Theneehead-1

Vol: 14                                                                                                                                                14.03.2017

இனத்தை அழிக்கும் சட்டங்களை கொண்டு வரும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்

நாட்டையும் இனத்தையும் அழிக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்களை கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவmahinda Rித்துள்ளார்.

அவரது கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கையின் அரசியலமைப்பு, அரச கட்டமைப்பு, சட்டத்துறை என்பவற்றில் மாற்றம் செய்ய அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் உத்தியோகபூர்வமாகவும் அல்லது வேறு வழிகளில் ஊடகங்களில் வெளியான சில ஆவணங்கள் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகியுள்ளது.

அரசியமைப்புச் சட்டவாக்க சபையின் 6 உப குழுக்களின் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணியின் அறிக்கை ஜனவரியில் வெளியாகியது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 58 நிபந்தனைகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக பிரதமர் கொண்டு வந்த புதிய சட்டமூல யோசனை என்பன ஊடகங்களில் வெளியாகின.

கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு உதவி மற்றும் அனுசரணை வழங்கிய ஒபாமா நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற இலங்கைக்கு எதிரான யோசனை ஆகியவற்றை இந்த ஆவணங்கள் அடிப்படையாக கொண்டுள்ளது.

அமெரிக்காவில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஒபாமா நிர்வாகம் மாறியுள்ள நிலையில், புதிய அரசாங்கத்துடன் பேசி, யோசனையில் உள்ள பயங்கரமான பந்திகளை மாற்ற இலங்கை அரசாங்கம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. நல்லாட்சியாளர்களின் தேசத்துரோக நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே 2015 யோசனைக்கு இலங்கையின் இணை அனுசரணையுடன் வெளிநாடுகள் அழுத்தங்களை கொடுக்காமல் அனுசரணை வழங்கின.

தற்போது இந்த யோசனையை முன்னெடுத்து வருவது அமெரிக்க அரசாங்கம் அல்ல இலங்கை அரசாங்கமே என்பது தெளிவாகியுள்ளது, என மஹிந்தவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

dantv