Theneehead-1

Vol: 14                                                                                                                                                16.03.2017

“ஜனாதிபதி அவர்களே எனது மகள் உயிரோடு இருக்கிறாள்”

                                         சுலோச்சனா ராமையா மோகன்

அது வெறும் காடு. வவுனியா மாவட்டம் நைனாமடு கிராமசேவகர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமம் இருட்டாகவே உள்ளது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியால் கட்டப்படும் பல வீடுகள் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ளwar2009ன, மற்றும் அதேபோலவே 4 மார்ச் 2009ல் காணாமற்போன தங்கள் மூத்த மகள் ஜெரோமியை தேடிக் கொண்டிருக்கும் காசிப்பிள்ளை குடும்பமும் அங்கு உள்ளது. ஆனால் 2015ல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரம் ஒன்றில் காணப்படும் புகைப்படம் ஒன்றில்; ஜனாதிபதி சிறிசேன அருகில் நிற்கும்; ஒரு தொகுதி பாடசாலை சிறுவர் சிறுமிகள் மத்தியில் அவர்கள் அவளை மீண்டும் உயிரோடு கண்;டுள்ளார்கள். அவர்களது மகள் வீடு திரும்பும் வரை அவர்களது புதிய வீட்டில் உள்ள மாடத்தில் விளக்கு ஏற்றப் போவதில்லை என்று காசிப்பிள்ளை சொல்கிறார், அவள் உயிரோடு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள் ஆனால் அதற்கு மேல் ஆழமாக எதையும் அவர்களால் அறியமுடியவில்லை.

காசிப்பிள்ளை தம்பதியினர் எங்கள் வருகைக்காக காத்திருந்தார்கள். வேலிக்கு குறுக்காக மாட்டியிருந்த மூங்கில் தடியை கீழே இறக்கிவிட்டு நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். இந்துக் கடவுள்களுக்கு முன்னால் இருந்த எண்ணெய் விளக்கு, காணாமற்போன அவர்களது மகள் என்று வீட்டுக்கு திரும்பி வருகிறாளோ அன்றுதான் ஏற்றப்படும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது.

47 வயதான ஜெயவதனி காசிப்பிள்ளை, ஜனாதிபதியுடன் தனது மகள் காணப்படும் புகைப்படம் இருந்ததாக அவர் சொல்லும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத் துண்டுப்பிரசுரத்தைக் கண்டதிலிருந்து அரசாங்கத்துடன் கடுமையாகப் போராடி வருகிறார். அவருக்கோ அல்லது அந்த வழக்கை விசாரிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கோ அந்த புகைப்படம் எங்கிருந்து வந்தது அல்லது அதை அச்சடித்தவர்கள் பற்றிய வேறு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

அவள் போய்விட்டாள்!

மார்ச் 4, 2009 மு.ப 11 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பாதுகாப்பு படைகள் இடையேயான சண்டை ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்ததால் மிகவும் தீவிரமான துப்பாக்கிச் சூடு, ஷெல் வீச்சு மற்றும் குண்டுவீச்சு என்பன நடைபெற்றுக் கொண்டிருந்தன. பலரும் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் அநேகர் இருபக்கத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில் அகப்பட்டு உயிரிழந்தார்கள்.

அன்றைய தினம், ஜெயவதனி, அவரது தாயார் மற்றும் ஐந்து பிள்ளைகள் ஆகியோர் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி மற்றும் ஒளிந்து சமாளித்து ரெட்டைவாய்க்காலில் இருந்து புதுமாத்தளன் வந்து சேர்ந்தார்கள். அவரது மூத்த மகள் ஜெரோமி சிவப்பு நிறத்தில் வெள்ளைப் பூக்கள் உள்ள ஒரு பருத்தி உடையை அணிந்திருந்தாள். அவள் தனது சாதாரண தரப் பரீட்சைக்குப் பிறகு, உடை தயாரிப்பாளரான அவளது தாய் வாழ்வாதாரத்துக்காக மும்முரமாக துணி தைத்துக் கொண்டிருப்பதால் வீட்டில் இருந்து தனது உடன்பிறப்புகளைக் கவனித்து வந்தாள்.

“பாதுகாப்பான இடம் என்று நாங்கள் கேள்விப்பட்ட இடத்தை நாங்கள் அடைந்து விட்டோம். அங்கு ஒரு பெரிய ட்ரக் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. இராணுவ சீருடை தரித்த ஆண்கள் முகத்தை கருப்புத் துணிகளால் கட்டியிருந்தார்கள், அவர்கள் அங்கு நின்றிருந்த இளைஞர்கள் அனைவரையும் அந்த வாகனத்தில் ஏறும்படி கட்டளையிட்டார்கள். அவர்கள் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை ஆனால் சைகைகளை பயன்படுத்தினார்கள். அவர்கள் தாய்மார் மற்றும் தந்தைமார்களை அவர்களது பிள்ளைகளில் இருந்து வேறுபடுத்தி அவர்களை வாகனத்தில் ஏறும்படி கட்டளையிட்டார்கள்.

ஜெயவதனி, தான்  உயிருக்குப் பயந்தபடியே தனது மகளுடன் ஒட்டிக்கொண்டே அந்த வண்டியில் ஏறியதாகச் சொன்னார். அங்கு கிட்டத்தட்ட 350 இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் நாலு தாய்மார்கள் அந்த வண்டியில் இருந்தார்கள். அதில் இளவயது எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் இருந்தார்கள். கிட்டத்தட்ட 75 விகிதமானவர்கள் இளம் பெண்கள், என அவர் நினைவு கூர்ந்தார்.srisena

ஒரு அரைமணி நேரத்துக்குப் பின்னர் வாகனம் ஒரு காய்ந்த நெல் வயலில் நின்றது, மற்றும் ஆண்கள்  வாகனத்தின் பின்பக்கமாக நடந்து வந்தார்கள், மற்றும் தாய்மார்களின் கரங்களைப் பிடித்து இழுத்து அவர்களை வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டார்கள். எல்லோரும் அலறினார்கள். ஜெயவதனியை இறங்கும்படி கட்டாயப் படுத்தினார்கள், அதேபோலவே மற்றைய மூன்று தாய்மார்களையும் அதேபோல கட்டாயப்படுத்தினார்கள். அவர்களை கீழே தள்ளிய அதேவேளை ட்ரக் வண்டி வேகமாக பாய்ந்து சென்றது மற்றும் தனது மகள் தன்னை நோக்கி கைகளை நீட்டியவாறு அம்மா, அம்மா என்று அலறுவதை அவர் கண்டார், அவ்வளவுதான் கதை முடிந்து விட்டது.

இன்று கிட்டத்தட்ட ஏழு வருடங்களாகிவிட்டது. அந்த ட்ரக் வண்டிக்கும் அது நிறைய இருந்த இளைஞர்களுக்கும் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஒருவர்கூட திரும்பி வரவில்லை மற்றும் ஒருவர்கூட சிறைச்சாலைகளிலும் இல்லை என்று தெரிவித்தார் ஜெயவதனி.

தங்கள் பிள்ளைகளையும் மற்றம் பிரியப்பட்டவர்களையும் இழந்த ஏனைய தாய்மார்களைப் போலவே ஜெயவதனியும் தனது மகளைத் தேடி வேட்டையில் இறங்கினார். “நான் அனைத்து எல்.ரீ.ரீ.ஈ முகாம்களிலும் விசாரித்தேன். அது எல்.ரீ.ரீ.ஈ ஆக இருந்தால் அந்த செய்தி அப்போதே எங்களுக்கு வந்திருக்கும். அவள் தங்கள் முகாமில் இருப்பதாக அவர்கள் ஒருபோதும் எதுவும் சொல்லவில்லை”.

ஒரு புதிய நம்பிக்கை

2015ல் சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தில் தனது காணாமற்போன மகளைப் பார்த்ததும் ஒரு சடுதியான நம்பிக்கை உருவாகியது. கிராமம் முழுக்க துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. எனது சிறிய மகன், அவனுக்கு அப்போது இரண்டரை வயது, நிலத்தில் கிடந்த ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்துக்கொண்டு வந்தான். அவன் அந்த புகைப்படத்தில் அக்காச்சி இருப்பதாகச் சொன்னான். நான் அதைப் பார்ப்பதற்கு முயற்சிக்கவில்லை. அந்த துண்டுப் பிரசுரத்தை வீசி எறிந்தேன். அன்றைய தினம் நான் சிறிசேனவிற்கு வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர், எனது மற்றைய மகள் எனது கணவரிடத்தில் சிறிசேன இந்த தேர்தலில் வெற்றி பெறுவாரா எனக்கேட்டாள். அவர் நிச்சயம் வெல்வார் என அதற்கு எனது கணவர் பதிலளித்தார். அவள் அந்த துண்டுப்பிரசுரத்தை தந்தவாறே “அப்படியானால் அவர் எங்கள் அக்காச்சியை வீட்டுக்கு அனுப்புவார் என்று சொன்னாள். அப்போதுதான் எனது கணவர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தார். ஆம் அது ஜெரோமிதான் மற்றும் அவர் எனதருகில் விரைந்து வந்தார். நானும் அதைப் பார்த்தேன் மற்றும் சுற்றி குடியிருந்தவர்களும் அதே கதையை சொல்வதற்காக ஓடி வந்தார்கள்.

அவர் சொல்வதின்படி காணாமற் போன பிள்ளைகளில் நான்கு பேரினது முகங்கள், அந்த துண்டுப்பிரசுர புகைப்படத்தில் காணப்படும் வெள்ளை நிற பள்ளிச் சீருடை  அணிந்த பிள்ளைகளிடையே காணப்பட்டதாம்.

அதைப்பற்றிய மேலதிக விபரங்களைத் திரட்டுவதற்காக ஜெயவதனி ஓடித்திரிந்தார். அந்தக் குடும்பம் பல நிறுவனங்களில் காணாமற்போன தங்கள் மகளின் பெயரை பதிவு செய்திருந்தது. அவர்களிடம் உதவி கேட்பதற்காக ஜெயவதனி ஓடினார்.

ஜெரோமி வெள்ளைச் சீரடையில் கபில நிற கழுத்துப்பட்டி அணிந்தபடி மற்றும் பல மாணவர்களுடன் அப்போதைய சுகாதார அமைச்சர் சிறிசேனவுடன் காட்சி தருகிறாள். “நிச்சயமாக அந்த புகைப்படம் யுத்தம் முடிவடைந்த பின்புதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என ஜெயவதனி ஊகிக்கிறார். அவர் மேலும் சொல்வது தனது மகள் சில கற்கைகளுக்காக சோந்திருக்க வேண்டும் அல்லது அன்று மாத்திரம் சிலபேரின் காவலின் மத்தியில் சீருடை அணிந்து காட்சியளித்திருக்க வேண்டும் என்று. பெப்ரவரி மாதம் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேவர்தனா, காணாமற் போனவர்களின் தாய்மார் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது அங்கு வருகை தந்திருந்தார். தான் அதைப்பற்றி விசாரிப்பதாக அவர் அவர்களிடம் உறுதி வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜெயவதனி தலைமையில் காணமற் போனவர்களின் உறவினர்களைக் கொண்ட ஒரு குழுவினர் ஜனாதிபதியை பெப்ரவரி 9ல் அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார்கள்.

“ஜனாதிபதி, அந்த புகைப்படத்தில் உள்ள யுவதி ஜெரோமியை போலுள்ளதாக (பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட ஜெரோமியின் புகைப்படத்துடன் ஒப்பீட்டு பார்த்த பின்னர்) தெரிவித்ததுடன் அதைப்பற்றி கவனிப்பதாக உறுதியும் வழங்கினார்”.

ஜெயவதனி சொல்வதின்படி ஜெரோமியைப் பற்றி சுற்றுநிருபங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாம். இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று தன்னால் நினைவுபடுத்த முடியவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஆனால் தான் இதைப்பற்றி விசாரித்து ஜெரோமி தனது குடும்பத்துடன் சேருவதற்கு உதவுவதாக அவரிடம் உறுதியளித்தாராம். ”அவள் எங்கிருக்கிறாள் எனக் கண்டுபிடித்து திரும்பவும் உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பேன்” என சிறிசேன உறுதியளித்தார்.

ஜெயவதனிக்கு தெரிய வேண்டியதெல்லாம் இந்த காணாமற் போனவர்களெல்லாம் எங்கே? அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களைக் கொன்று புதைத்திருந்தால் அவர்களை எங்கே புதைத்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஆதாரத்துடன் பதில் தேவை.

இந்த விடயத்துடன் தொடர்புபட்ட பல கேள்விகள் உள்ளன. ஜெரோமி உயிருடன் இருந்தால் அவள் எங்கே இருக்கிறாள்? அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் ஜெரோமி இல்லையென்றால் அவள் யார்? ஜனாதிபதிக்கு எப்போது மற்றும் எங்கே அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்த முடியாவிட்டால், அவர் அந்த புகைப்படத்தை (ஊடகங்களில்) வெளியிட்டு அந்த புகைப்படப் பிடிப்பாளரைக் கூட கண்டுபிடிக்க முடியாதா? அல்லது அது கணனி மென்பொருளான “போட்டோ சொப்” மூலம் செய்யப்பட்டதா?  புகைப்பிடிப்பாளார் சங்கம் (ஊடகங்கள்) ஊடாக அந்த புகைப்படப் பிடிப்பாளரைக் கண்டுபிடிக்க முடியாதா? அது ஜெரோமியா அல்லது இல்லையா என்பதைத் தேடுவதற்கும் மற்றும் காசிப்பிள்ளை குடும்பத்தினரது துன்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இன்னும் கொஞ்சம் கடின உழைப்பு மற்றும் முயற்சியும் தேவை. ஜனாதிபதி அவர்களே இது உங்களைப் பொறுத்தது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv