Theneehead-1

Vol: 14                                                                                                                                                10.02.2017

2000 மாணவர்களைச் சென்றடைந்த ராவணேசன்

  கலாநிதி சி. மௌனகுரு

நம் மாணவர் மத்தியில் காத்திரமான ஒர் நாடகப் பண்பாட்டை உருவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவதன் மூலம் ஒர் காத்திரமான சமூகத்தையும் உருவாக்கவும் முடியும்wert(1)

சென்றவாரம் மட்டக்களப்பில் 4.2.2017 அன்று காலை மட்டக்களப்புத் தேவனாயகம் மண்டபத்திலும்
6.2.2017 அன்று காலையும் மாலையும் இரு காட்சிகளாக கழுதாவளை மஹாவித்தியாலய மண்டபத்திலும் மேடையேறியது. ஒவ்வொரு காட்சிகளிலும் 700க்குக் குறையாத மாணவர்கள் கலந்து கொண்டனர்

இம்முறை இராவணேசனை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இளைஞரகள் மத்தியிலும் கொண்டு செல்வதே எமது நோக்கமாக இருந்தது  இச் சிந்தனை காரிய சித்தியாகப் பல நண்பர்களும் எனது பழைய மாணவர்களும் தாமாக முன் வந்து உதவினர்

நகரப் புறப் பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றிக் கிராமப் புறப் பாடசாலை மாணவர்களும் இராவணேசன் காண வந்திருந்தனர்   மிகத் தொலைதூரத்திலிருந்தும்  வாகனம் ஒழுங்கு செய்து வந்து   நாடகம் கண்டு களித்தனர். நாடகம் முடிய மேடையேறித் தம்  கருத்துகள் உரைத்தனர்  எம்முடனும் இராவணேசனில் பங்கு கொண்ட கலைஞர்களைக் கை கொடுத்து வாழ்த்தினர் தழுவியும் கொண்டனர்

மாணவர்கள் முகத்தில் காணப்பட்ட பிரமிப்பு,எல்லையற்ற ஆனந்தம்உணர்ச்சி , ஆர்வம்,பூரிப்பு என்பன எமக்குப் பெரு மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்தன.  எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

காத்திரமான நாடகங்களை நமது மாணவர்கள் இளைஞர்கள் பார்க்க வேண்டும்   பாடசாலைப் பரிசளிப்பு விழாக்களிலும் தமிழ்த்தினப் போட்டிகளுக்குத் தயாரிக்கப்படும் நாடகங்களையே நாடகங்கள் என எமதுஆசிரியர்களும் மாணவர்களும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அந் நாடகங்களைக் காணும் சந்தர்ப்பம் மாத்திரமே மாணவர்களுக்குக் கிடைக்கிறது   .இதனால் காத்திரமான நாடக ரசனை வளராமல் இருப்பதுடன் நாடகம் பற்றிய மட்டமான ஒர் அபிப்பிராயமும் தமிழ்ப் பெற்றோர் மத்தியிலும்,கற்றோர் மத்தியிலும் காணப்படுகிறது

நாடகம் ஒரு சமூகத்தின் கூட்டு மொத்தமான பண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஓர் கலை
நம் மாணவர் மத்தியில் காத்திரமான ஒர் நாடகப் பண்பாட்டை உருவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவதன் மூலம் ஒர் காத்திரமான சமூகத்தையும் உருவாக்கவும் முடியும்.

ஒரு சமூகத்தில் கணப்படும் அரங்கம் அச்சமூகத்தின் கூட்டு மன நிலை,நனவிலி மன நிலை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்த வல்லவை  நல்ல நாடகம் மாணவர்களின் மன வளத்தை மேலும் கூட்டும்.அவர்கட்கு ஜீவ சக்தி தரும்  பரீட்சையில் அதிக புள்ளிகள் பெறுவதொன்றே கல்வி என எண்ண்ணிக் கொண்டு தம் பிள்ளைகளைத் தினமும் தம்மை அறியாது வதைத்துக்கொண்டிருக்கும் பெற்றார்களும்

நம் மாணவ்ர்களுக்கான கல்வித் திட்டம் வகுக்கும் கல்வியிலளார்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்

dantv