Theneehead-1

Vol: 14                                                                                                                                                                17.04.2017

ஏன் ஸ்ரீலங்காவில் பல புரட்சிகள் இருந்தது?

ரங்கா ஜெயசூரியா

46 வருடங்களுக்கு முன்பு ஏப்ரல் 5ல் ஜேவிபி முதல் கிளர்ச்சியை அணுகியது, அது மிகப் பல உயிர்களை பலிகொண்டாலும் விரைவாகவே அணைக்கப்பட்டது. 17 வருடங்களுக்குப் பின்னர் ஒரு இரண்டாவது கிளர்ச்சி அதைத் தொடர்ந்தது மற்றும் அது மிக மோசமான வெகுஜனpraba2ப் படுகொலையை சந்தித்தது. இதற்கிடையில் Rohanவடக்கில் ஏற்பட்ட மற்றொரு கிளர்ச்சி காலப்போக்கில் அறிவற்ற தீவிரவாதமாக தன்னை மாற்றியமைத்துக்கொண்டது, மற்றும் முடிவில் அது 2009ல் மிருகத்தனத்துக்கு சமமாக தோற்கடிக்கப்படும் வரை, அது இந்த நாட்டை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தது.

இந்த நாட்டின் சுதந்திர வரலாற்றின் இரண்டாவது பாதி, ஆழங்காணவியலாத வெகுஜன வன்முறையாக வரையறுக்கப்பட்டது முதலில் ஒரு அதிர்ச்சியாகவே வெளிவந்தது, மற்றும் பின்னர் சமீப காலம்வரை அவ்வப்போது வெகு அரிதாகவே இடம்பெற்ற ஒரு கொலையை, வெறி என ஊடகங்களால் சித்தரிக்கப்பட்ட ஒரு சமூகத்தில்கூட அது வழக்கமான ஒரு நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது. நிச்சயமாக ஸ்ரீலங்கா அந்த வழியில் செல்வதாக கருதப்படவில்லை. அதன் சுதந்திரத்தின்போது, அது சமாதானம், சபீட்சம் மற்றும் வளமான பொருளாதார முறை மற்றும் அரசியல் நிறுவனங்கள் என்பனவற்றை கொண்டிருக்கப்போவதாக வாக்குறுதி மேற்கொண்டது. பின்னர் ஏன் இத்தனை இரத்தம் சிந்தல்களுக்கும் நாம் சாட்சியாக வேண்டும்?

சாராசரி மக்களின் விளக்கங்களுக்கான பொது இடம் முதல் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களின்; சர்ச்சைக்குரிய வாசிப்புகளை எழுதுவது வரை இப்படியாக இருந்தது. ஸ்ரீலங்கா அதன் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தோல்வியடைந்துள்ளது ஏனென்றால் அது அரசியல் நடைமுறைகளில் சிறுபான்மையினரை வேண்டுமென்றே விலக்கிவிட்டது, சம உரிமைக்கான தமிழர்களின் அமைதிப் போராட்டம் அலட்சியம் செய்யப்பட்டதால், ஆயுதப் போராட்டத்தை தெரிவு செய்வதைத் தவிர வேறு தெரிவு அவர்களுக்கு இருக்கவில்லை. சிங்கள பௌத்தர்கள் அத்தகைய நச்சுத்தன்மையுடைய உயிரினம், அவர்கள் படுக்கைக்கு செல்லும்போதும்கூட, அடுத்த நாள் சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கான புதிய வழிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள், இதனால் சிறுபான்மையினருக்கு ஒன்றில் தற்கொலை குண்டுதாரியாக மாறுவது  அல்லது பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வது என்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அரசியல் தலைவர்களின் அடிப்படையே ஊழல் ஆக மாறி நாட்டின் செல்வம் அவர்களால் கொள்ளையடிக்கப் பட்டது.

இளைஞர்கள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்கள், அவர்களின் அழுத்தப்பட்ட ஏமாற்றம் தெற்கில் இரண்டு இளைஞர் கிளர்ச்சியாக வெடித்தது. அரசியல் முறைமை சட்டபூர்வத் தன்மையை இழந்தது மற்றும் செல்வம் ஒரு சிலரிடமே குவிந்தது. மற்றும் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சில நேரங்களில் அவற்றில் உண்மை இருக்கலாம், ஆனால் அவை அளவுக்கு மீறி எளிமையான விளக்கங்கள், ஸ்ரீலங்கா அனைத்து பிரச்சினைகளுக்கும் எதிராகப் போராடி பெற முயற்சித்தவைகளை அவை நியாயப்படுத்திவிட முடியாது. இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பெருமளவில் சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தல்களை ஒழுங்காக நடத்தியுள்ளது - அல்லது அதற்கு வெகு காலத்துக்கு முன்பே 1931ல் முதல் அரச சபைக்கான தேர்தல் சர்வசன வாக்குரிமையின்; கீழ் நடைபெற்றதில் இருந்தே இது நடந்துள்ளது. மற்றும் அந்த தோதல்கள் 1977வரை ஆட்சியில் இருந்தவர்களுக்கு எதிரான தீவிர உணர்வின் கண்காட்சியாக இருந்தன.

இந்த முறைமையில் இருந்து தங்களை விலக்கி கொள்வதை தெரிவு செய்தவர்கள், யாழ்ப்பாண தமிழ் தலைமைகள்தான், அவர்கள் 1931ல் நடைபெற்ற அரச சபைக்கான தேர்தலைப் புறக்கணித்தார்கள், அல்லது அதைத் தொடர்ந்து ஜேவிபி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன தங்கள் சொந்த கணிப்புகளினால் இயக்கப்பட்ட சொந்த விருப்பங்களின் பெயரில் அதைச் செய்தார்கள். சுவராஸ்யமான முறையில் 1971ல் ஜேவிபி  முன்னெடுத்த அதன் முதல் கிளாச்சி, ஸ்ரீலங்கா வரலாற்றிலேயே அதிகம் இடது சார்பான அரசாங்கமான ஐக்கிய முன்னணி நிர்வாகம் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆவதற்குள்ளேயே இடம்பெற்றது.

மற்றும் இளைஞர்களின் அதிருப்தி புகார்கள் உண்மையாக இருந்த அதேவேளை இன்னும் சில நாடுகள் எங்கள் பொருளாதார வளர்ச்சி மட்டம் அல்லது ஸ்ரீலங்காவின் மறுபகிர்வு நீதியின் சாதனைகள் இன்னும் உயர்வாக இருக்கமுடியும் என நம்புகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்தபோதே  நல்ல நிலையிலுள்ள ஒரு வளர்ச்சி அடைந்துவரும் நாடாக கருதப்பட்டது.

அப்போதிருந்தே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதை விரிவு படுத்தின மற்றும் அந்த முதலீடுகள் எங்களது சமூகக் காட்டிகளில் பிரதிபலித்தன, அவை எங்களது முழுமையான பொருளாதார வளர்ச்சியினால் சாதிக்கப்பட்டவை அல்ல ஆனால் மறுபங்கீட்டு நீதியின் அடக்கியாளும் கவனத்தின் மூலம் பெறப்பட்டவை.

ஸ்ரீலங்கா வாக்காளர்கள் ஒரு நச்சரிக்கும் தொல்லையாக இருக்கின்றார்கள். எனினும், எங்களுக்கு வழங்கப்பட வேணடியது என நாம் கருதும் இலவச கல்வி, இலவச சுகாதாரம் என்பன சோசலிச நாடுகள் என்றழைக்கப்படுபவவை உட்பட பல நாடுகளில் விலையுயர்ந்த ஒன்றாக உள்ளது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட காணி சீர்திருத்தம் போன்ற பல கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகள், நவீன வரலாற்றில்; ஜனநாயக நாடுகளால் கூட முன்னெடுக்கப்படாத மிகவும்  விரிவான செல்வத்தை மறுபகிர்வு செய்யும் நடவடிக்கை. எனினும் அப்படியான எதனாலும் 80 களின் பிற்பகுதியில் தென்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது கிளர்ச்சியை நிறுத்திவிட முடியவில்லை.

ஸ்ரீலங்கா அதன் இன உறவுகளை கையாளும் விதம் முன்மாதிரியான ஒன்றல்ல. எனினும் அரசாங்க முடிவுகளின்படி, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட்ட ஒரு சமூகம் இந்திய வம்சாவளி தமிழர்கள் ஆவர், குடியுரிமைச் சட்டத்தின்படி அவர்கள் வாக்குரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள், அது ஒரு இரக்கமற்ற அரசியல் நடவடிக்கை. இருப்பினும் இத்தகைய அத்துமீறல்கள் புதிய அரசாங்கங்கள் தங்கள் புதிதான போலி அடையாளங்களை காட்டுவதற்காக நடைபெற்றவை. (வேறு ஒன்றுமில்லாவிட்டாலும் 21ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி 10 மில்லியன் சட்டபூர்வமற்ற லத்தினோக்களை வெளியேற்றுவதாக வாக்குறுதியளித்துள்ளார்)

எனினும் இந்திய வம்சாவளி தமிழர்கள் யுத்தத்துக்கு செல்லவில்லை, மாறாக, அவர்கள் தங்களுக்கு உரிய உரிமைகளை திரும்பவும் வென்றெடுத்தது மட்டுமில்லை, ஆனால் 90 களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் காலஞ்சென்ற எஸ்.தொண்டமான் உள்ளுர் அரசியலில் தன்னை ஒரு கிங் மேக்கராக நிலைநிறுத்திக் கொண்டார்.

யாழ்ப்பாணத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது விஷயம் வித்தியாசம் நிறைந்த குளறுபடியானது. அது தனிப்பட்ட நபர்கள் என்கிற வகையில் சம உரிமை என்கிற கேள்வியாக ஒருபோதும் இருந்ததில்லை, அது ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது மற்றும் 1980 களின் ஆரம்பம் வரை, சிவில் சேவை,  பொறியியல், மருத்துவம் கணக்காளர் போன்ற மிகவும் விருப்பமான தொழில்களில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைவடைந்து வந்ததால் அவர்கள் ஒரு விகிதாசாரமற்ற நிலையில் இருந்தார்கள்.

சம உரிமைகளுக்கான போராட்டம் என்கிற தவறான கருத்துள்ளதாக இருப்பினும் வடபகுதி தமிழர்களின் கோரிக்கை, சிங்களவர் மற்றும் தமிழர்களிடையே சம அந்தஸ்தை கோரும் ஒன்றாக இருந்தது, அது ஜி.ஜி. பொன்னம்பலத்தின் 50:50 பிரதிநிதித்துவ  கோரிக்கை அல்லது அதற்கும் முன்னதாக இருந்த யாழ்ப்பாண உயரடுக்கினரின் சர்வசன வாக்கெடுப்பிற்கான எதிர்ப்பு போன்ற கடந்துபோன நிகழ்வுகளை மீண்டும் நினைவுகூர்வதை போன்றது. தமிழ் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்படவில்லை, மாறாக அவர்கள் தங்களை அதிலிருந்து விலக்கிக் கொண்டார்கள். சில கலாச்சார இயக்கவியல்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்; பிரத்தியேக வாதத்தில் சிறப்பாக வெளிப்படுவது இந்த வேலைகளுக்கான ஒத்துழைப்புக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தி இருக்கலாம்.

1985ல் ஒருமுறை லீ குவான் யு சொன்னது போல” நான் இதை இதற்கு முன்னான நிகழ்வுகளில் பலமுறை கூறியிருக்கிறேன்: கலப்பான சிங்கப்பூர் வித்தியாசமானது, அது 75 விகிதம் இந்தியர்கள், 15 விகிதம் மலாயர்கள் மீதி சீனர்கள் என்று இருந்தால் அது வேலை செய்யாது. ஏனென்றால் எதிர்ப்பு போட்டிகளைக் கொண்டிருக்கும் அரசியலையே அவர்கள் நம்புகிறார்கள், ஏனென்றால் அந்த கலாச்சாரம் அப்படியானது, வெகுஜனங்கள் தங்கள் கஷ்டங்களில் இருந்து நடைமுறைக்கான வழியை தேடியுள்ளார்கள், ஆகவே அது வேலை செய்கிறது”.

தமிழ் தலைவர்களின் முந்தைய அமைதியான போரட்டத்தை சிங்கள நிறுவனங்கள் கண்டுங்காணாமல் இருப்பதற்கு அது விட்டுவிடவில்லை. ஆனால் தமிழ் போராட்டம் தீவிர நிலைக்குச் சென்றதுக்கு காரணம் தமிழ் கலாச்சார மற்றும் அரசியல் இயக்கவியலே தவிர ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கான எதையும் செய்யவில்லை.

எனினும் ஏன் அந்த உண்மையான மற்றும் உணரப்பட்ட மனக்குறைகள் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு பகுதிகளிலும் இலகுவாக ஆயுத மற்றும் வெகுஜன வன்முறைகளாக சீர்கெட்டன, அதற்கு சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஸ்ரீலங்கா வளர்த்துவந்த எந்த வித அரசியல் எதிர்ப்புக்கும் ஒரு குறிப்பிட்ட அனுமதி வழங்கும் கலாச்சாரமே காரணம்.

அந்த அமைதியான எதிர்ப்பு கலாச்சாரம் ஆயுத போராட்டமாக அதீத வளர்ச்சி பெற்றதிற்கு முதன்மையான காரணம் ஒருவேளை நன்கு திட்டமிடப்பட்ட குறுகிய நோக்கம் கொண்ட சுதந்திர ஸ்ரீலங்காவின் அரசியல் தலைவர்களின் கொள்கைகளதான்;. சுதந்திர ஸ்ரீலங்கா எதிர்ப்பு உணர்வுகளை அடக்கிவிடவில்லை, மாறாக ஆரம்ப நிலையிலுள்ள ஒரு புதிய தேசத்தின் அதிகார சக்தியின் மட்டங்கள் நன்கு வெளிப்பட்ட அதேவேளை எல்லாம் நன்றாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் ஸ்ரீலங்கா உரிய காலத்திற்கு முந்திய ஒரு வெகுஜன அரசியல் அதிகாரமளித்தலுடன் முன்னேறியது. ஆட்சிக்கு விரோதமான மீறல்களைக் கண்காணிப்பதற்காக அரசிடம் போதிய நிறுவன அமைப்புகள் இல்லாமல் அரசியல் அதிகாரமளிப்பது ஆபத்தாக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை ஆகும்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா ஜனரஞ்சக சிங்கள பௌத்த தேசியவாதத்தை கட்டவிழ்த்து விட்டதுடன், சுயபாஷை கொள்கைக்கான வாக்குறுதி மக்களுக்கு அளித்திருக்கும் உற்சாகத்தைப்போல வேறு எதனையும் தான் ஒருபோதும் பார்க்கவில்லை என்று தனது உதவியாளர்களிடம் சொன்னார். அதன் காரணமாக ஏற்படப்போகும் பேரழிவான முடிவைப்பற்றி அவர் முன்கூட்டியே உணர்ந்திருக்கவில்லை, அத்தகைய ஒரு வெகுஜன எழுச்சி தேசத்தின் முன்னேற்றத்தினை பின்னோக்கி கொண்டுசெல்லவே வழிவகுக்கும். ஜனரஞ்சக ஆதரவு அலைகள்மீது சவாரி செய்து ஆட்சிக்கு வரும் அரசியல் தலைவர்கள், பின்னர் அவர்களின் ஜனரஞ்சக செல்வாக்கின் தகுதியினால் ஆரம்பக்கட்டத்தில் நாட்டின் சுதந்திர அமைப்புகளை அதிகமாகக் கவர்ந்து விடுகிறார்கள், பின்னர் காலப்போக்கில் அவை அரசியல்வாதிகளின் துணையாக மாறிவிடுகிறது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஒருபடி முன்னே சென்று 1972ல் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அந்த துணையை தக்க வைத்துக் கொண்டார்.

சுர்வதேச பனிப்போர் முறை எண்ணற்ற உள்நாட்டுப் போர்களை பாதிக்கிறது. சில நாடுகள் கம்யுனிச கையகப்படுத்தல்களுக்கு உள்ளாகின மற்றவைகள் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்கள் இரு கரம்கொண்டு போராடுகின்றன. வெற்றிபெற்ற நாடுகள் மற்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தங்கள் சொந்த தேவைகளையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எனினும் ஸ்ரீலங்கா தலைவர்கள் தங்கள் கருத்துப் போர்கள் மூலம் போராடி தேர்தலில் வெற்றி பெறலாம் என்கிற பிடிவாதமான நம்பிக்கையில் இருந்ததால் அவர்களின் சகாக்களிடம் இருந்து பாடம் படிக்கவில்லை. இதன்படி உள்நாட்டினதோ அல்லது சர்வதேசத்தினதோ எந்த  சர்ச்சைக்கும் தீர்வு காண்பதற்கு உரிய இறுதி விகிதத்துக்கு தேவையான அரச அதிகாரத்தை அவர்கள் மூதலீடு செய்வதில்லை.

ஜேவிபி அதன் முதல் கிளர்ச்சியை உள்ளுர் தயாரிப்பான ஆயுதங்களுடன் போராடியது மற்றும் வெளிநாட்டு உதவியுடன் அது தோற்கடிக்கப் படும்வரை அது அரசாங்கத்தை கைப்பற்றும் நிலைக்கு நெருங்கி வந்திருந்தது. இருந்தும் பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவில்லை, மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அது ஒரு மதிப்பற்ற கெரில்லா குழுவாக எழுச்சிபெற்று 80களின் நடுப்பகுதியில் இராணுவத்தை யாழ்ப்பாண கோட்டைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அளவுக்கு அதனால் சமாளிக்க முடிந்தது. ஸ்ரீலங்கா வெகுஜன வன்முறைக்கு ஆளானது ஏனென்றால்; வெகுஜன அணி திரட்டலுக்கு  உகந்த ஒரு ஜனநாயக இடைவெளியை அது வளர்த்திருந்தது, விசேடமாக ஒரு புதிய அரசாங்கம் அதன் தேசத்தை ஒன்றாகப் பின்னுவதற்கு போராடியதால் அது சுரண்டலுக்கு ஆளானது. அதே நேரம் ஸ்ரீலங்கா தலைவர்கள், ஒரு ஆயுத கிளர்ச்சி அரசாங்கத்தை கைப்பற்றி வெற்றி பெறுவதற்கான நிகழ்வுக்குள்ள தடையை மிகவும் தாழ்வாக வைத்திருந்தார்கள். அது தெற்கு மற்றும் வடக்கிலுள்ள கிளாச்சியாளர்களுக்கு ஒரு முயற்சியை மேற்கொள்ள உந்துதலை உருவாக்கியது, அதை அவர்கள் செய்தார்கள்.

மற்றொரு காரணி விடயங்களை மிகவும் மோசமாக்கியது. ஸ்ரீலங்கா நேரகாலத்தோடு அதன் அரசியல் அதிகாரமளித்தலுடன் இணைந்து பொருளாதார அதிகாரமளித்தலையும்  நிருவகித்திருந்தால் வெகுஜன எழுச்சிக்கான ஆபத்து குறைந்திருக்கும். மாறாக முதல் மூன்று தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட தொலைநோக்கற்ற பொருளாதாரக் கொள்கைகள், அதே அரசாங்கத்தின் நலன்புரிக் கொள்கைகளால் அதிகாரமளிக்கப்பட்ட இளைஞர்களிடையே பெரிதான மனக்குறைகளை உருவாக்கியது. ஜே.ஆர் ஜெயவர்தனா வரும் வரைக்கும் பொருளாதார உணர்வுள்ள ஒரு தலைவரை ஸ்ரீலங்கா கொண்டிருக்கவில்லை, அவருடைய முன்னோடிகள் எல்லோரும் நல்லகாலம் எப்போதும் நிலைத்திருக்கும் என்றோ அல்லது நடைமுறைத் தீர்வுகளை காண்பதில் மிகவும் பிடிவாதமானவர்களாக இருந்துள்ளார்கள். அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான பாதை வேறு சிலவற்றை அள்ளிக்கொடுத்து பெற்றதாகவே இருந்தது. அவர்களின் கொள்கைகள் பகுதியளவு பேபின் சோசலிச யோசனைகளையும் மற்றும் பாதியளவு சந்தர்ப்பவாதம் கொண்டதாகவும் இருந்தது.

ஆட்சிக்கு வந்த ஐதேக அரசாங்கங்கள், சந்திரிகா குமாரதுங்கவின் நிருவாகம் அவரது ஸ்ரீ.ல.ச.க சகாக்களைக் காட்டிலும் வரலாற்று ரீதியாக உயர் வளர்ச்சி எண்ணிக்கையை காட்டும்வரை வளர்ச்சியில் உயர் நிலையில் இருந்தன, அந்த நேரத்தில் அடிமட்டத்தில் இருந்து வளர்ச்சி பெறும் சர்வதேச நாடுகளின் வளாச்சியுடன் ஒப்பிடுகையில் முன்னைய ஸ்ரீ.ல.சு.க அரசுகளின்; சாதனை குறைவானதாகவே இருந்தது. அவர்களின் அரச பொருளாதார கொள்கைகள் தனியார் துறையினருக்கு ஊக்கம் அளிக்கவில்லை. எங்களது நாட்டைப் போன்ற ஒன்றுக்கு அப்போதும் மற்றும் இப்போதும் தேவையாக இருப்பது அதன் தொழில் நிபுணத்துவம் மற்றும் பாதி தொழில் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்களுக்கு ஆதாயமுள்ள உற்பத்தி தொழில்கள். எனினும் அந்த நேரத்தில் முதலாளித்துவம் என்பது அரசியல் அகராதியில் சொல்லக்கூடாத ஒரு வார்த்தையாக இருந்தது. அதன்படி உள்ளுர் முக்கியத்துவங்கள் அலட்சியம் செய்யப்பட்டன அதேவேளை கிழக்கு ஆசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் வறுமை நிலையில் இருந்து பொருளாதார வளர்ச்சி பெற்ற நிலைக்கு உயர்ந்தன.

பொருளாதார வெற்றி, அரசியலில் கருத்து வேற்றுமையான உளப்பாங்கினை ஆயுத வன்முறையை நோக்கி இட்டுச் செல்வதை பெரிதும் குறைக்கிறது. இன்று ஸ்ரீலங்கா தொழில் திறமையற்ற தொழிலாளர்களையும் பாதி தொழில் திறமை வாய்ந்த தொழிலாளர்களையும் மத்திய கிழக்கிற்கு அனுப்புகிறது இது பொறாமையூட்டும் ஒரு சாதனை எனினும் அது சமூக மற்றும் அரசியல் இழைகளில் உள்ள மக்கள் தொகை அழுத்தத்தை குறைக்கிறது.

ஸ்ரீலங்காவின் கவனம் நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதிலும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் தடையாக நிற்கும் ஒத்துழையாத சட்டங்களை அகற்றுவதிலும் செலுத்தப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களைப்போல வழமைக்கு மாறாக ஸ்ரீலங்கா குதிரைக்கு முன்னே வண்டியை பூட்டுகிறது.

கடந்த வாரம் இந்த பத்திரிகையில் எழுதிய நிரான் அன்கெட்டில், சட்டப்படி அமல்படுத்தக்கூடிய சமூக பொருளாதார உரிமைகள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை வாதிடுபவர்களால் முன்மொழியும்  உரிமைகள் மசோதாவில் ஏன் சேர்க்கப்படவில்லை என்று வாதிட்டிருந்தார் - அவர் சரியாக குறிப்பிட்டிருந்தது சமூக பொருளாதார உரிமைகளின் வளர்ச்சிக்கு எதிராக அல்ல ஆனால் ஏராளமான திட்டமிடப்படாத பின்விளைவுகள் நடைமுறையில் ஏற்றத்தாழ்வுகளையும் மற்றும் எதிர்விளைவுகளையும் தீவிரப்படுத்தும்; என்பதினால்.

அங்குதான் இலட்சியக் கொள்கைகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை சரியாக விழுகிறது. அரசியலமைப்பு உரிமைகள் இதுவரை மட்டுமே இட்டுச் செல்ல முடியும். அவைகளின் வரம்புகள் எங்கும் நிறைந்துள்ளது என்பதை தென்னாபிரிக்காவில் இன ஏற்றத்தாழ்வுகளுக்கு பாலம் அமைப்பதில் தோல்வி அடைந்திருப்பது வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டாய தந்திரங்களை நம்புபவர்களுக்கு வெனிசுவெலாவின் மிகப்பெரிய தோல்வி ஒரு எடுத்துக்காட்டு.

ஸ்ரீலங்காவின் தேர்தல் ஜனநாயகம் நீதியை மீள பகிர்ந்தளிப்பதற்கு மிகவும் தகுதியானது, ஆனால் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் சமத்துவம் மற்றும் சுபீட்சத்துக்குத் தேவையான எந்த நிலையான கட்டுமானத் தொகுதிக்கும் வேண்டிய செல்வத்தை உருவாக்குவதில் அது மோசமான நிலையில் உள்ளது. ஸ்ரீலங்கா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பை சரியான இடத்தில் வைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இளைஞர் ஏழுச்சியின் சகாப்தம் இப்போது பின்தள்ளப் பட்டுள்ளது, ஒரு பொருளாதார மறுமலர்ச்சியால் இன்னும் சும்மா இருக்கும் இளைஞர்களை அதிகமான கஞ்சா புகைத்தலில் இருந்து காப்பாற்ற முடியும்.

தேன்மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv