Theneehead-1

Vol: 14                                                                                                                                                11.02.2017

சைட்டம்: ஒரு சுவையான நொறுக்குத்தீனியாக மாறி வருகிறது, ஜாக்கிரதை

                                         குசல் பெரேரா

இந்த நாட்டுக்கு உடனடியாக தேவையாக உள்ளது என்னவென்றால் ஆரம்ப பாடசாலைsaitam முதல் பல்கலைக் கழக மற்றும் மூன்றாம் நிலை கல்வி உட்பட்ட உயர்கல்வி வரையில் தொலைநோக்கு பார்வையுள்ள கல்வி சீர்திருத்தமே ஆகும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி31, 2017ல் எடுத்த முடிவு ஒருபுறம் இருந்தாலும்,சைட்டம் (ளுயுஐவுஆ) எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கியுள்ளார்கள் மற்றும் ஊடகங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (ஐ.யு.எஸ்.எப்) மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) என்பன இந்த ஆர்ப்பாட்டங்களிலேயே வாழ்கின்றன.  மாணவர்கள் மத்தியில் ஆதிக்கத்தை நிறுவும் அரசியல் குழுக்களுக்கு இடையேயான போட்டியில், பல்கலைக்கழகங்களுக்குள்; சைட்டம் ஒரு அறைகூவலாகவே மாறிவிட்டது.

தற்போதைய ஐ.யு.எஸ்.எப் அரசியல் தலைமை அதன் அரசியல் போட்டியாளர்களை வெளியே நிறுத்தும் முயற்சியாக இந்த சூட்டை தொடர்ந்து பேணவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. ஆகவே ஜி.எம்.ஓ.ஏ தலைமை, அவர்களின் நியாயமற்ற மற்றும் முறைகேடான பிடியை சுகாதாரத் துறை மீது செலுத்தி வருகிறது. சைட்டத்துக்கு எதிரான முழு பிரச்சாரமும் எந்தவித பகுத்தறிவோ, பொது உணர்வோ மற்றும் நல்லறிவோ இல்லாததாக உள்ளது.

பணக்கார மாணவர்களுக்கு தகாத சலுகைகளை வழங்குகிறது என்பதன் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை எதிர்க்க வேண்டுமென்றால், மருத்துவ பட்டங்களை பணத்துக்கு விறபனை செய்யும் கொத்தலாவல பாதுகாப்பு கல்வி நிறுவனத்துக்கு (கே.டி.ஏ) எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டும். மாணவர்கள் வெளிநாடு சென்று, எங்கள் வெளிநாட்டு வருவாயில் பெற்ற டொலர்களைச் செலவழித்து வெளிநாட்டு மருத்துவ பட்டங்களுடன் திரும்பி வருவதற்கு துணை செய்யும் பரீட்சை சட்டம் 16 அகற்றப்பட வேண்டும். அரசாங்க பல்கலைக்கழகங்களில் இருந்து சித்தியடைந்து வெளியேறும் மருத்துவர்களுக்கு செல்லவேண்டிய வாய்ப்புகளை அபகரித்துக் கொள்வதால் சுகாதாரத்துறையின் நியமனங்களுக்கு அவர்களை அங்கீகரிக்க கூடாது.

ஆனால் இவை எதைப்பற்றியும் பேசப்படுவதில்லை. அதில் எந்த ஒன்றையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் படுவதில்லை. அப்படியானால்  சைட்டம் மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது? சைட்டத்திற்கு எதிரான மிகவும் பிரபலமான விவாதம் அதன் தரம் பற்றியது. ஸ்ரீலங்கா மருத்துவ சபை (எஸ்.எல்.எம்.சி) பேராசிரியர் கார்லோ பொன்சேகா தலைமையின் கீழான அதன் சொந்த உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகiளையே மோசடியாக்கியுள்ளது, பேராசிரியர் கார்லோ பொன்சேகா இந்த வயதில் தான் இன்னொரு வேலையில் ஆர்வம் காட்டவில்லை என ஊடகங்களிடம் தெரிவித்தார், ஆனால் அதற்கு இரண்டு வாரங்களின் பின்னர் 2 ஜனவரி 212ல் அதன் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டர். இதற்கான காரணம் ஜனாதிபதி ராஜபக்ஸவை சந்தோஷப்படுத்துவதே தவிர வேறு ஒன்றுமில்லை. தரம் என்பது விட்டுக்கொடுப்புக்கு உட்பட முடியாது என்பது ஏற்றுக்கொண்ட ஒரு விதி. அப்படியானால், அது அதேபோல அரசாங்க பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். மருத்துவ பட்டதாரிகளை உற்பத்தி செய்வதற்கு ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு என்ன தரம் உள்ளது? தரம் என்பது மருத்துவ வசதிகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை. தகுதிவாய்ந்த நிரந்தர கல்வியாளர்கள் கிடைப்பதிலும் தங்கியுள்ளது. அதேபோல ஆய்வுகூடங்கள் மற்றும் நூலகங்களின் தரத்திலும் அது தங்கியுள்ளது.

உண்மையில் ஸ்ரீலங்காவிலுள்ள எல்லா பல்கலைக்கழகங்களும் உலக தரப்படுத்தலில் 2,000 க்கும் கீழான நிலையிலேயே உள்ளன, கொழும்பு பல்கலைக்கழகம் 2171ம் இடத்தில் உள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு கல்வி நிறுவனம் (கே.டி.ஏ), உலக தரத்தில் 9,938ம் இடத்தில் உள்ளது, அனால் அதன் மருத்துவக் கல்லூரி உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது மற்றும் வஞ்சனையான முறையில் ஜி.எம்.ஓ.ஏ யாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது, மற்றும் ஐ.யு.எஸ்.எப் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவும் இல்லை.

எங்களிடம் ஒரு ஸ்ரீலங்கா மருத்துவ சபை (;.எஸ்.எல்.எம்.சி) உள்ளது அது கே.டி.ஏ யின் மருத்துவ பீடத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், 08 பெப்ரவரி 2007ல் உள்ளபடி 40 வெளிநாட்டு மருத்துவ பீடங்கள்  வழங்கும் மருத்துவ பட்டங்களை அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்தும் உள்ளன, அவற்றின் தரம் பற்றி ஒருபோதும் கேள்கி எழுப்ப படவில்லை. அவற்றின் மத்தியில் உள்ள சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உலகப் பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலின்படி எந்த தரத்தையும் கொண்டிருக்கவில்லை (பெலாரஸில் உள்ள குரடோனோ அரச மருத்துவ பல்கலைக்கழகம் 5,566ம் இடத்திலுள்ளது). அத்தகைய பதிவுகளைப்பற்றி ஜி.எம்.ஓ.ஏ ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஒருவேளை ஐ.யு.எஸ்.எப் இது பற்றி அறியாமலிருக்கலாம்saitam-1

எஸ்.எல்.எம்.சி கூட மீள் கட்டமைப்பு செய்யப்பட வேண்டும். மருத்துவர்கள் முழு எஸ்.எல்.எம்.சி க்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி, ஜி.எம்.ஓ.ஏக்கு  அதன் முத்திரை இல்லாமல் ஒரு அசிங்கமான முன்னிருப்பினை வழங்குகிறார்கள். இதன்படி எஸ்.எல்.எம்.சி அரசியல் ரீதியாக ஒரு மோசடியான சபையாக உள்ளது. பேராசிரியர் கார்லோ பொன்சேகாவை அதன் தலைவராக அப்போதைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளையும் மீறி ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசியல் தேவைக்காக மட்டுமே நியமித்தார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது, தற்போதுள்ள அமைப்புமுறை அனுமதிக்கப்படும்வரை இத்தகைய மோசடிகள் தொடரவே செய்யும்.

இதற்கு முரண்பாடாக பிரித்தானிய பொது மருத்துவச் சபை (ஜி.எம்.சி), 12 அங்கத்தவர்களைக் கொண்டது, 6 பொது அங்கத்தவர்களும் மற்றும் 6 மருத்துவத்துறை அங்கத்தவர்களும் உள்ளனர்;, அனைவரும் பகிரங்கமானதும் சுயாதீனமானதுமான நியமன நடவடிக்கைகள் மூலம் நியமிக்கப் படுவார்கள். இந்த ‘பொது உறுப்பினர்கள்’ என அழைக்கப்படுபவர்கள்,பிற துறைகளில் மிகவும் புகழ் வாய்;ந்த நிபுணர்களாகவும் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதிப்படுத்துபவர்களுமாக இருப்பார்கள். ஸ்ரீலங்கா மருத்துவ சபையில் அத்தகைய பொது உறுப்பினர்கள் பகிரங்கமானதும் மற்றும் சுயாதீனமானதுமான ஒரு நடவடிக்கை மூலமாக நிமிக்கப்படுவது இல்லாத படியாலேயே எஸ்.எல்.எம்.சி ஒருதலைப்பட்சமானதாகவும் மற்றும் மோசடியானதுமான சபையாக உள்ளது.

அத்தகைய அரசியல் ரீதியாக தூண்டப்பட்டதும் மற்றும் முடிவுகள் மேற்கொள்வதில் செல்வாக்கு செலுத்தப்படுவதுமாக உள்ளதினால், மொத்தத்தில் இது அநீதியான அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் குறுங்குழுவாதம் என்பன கல்வியில் பிரதான பிரச்சினைகளை கிரகணம் போல இருட்டில் ஆழ்த்தி அவற்றை கிட்டத்தட்ட பொருத்தமற்றதாகச் செய்துவிடும்.

ஸ்ரீலங்காவில் கல்விமுறையை அடியில் இருந்து குலுக்கி மற்றும் தீவிரமானதும் தொலைநோக்கினை அடையக்கூடிய சீர்திருத்தங்களுக்கு உள்ளாக்கி எடுக்கவேண்டும். கல்வியை ஜனநாயகமயமாக்க வேண்டும், அதன் உள்ளடக்கங்கள் பாடத்திட்டங்கள் மற்றும் பாடவிதானங்கள்,வகுப்பறையின் தரம் மற்றும் மேம்படுத்தப்பட்டதும் நவீனத்துவமானதுமான  கற்பித்தல் என்பனவற்றின் அடிப்படையில் தரமுயர்த்தப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும் அத்துடன் பாடசாலை நிருவாகம் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகாரத்துவ கட்டுப்பாடுகள் இன்றி திறமையானதாக மாற்றவேண்டும். கல்வி கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய தீவிரமான பரந்த பிரசங்கங்கள் மேற்கொண்டு சமூகத்தை இழுப்பதற்கு தேசிய கல்வி பற்றிய வெள்ளை அறிக்கை வரைதல் வேண்டும்.

தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தும் கல்வி அத்தகைய தேசிய கொள்கையில் ஒரு அம்சமாக இருக்கலாம். இதன்படி தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான சைட்டம் அதன்பிறகு ஒரு பிரச்சினையாக இருக்காது மற்றும் அப்போதிருந்த அரச சபை பின்பற்றிய ‘கன்னங்கார கல்வி சீர்திருத்தம் என பொதுவாக அழைக்கப்படும் 1943 ம் ஆண்டின் அமர்வு பத்திரம் 24 ல் உள்ளவற்றை வாசிக்காதவர்கள்கூட அதை தவறாக வெளிப்படுத்துகிறார்கள். கன்னங்கார சீர்திருத்தங்கள் என்பது இலவசக் கல்வியை வழங்குவது மட்டுமல்ல. கன்னங்காரவின் கல்வி சீர்திருத்தம் என்பது கல்வியை முற்றாக இலவசமாக வழங்குவது என்றும் மற்றும் கலாநிதி. கன்னங்காரவை இலவசக் கல்வியின் தந்தை எனப் புகழ்வதும் மொத்தமாக திரிபு படுத்தப்பட்டவையாகும்.

உண்மையில் அவர் தேசியக் கல்வியின் தந்தையாவார்.; தேசிய கல்விக் கொள்கை இல்லாத ஒரு நாட்டில் அமர்வு பத்திரம் 24ல் பதிவு செய்யப்பட்ட சீர் திருத்தத்தின் முழு நோக்கமும், ஒரு பொதுவான முறைப்படியான கல்வி முறையை அனைத்து மாணவர்களுக்கும் தேசிய ரீதியாக பொதுவான பாடத்திட்டத்தில் மற்றும் தரமான பரீட்சையின் அடிப்படையில் வழங்குவதை இலட்சியமாக கொண்டது.

“இரண்டாம் நிலை பாடசாலைகள் அவர்களின் பாட விதானங்கள் பரீட்சைகளில் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது, ஆனால் இதுவரை பரீட்சைகள் பாடத்திட்டங்களை முடிவு செய்வனவாகவே இருந்து வருகின்றன, அவை உள்ளுர் நிலமைகளையும் மற்றும் தேவைகளையும் அடிப்படையாக கொண்ட இலங்கை பரீட்சைகளாகவே இருக்க வேண்டும் (அமர்வு பத்திரம் 24 பக்கம் 47).

அதற்கு சமமான முக்கியத்துவம் பெற்றது “இலங்கையில் கல்வி என்கிற விசேட குழு” வின் கருத்து, இதற்கு தலைமை வகித்தவர் கலாநிதி. சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கார, கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சீர்திருத்துதலில் சுதந்திரத்துக்குப் பின்னான எந்த முயற்சிக்கும் ஒருபோதும் பொருத்தமானதாக இல்லை. அது 1972ல் அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒரு ஒற்றை ஸ்ரீலங்கா பல்கலைக்கழகம் என மாற்றிய பேராசிரியர் ஒஸ்மன்ட் ஜயரட்ன குழுவினால்கூட மேற்கொள்ளப் படவில்லை.

சுதந்திரம் பெற்றதிலிருந்து தேசிய கல்வி, கொழும்பை தளமாகக் கொண்ட சிங்கள கல்வியாளர்களின் பாணியில் வடிவமைக்கப்பட்டு கன்னங்காரவின் பார்வையை முற்றாக மீறியும் மற்றும் மாசு கற்பித்தும் கெடுத்து வரப்படுகிறது: “எங்கள் அடிப்படை தேவை  பன்முகப் படுத்தப்பட்ட உறுப்புகள் கொண்ட சனத்தொகையை ஒரே தேசமாக இணைப்பதுதான். பல்வேறு வித்தியாசமான இனத் தோற்றங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைக் கொண்ட மக்களின் இருப்பு, இலங்கைக்கு வித்தியாசமானதல்ல, மற்றும் வரலாறு  தெரிவிப்பது பல்லின மக்களிடையில் ஒருமித்த தேசிய உணர்வை வளர்;தெடுப்பது கடினமான ஒன்றல்ல என்று. உண்மையில எங்கள் கலாச்சாரத்தில்  எற்கனவே ஒரு பெரிய பொதுவான உறுப்பு உள்ளது, மற்றும் கல்வி வளர்ச்சியின் தூண்டுதலின் கீழ் தேசிய ஒற்றுமை என்கிற கருத்து நம்மிடையே வளர்ந்து வருகிறது. இலங்கையில் எதிர்காலக் கல்வியை திட்டமிடுவதன் மூலம் பொதுவான உறுப்பை அதிகரிக்க பாடுபட வேண்டும் மற்றும் தேசியம் என்கிற எண்ணத்தையும் வளர்க்க வேண்டும்”,(அதே பத்திரம் ப - 10) இத்தகைய நோக்கங்களுக்காக, விசேட குழு, கல்வி அனைவருக்கும் தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது மற்றும் அதை ஒரு உரிமையாக நிறுவ வேண்டும்.

தீர்மானங்களை மேற்கொள்ளும் இறுதி அமாவில் அதாவது 89வது அமர்வில் வத்தேகமவில் இருந்து தெரிவான அரச சபை உறுப்பினர் அபேரத்ன ரத்னாயக்கா ஏழைகளுக்கு முறையான ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வி கிடைக்க கூடிய வகையில் அரசாங்கம் நிதி வழங்கி அதைப் பின்பற்ற வேண்டும் என்று முன்மொழிந்தார். இவ்வாறு அரசால் நிதி வழங்கப்பட்ட கல்வி இப்போது இலவச கல்வியாக மொழிமாற்றப்பட்டுள்ளது, உண்மையில் அது இலவசமானது அல்ல. அதன் ஒரே கருத்து, பெற்றோர்களால் கல்விச் செலவை செலுத்த முடியாதபோது, அரசாங்கம் அவர்களின் கல்விக்கான செலவை வரி செலுத்துபவர்களின் பணத்தில் இருந்து செலுத்துவதற்கு ஏற்றுக் கொள்கிறது.

மிகவும் முக்கியமாக கல்விக்கான அரசாங்கத்தின் நிதி உதவியில் பிரபலமான மத்திய கல்லூரி திட்டங்களும் அதேபோல உட்படுத்தப் படுகிறது, தனியாருக்கு சொந்தமானதும் தனியாரால் பராமரிக்கப் படுவதுமான பாடசாலைகளை மூடி விடுவதாகவோ அல்லது கையேற்பதாகவோ ஒருபோதும் முன்மொழியப் படவில்லை, இதில் அப்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பௌத்த பாடசாலைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அடங்கியிருந்தன. இதன்படி கல்விக்கான உரிமை, பெற்றோர்களால் கல்விக்கான செலவைத் தாங்க முடியாதபோது, வரி செலுத்துவோரின் பணத்தின் மூலம் உத்தரவாதப் படுத்தப்பட்டது. திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கம் 1962ல் தனியார் பாடசாலைகளை  அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளாக பொறுப்பேற்றபோது கூட, எங்களிடம் இன்னமும் 44 தனியார் பாடசாலைகள் எஞ்சியிருந்தன அவை க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக மாணவர்களைத் தயார் படுத்தி வந்தன, அவர்கள் அரசாங்கத்துக்கு சொந்தமான பாடசாலை மாணவர்களுடன் சேர்ந்து அரச பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

அத்தகைய கட்டணம் செலுத்தும் கல்விக்கு அப்பால், ஜி.எம்.ஓ.ஏ மற்றும் ஐ.யு.எஸ்.எப் என்பன கல்வியை சுதந்திர சந்தை பொருளாதார சரக்காக மாற்றவேண்டும் என்கிறார்கள் ஆனால் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் சர்வதேச பாடசாலைகளை விரோதமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த சர்வதேச பாடசாலைகள் முற்றாக எதுவித தரத்தையும் கொண்டிருக்கவில்லை.

முறையான கல்வியை, கன்னங்கார மறுசீரமைத்து நிறுவிய தேசிய கல்வி முறைக்கு வெளியே கைவிட்டதுடன் மற்றும் அதை அப்பட்டமான வர்த்;தகமயமாக்கியதை எந்தவித எதிர்ப்புமின்றி தொடர விடப்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு இப்போது என்ன தேவை என்றால் சைட்டம் பற்றியோ அல்லது வேறு எந்த தனியார் கல்வி நிறுவனங்கள் பற்றிய ஒரு முடிவு எடுக்க வேண்டியதல்ல. இந்த நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படுவது கல்வியில் தொலைநோக்கை அடையக்கூடிய ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி வரையான சீர்திருத்தங்கள்.saitam-3

தேசிய கல்வி நிறுவனம், வரி செலுத்வோர் பணத்தை வீணடிக்கிறது என்பது தெளிவு. அவை பல தசாப்தங்களாக, கல்வியில் திட்டங்கள் மற்றும் பயனுள்ள மாற்றங்கள் எதையும் முன்மொழிவதற்கான போதுமான சமயோசிதத்தை கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளன. அல்லாமலும் கல்விமான்கள் மற்றும் அவர்களின் பல்கலைக்கழக ஆசிரியாகள் ஒன்றியம் (எப்.யு.ரி.ஏ) என்பன  கல்விக்காக ஆறு வீதம் என்கிற சுலோகத்தை பயன்படுத்தி போராட்டம் மேற்கொண்டு சிறப்பான சம்பளத்தை அடைந்த பின்னர் அதன் தரம் குன்றி விட்டது.

அப்போது முதல் எப்.யு.ரி.ஏ பிரபல பாடசாலைகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறத. ஆசிரியர்களின் எந்தவொரு தொழிற்சங்கமும் துருப்பிடித்து கறீச்சிடும் கல்வி முறையால் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி பற்றிய பிரச்சினைகளை எழுப்பவேயில்லை. ஏனைய மற்ற தேசிய தேவைகளைப் போல  கல்வியை அது சிவப்போ அல்லது பச்சையோ அல்லது நீலமோ எந்தக் கட்சியானாலும் ஒட்டு வேலைகளால் கொண்டு செல்ல முடியாது. தேசிய கல்வி சீர் திருத்தத்துக்காக  ஒரு சமூக உரையாடல் இருக்கவேண்டும் என்பதுதான் அதற்கான காரணம்.

ஒரு உரையாடல், அது அரச பல்கலைக்கழகங்களின் உள்ளடக்கம் மற்றும் தரம் பற்றியும், ஆசிரியர் பயிற்சி வசதிகள், பாடசாலை நிருவாகம், பாடசாலை பாட விதானம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத் திட்டங்கள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள இன்னும் அநேக பிரச்சினைகளை பற்றியும்  கேள்வி எழுப்ப முடியும்.

அத்தகைய உரையாடல்களுக்கு வெளியே, மோசமான குறுங்குழு வாதிகளுக்கும் மற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கும்  சைட்டம் ஒரு சுவையான நொறுக்குத் தீனியாகவே  மீந்திருக்கும்.

டீதனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv