Theneehead-1

Vol: 14                                                                                                                                                16.03.2017

அன்புடன் சகல தமிழ் தலைவர்களின் கவனத்திற்கு!                                                        

பதவி பேராசையே தமிழ் சமூகத்தை அழிக்கிறது

தமிழர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியும் பதவி பேராசையும் பொதsangary5ுவாக நாட்டையும், குறிப்பாக தமிழ் சமூகத்தையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது. தற்போது தமிழ் மக்கள் படுகின்ற துன்ப துயரங்களும் மனச்சங்கடங்களும் இன்று பெருமளவில் காணப்படுவதுபோல கடந்த காலங்களில் காணப்படவில்லை. எமது தலைவர்கள் மத்தியில் காணப்படுகின்ற ஒற்றுமையின்மை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எமது மக்களை ஒரே கொடியின் கீழ் பொது கொள்கையுடன் ஒன்றிணைக்க தவறுவோமேயானால் சுதந்திர இனமாக நாம் தப்பிப்பிழைப்பது முடியாமல் போய்விடும். எம் மத்தியில் பல தலைவர்களும் அத்துடன் பல தமிழ் கட்சிகளின் தலைவர்களும்; ஒவ்வொருவரும் எமது மக்களை வெவ்வேறு திசையில் இழுத்துச் செல்வதால் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இன்று எமக்கு வேண்டியதெல்லாம் ஒற்றுமையும் பொது தலைமையும் முக்கியமாக உணர்வுகளை தூண்டும் விடயங்களில் இணக்கப்பாடு அவசியமாகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினையை மிக முக்கியமான புனிதமானதொன்றாக ஏற்று சொந்த நலனை கருத்திற்கொள்ளாமல் அதற்கமைய செயற்படுவதே ஆகும். அரசியல் ஒரு தீய செயற்பாடு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் ஆனால் பலர் இன்று செய்வதை போல அரசியலை ஒரு தீய செயலாக செய்ய வேண்டிய அவசியமில்லை. சிலர் இன்று ஒன்றையும் மறுநாள் வேறொன்றையும் அதேபோல திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கின்றனர். எமக்குப்பல பிரச்சினைகள் உண்டு ஆனால் ஒவ்வொரு பிரச்சினையும் நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமையால் உருவாக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை. வறுமையை மட்டும் முறியடித்து விடுவோமேயானால் ஏனைய பிரச்சினைகள் பல தாமாகவே குறைந்து விடும்;. பல சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ உணவு பண்டங்களை வழங்குமாறு அரசிடம் கோரி வந்துள்ளேன். துரதிஷ்டவசமாக இன்றுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்த ஆலோசனையை முன்னெடுக்காமல் பிரயோசனமற்ற சில விடயங்களிலும் அல்லது பிரச்சினைக்குரிய பல விடயங்களிலும் தமது பாராளுமன்ற ஆசனங்களை பாதுகாப்பதற்காகவும் திரும்பத் திரும்ப அதனையே பேசி வருகின்றனர்.

பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதும், காணாமல் போனவர்கள், விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதத்துடன் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் தற்போதைய இருப்பிடம் அல்லது அவர்களை பற்றி விபரங்கள் ஆகிய விடயங்களுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. பொதுமக்கள் தமது காணிக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார்கள் என்பதை ஒர் கவிதை மூலம் சேர் வோல்டர் ஸ்கொட் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார். “இது என்னுடையதும் என்னுடைய தாய்நாடும் என்று தனக்குள்ளே தன்னும் ஒருபோதும் கூறாத உணர்வற்ற ஒருவன் உயிருடன் இருக்கின்றானா?” அந்த கவிதையில்  இடம் என்று குறிப்பிட்டது நாட்டை பற்றி மட்டும் அல்லாது தான் பிறந்த சொந்த இருப்பிடம் பற்றியதே.

மக்களுடைய காணிகளை பற்றி ஏதாவது நடவடிக்கை எடுக்கும்போது அரசுகூட  அவ்வாறு சிந்திக்க வேண்டும். உணர்வை தூண்டும் மற்றைய விடயம் காணாமல் போனவர்கள் பற்றியதே. எனது அபிப்பிராயத்தின்படி ஒரு பொருளை இழந்தவனுக்கே அப்பொருளின் அருமை தெரியும். அதேபோல் ஒரு விதவைக்குத்தான் தனது கணவனின் அருமையும் அதேபோல் வாழ்வை இழந்தவனுக்கு தனது மனைவியின் அருமையும் தெரியும். பெற்றோர்-பிள்ளைகள் ஆகியோரின் உறவும் அத்தகையதே.

நான் மிகவும் பணிவாக அரசை எச்சரிப்பது யாதெனில் காணிகளையும் உறவுகளையும் இழந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் என்பதே. அரசுக்கு உள்ள ஒரேயொரு வழி காலம் கடத்தாமல் உடனடியாக காணாமல் போனவர்களின் விபரங்களை உண்மையாக திரட்டுவதும், இழப்புக்களை அடைந்தவர்களுக்கு எத்தகைய சிறந்த வழியில் உதவ வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வதே. அத்துடன் காணிகளை பொறுத்தவரையில் அவ்வாறான காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லையென்பதால் அனைவரினது காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். மேலும் கூறுவதானால் அரசு இராணுவ முகாம்களாக செயற்பட்ட இடங்களையும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு எங்கெங்கு இராணுவ முகாம்கள் அமைந்திருந்தனவோ அதனை தவிர்த்து எஞ்சிய அத்தனையையும் மூடி விட வேண்டும். காணிகளில் அமைந்திருந்த கட்டிடங்களில் பொருத்தமான முறையில் பல்கலைகழக வளாகங்களுக்கோ தொழில்நுட்ப கல்லூரிகளுக்கோ அரச காரியாலயங்களுக்கோ பொருத்தமானவைக்கு கையளிக்கலாம்.

ஜனாதிபதி அவர்களே, இந்த காணிப்பிரச்சனையை மிகச் சிறந்த முறையில் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் பொறுப்புள்ள பிரமுகர்களைக் கொண்டு நாடு முழுவுதும் சுற்றி வந்து பொருத்தமான காணிகளை பொருத்தமான தேவைக்கு சிபாரிசு செய்யலாம். அதேபோல் காணாமல் போனவர்களுக்கு ஓர் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து இறுதி யுத்தக்களத்தில் யார் யாருக்கு என்னென்ன இடம்பெற்றது என்பதை விசாரணை செய்து அறிய வேண்டும். அப்படியானால் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வருவதோடு காணாமல் போனோர், ஏனையோர் பற்றிய நல்லதும் கெட்டதும் தெரிய வரும்.
என்னுடைய அரசியல்  வாழ்க்கை பற்றி கூறினால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். நான் 1970ம் ஆண்டும் 1977ம் ஆண்டும் மொத்தமதாக 13 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டேன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானத்திற்கமைய அதன் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை துறந்தோம். அதற்குரிய காரணம் அரசு முறையற்ற வகையில் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தின் கால எல்லையை ஆறு ஆண்டுகள் நீடித்தமையே .தமிழர் விடுதலைக் கூட்டணி பதவி துறந்தமைக்கான காரணம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆறு ஆண்டு காலம் மட்டுமே பதவி வகிக்க தெரிவு செய்யப்பட்டோம். எமது செயல் சர்வதேச சமூகத்தால் பெரிதும்  வரவேற்கப்பட்டு ஜனநாயகத்துக்கு ஆற்றிய பெரும் சேவையாகவும் கணிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு பாராளுமன்றம் 1989ம் ஆண்pடுவரை 13 ஆண்டுகள் பதவியில் இருந்தமை உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாத ஒன்று யுத்தம் போன்று அவசரகால நிலைமைகள் ஏற்படும் போது மாத்திரமே. சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறு தெரியாமல் தாம் நினைத்த நேரத்தில் எல்லாம் பல்வேறு அறிக்கைகளை விடுத்து மக்களை தவறாக வழி நடாத்தி வந்தனர் என்பதால் இதனை குறிப்பிட வேண்டியேற்பட்டது. இந்தச் சூழ் நிலையில் அரசு துரிதமான நடவடிக்கை எடுக்காமையால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இருண்டு விடயங்களையும் அதாவது இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு அரசாங்கத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுவதே தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ள ஒரேயொரு வழியாகும்.

2010ம் ஆண்டு ஜூலை 02ம் திகதி முல்லைத்தீவில் இராணுவ முகாம் திறப்பதும் இராணுவத்தினருக்கு வீடுகள் அமைப்பதும் காலத்துக்கு ஒவ்வாத செயலென என்ற தலையங்கதில் விடுத்த செய்தியின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது. “முல்லைத்தீவில் இராணுவ முகாம் அமைப்பதும் இராணுவத்தினருக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் உருவாக்குவதும் காலத்துக்கு ஒவ்வாதது மட்டுமல்ல எதிர்பார்த்ததற்கு முரணான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் விரைவில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தும் செயலென தயங்காமல் கூற விரும்புகிறேன். இந்த நடைமுறையை எதிர்த்து ஒரு குழப்பமான நிலைமையை உருவாக்குவதற்கு நான் ஒரு முட்டாள் அல்ல. நான் எதை செய்தாலும் நாட்டு பற்றுடனேயே செயற்படுவேன். அரசுக்கு எனது விசுவாசமான ஆலோசனை யாதெனில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை மூடி புதிதாக இராணுவ முகாம்களை அமைக்காது இராணுவத்தினருக்கு வடக்கு கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே. எனது சிந்தனைக்கு மதிப்பளித்து அதனை பாராட்டி இந்த நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்”;. நான் அன்று கூறியது இன்று எனது தீர்க்க தரிசனமாக நடக்கிறது.

வீ.ஆனந்தசங்கரி                                                                     

 செயலாளர் நாயகம்- த.வி.கூ

 

dantv