Theneehead-1

Vol: 14                                                                                                                                                                15.04.2017

 சிரியா மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

சிரிய விமானத்தளம் ஒன்றின்மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்திருsyria conflictப்பதன்மூலம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களும் இதர அமெரிக்க ஜனாதிபதிகளைப் போலவேதான், சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதிப்பதற்கோ, சுதந்திரமான நாடுகளின் இறையாண்மையை மீறுவதற்கோ தயங்காதவர்  என்பதைக் காட்டிவிட்டார்.

சிரிய அரசாங்கத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிராக முதல் ராணுவ நடவடிக்கையை  மேற்கொண்டிருப்பதன் மூலம், டிரம்ப் குறித்து கற்பிதம் செய்யப்பட்டிருந்த பல செய்திகளை போலியானவை என்று அவரே முன்வந்து சிதறடித்துவிட்டார். அமெரிக்காவின் ஜனாதிபக்கான தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இதே டிரம்ப் அமெரிக்க அரசாங்கம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களில் மிகப் பெரிய அளவிற்கு செலவு செய்து வருவதாகக் கூறி இதனைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால் “ஆட்சி மாற்றம்” அவசியம் என்றும் கூறி வந்தார். உண்மையில், 2013இல் சிரிய அரசாங்கம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அதன்மீது ஒபாமா அரசாங்கம் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டபோது அவ்வாறு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என அதனை  டிரம்ப்  எச்சரித்திருந்தார். 
 

அப்போது ஒபாமா ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்காகக் கூறிய காரணம், சிரிய விமானப்படை இட்லிப் மாகாணத்தில் இருந்த கான் சிய்குன் நகரத்தின்மீது ரசாயன ஆயுதமான சரிண் வாயுவைப் போட்டது என்பதாகும். அந்த நகரம் அப்போது அல் கொய்தா இயக்கத்தின் கீழ் செயல்பட்டுவந்த அல்-ஷாம்ஸ் என்னும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ரசயான வாயு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 70 பேர் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது. சிரிய அரசாங்கத்தின் படைகள் ரசயான ஆயுதங்களைப் பயன்படுத்தின என்று தீவிரவாதக் குழுக்கள் கூறியதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தன.

சர்வதேச ஒப்பந்தங்களின்படி சரிண் வாயுவை ரசாயன ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாயுவை நகரத்திற்குள் பயன்படுத்தினால், அது கொடுங்குற்றமாகக் கருதப்படும். ஆனால், இந்த ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தியதற்கு யார் பொறுப்பு என்று நிறுவிட விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

சிரிய அரசாங்கம், தங்கள் ஆயுதப்படையினர்  கான் சிய்குன் நகரத்தில் இந்த ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று முழுமையாக மறுத்துள்ளது. சிரிய விமானப் படை தாக்குதல் தொடுத்த சமயத்தில், தீவிரவாதக் குழுக்கள் தங்களின் பதுங்குமிடத்தில் ஒளித்துவைத்திருந்த மரணத்தை விளைவித்திடும் எரிவாயு வெளியாகி மக்களைப் பாதித்திருக்கக்கூடும் என்று சிரியன் விமானப்படையினர் ஊகிக்கின்றனர்.
மேற்கத்திய நாடுகள் தங்கள் ஊடகங்கள் மூலமாக என்னதான் தம்பட்டம் அடித்தபோதிலும், சிரிய அரசாங்கத்தின் கூற்றையும் பரிசீலனை செய்ய வேண்டியதும் அதன்மூலம் உண்மையை வெளிக்கொணர சுயேச்சையான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதும் அவசியமாகும். ஏனெனில் இதேபோன்று ஒரு சம்பவம் 2013 ஆகஸ்ட்டில் நிகழ்ந்துள்ளது. அந்த சமயத்தில்  டமாஸ்கஸ் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள கௌதா என்னுமிடத்தில் சரிண் வாயு தாக்குதல் நடைபெற்றது. அந்த சமயத்திலும் இதேபோன்று தீவிரவாதக்குழுக்களும், மேற்கத்திய நாடுகளும் அன்றைக்கிருந்த அஸ்ஸாத் அரசாங்கத்திற்கு எதிராக கூக்குரல் எழுப்பின. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவும் சிரிய அரசாங்கத்திற்கு எதிராக ராணுவத் தாக்குதல்கள் தொடுத்திட வேண்டும் என்றார். ஆனால், சர்வதேச அளவில் அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் அதிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.

பின்னர் நடைபெற்ற புலனாய்வுகளிலிருந்து, சரிண் வாயு கௌதாவில் உsyria conflict1ள்ள அல் ஷாம் குழுவால் சில துருக்கிய அதிகாரிகள் உட்கையாக இருந்து உதவியதன்மூலமாக பெறப்பட்டவை என்று தெரியவந்தது. இதே அல் ஷாம் குழுதரான் இப்போது தாக்குதலுக்கு உள்ளான கான் சிய்குன் நகரத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்குப்பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையான கயவர்கள் யார் என்பதை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புலனாய்வு இதழியலாளரான செய்மூர் ஹெர்ஷ் என்பவர் தன்னுடைய மதிநுட்பமான புலனாய்வின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக பஷார் அல் அஸ்ஸாத் அரசாங்கத்தின் மீது மேற்கத்திய நாடுகள் பழிபோடுவதை நம்ப மறுப்பதற்கு மற்றுமொரு முக்கியமான காரணமும் உண்டு. தற்போதுள்ள நிலையில் சௌதி அரேபியா, கத்தார், துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த கலகக்காரர்களுக்கும்  அஸ்ஸாத் அரசாங்கத்திற்கும் இடையே நடைபெறும் ராணுவ மோதலில் தற்போது அஸ்ஸாத் அரசாங்கத்தின் கைகளே ஓங்கியிருக்கக்கூடிய நிலையில், அநேகமாக அனைத்துப் பெரிய நகரங்களும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலையில், தன் சொந்த மக்கள் மீதே சிரியன் அரசாங்கம் ரசாயன தாக்குதலைத் தொடுத்தது என்று கூறுவதை நம்புவது என்பது மிகவும் குறுகியபார்வை மட்டுமல்ல, முட்டாள்தனமுமாகும். மேலும், 2013 நிகழ்வுக்குப்பின்னர், சிரியா, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, தன்னிடமிருந்த அனைத்து ரசாயன ஆயுதங்களையும் ஐ.நா.மேற்பார்வையின்கீழ் அழித்துவிட்டது. இதனை ஐ.நா. அமைப்பான ரசாயன ஆயுதங்கள் தடைக்கான அமைப்பு (Organisation for the Prohibition of Chemical Weapons) 2014 ஜூனில் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு டிரம்ப் சிரியா மீது ராணுவத் தாக்குதல் தொடுத்தது, வலுவான யுத்தத்தை விரும்பும் “லிபரல்” ஏகாதிபத்தியவாதிகள் ஆதரவைப் பெற்றது. இவர்கள்தான் எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் கட்சியிலும் ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள். இதுவரை டிரம்பைஎதிர்த்து வந்த இந்த “லிபரல்” ஊடகங்கள் இப்போது அவரை ஓகோ என்று துதிபாடத் துவங்கிவிட்டன.

அஸ்ஸாத் ஆட்சியதிகாரத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா முன்பு கோரி வந்த கோரிக்கையை இப்போது டிரம்ப் மீண்டும் எழுப்பத்துவங்கிவிட்டார். யார் அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்தாலும், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் நலன்களை உயர்த்திப் பிடித்துத்தான் ஆக வேண்டும்.    அமைதியை உருவாக்குபவர் என்று புகழப்பட்ட ஜனாதிபதி ஒபாமா, ஆட்சிக்கு வந்தபின் லிபியா மீது  ஆகாயவழி தாக்குதல்களைத் தொடுத்தார். அது கடாபி அரசாங்கம் கவிழ்வதற்கு உதவியது. அவர், சௌதி அராபியா மற்றும் கத்தார் மூலமாக சிரியாவில் இயங்கி வந்த கலகக் கும்பல்களுக்கு ஆயுதங்களும், நிதி உதவியும்  அளித்தார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளுக்கு – அந்நாடுகளிலிருந்து மீளவும் துருப்புகளை வாபஸ் வாங்கிக்கொள்வேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு – அதிக துருப்புக்களை அனுப்பினார்.

அமெரிக்க அரசு ஓர் ஏகாதிபத்திய ஏகபோக அரசு என்பதையும், தன் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக யுத்தப் பசியுடனேயே எப்போதும் அலைந்திடும் என்பதையும், சிரிய ராணுவத் தாக்குதல், மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டி இருக்கிறது. 

சிரியன் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு மூர்க்கத்தனமான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதன் மூலம், டிரம்ப் தான் முன்பு அளித்திருந்த உறுதிமொழியிலிருந்தும் பின்வாங்கியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் பிரதான ஆபத்து என்றும் அதனை எதிர்த்துப் போரிட ரஷ்யாவுடன் ஒத்துழைத்திடுவேன் என்றும் இதற்கு முன்பு டிரம்ப் கூறியிருந்தார். இப்போது டிரம்ப் அரசாங்கம், அஸ்ஸாத் அரசாங்கத்திற்கு ரஷ்யா அளித்துவரும் ஆதரவை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கிறது.

சிரியாவில் தற்போதுள்ள எதார்த்த நிலை என்னவெனில், சிரிய அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவத் தலையீடு எதுவாக இருந்தாலும், அது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கும் இதர இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்குமே உதவிடும். அஸ்ஸாத் அரசாங்கத்தையோ அல்லது அதற்கு ஆதரவாக நிற்கும் ரஷ்யா மற்றும் ஈரானையோ  இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலமாகப் பணிய வைத்துவிடலாம் என நினைப்பது  மிகவும் சந்தேகம்தான்.

(ஏப்ரல் 12, 2017)

தமிழில்: ச. வீரமணி.

dantv