Theneehead-1

Vol: 14                                                                                                                                                13.03.2017

இலங்கை இனப்படுகொலை: சர்வதேச நீதி விசாரணை கோரி கையெழுத்து இயக்கம்


சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நsathyarajடிகர் சத்யராஜ், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன்,

இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து உடனடியாக சர்வதேச விசாரணையைத் தொடக்க வலியுறுத்தி சென்னையில் கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

கையெழுத்து இயக்கத்தை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்துப் பேசியதாவது:ஜல்லிக்கட்டு மற்றும் நெடுவாசல் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தது போன்று, இலங்கைத் தமிழர்களுக்கான நீதி விசாரணைக்காகவும் போராட இளைஞர்கள் முன் வர வேண்டும். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து 18 மாதங்கள் ஆகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியையும் இலங்கை எடுக்காத நிலையில், விரைவில் சர்வதேச நீதிபதிகள் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார் நடிகர் சத்யராஜ்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியது: இந்தக் கையெழுத்து இயக்கம் ஒரு தொடக்கம்தான். இது உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். இலங்கைப் பிரச்னையில் மனிதம் காக்கப்பட வேண்டும் என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் பேசியது: இலங்கையில் சுமார் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 55 முகாம்களில் தமிழப் பெண்கள் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாக ஈடுபடுத்தியதையும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் யாஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் தெளிவுபடக்

குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
கையெழுத்து இயக்கத்துக்கு முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு ஏற்பாடு செய்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

dantv