Theneehead-1

Vol: 14                                                                                                                                                14.02.2017

எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு பற்றி காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எச்சரிக்கை

பகுதி - 1

  • -ஏனைய புலனாய்வு பிரிவுகள் எல்.ரீ.ரீ.ஈயின் ஒழுங்கு செய்யப்பட்ட செயற்பாடுகள் குறித்து ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கிறது.
  • -புலிகளின் செயற்பாடுகள் பற்றிய இத்தகைய ஆதாரமற்ற அறிக்கைகள் எதிர் முகாமுக்கு அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதத்தை வழங்க முடியும்
  • -பல திட்டங்கள் பற்றிய சர்ச்சைகளைத் தொடர்ந்து அது பற்றிய முடிவுகளை கவனத்தில் கொள்வதற்காக ஜனாதிபதி பொருளாதார நிர்வாகம் தொடர்பான அமைச்சரவை குழுக் கூட்டத்துக்கு (சீ.சீ.ஈ.எம்) தலைமை தாங்குகிறார்

காவல்துறையின் பயங்கரவாத எதிப்பு பிரிவான பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (ரி.ஐ.டி), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் வடக்கில்ltte re புத்துயிர்ப்பு பெற்று வருவதாக நம்புகிறது.

வெளித்தோற்றத்தில் எச்சரிக்கை விடுக்கக்கூடியதாகத் தோன்றும் இத்தகைய கண்டுபிடிப்புகள், இந்த முன்னேற்றங்களுடன் பழக்கமான மற்றவர்களின் சூடான சர்ச்சைக்கு இலக்காகி மறுக்கப்படும் நிலையில், அவற்றை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று காவல்துறை தலைவர் பூஜித ஜயசுந்தராவுக்கு, ரி.ஐ.டியின் தலைவரான பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வாவினால் அனுப்பப்பட்டுள்ளது.

சண்டே ரைம்ஸினால் பார்க்கப்பட்ட அந்த அறிக்கையின் பிரதி ஒன்றில்  2017, ஜனவரி 13ல், கிளிநொச்சியில் மூன்றுபேர் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த மாஸ்ரர் என்கிற காரளசிங்கம் குலேந்திரன்( எல்.ரீ.ரீ.ஈஇயக்கப் பெயர் சோலை), செம்பியன்பற்றைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற ஜனா என்கிற லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் (எல்.ரீ.ரீ.ஈ இயக்கப் பெயர் கடலவன்) மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த வேந்திரன் என்கிற தவேந்திரன் (எல்.ரீ.ரீ.ஈ இயக்கப் பெயர் வென் அரசன்) ஆகியோராவர். அந்த அறிக்கை தெரிவிப்பது, எல்.ரீ.ரீ.ஈ யினை மீள் ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு திட்டமிட்டதன் காரணமாகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக. கிளிநொச்சியில் உள்ள குலேந்திரனது வீட்டில் ஒரு கண்ணி வெடி கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அது மேலும் தெரிவிப்பது, ஒரு சீ - 4 வெடிபொருள் கருவி அஜந்தனின் கைகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக. அது  மிகவும் முக்கியமான ஒரு பிரமுகர் (வி.ஐ.பி) வட பகுதி தலைநகரான யாழ்ப்பாணத்தில் இருந்து தென் கிழக்காக 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருதங்கேணி என்கிற இடத்தில் இருக்கும்போது அவரைத் தாக்கும் நோக்கத்தை இலக்காக கொண்டு அவர் வசம் இருந்தது. எனினும் அந்த அறிக்கை குறிப்பிடப்படும் வி.ஐ.பி யார் என்றோ, அல்லது அந்த கொலைத் திட்டம் எப்படி நடைபெற இருந்தது என்பதையோ குறிப்பிடவில்லை.

பின்னர் கைது செய்யப்பட்ட வேறு இரண்டு பேர்களையும் சேர்த்து சந்தேக நபர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஜர் படுத்தப் பட்டார்கள். அதே ஐந்து பேரும், ஒரு வெளிநாட்டு குழுவின் உதவியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் ஒரு இரண்டாவது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். சுமந்திரன் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதன் அடிப்படையில் இது நடைபெற்றிருக்கலாம் என தாங்கள் நம்புவதாக ரி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முன்னேற்றங்கள் காரணமாக சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப் பட்டதுடன் அந்த வழக்கு மீண்டும் பெப்ரவரி 13ல் விசாரணைக்கு வருகிறது.

எல்.ரீ.ரீ.ஈயின் செயற்பாடுகள் பற்றிச் சொல்லப்படுவது

ரி.ஐ.டியின் பணிப்பாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, கடந்த மூன்று மாதங்களாக முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் தங்கள் இலக்கினை அடைவதற்காக சுதந்திரமாக செயற்பட்டு வந்துள்ளார்கள். கடந்த வருடம் நவம்பர் 27ல் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ கொடியினை கிளிநொச்சியில் உள்ள சில இடங்களில் ஏற்றியதாகச் சொல்லப்படுகிறது, அந்த செயற்பாடுகளை புகைப்படம் எடுத்து அவர்களுக்கு ஆதரவு தரும் வெளிநாட்டு குழுவினர் மத்தியில் விநியோகித்ததாகச் சொல்லப்படுகிறது. இது அந்தப் பிரதேசத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் செயற்பாடு நடைபெற்று வருகிறது என்பதை அவர்களுக்கு police-searchவிளக்குவதற்காக.

அந்த அறிக்கையின்படி கடந்த வருடம் ஒக்ரோபர் மற்றும் நவம்பரில், இந்த மூவரும் கிளிநொச்சியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காவல்துறை நபர்களைத் தாக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளார்கள். அதன் பின்னணியில் உள்ள திட்டம் அவர்களின் ஆயுதங்களை பறிப்பதாகும். அதில் ஒரு முரண்பாடாகத் தெரிவது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயமான அந்த மூவரும் எல்.ரீ.ரீ.ஈ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை புதைத்து வைத்துள்ள பகுதிகளுக்கும் சென்றுள்ளதாகக் கூறுவது.

அவர்கள் இரவு நேரத்தில் எதுவித இடையூறுமில்லாமல் அவற்றை கிண்டி எடுக்க முயற்சித்தார்களாம். அவர்களைக் கைது செய்யாவிட்டால் அவர்கள் தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு உயாந்தளவு சாத்தியங்கள் இருந்தன. அத்தகைய தாக்குதல்களுக்கான இலக்குகள் பற்றி விளக்கப்படவில்லை. அங்கு காவல்துறையினருக்கு சில சுய பாராட்டுகளும் கூட இடம்பெற்றிருந்தன. அந்த அறிக்கை தெரிவிப்பது, அத்தகைய தாக்குதல்கள் காவல்துறைக்கு தீவிரமான சேதத்தை விளைவித்திருக்கக் கூடும் என்று,

ரி.ஐ.டி அறிக்கை கிடைத்த மூன்று நாட்களிலேயே, காவல்துறை தலைவர் ஜயசுந்தர வடக்கில் பொறுப்பாக உள்ள மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரான சரத்குமாரவுக்கு ஒரு உடனடி அறிக்கை கோரி கடிதம் எழுதினார். உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி எழுதப்பட்ட அந்த குறிப்பையும் சண்டே ரைம்ஸ் பார்த்தது.

  • -தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
    -மக்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சூழ்நிலை அங்கு உள்ளதா
    -அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எல்.ரீ.ரீ.ஈ இப்போது மீண்டும் எழுச்சி பெறுகிறது உபதேசிக்க ஆரம்பித்து விடுவார்களா

கிளிநொச்சி பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஒரு திருப்தியான அளவில் இல்லை என்று குறிப்பிட்டு காவல்துறை தலைவர் ஜயசுந்தரா விசேட புலனாய்வு பிரிவினருக்கும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுக்கும் எல்.ரீ.ரீ.ஈ மீள் குழுவாகச் சேர்வது பற்றி ஆராயும்படி கட்டளை பிறப்பித்தார். அத்தகைய தீவிரவாத கருத்துக்களை பரப்புவோர் உட்பட அதில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் காணும்படி அவர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த முன்னேற்றங்கள் பற்றிய செய்திகள் பரவியதும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் ஒருவகை பயமும் மற்றும் அங்குள்ள காவல்துறைனர் மத்தியில் கவலையும் தோன்றின. கிளிநொச்சி மாவட்ட காவல் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள், அந்த பிரதேச புலனாய்வு பிரிவுகள் மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு புலனாய்வு பிரிவான சிறப்பு பிரிவு என்பன காவல்துறை தலைவர் ஜயசுந்தராவுக்கு அனுப்பிய அறிக்கைகளையும் சண்டே ரைம்ஸ் பார்வையிட்டது. அவர்கள் அனைவருமே எல்.ரீ.ரீ.ஈ மீள் குழுவாக இணைவதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்கிற கருத்தையே ஒருமனதாகத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் பயங்கரவாத புலனாய்வு பிரிவு(ரி.ஐ.டி) எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறுகிறது என்கிற முடிவுக்கு எப்படி வந்தது. அதற்கான பதில்கள் மழுப்பலானவையாகவே தெரிந்தன.

எல்.ரீ.ரீ.ஈ பிரிவினைவாத யுத்தத்தின்போது அதன் இரத்தவெறி பிடித்த கொலைகள், வன்முறைகள் மற்றும் பயங்கரவாத செயல்களை அதன் முக்கிய நிலையமான கிளிநொச்சியில் இருந்தே மேற்கொண்டது. அதனிடம் பெருந்தொகையான மாவீரர் குடும்பங்கள் உள்ளன. இது இறந்த போராளிகளின் அடுத்த வாரிசுகளான உறவுக்கார குடும்பங்களாகும். எல்.ரீ.ரீ.ஈயானது அங்கு தளம் அமைத்து ஆதிக்கம் செலுத்தியபோது, இந்தக் குடும்பங்கள்  உணவு மற்றும் மருந்து வகைகள் வழங்கலில் மற்றவர்களைக் காட்டிலும் முன்னுரிமை பெற்றன. ஓரவஞ்சனையாக இவை யாவும் அரசாங்கத்தால், அதன் செயற்பாடு கொரில்லா ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளிலும் நடைபெறுகிறது என்கிற முயற்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டவை ஆகும். இராணுவ புலனாய்வு பதிவுகள் தெரிவிப்பதின்படி, இந்தக் குடும்பங்களுக்கு மேலாக 2,000 க்கும் மேற்பட்ட புனர்வாழ்வு பெறாத கெரில்லா போராளிகள் கிளிநொச்சிப் பகுதியில் உள்ளனராம்.

அதில் உண்மை இல்லை

புலனாய்வு பிரிவின் தினசரி உள்ளீடுகள் மற்றும் கள நிலைமைகளில் பரிச்சயமுள்ள உயர் பதவியிலுள்ளவட்டாரம் அநாமதேய முறையில் சண்டே ரைம்ஸ் இடம் பேசுகையில், “எப்படியாயினும் எல்.ரீ.ரீ.ஈ உடல் ரீதியாக மீள் குழுவாகச் சேருகிறது என்று சொல்வதில் உண்மையில்லை என்று சொன்னார். களத்தில் அப்படியான ஒரு செயற்பsri_lanka_army_militaryாட்டை நாங்கள் காணவில்லை. அப்படிச் சொல்லுவதின் மூலம் எங்களுக்கு அக்கறையில்லை என்று கருதிவிடக் கூடாது. உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட 12,000 போராளிகள் உள்ளார்கள். அவர்கள் பல்வேறுவகை ஆயுதங்கள் மற்றும் இதர இராணுவ கனரக உபகரணங்களையும் இயக்குவதற்கு எல்.ரீ.ரீ.ஈ யினால் பயிற்றுவிக்கப் பட்ட இளைஞர்கள். அவர்கள் கொண்டிருக்கும் இந்த பிரச்சினைகள் பற்றி நாங்கள் கவனமாக உள்ளோம். ; கணிசமான தொகையினரை சிவில் பாதுகாப்ப படை மற்றும் ஆயுதப் படைகளில் உள்வாங்கும் திட்டம் உள்ளது, அவர்கள் யுத்தம் இல்லாத பாத்திரங்களில் ஈடுபடுத்தப் படுவார்கள். ஒரு குழுவினர் ஏற்கனவே இராணுவத்தின் பண்ணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். தோல்வியடைந்த எல்.ரீ.ரீ.ஈக்கு தலைவர்கள் கிடையாது மற்றும் சர்வதேசரீதியாக இப்போது பயங்கரவாதம் எங்கும் சகித்துக்கொள்ளப் படுவதில்லை. ஆயுதங்களுக்கான வழிகள் மிகக் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தவிட்டன” என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில் “எங்கள் கவலைகளுக்கான மற்றொரு காரணம், அப்போது எல்.ரீ.ரீ.ஈ தலைமையுடன் நெருக்கமான உறவில் ஈடுபட்டிருந்த ஒரு உள்ளுர் அரசியல்வாதியின் பங்களிப்பு. அவர் புலம்பெயர்ந்தோர் குழுக்களிடம் இருந்து நிதிகளைப் பெற்று அவற்றை ஒழுங்காக மாவீரர் குடும்பங்களுக்கு கொடுத்து வருகிறார். அது பிந்தையவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய உதவியாக இருக்கும் வரைக்கும் தீவிரமாக அதைப்பற்றிக் கவலைப்பட காரணம் இல்லை. நாங்கள் நிலமைகளை கவனமாக அவதானித்து வருகிறோம்.

மிகவும் திறமையான புலனாய்வு பொறிமுறையாக வடக்கில் இராணுவ புலனாய்வு (எம்.ஐ) இருப்பது நன்கு அறிந்த விடயம். அது இராணுவத்தின் யுத்த உபகரணங்களின் ஒரு பகுதியாக இருந்த வரை பிரிவினைவாத போர் நடந்து கொண்டிருந்தபோது அதன் ஆட்களால் யுத்தக்களங்களில் இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் சேவையாற்ற இயலக்கூடியதாக இருந்தது. அது தொடர்பாக காவல்துறையில் இருந்த அவர்களின் சக உத்தியோகத்தர் அப்போது கடுமையாக கட்டுப்படுத்தப் பட்டிருந்தார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப் பட்டதின் பின்னரே களத்தில் ரி.ஐ.டியினர் செயல்பாட்டுக்கு வந்தார்கள். முன்னர் காவல்துறையினராலும் மற்றும் ஆயுதப் படைகளினாலும் கைது செய்யப்படும் கெரில்லா சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக அதனிடம் ஒப்படைக்கப் பட்டார்கள். தேசிய பாதுகாப்பு  காரணமாக எம்.ஐ இனது வழக்கமான பயன்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்கள் விவாதிக்கப்பட முடியாதவைகளாக இருந்தன. எனினும் ஒரு எம்.ஐ வட்டாரம் தனது அடையாளங்களை வெளிப்படுத்தாத அனாமதேய முறையில் எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு பற்றிய அறிக்கை பற்றிச் சொல்கையில்,” நாங்கள் அவர்களை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். ஏதாவது வழக்கத்தக்கு மாறான செய்பாடுகள் இருந்தால் அவற்றைப்பற்றி சில நாட்கள் அல்ல சில மணித்துளிகளிலேயே எங்களால் அறிய முடியும். குழுக்களாக மீள் இணைவதற்கும், அதி நவீன கெரில்லா யுத்த முறையில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு முப்பது வருடங்களுக்கு மேல் பிடித்தது. இப்போது எங்களை அறியாமல் ஒரு சிறிய குழு கூட கூட்டம் போடுவதற்கு இயலாது. அப்போது பாதிக்கப்பட்டு விரக்தி அடைந்துள்ள பொதுமக்கள் எங்களுக்கு உதவி வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு பொருளாதாரகஷ்டங்கள் இருந்தபோதும், அவர்கள் தங்கள் வாழ்க்கை முறை பாதிப்படைவதை விரும்பவில்லை. இந்த எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு பற்றி அறிக்கையை மிகவம் கவனமாக பார்க்கவேண்டும். அரசாங்கம் புனர்வாழ்வு முயற்சிகளில் ஈடுபடும் சமயத்தில்தான் அவை வெளிவருகின்றன. களத்தில் எல்.ரீ.ரீ.ஈ மீள் குழுவாக இணைவதாக கூறும் பூதம் வெளிக்கிளம்புவது, வடக்கில் துருப்புக்களை மிகவும் தீவிரமாக செயற்படுத்த வைப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவே தோன்றுகிறது. தற்சமயம் அவாகள் தங்கள் முகாம்களுக்குள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளார்கள். பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கைகள் வாழ்க்கைப் பாணியை குழப்புவது மட்டுமன்றி பொதுக்கள் தொந்தரவுக்கு உள்ளாவதாக புகார்களையும் இழுத்து வரும்.

“உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவத் தோல்வியில் இருந்து அடிக்கடி நாம் வெடிக்காத வெடிபொருட்கள், ஆயுதங்கள், உபகரணங்கள் போன்ற பல்வேறு பொருட்களையும் புதைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடத்திலிருந்து கண்டபிடித்து வருகிறோம். அவற்றை வைத்து சிலர் குற்றங்களைப் புரிகிறார்கள். அநேகமாக அவை அனைத்தும் துருப்புக்களின் கைகளில் வீழ்ந்து விடாமல் இருப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ யினால் மறைவாக வைக்கப்பட்டவை. நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதைப் பராமரிக்கும் வரை ஒரு சிறு குழு கூட செயல்பாட்டில் இறங்க முடியாது. அவர்களுக்கு அதற்கான இடம் இல்லை. துரதிருஷ்டவசமாக எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு பற்றி அறிக்கைகள் தெற்கை அடையும்போது, மக்கள் கவலை அடைகிறார்கள் மற்றும் அது நிலையற்ற தன்மைக்கு வழி வகுக்கிறது”.

(தொடரும்)
 

dantv