Theneehead-1

Vol: 14                                                                                                                                                15.02.2017

 அமெரிக்காவில் ஒரோவில் அணை தொடர் மழையால் உடையும் ஆபத்து:2 லட்சம்பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய அணையான ஒரோவில் அணை, தொடர் மழையால் உடையும் ஆபத்து உள்ளதால் சுமார் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.kalifornia damm

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரோவில்லே என்ற இடத்தில் மிகப்பெரிய அணை ஒன்று உள்ளது. 235 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணைதான் அந்நாட்டின் மிக உயரமான அணையாகும்.

கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இந்த அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது அவசர கால மதகு வழியாக அணையின் உபரி நீர்  வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், எந்த நேரத்திலும் மதகு உடையலாம் என கலிபோர்னியா நீர் வளத்துறை எச்சரித்து உள்ளது.  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வசதிக்காக  வடக்குப் பகுதியில் உள்ள சிக்கோ, கொலுசா ஆகிய பகுதி களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக குடில்கள் அமைக் கப்பட்டுள்ளன.

உள்ளூர் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி அரசு அதிகாரிகளுக்கு கலிபோர்னியா மாகாண ஆளுநர் ஜெர்ரி பிரவுன் உத்தரவிட்டுள்ளார்.

dantv