Theneehead-1

   Vol:17                                                                                                                               15.09.2018

சுழலில் சிக்குண்ட விஜயகலா:சட்டநடவடிக்கைகள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள்                                         

                                      சமிந்திரா வீரவர்தன

(பகுதி 1)

6 ஜூலை 2018ல் கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் பிரசுரமான ஒரு கட்டுரையில் இந்த எழுத்தாளர் பின்வருமாறு எழுதியிருந்தார்:vijayakala_CI

போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்காவின் இனவாத தேசிய அரசியல் பற்றி எழுதும்போது, இந்த எழுத்தாளர் தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை முன்னிலைப்படுத்த முயல்கிறார் - அதாவது தமிழ் தேசியவாதம் என்றழைக்கப்படும் ஒரு விஷயம் உள்ளது என்பதை. தமிழ் தேசியவாதம் என்பது தரப்பட்ட ஒன்று எங்களில் சிலர் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ அது தொடர்ச்சியாக இருந்து வருகிறது மற்றும் சிலபகுதிகளில் செழித்தோங்கியும் வளர்கிறது. நல்லிணக்கத்தை நோக்கிய நியாயமான வழிமுறைகளில் ஒரு முக்கியமான பகுதி, அதன் பங்காளர்களின் இருப்பை புரிந்துகொண்டு அதை அங்கீகரித்தல் மற்றும் எதிர்க்கும் கருத்துக்களை அடையாளம் காண்பது என்பனவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.

தமிழ் தேசியவாதிகளான ஸ்ரீலங்காவாசிகளுக்கு தமிழ் தேசியவாதத்தை பின்பற்றுவதற்கு உரிமை உள்ளது. எனினும் அவர்களது தேசியவாத பிரசங்கம் மற்றும் செயற்பாடுகள் (சிங்கள தேசியவாதிகளுக்கு உள்ள அதே விதமான பொறுப்புக்களின்படி) தீவிரவாதத்தின் தீய சுழற்சிகளாக மாறாது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பும் அவர்கள்மீது விழுகிறது. அத்தகைய பேரினவாத மிகைப்படுத்தல்கள் காரணமாக ஸ்ரீலங்காவாசிகளான நாங்கள் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்டு வருகிறோம். 2018ம் வருடத்திலாவது மீண்டும் ஒருமித்து அமர்ந்து ‘வாழு மற்றும் வாழவிடு’ என்னும் அணுகுமுறையை பின்பற்றுவது தொடர்பாகவும் மற்றும் ஸ்ரீலங்காவின் சமூகஅரசியல் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் உள்ள தீவிரவாதத்தை  எதிர்ப்பதற்கான கூட்டுப் பொறுப்பிற்கு விடப்படும் சவால்கள் மற்றும் கண்டனங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நிச்சயமாக ஏற்ற தருணம் இதுவே.

தமிழ் தேசியவாதம் கொடுக்கப்பட்ட ஒன்று. அது பல வடிவங்கள் மற்றும் உருவங்களில் உள்ள ஒரு சித்தாந்தம், மற்றும் சிங்களத் தேசியவாதத்தைப்போலவே தமிழ் தேசியவாதத்தின் வாதமும் ஒரு நிறமாலை ஊடாக இடம்பெறுகிறது, பாராளுமன்ற அரசியல் அல்லது அரசியலமைப்பின் தேசியவாத நிலைப்பாடு இல்லாமல், ஒருவகையான மிதவாத, மற்றும் மிகவும் வலுவான பிராந்தியவாதம்,சுயநிர்ணய அமைப்பு மற்றும் கடுமையான பிரிவினைவாத சொற்பொழிவுகளை அது கொண்டுள்ளது. 30 வருட யுத்தம் 2009ல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரிவினைவாத தமிழ் தேசியவாதம் பெருமளவு தென்கிழக்காசியா மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர் வட்டாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால் தமிழ் பிரிவினைவாதத்துக்கு ஸ்ரீலங்காவில் எதிர்காலம் இல்லையென்பது பூகோள மூலோபாய ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழமாக பிளவுபட்டுள்ள சமூக அரசியல் பின்னணியில் தீவில் உள்ளவர்களிடையே பிளவுகளை எற்படுத்தவும் பிரிவுகளை உண்டாக்கவும் சர்வதேச சட்டத்திற்கு எந்த விருப்பமும் இல்லை. தென்கிழக்காசியாவின் பின்னணியில் தேசிய பாதுகாப்பின் பிராந்திய வல்லரசு பற்றிய கவலைகள், சர்வதேசியமயமான  கிழக்குப்பான்மை வடிவத்தில் எழுகிறது, இந்தியாவுடனான மேற்கத்தைய கூட்டணி எழுச்சிபெறும் சீனாவை எதிர்கொள்வது, பிராந்தியத்தில் பிரிவானைவாதத்துக்கு பெருமளவில் எழுந்துள்ள எதிர்ப்பு, போன்றவைகள்தான் அவர்களின் தனிநாட்டு இலட்சியம் என்பது முற்றிலும் யதார்த்தமற்றது என்கிற உண்மையை எல்.ரீ.ரீ.ஈ இற்கு உணர்த்தி அதை ஒரு நிலைப்பாட்டுக்கு வர வைத்திருக்கவேண்டும்.

துரதிருஷ்டவசமாக இந்த உண்மையை அவர்கள் புரிந்துகொள்ள இயலாமல்போனதோ அல்லது துல்லியமாகக் குறிப்பிடுவதானால் அழுத்தம் தரும் மூலோபாய மற்றும் பூகோள அரசியல் யதார்த்தங்களை உணர்வதற்கு வி.பிரபாகரனுக்கு இயலாமல் போனதோ மற்றும் குறிப்பாக அந்த இயக்கத்தின் துணைத் தலைவரான விவேகமுள்ள கலாநிதி. அன்ரன் பாலசிங்கத்தின் அறிவுரைகளைக் கவனத்தில் கொள்ள அக்கறையற்றதோதான் (விசேடமாக ஒஸ்லோ சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர்) பிரபாகரன் தனது பிரிவினைவாத இயக்க போராளிகளுடன் சேர்ந்து தனது இறுதி அழிவை நோக்கிச்செல்வதற்கு வழிவகுத்த பிரதான காரணங்களாகும்.

ஸ்ரீலங்காவாசிகள் என்றவகையில் - மற்றும் விவேகமுள்ள தேசப்பற்றான ஸ்ரீலங்கா அடையாளத்தை நாம் ஆதரிப்போமானால் -  நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான உண்மை உள்ளது - அது ஸ்ரீலங்கா குடிமக்களுக்கு அவர்கள் விரும்பினால் தமிழ் தேசியவாத முன்னோக்குகளை நிலைநிறுத்துவதற்கு சகல உரிமையும் உள்ளது என்பதை. விசேடமாக ஸ்ரீலங்காவின் போருக்குப் பிந்தைய சூழலில் இது மிகவும் முக்கியமானது ஆகும்.

ஆச்சரியமற்றவிதத்தில் போருக்குப் பிந்தைய முதல் தசாப்தத்தில் அநேக ஸ்ரீலங்காவாசிகள் இதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டியது உண்மைதான். எங்கள் ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் மற்றும் அணி திரள்வதும் விட்டுக்கொடுக்க முடியாத ஒரு உரிமை, மற்றும் ஜனநாயக கோளத்தினுள் அந்த உரிமை வழங்கப்பட வேண்டும். அத்தகைய கொள்கைகளில் ஏற்படும் இடர்கள் உட்பட இதில் ஏற்படும் எந்த பற்றாக்குறையும் தேசிய இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

எங்களில் சிலர் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ யுத்தத்துக்கு பிந்தைய ஸ்ரீலங்காவில் தமிழ் தேசியவாதம் ஒரு செல்வாக்குள்ள அரசியல் பிரசங்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனினும் அநேகமானவர்கள் குறிப்பாக சிங்கள மக்கள் யுத்தத்தின் முடிவு வெளிப்படுத்துவது தமிழ் தேசியவாதம் முடிவடைந்து விட்டது என்கிற சிறுபிள்ளைத்தனமான தவறான முடிவுடன் ஒட்டிக் கொண்டுள்ளார்கள். தமிழ் தலைவர்கள்  அடிமைகளாக அடிபணியும் நிலைப்பாட்டை பின்பற்றவேண்டும் மற்றும் கூட்டாட்சி, பிராந்திய ஒருமைப்பாடு, சுயநிர்ணயம், மொழியியல் நீதி, உண்மை தேடல் மற்றும் காணாமற்போனவர்களுக்காக நீதி கோருதல் போன்ற எந்தப் பிரச்சினைகளையும் எழுப்பாமல் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை பலர் கொண்;டுள்;ளார்கள். இது சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளால் (குறிப்பாக ஆண் அரசியல்வாதிகளால்) குறுகிய கால அரசியல் முதலெடுப்புக்காக சுரண்டப்படுவது, இது இனவாதப் பெரும்பான்மையினரிடத்தில் உயர்மட்டத்தில் காணப்படும் பலவீனம் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு சிறுபிரிவினரான சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான பிரசங்கத்துக்கு (அல்லது அச்சம் கலந்த ஒரு மனநோய்) எதிரான ஒரு சிங்கள வெகுஜன இயக்கத்தை உருவாக்குவதற்கான தெளிவான அவசியம் உள்ளது.

திருமதி. மகேஸ்வரன்: ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கை?

சுருக்கமாகச் சொல்வதானால். விஜயகலா மகேஸ்வரன் பா.உ, போருக்குப் பிந்தைய வடக்கில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் தொடர்பாக 2018 ஜூலையில் அவர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளினால் அவர் சுடுநீரில் விழுந்த நிலைக்கு ஆளாகினார். இந்த அறிக்கைகள் மிகவும் விலையுயர்ந்தவையாக மாறின, உடனடியாக  அவர் வகித்தவந்த சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். முதலாவது அறிக்கை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு. போருக்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்நோக்கும் பாதுகாப்பின்மை மற்றும் பாலியல் வன்முறை ஆபத்துக்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், திருமதி மகேஸ்வரன் வடக்கு ஸ்ரீலங்காவில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எல்.ரீ.ரீ.ஈ மீளமைக்கப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டார். திருமதி மகேஸ்வரனின் கருத்து இதுதான்:

பெண்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் எழும் வன்முறைகளுக்கு நாங்கள் முடிவுகட்டவேண்டுமானால் நாங்கள் எல்.ரீ.ரீ.ஈ இனை திரும்ப கொண்டுவர வேண்டியிருக்கும். இந்த அறிவிப்புக்கு பின்னாலுள்ள நியாயம் கவனிக்கப்பட வேண்டியது. முற்றிலும் மோசமான வன்முறை அட்டூழியங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ பெயர்பெற்றிருந்தாலும் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகளுக்கு அது இலக்கானது அபூர்வம். எல்.ரீ.ரீ.ஈ இன் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்வதில் ஏராளமான ஆபத்துக்கள் இருந்ததுக்கு மாறாக (உதாரணமாக தொடர்ச்சியான வன்முறை ஆபத்து, ஆட்கடத்தல்கள், சிறுவர்களைக் கட்டாயமாக படையில் இணைத்தல், அதன் வழிக்கு வராத தமிழ் மக்களை படுகொலை செய்தல் மற்றும் பல) யுத்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ பாலியல் வன்முறை புரிந்ததுக்கான ஆதாரம் எதுவுமில்லை, அதன் கடுமையான நடத்தை விதிகள் மற்றும் சமூகப் பழமைவாதம் என்பனவே இதற்குக் காரணம்.

இந்தக் கட்டத்தில் இந்தக் கருத்தை வெளியிடுவதற்காக அமைந்த உடனடி சூழ்நிலையை குறிப்பிடுவது பெறுமதியுள்ளதாகும். இந்த எழுத்தாளர் 6 ஜூலை 2018ல் வெளியான அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல:

அமைச்சர் மகேஸ்வரன் இந்தக் கருத்தை வெளியிடுவதற்காக அமைந்த உடனடி சூழ்நிலை மிகவும் பரிதாபகரமான முறையில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும் (முன்னாள் அமைச்சரின் உரையில் இருந்து மேற்கோள் காட்டினால்) - ஒரு ஆறு வயதான சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுவே. சிறுமிகளும் மற்றும் பெண்களும் உயர் மட்டத்திலான பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுக்க நேர்வதாக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அடிக்கடி வெளியாகும் அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா ஊடகங்களில் மேற்கண்ட சம்பவம் நடந்தது பற்றி அடுத்து எந்த செய்தியும் இடம்பெறவில்லை. இந்தக் கட்டத்தில் நடப்பிலுள்ள இந்த விஷயத்தை தீவிரமாகப் பிரதானப் படுத்தவேண்டியது முக்கியமானதாகும் - பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் பற்றி. உண்மையில் இத்தகைய வன்முறைகள் யுத்தத்துக்கு பிந்தைய ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உயர்ந்தளவில் அதிக விகிதாசாரத்தில் நடைபெறுகின்றன, இந்த யதார்த்தம் முன்னாள் அமைச்சரின் பேச்சில் வெளிக்கொணரப்பட்டது. ஒரு பெண்ணாக மற்றும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனப்பிரதிநியாக இந்த பிரச்சினையை எழுப்புவதற்கு முன்னாள் அமைச்சருக்கு முழு உரிமையும் உள்ளது, இதை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமல்ல ஆனால் பாராளுமன்றத்திலும் சாத்தியமான அனைத்து அரசாங்க நிகழ்வுகளிலும் கூட இதை வலியுறுத்தும் முழுக் கடமையும் உள்ளது. மேலும் ஆழமான சிக்கல் நிறைந்த இந்தப் பிரச்சினை மிகவும் குறைவான கவனத்தைப் பெறும் விஷயமாக உள்ளது என்பதை வலியுறுத்த வேண்டிய தேவையும் உள்ளது. முன்னாள் யுத்தப்  பிரதேசத்தில் பாலியல் வன்முறை ஒரு சர்வசாதாரண நிகழ்ச்சியாக இருக்குமானால் நல்லிணக்கம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளையும் ஏன் ஒற்றுமை என்பதைக்கூட நாங்கள் மறந்துவிட வேண்டியதுதான்.

8 செப்ரம்பர் 2018ல் அறிவிக்கப்பட்டது, சட்டமா அதிபர் காவல்துறை கண்காணிப்பாளர் நாயகத்துக்கு (ஐஜிபி) ஸ்ரீலங்கா குற்றவியல் பிரிவு 120ன் கீழ் திருமதி.மகேஸ்வரன் மீது வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தார். திருமதி.மகேஸ்வரனுக்கு எதிரான சட்டமா அதிபரின் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்.

(தொடரும்)