Theneehead-1

Vol: 14                                                                                                                                                                17.04.2017

பிரஞ்சு அதிபர் தேர்தல் இடது சாரி வேட்பாளருக்கு திடீர் ஆதரவு அதிகரிப்பு

பிரஞ்சு அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திடீரென்று இடது சாரி வேட்பாளர் மெலஞ்சனுக்கு ஆதரவு அதிகரித்துள்frenchleftளதாக தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் முக்கிய நாடான பிரஞ்சு நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு சுற்றுகளாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் வலது சாரி, இடது சாரி, நடுவாந்திர, பழமைவாத என நான்கு வகையான கொள்கைகளைக் கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். இதில் இதுவரை வலது சாரி வேட்பாளருக்கும் நடுவாந்திர கொள்கை கொண்ட வேட்பாளருக்குமே இறுதிப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இப்போது திடீரென்று இடதுசாரி வேட்பாளர் மெலஞ்சனுக்கு கூட்டம் அதிகம் சேர துவங்கியுள்ளது என தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடது சாரி வேட்பாளர் மெலஞ்சனும், வலதுசாரி வேட்பாளர் மெரின் லீ பென்னும் (இவர் பெண் வேட்பாளர்) ஒரே மாதிரியான கொள்கைகளையே முன் வைத்துப் போட்டியிடுவதும் இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மெலஞ்சன் நேட்டோவிலிருந்து பிரஞ்சு வெளியேறும் என்றும், அரசு செலவை அதிகரிக்கப் போவதாகவும், அதிக வருமானம் ஈட்டுவோருக்கு 90 சதவீத வரியை விதிக்கப்போவதாகவும் கூறுகிறார். மெரின் அகதிகள் வருகையை தடை செய்யப்போவதாகவும், யூரோ நாணய ஏற்பாட்டிலிருந்து பிரஞ்சு தேசம் வெளியேறும் என்றும் உறுதியளித்துள்ளார். அண்டை நாடான பிரிட்டன் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை எடுத்து அதன் இறுதிக்கட்டத்திலுள்ளது. இதனால் மே மாதம் 7 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று மெலஞ்சனுக்கும், மெரினுக்கும் இடையில் நடைபெறலாம் எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் நடுவாந்திரக் கொள்கையுடைய மெக்ரான் இத்தேர்தலுக்காக புதிய கட்சியொன்றையே துவக்கியிருக்கிறார். முன்னாள் நிதியமைச்சரான மெக்ரான் முதலீட்டு வங்கி நிபுணராவார். இவரே மெரினுடன் மே 7 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் சுற்று போட்டியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் மெக்ரான் வெற்றி பெற்று அதிபராவார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடதுசாரி வேட்பாளருக்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. எனினும் முன்னிலை வகிக்கும் முதல் நான்கு வேட்பாளர்களுக்கும் இடையிலான ஆதரவு விகிதம் நெருக்கமாகவே இருக்கிறது என்பதால் எந்த இரு வேட்பாளர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.

தற்போதைய சோஷலிஸ்ட் அதிபரான ஹாலண்டே ஒருவேளை வலதுசாரியான மெரின் வெற்றி பெற்றால் தனிப்பட்ட முறையில் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுவேன் என்று தெரிவித்துள்ளார். பிரஞ்சு தேசம் தாராளவாதத்தன்மைக்கு பெயர் பெற்றது; எனவே வலது சாரி வேட்பாளர் வெற்றி பெற்று அதிபராவது மிகவும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரக் கூடியது.

இதற்கு நடுவே தேர்தலின் போது தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பிரஞ்சு நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களில் 230 பேர் இறந்துள்ளனர்.

dantv