Theneehead-1

Vol: 14                                                                                                                                                16.02.2017

த.தே.கூ,.மு.காவை பிளவுபடுத்த திரைமறைவில் சதி முயற்சிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய சிறுபான்மையeast cmினங்களின் கட்சிகளை பிளவுபடுத்த திரைமறைவில் பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றப்படுவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.இந்த சதித்திட்டங்களின் பின்னணியில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் பிரதான பாத்திரங்களை வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயதொழில் ஊக்குவிப்பு,பண்ணை  தொழிற்துறையை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை முன்னெடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய அரச ஆடுகள் மரபுரிமை வள மேம்பாட்டு நிலையமொன்றை மட்டக்களப்பு தும்பங்கேணி பகுதியில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான பணிகள் இடம்பெற்றுவரும் தீர்க்கமான கால கட்டத்தில் சிறுபான்மையினரை அதிகளவில் பிரதிநிதித்துவப்படும் இவ்விரு கட்சிகளினதும் வகிபாகம் மிக முக்கியமானது.

சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் விட்டுக் கொடுப்பின்றி செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கவனத்தை திசை திருப்புவதற்கு இந்த கட்சிகளுக்குள் உட்பூசல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான இந்த சதித்திட்டங்களை முன்னெடுக்க சில சிறுபான்மை அரசியல்வாதிகளே குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.

 இதை அவர்களின் செயற்பாடுகளைக் கொண்டே இலகுவில் அடையாளங்காண முடியும். ஆளுந்தரப்பு மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களில் பேரினவாத சக்திகளிடம் சிறுபான்மையினரையே காட்டிக் கொடுக்கும் சிறுபான்மையின அரசியல்வாதிகள் சமூகத்துக்கு சாபக்கேடாய் அமைந்துள்ளனர். எனவே சதிகார சக்திகள் குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். சதிகளை தகர்க்க சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

dantv