Theneehead-1

Vol: 14                                                                                                                                                13.03.2017

காத்தான்குடியில் தயார் நிலையிலிருந்த பெற்றோல் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கர்பலா வீதியில் இரண்டு பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.kathankudi
 
இன்று  (12) ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் இந்த பெற்றோல் குண்டுகளை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இந்த வீதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக சுத்தம் செய்து கொண்டிருந்த குறித்த வீட்டுப் பெண், மர்மமான போத்தல்கள் இரண்டு காணப்படுவதை அவதானித்துள்ளார்.
 
இதனையடுத்து, பிரதேசவாசிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து காத்தான்குடி பொலிசாருக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுதத்து பொலிசார் அங்கு விரைந்து இந்த பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளனர்.
 
அவை, போத்தலில் பெற்றோல் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
 
கடந்த வெள்ளிக்கிழமை மாலை  இரு வேறு கொள்கைகளைக் கொண்ட குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததோடு, குறித்த பெற்றோல் குண்டுகள், சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே மீட்கப்பட்டுள்ளமையால் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் அவை தயார் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

dantv