகாணசபை எமக்கு எதுவும் செய்யவில்லை: யாழ். மேயர்

வடமாகாணசபை ஆட்சிப்பீடம் ஏறியதிலிருந்து யாழ்.மாநகர சபைக்கு எதுவும் செய்யவில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா புதன்கிழமை தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் விசேட கூட்டம் மாநகர கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது. இதன்போதே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, வடமாகாண சபையுடன் நாங்கள் தொடர்புகொள்ள முனைகின்ற சந்தர்ப்பங்களில், அவர்களால் நாங்கள் நிராகரிக்கப்படுகின்றோம். அத்துடன், நாங்கள் அனுப்பும் கடிதங்களுக்கும் மாகாண சபை பதிலளிப்பதில்லையெனத் தெரிவித்தார். மேலும், மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் ஏற்பட்ட முறைகோடுகள் தொடர்பில் வடமாகாண சபையால் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அறிந்தேன். இவ்வாறு விசாரணை செய்ய முற்படுபவர்கள் மாநகர சபையின் முன்னைய ஆட்சியாளர்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

___________________________________________________________________________________________________________

எபோலா தொற்று அபாயத்தால் லைபீரியாவில் ஊரடங்கு: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கட்டுப்பாடு

எபோலா நோய் தலைநகரில் பரவுவதை தடுக்க 50 ஆயிரம் பேர் வசிக்கும் குடிசைப் Ebola_virusபகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று லைபீரிய அதிபர் எலன் ஜான்சன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று எபோலா தொற்று ஏற்பட்ட 3 சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சோதனை மருந்து, பலன் தருவதாக கூறப்பட்டதை அடுத்து, அதன் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை தொடர முடிவெடுக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக லைபீரிய அதிகாரிகள் கூறினர். லைபீரியாவின் மேற்கு பகுதியை தாண்டி, மக்கள் யாரும் செல்லாதவாறு அங்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. அரசின் தனிமைப்படுத்தும் நடவடிக்கையால், லைபீரிய மக்கள் அரசின் மீது கோபம் கொண்டுள்ளனர். இன்று காலை தலைநகர் மோன்ரோவியாவில் உள்ள சுதாதார நிலைய அதிகாரிகள் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.  மேலும்) 21.08.14

___________________________________________________________________________________________________________

ஐநா தீர்மானத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பங்கு (1)

-  கமெலியா நாதானியேல்

ஐநா தீர்மானப்படி பயங்கரவாத அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ள கனடிய CTC -demoதமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்காமீது சாட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான ஒரு விசாரணை நடத்துவதற்காக அமைக்கப் பட்டுள்ள ஐநாவின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு தனது முழு ஆதரவையும் மற்றும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுவை, ஸ்ரீலங்காவுக்கு எதிரான விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதற்காக  ஏராளமான இதர பயங்கரவாத அமைப்புகளும் அணுகியுள்ளன. கனடிய தமிழ் காங்கிரஸின்(சி.ரி.சி) நிறைவேற்று இயக்குனரான டன்ரன் துரைராஜா, ஒருபத்திரிகை அறிவிப்பில் தெரிவித்துள்ளது: “ஐநாவின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு முன்னால் சாட்சியமளிக்க விரும்பும் எந்த சமூகத்தை சேர்ந்த அங்கத்தவர்களும் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்களை கனடிய தமிழ் காங்கிரஸிடம் வழங்கும்படி நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் அந்தப் பட்டியலை தொகுத்து அவர்கள் வேண்டுகோள் விடுக்கும்போது, ஐநாவின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு அதனை இரகசியமான முறையில் நேரடியாகச் சமர்ப்பிப்போம்” என்று.   மேலும்) 20.08.14

முன்னைய பதிவுகள்

10years_thenee-1
yaarl oli
LTTE_Chambers1

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள்
துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை:
கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்

rajes1இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சிறுகதைத்தொடர் (1)

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் (1)

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் (2)

amir-mankaiYogeswaran-2