Theneehead-1

Vol: 14                                                                                                                                                                16.04.2017

மீத்தொட்டமுல்லயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமை இயற்கை அனர்த்தமா? விசாரணை ஆரம்பம்

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்kuppai1து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன இதனைக் கூறியுள்ளார்.

ராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ராணுவப் பேச்சாளர் அத தெரணவுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, மீத்தொட்டமுள்ள குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் அரசாங்க செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் கூடிய கொழும்பு மாவட்ட இணைப்பு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 145 வீடுகள் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்கள் கொலன்னாவை டெரன்ஸ் டி சில்வா பாடசாலையிலும் அண்மையில் உள்ள சமூக அபிவிருத்தி நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார்.

குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமை இயற்கை அனர்த்தமா? விசாரணை ஆரம்பம்

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்த சம்பவம் இயற்கையாக ஏற்பட்டதா அல்லது யாரேனும் ஒரு தரப்பினரின் செயற்பாடாக இருக்குமா என்பது தொடர்பாக விசாரிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்பொருட்டு சில பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் புவி சரிதவியல் பிரிவின் 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளைஇ குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மீதான பிரேத பரிசோதனைகளை நடாத்துவதற்கு சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவொன்றும் அழைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று பிரதேசத்தில் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

dantv