Theneehead-1

Vol: 14                                                                                                                                                                19.04.2017

தாஜூடின் வழக்கு: இரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் விசாரணை

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் வழக்கில் சாட்சிகளை மறைக்க thajudeen1முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மாதம் 27ம் திகதி வரையில் தொடர்ந்தும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொக்சி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க நீதிமன்றத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.

வசிம் தாஜூடினின் கிரடிட் காட்களை பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், கொலை இடம்பெற முன்னர் மற்றும் அதற்கு பின்னரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் தகவல் பதிவேட்டில் இருந்து ஆவணங்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என, குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, பிரதம சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர குறித்த ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்வரும் 21ம் திகதியளவில் நிறைவு செய்யவுள்ளதாக, வைத்திய சபை தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

dantv