Theneehead-1

Vol: 14                                                                                                                                                15.02.2017

எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு பற்றி காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எச்சரிக்கை

பகுதி - 2

தயார் நிலை

எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு பற்றிய ரி.ஐ.டி யின் கோரிக்கை முறைப்படி பாதுகாப்பு படைகளின் புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்கப் படவில்லை. இந்த நகர்வு பாதுகாப்பு நிறுவனம் தேசிய பாதுகாப்பு தொடTIDர்பான முன்னேற்றங்களை கூட்டாகக் கண்காணிப்பதை தவிர்த்துள்ளதைக் காட்டுகிறது. பாதுகாப்பு நிறுவனங்களின் நிருவாக மேற்பார்வை இத்தகைய மட்டங்களுக்கு கீழிறங்கியுள்ளது, இந்த நிகழ்வுகள் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளாமலோ அல்லது அதைப்பற்றி அறியால் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்துகின்றன. பெப்ரவரி 4ல் சுதந்திர தினத்தை அடையாளப்படுத்தும் விதமாக காலிமுகத் திடலில் இடம் பெற்ற இராணுவ கண்காட்சியை தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மூலம் பார்த்த ஸ்ரீலங்காவாசிகளுக்கு ஒரு துயரமான போதாமை பிரதிபலித்தது. அந்த கண்காட்சியில் இடம்பெற்ற கிட்டத்தட்ட அனைத்து இராணுவ பொருட்களும் முந்தைய ஆட்சியினரால் பெற்றுக் கொள்ளப்பட்டவையாகவே இருந்தன. ஒருவேளை அதிகாரிகள் எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப் பட்டதனால் எதையும் நவீனமயமாக்குவதற்கு அவசியம் இல்லை என நினைக்கிறார்கள் போலும். அவசியமானவற்றை கொள்வனவு செய்வதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ள ஒரே தேவை வெளிநாடுகளில் ஐநா அமைதி காக்கும் படையில் ஈடுபடுவதற்கு வேண்டிய பிரிவுகள் மட்டுமே.

“எந்த ஒரு நாட்டிலும் தேசிய பாதுகாப்புக்கு  உயர் முன்னுரிமை வழங்கப்படுவது, புதிய சவால்களை சந்திப்பதற்காக துருப்புக்களை ஆயத்தமாக்கும் தேவைகளுக்கே” என எச்சரித்தார் ஒரு மூத்த இராணுவ அதிகாரி. அவர் குறிப்பிட்டது “பிரிவினைவாத யுத்த நேரத்தில் அச்சுறுத்தல் அளவு  உயர்ந்ததாகக் கருதப்பட்டபோது,உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு விரைந்த ஏராளமான தருணங்கள் இருந்தன” என்று. சமாதான நேரத்திலும் தயார் நிலையை உயர்ந்த மட்டத்தில் நாம் பராமரிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். நிச்சயமாக அத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கு முதல் காரணம் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிதி நிலமைதான். இத்தகைய ஒரு நிலையில் மற்றும் இன்னும் அவசரமான ஒரு தேவையுடன் ஒப்பிடும்போது, இராணுவ கொள்வனவை சிலநேரங்களில் குறைந்த முன்னுரிமையுள்ள ஒரு பொருளாக கருதுவதற்கு இடமுண்டு.

சுதந்திர தினம் தொடர்பான வேறு சில விடயங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவலைக்கு காரணமாகி உள்ளன. செவ்வாயன்று நடந்த அமைச்சர்களின் வாராந்தர கூட்டத்தில் அமைச்சர்கள் வரவை மட்டும் உறுதி செய்துவிட்டு அரச விழாக்களை கலந்து கொள்ளாமல் விட்டுச் செல்லுவதை பற்றிய பிரச்சினையை அவர் எழுப்பியுள்ளார். உதாரணத்துக்கு அவர் சொன்னது, சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ல் அவர் வழங்கிய வழக்கமான இராப்போசன விருந்து. அமைச்சர்களால் சமூகமளிக்க இயலாவிட்டால் அதை அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று அவர் சொன்னார். எனினும் அரச விழாக்களில் அதுவும் குறிப்பாக தான் அழைப்பு விடுக்கும் விழாக்களில் கலந்து கொள்ளாமல் விடுவது விரும்பத்தக்கது அல்ல. அவர்கள் தாங்கள் சமூகமளிக்க இயலாததை விளக்கியிருந்தால், அழைக்கப்படும் வேறு விருந்தாளிகளினால் அந்த மேசைகளை நிரப்பியிருக்க முடியும். இது எதனாலென்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ள பலர் விருப்பம் தெரிவித்திருந்தது எனக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கட்டத்தில் தலையிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சில சமயங்களில் பாராளுமன்ற அமர்வுகளுக்குச் சமூகமளிப்பதில்லை. வரவுகள் மிகவும் மோசமாக உள்ளன. தான் ஒரு பட்டியலை முறைப்படுத்தி வருவதாகவும் எந்த நேரத்திலும் கணிசமானளவு எண்ணிக்கையிலானவர்கள் சமூகமளிக்க வேண்டியதன் அவசியத்தை அது ஏற்படுத்தும் என அவர் வெளிப்படுத்தினார். சிறிசேன கூட: மாலபேயில் உள்ள தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிறுவனம்(சைட்டம்) காரணமாக தனக்கு முன்பிருந்தவரான மகிந்த ராஜபக்ஸவை விமர்சித்தார். கடந்த செவ்வாய் அன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் ஸ்ரீலங்கா மருத்துவச் சபைக்கு (எஸ்.எல்.எம்.சி) சைட்டம் மருத்துவ பட்டதாரிகளுக்கு தற்காலிக பதிவை மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்பு, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்(ஐ.யு.எஸ்.எப்) மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) என்பன மாதக்கணக்காக நடத்தி வரும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளிவந்துள்ளது. சிறிசேன தெரிவித்தது, இப்போது ராஜபக்ஸ சைட்டத்துக் எதிர்ப்பு தெரிவிக்கிறார், அவரது பதவிக் காலத்தில் மகிந்த ராஜபக்ஸதான் சைட்டம் நிறுவனத்துக்கு 600 மில்லியன் ரூபாக்களை வழங்கினார் என்று. மகிந்த ராஜபக்ஸ குழுவினர்(ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள்) துண்டுகளாக சிதறியுள்ளார்கள் என்றும் சிறிசேன தெரிவித்தார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் தலைமை பற்றிய கேள்வி எழுந்தபோது அந்த விடயத்தை பற்றிக் கவனிப்பதற்கு சிறிசேன சம்மதித்தார். தற்போது அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா மற்றும் துமிந்த திசாநாயக்கா ஆகியோர் இணைத் தலைவர்களாக உள்ளார்கள்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான கேள்விகள்

அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி சிறிசேனவின் சிந்தனைகளுக்கு ஒரு பார்வையை கொடுத்த மிகவும் முக்கியமான அரசியல் முன்னேற்றங்கள் பற்றிய விடயம், கடந்த திங்களன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அது கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமது பற்றி இரண்டு பிரதி அமைச்சர்களான அமீர் அலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் பிரச்சினையை கிளப்பியபோது ஆரம்பமானது. அப்போது அதில் இணைந்து கொண்டார் அமைச்சர் றிசாத் பதியுதீன், இவர் ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களின் வலிமையான கண்டனத்துக்கு இலக்காகி வருபவர். கடந்த வாரம் கூட அவரைப்பற்றிய முறைப்பாடுகளை ஜனாதிபதி சிறிசேனவிடம் தெரிவித்து அவர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்கள். சாராம்சத்தில் அவர்கள் முதலமைச்சர் அகமதுக்கு எதிராக புகார் தெரிவித்தது அவரது வன்முறையான நடவடிக்கைகள் என அவர்கள் அழைக்கும் செயற்பாடுகள் பற்றி. அப்போது ஏனைய முதலமைச்சர்களைக் கொண்டு கூட விஷயங்களை நடத்தி முடிப்பது கடினமாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம், சில சமயங்களில் அகமதுவை அணுகமுடிவதில்லை என்பதை ஒப்புக்கொள்ளுவதாகத் தோன்றியது, ஆனால் அங்கு ஏராளமான அதிகாரப் போராட்டம் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார். அமைச்சர் தயா கமகே கூட பிரச்சினைகளை எழுப்பியதை சுட்டிக்காட்டிய ஹக்கீம் தெரிவித்தது, தனது அமைச்சரவை சகா ஒரு குறிப்பிட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு பின்துணை வழங்குவதாக. அந்த அங்கத்தவர் அகமதுடன் சுமுகமான பழக்கத்தில் இல்லை என அவர் மேலும் வாதிட்டார். இவை அனைத்தும் உள்ளக அரசியலை கொதிநிலையில் வைத்திருக்கிறது என்று அவர் வாதாடினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள், அந்த விடயம் பற்றி கட்சி இன்று தனது வருடாந்த அமர்வை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தும்போது தீர்த்துவிட எதிர்ப்பார்க்கப் படுகிறது என்று குறிப்பிட்டன.

அதெல்லாம் சரி என்று அறிவித்தார் ஜனாதிபதி சிறிசேன. தனக்கும் கூட வட மத்திய மாகாணசபையுடன் பிரச்சினைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். அவை அனைத்தும் பேசி தீர்த்து வைக்கப்பட வேண்டும். இங்கு உட்கட்சி மற்றும் கட்சிகள் இடையேயான பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் எங்களை அதிகாரப் பகிர்வுக்காக அர்ப்பணித்துள்ளோம். எவ்வளவு தூரம் எங்களால் செல்ல முடியும்?

அரசாங்கம் அதிக அதிகாரத்தை பரவலாக்க முன்வரும்போது முதலமைச்சர்கள் பற்றிய பிரச்சினைகள் எழுப்ப படுவதை அவர் குறிப்பிட்டார். அவர்களிடம் அதிக அதிகாரங்கள் இருந்தால் என்ன நடக்கக் கூடும்? 13ம் திருத்தத்தின் கீழள்ள செயல்படுத்த வேண்டியவை பற்றிய  பொதுப்பட்டியலை எடுத்துவிட்டால் மேலும் என்ன நடக்கும்? எவ்வளவு தூரம் எங்களால் முன்னோக்கி செல்லமுடியும் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரச்சினைகள் மோசமடைந்து செல்வதாக அவர் கருத்து தெரிவித்தார். இந்த செய்யவேண்டியவை பற்றிய பொதுப்பட்டியல், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாணசபை என்பனவற்றுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களைக் கையாளுகிறது. இந்தப் பட்டியலில் திட்டமிடல், நிதி, உயாகல்வி, தேசிய வீடமைப்பு மற்றும் கட்டுமானம், விவசாயம் மற்றும் கமநல சேவை, சுகாதாரம், நீர்ப்பாசனம் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா அபிவிருத்தி, வணிகம் மற்றும் வர்த்தகம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பன உள்ளடங்கி உள்ளது.

சிறிசேன விரிவாக விளக்காவிட்டாலும் ஒரு ஐதேக அமைச்சர் தனது கருத்தாகக் கூறியது, சிறிசேனவால் வலியுறத்தப்பட்ட கருத்துக்கள், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிரான ஓட்டமாக உள்ளது என்று. அதாவது ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க ஆகிய இரண்டினாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு. அவர் சொன்னது சரியாக இருக்கலாம் அந்த கருத்துக்கள் கொள்கை மாற்ற அடையாளத்துக்கு ஒரு சிறு குறிப்பாகவும் இருக்கலாம். அந்த பிரச்சினை ஒரு புறம் இருக்க, மற்றொரு மாற்றம் எழுந்துள்ளது, ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்கள்  அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரம் தொடர்பான விதிகள் அப்படியே இருக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். மேலும் அவர்கள் 2020ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சிறினேதான் அவர்களது வேட்பாளர் என்றும் தீர்மானித்துள்ளார்கள். இன்னும் மிகவும் முக்கியமாக ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களால் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டுள்ளது, அதாவது அதிகாரப் பரவலாக்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று. அதன் விளைவாக அரசியலமைப்பு நிர்ணயசபையின் ஆறு வெவ்வேறான அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அது ஒரு முன்னோடியானது. இந்த வாரம் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் மற்றும் அதற்கான பொதுமக்களின் அனுமதியை பெறுவதற்காக ஒரு பொதுசன வாக்கெடுப்புக்கும் செல்லும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் நம்பிக்கை ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. அத்தகைய ஒரு முடிவு அமைச்சரவையில் அமைச்சர்களால் எடுக்கப்படவில்லை. அதற்கு மேலும் அத்தகைய ஒரு அறிவிப்பு ஒன்றில் ஜனாதிபதி சிறிசேனவாலோ அல்லது பிரதமர் விக்கிரமசிங்காவாலோ அறிவிக்கப்படவில்லை.

இத்தகைய ஒரு பின்னணியில் ஜனாதிபதி சிறிசேன அமைச்சர்கள் வகிக்கும் பொறுப்புக்களை மாற்றியமைப்பதை அடுத்த மாதத்துக்கு (மார்ச்) தள்ளி வைத்தார். அந்த தாமதத்துக்கான காரணம் தெரிவிக்கப்படா விட்டாலும் கூட, ஒரு மூத்த ஸ்ரீ.ல.சு.க அமைச்சர் “ அது ஒரு ஆச்சரியமாக இருக்கவேண்டும் என ஜனாதிபதி விரும்புகிறார் எனச் சொன்னார். அது அழுத்த நகர்வுகளை அகற்றிவிட மட்டுமில்லை ஆனால் அதிகாரத்துவத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும்தான் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்தப் பத்தியில் வெளிப்படுத்தியதைப்போல, ஜனாதிபதி சிறிசேன, ஏற்கனவே அமைச்சர்களை மாற்றியமைக்கும் தனது திட்டத்தை பிரதமர் விக்கிரமசிங்காவிடம் தெரிவித்து விட்டார். ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம், மூன்று வெவ்வேறு அமைச்சர்களின் வேலைகள் தொடர்பாக சிறிசேனவிடம் புகார்கள் தெரிவிக்கப் படுகின்றன எனத் தெரிவித்தது, அவர்கள் மாற்றத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் மிகவும் முக்கியமாக அவர்கள் ஐதேக வினைச் சேர்ந்தவர்கள். அரசாங்கத்தில் உள்ள இரண்டு பிரதான பங்காளிகள் இடையே ஏழுந்துள்ள பிரச்சினைகளை களைவதற்காக மீண்டும் சிறிசேன விக்கிரமசிங்காவைச் சந்தித்தார். சிறிசேனவுடன் மகிந்த அமரவீர மற்றும் துமிந்த திசாநாயக்க உடன் சென்றார்கள், விக்கிரமசிங்காவுக்கு கபீர் காசிம் மற்றும் மலிக் சமரவீர உதவினார்கள்.

சிறிசேன - ரணில் சந்திப்பு

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய் அன்று சந்தித்தபோது மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டது. பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை குழுவினால் (சி.சி.ஈ.எம்) மேற்கொள்ளப்படும் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் பற்றி நெருக்கமாக ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்கள் தலைமையில் ஒரு உச்சஅமைப்பை ஏற்படுத்த அந்த இரட்டையர்கள் இணங்கினார்கள். தற்சமயம் விக்கிரமசிங்க தலைமையில் கூடும் சி.சி.ஈ.எம் அதன் கூட்டக் குறிப்புகளை அமைச்சரவை அமைச்சர்களுக்கு அனுப்புகிறது, அது அமைச்சர்களால் உறுதி செய்யப்பட்டு அமைச்சரவை குறிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

சி.சி.ஈ.எம் செயற்பாட்டின் பிரச்சினைகள் பற்றிய முடிவுகள் வெளிச்சத்துக்கு வந்தன. அவற்றில் சில உதாரணங்கள், பிரபலம் பெற்ற வாக்ஸ்வாகன் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை, அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் மற்றும் ஹொரணவில் உள்ள டயர் தொழிற்சாலை என்பன. அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீர அது கடந்தமாதம் நிறைவேறிவிட்டது என்று தெரிவிப்பதற்கு மாறாக அரசாங்கம் சீன நிறுவனத்துடன் சலுகை உடன்படிக்கை பற்றி இன்னும் முடிவு செய்ய வேண்டியுள்ளது. வாக்ஸ்வாகன் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இந்த திட்டத்துக்கு பின்னாலுள்ள ஸ்ரீலங்கா ஆர்வலர்களுடன் தனக்கு பிணைப்புகள் எதுவும் கிடையாது என அறிவித்ததின் பின்னர் இந்தத் திட்டம் அரசாங்கத்துக்கு ஒரு சங்கடமாக மாறியுள்ளது, டயர் தொழிற்சாலையை அமைப்பதற்காக ஹொரணையில் நிலத்தை சுத்தமாக்கும் பணியை ஜனாதிபதி நிறுத்தும்படி உத்தரவிட வேண்டியுள்ளது ஏனென்றால் ஒரு உடன்டிக்கையை முடிவு செய்வதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது என்ற நிலையில் அது உள்ளது மேலும் வெளிப்படுவது என்னவென்றால் அந்த திட்டத்துக்கான காணி அற்ப விலையான ஏக்கர் 100 ரூபாப்படி கொடுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு சபை தெரிவிப்பதின்படி ஜனாதிபதி அலுவலகம் அந்த திட்டத்தின் சட்டபூர்வ தன்மை பற்றி கவனம் செலுத்துகிறது. இது குறிப்பாக ஜனாதிபதியினால் அந்தப் பகுதியில் ஒரு தொழில் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் அதை அகற்ற முடியாது என்கிற வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் உள்ளது. இந்த அவதானிப்புகள் யாவும் சட்டமா அதிபரினால் அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை இயக்கியது யார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு விசாரணையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதன் உரிமையாளர் ஒருமுறை ஒரு உடன்படிக்கை கூட கையெழுத்திடாமல் வேலையை ஆரம்பித்த விடயத்தில் முந்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

ஸ்ரீ.ல.சு.க - ஐ.தே.க புரிந்துணர்வு ஒப்பந்தம்

சந்தேகமில்லாமல் இந்த பிரச்சினைகள் யாவும் அரசாங்கத்தின் இரண்டு பிரதான பங்காளிகளான ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க இடையில் உள்ள உறவில் உறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த உறவு, முறைப்படி ஒரு பரிசீலனைக்கு வரவேண்டும் என்று தெரிவித்து ஒரு வருடம் ஆகிறது. அது 2015 ஆகஸ்ட் 21ல் ஏற்படுத்தப்பட்ட இரு பகுதியினருக்கும் இடையிலான 10 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் புதுப்பித்தலாகும். அது இரண்டு கட்சியினதும் செயலாளர்களான துமிந்த திசாநாயக்க (ஸ்ரீ.ல.சு.க) மற்றும் கபீர் காசிம் (ஐ.தே.க) ஆகியோரால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையெழுத்தானது.

மற்றவைகளுள் பிரதானமானவை, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது மற்றும் ஊழல்களை தேடிக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழல் விரோத தரங்களுக்கு ஏற்ப ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நியமிப்பது. அரசாங்கத்தின் எஞ்சிய காலப் பகுதிக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்படி புதுப்பிக்கப்படும் என்பதற்கு உடனடியான தெளிவு இல்லை. ஜனாதிபதி சிறிசேன கடந்த வருடம் இந்தக் கூட்டணி 2020 வரை தொடரும் என அறிவித்த போதிலும் இந்த இரண்டு வருட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

கடந்த வாரங்களில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் தெரிவிப்பது, பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் சிறிதளவேனும் சரியான திசையில் பயணிக்கவில்லை என்பதையே. அதேவேளை ஆயுதப் படைகள் பாதுகாப்பு அமைச்சின் கீழும், காவல்துறை பொது பாதுகாப்பு அமைச்சின் கீழும் உள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் சிறிதளவு ஒருங்கிணைப்பு உள்ளதாகத் தெரிகிறது. எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு பற்றிய ஆதாரமற்ற அறிக்கைகள் அரசாங்கத்துக்கு எதிரான விளைவுகளையும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு சற்றும் எதிர்பார்க்காத ஒரு பேருதவியாகவும் மாறிவிடும். காவல் துறையின் சொந்த கணக்குகளை வைத்து 2009ல் தாங்கள் அதிகாரத்திலிருந்தபோது வென்றெடுத்த வெற்றி இப்போது மாயமாக மறைந்துவிட்டது என்று நியாயப்படுத்தி அவர்கள் வாதாடலாம். தேசிய பாதுகாப்பு மற்றும் காவல்துறையின் நலம் என்பனவற்றை கருத்தில் கொண்டு இந்த விடயம் பற்றி ஒரு முழு விசாரணை நடத்தவேண்டும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. மலையளவு உயர்ந்துவிட்ட வாழ்க்கைச் செலவு, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலமை போன்ற அவர்கள் மத்தியில் எரியும் ஏனைய விஷயங்களுடன் இணைந்து, செயலற்ற தன்மையும் அரசாங்கத்துக்கு மேலும் துயரங்களைக் கூட்டவே செய்யும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv