Theneehead-1

Vol: 14                                                                                                                                                13.03.2017

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்?

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார்

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்? இதற்கு யார் பொறுப்புச் சொல்வது? யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் யுmeeting-1த்தப் பாதிப்புகளில் இருந்து மக்கள் முழுதாக நீங்க முடியாதிருப்பது எதற்காக? இந்த நிலைமை தொடர்ந்து நீடிப்பது தமிழ்ச்சமூகத்துக்கு நல்லதாக அமையுமா? இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள் அதைச் செய்யாதிருப்பது ஏன்? இதை மக்கள் தட்டிக் கேட்க வேண்டிய காலம் பிறந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார். நேற்று 11.03.2017 புனகரி வாடியடியில் பிரதேச மக்களைச் சந்தித்து நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்மக்கள் நெருக்கடியான காலகட்டத்தில் தமது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்கான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்திருந்தனர். அவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைகள் தங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையொடிருந்தனர். ஆனால் மக்களின் நம்பிக்கைகள் நிறைவேறவில்லை. பதிலாக ஏமாற்றமே கிடைத்தது. இதனால்தான் இன்று மக்கள் சுயமாகவே தங்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராட முன்வந்திருக்கிறார்கள். அதேவேளை தலைமைகளை நோக்கி தங்களுடைய கோவத்தையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டவும் தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பாகப் போரினால் பெரும் இழப்புகளைச் சந்தித்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் படுகின்ற துயரம் அளப்பரியது. அதைப்போல இளைய தலைமுறையினர் இன்று வேலை வாய்ப்பில்லாத நிலmeeting1ையில், எதிர்காலத்தை எப்படித் தீர்மானிப்பது என்று தெரியாத கட்டத்தில் இருக்கின்றனர். புனகரிப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் இங்கே உள்ள மக்கள் எதிர்நோககியிருக்கும் பிரச்சினை தண்ணீர்ப்பிரச்சினையாகும். இதற்கான தீர்வைக் காணும் முகமாக நாம் கடந்த காலத்தில் கொக்குடையான்  மாளாப்பு என்ற குளங்களை இணைத்து புனகரி நீர்த்தேக்கம் என்ற பெருந்திட்டத்தை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்திருந்தோம். அதைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனது துரதிருஸ்டவசமானது. அந்தத் திட்டத்தை இப்பொழுது யார் முன்வந்து நிறைவேற்றுவார்கள் என மக்கள் காத்திருக்கின்றனர். இப்படி ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன.

அரசியல் தீர்வை எட்ட வேண்டிய அதேவேளை மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கான தேவைகளையும் நிறைவெற்ற வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்குண்டு. அவை எந்தக் காரணம் கொண்டும் மக்களுக்குச் சாட்டுக்களைச் சொல்லித்தப்பி விட முடியாது.
meeting-2
கிளிநொச்சி மாவட்டத்தை முன்னிலை மாவட்டமாக உருவாக்குவதே எனது கனவாக இருந்தது. அந்தக் கனவை நாம் அனைவரும் இணைந்து நிஜமாக்க வேண்டும். இதற்கு மக்களில் விழிப்புணர்வும் உறுதியும் ஒன்று பட்ட உழைப்பும் தேவை. நாம் கடந்த காலத்துயரங்களிலிருந்து விடுபட்டுப் புதிய யுகமொன்றினுள் நுளைய வேண்டும். அதற்கு எதிர்காலத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.

இந்த நிகழ்வில் புனகரிப்பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் எனப்பல தரப்பினரும் கலந்து கொண்டனர். 70

dantv