Theneehead-1

Vol: 14                                                                                                                                                09.02.2017

அரச காணிகளிலேயே படை முகாம்

மக்களின் காணிகள் என்பதை உறுதிப்படுத்தினால் உடன் நடவடிக்கை

அரசாங்கத்திற்கு சொந்தமான காணியிலேயே கேப்பாப்புலவில் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமது காணிகள் இருப்பதாக மக்கள் பிரதேச செயலாளரினூடாக உறுதிப்படுத்தினால் தேவrosanையான நடவடிக்கைகளை எடுக்க தயார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

உண்மை நிலைமை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாகக் கூறிய அவர் வேறு நோக்கத்தில் மக்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கேப்பாப்புலவு உண்ணாவிரதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,

கேப்பாப்புலவு தொடர்பான பிரச்சினை தொடர்பில் அந்த மக்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளோம். இரு வாரங்களுக்கு முன்னர் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. வவுனியாவில் 16 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம். மக்கள் உறுதிப்படுத்தியமைக்கமைய அவர்களின் காணிகளை இராணுவம் விடுவித்து வருகிறது. இங்கும் பொதுமக்கள் தமது சொந்த இடம் என்பதை நிரூபித்தால் தேவையான நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்ள தயாராக இருக்கிறது.

தற்பொழுது படை முகாம் அமைந்துள்ள இடம் அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதியாகும். இது வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழே வருகிறது. யாராவது இந்த காணி தம்முடையது என ஆதாரங்களுடன் நிரூபித்தால் விமானப் படை அதற்கான ஒழுங்குகளை செய்யும். பிரதேச செயலகத்தினூடாக மக்களுக்கு உறுதிகளை சமர்ப்பிக்க முடியும்.

ஆனால் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தியும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வேறு நோக்கத்தில் இவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் நோக்கத்தில் இதனை செய்கின்றனரா என்று தெரியாது.

2009 ஆம் ஆண்டு முதல் கேப்பாப்புலவில் இந்த பிரச்சினை வரவில்லை. இது அரசாங்க காணி என்ற அறிவுறுத்தலின் பிரகாரமே இங்கு முகாம் நிர்மாணிக்கப்பட்டது. நாம் மக்களுடன் பேசி வருகிறோம் என்றார்.

dantv