Theneehead-1

Vol: 14                                                                                                                                                15.03.2017

போர்க்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேன இப்போது தனது துருப்புக்கள்மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரவும் மறுத்து வருகிறார்

                                       அமல் ஜயசிங்க

போர்க்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தருவதாகவும், அவரது முன்னோடிகளின் கடுமையான வழி முறைhqdefaultகளில் இருந்து விலகி நிலையான சமாதானத்தை தனது உண்மையான முதல் நடவடிக்கையிலேயே வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தார். ஆனால் யுத்த காலத்து துஷ்;பிரயோகங்களை விசாரிப்பதற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட காலக்கெடு தவறவிடப்பட்டதுடன், தான் ஒருபோதும் தனது படை வீரர்கள்மீது வழக்கு தொடரப் போவதில்லை என பிரகடனம் செய்துள்ளதுடன், சர்வதேச விசாரணைக்கான ஐநா விடுத்துள்ள புதிய வேண்டுகோள்களையும் அப்பட்டமாக நிராகரித்துள்ளதால் அவர் மீதுள்ள நம்பிக்கை கடுமையான சோதனைக்கு உள்ளாகியுள்ளது.

ஸ்ரீலங்காவின் கடந்த யுத்த கால நிலமைகள்பற்றிய கவலைதரும் மெதுவான முன்னேற்றங்கள் பற்றி ஐநா விமர்சனம் செய்த அடுத்த நாளே, “எனது அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஒரு அரச சார்பற்ற அமைப்பு கட்டளையிடுவதை நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார். “எனது துருப்புகள்மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்கிற அவர்களது அழைப்புகளுக்கு நான் செவி சாய்க்கப் போவதில்லை” என்றும் சொன்னார்.

அவரது இந்த இணக்கமற்ற தொனி, அவரது சமரச அணுகுமுறை காரணமாக சர்வதேச சமூகத்திடம் இருந்து அவர் பெற்றிருந்த புகழுக்கு ஒரு கூர்மையான மாற்றத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது மற்றும் ஸ்ரீலங்காவின் யுத்த காலத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுடன் ஒரு சாதகமற்ற ஒப்பீட்டை மேற்கொள்ளவும் வழி யேற்படுத்தியுள்ளது. அந்த வலிமையான மனிதர், அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அரசாங்கப் படைகள் மே, 2009ல் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில் 40,000 தமிழ் பொதுமக்களை கொன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று எழுந்த சர்வதேச அழுத்தங்களை நிராகரித்து வந்தார்.

“சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கள் கவலை தருவதுடன் அவரது போட்டியாளரும் முன்னோடியுமான மகிந்த ராஜபக்ஸவின் பேச்சுக்களை தொடர்ந்து நினைவு படுத்துகின்றன” என்று சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் ஏ.எப்.பிக்கு தெரிவித்தார்.

ஜனவரி 2015ல் மகிந்த ராஜபக்ஸவை தோற்கடித்ததில் இருந்து, உலகில் தீண்டத் தகாததாக இருந்த ஸ்ரீலங்காவின் அந்தஸ்தை அதில் இருந்து விடுவிப்பதற்காக சிறிசேன பெரிதும் பாடுபட்டார். பெரும்பான்மை சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரான அவர்,பெருமளவு சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மோசமான செயல்களுக்கு பொறுப்புகூற வைப்பதாக வாக்குறுதியளித்த பின்னர் சிறுபான்மை தமிழர்களின் ஆதரவை பெற்றார். ஒக்ரோபர் 2015ல் அவர் ஒருபடி முன்னே சென்று, ஐநா மனித உரிமைகள் பேரவையில் விசேட தீர்ப்பாயங்களை நிறுவி நம்பகமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்காவிற்கு 18 மாத கால அவகாசம் வழங்குவதாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் இந்த கடப்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப் படாமலேயே காலக்கெடு முடிவடைந்தது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையில்  ஸ்ரீலங்கா நல்லிணக்கத்தை நோக்கிய நடவடிக்கைகளில் சில அடிகள் எடுத்து வைத்திருப்பதை சபை ஏற்றுக்கொண்டுள்ளது ஆனால் அந்த நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லாமலும் மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் அவசர உணர்வு இல்லாமலும் உள்ளதாக எச்சரித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயங்கள் பற்றிய புதிய கோரிக்கைகளை சிறிசேன அப்பட்டமாக மறுத்திருப்பது, எந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் ஒருபோதும் பொறுப்புக்கூறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டாரோ எனும் கவலையை எழுப்பியுள்ளது.

ஆனால் நிபுணர்கள் தெரிவிப்பது, ஜனாதிபதிக்கு வலிமையான இராணுவத்தின் மோசடியான அழுத்தங்கள் உள்ளன, அது எந்தவிதமான விசாரணைகளையும் மற்றும்  ஜனாதிபதியை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு உதவிய அதிகாரமற்ற அரசியல் கூட்டணியையும் எதிர்க்கிறது.

“பிரபலமான இரராணுவத்தினரிடம் இருந்து சிறிசேன முகம் கொடுக்கும் அரசியல் கட்டுப்பாடுகள் கணிசமான அளவு உள்ளன, மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கு கொள்வது அநேக சிங்களவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று” என்று கீனன் தெரிவித்தார்.

நல்லெண்ணத்தை நோக்கிய சில அடையாள சமிக்ஞைகள் உள்ளன. கடந்த வருடம் சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது தேசிய கீதம் 67 வருடங்களின்பின் முதல்முறையாக தமிழில் பாடப்பட்டது - இது ராஜபக்ஸ ஆட்சியின் கீழ் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்குதான் கடந்த வாரம் சிறிசேன ஐநாவுக்கு எதிராக எதிர்ப்பை முழங்கிய சில கணங்களுக்குப் பிறகு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக வீதிகளில் முழக்கமிட்டார்.

ஆனால் சில தவறான நடவடிக்கைகளும் கூட இடம்பெற்றுள்ளன.

கடுமையான பயங்கரவாத எதிர் சட்டங்கள் வாக்குறுதி அளித்தபடி இன்னும் நீக்கப்படவில்லை, மற்றும் சித்திரவதை பற்றிய ஐநா விசாரணை ஒன்றில் அவரது நிருவாகத்தை பாதுகாக்க சிறிசேன, துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக சொல்லப்படும் ஒரு பொலிஸ் அதிகாரியை அனுப்பியுள்ளதாக மனித உரிமை குழுக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளன.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் ட்ரம்பிடம் ஐநாவில் ஸ்ரீலங்கா தொடர்பான போர்க் குற்றங்களை அழிக்க அமெரிக்காவின் செல்வாக்கை பயன்படுத்தி உதவும்படி கடந்த நவம்பரில் சிறிசேன கேட்டது பலரது புருவங்களையும் உயர வைத்துள்ளன.

ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிப்பது, இந்த மாத பிற்பகுதியில் ஐநா உரிமைகள் பேரவை அமர்வில் ஸ்ரீலங்காவுக்கு ஒரு முக்கியமான பரீட்சை இருந்தது, அது சிறிசேன பதவிக்கு வந்ததின் பின்னர் கொண்டுவரப்பட இருந்த ஒரு கண்டனத் தீர்மானம் மயிரிழையில் தவிர்க்கப் பட்டது. இந்த தீவு தேசம் அந்த சந்தர்ப்பத்தில் கடந்த கால தவறுகளுக்கு தீர்வு காண்பதற்கு வாக்குறுதி வழங்கி கால அவகாசம் கோரியது - ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மூலம் மீண்டும் ஒரு இரண்டாவது வாய்ப்பை வழங்கும்படி முறையிட்டு ஒரு அணுகுமுறையை அது மேற்கொண்டது.

ராஜபக்ஸவுக்கு எதிரான சிறிசேனவின் அதிர்ச்சிமிகு வெற்றிக்காக தங்கள் சொந்த உயிர்களுக்கு அடிக்கடி ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் மீறி அவருக்கு உதவியவர்களுக்கு இது ஏற்கனவே பார்த்தது போன்ற ஒரு கவலை தரும் விஷயம்.

“ஜனாதிபதியின் ஆணை மறுசீரமைக்கப்பட வேண்டும். அவர் தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றாதது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது” எனச் சொன்னார் சிவில் சமூக குழுத் தலைவர் சரத் விஜேசூரிய.
 

dantv