Theneehead-1

Vol: 14                                                                                                                                                15.02.2017

 சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிப்பது எப்படி?

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தலா ரூ.10 கோடி அபராதம்.sasikala3

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தலா ரூ.10 கோடி அபராதம் சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அபராதம் எப்படி வசூலிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தண்டிக்கப்பட்டவர்களின் வங்கி சேமிப்பு கணக்குகளில் உள்ள டெபாசிட்டுகள், நிரந்தர டெபாசிட்டுகள் அபராதத்துக்கு ஈடாக எடுத்துக்கொள்ளப்படும்.

அந்த தொகை, அபராத தொகையான ரூ.10 கோடிக்கு ஈடாக இல்லை என்றால், மீதி தொகைக்கு இந்த வழக்கில் கோர்ட்டின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தங்க, வைர நகைகள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்து எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த நகைகள், பாரத ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ விற்கப்பட வேண்டும் அல்லது பொது ஏலம் மூலம் விற்கப்பட வேண்டும்.

மீதியுள்ள நகைகள், அரசால் பறிமுதல் செய்யப்பட்டு விடும்.

அதே போன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களுடன் தொடர்புடைய கம்பெனிகளின் சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்து கொள்ளும்.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையில் இருந்து 5 கோடி ரூபாய், வழக்கு செலவுகளுக்காக கர்நாடக மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும். 

dantv