Theneehead-1

Vol: 14                                                                                                                                                                15.04.2017

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தது; பல வீடுகளுக்கு சேதம்

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து kuppaiவிழந்ததில் அப்பிரதேசத்தில் சற்று அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.

குப்பை மேடு சரிந்து விழந்ததன் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள பல வீடுகுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் காயமடைந்த 06 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி உரிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றி அதனுள் பெகோ இயந்திரம் ஒன்று சிக்கியுள்ளதுடன், விமானப்படையின் பெல் 212 வகை ஹெலிகப்டர் தீயை அணைப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

குப்பை மேட்டின் சில இடங்களில் தீப்பரவல் இடம்பெறுவதால் தீயணைப்பு படையினர் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், முப்படையினரையும் இணைத்து நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

இது தவிர அவசர தகவல்களை வழங்குவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நிவாரணம் மற்றும் அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் சிரமமின்றி முன்னெடுப்படுப்பதற்காக பொதுமக்கள் அப்பிரதேசத்திற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

dantv