Theneehead-1

Vol: 14                                                                                                                                                                19.04.2017

தமிழ்க்கவியையும் பிரதேசவாதகடும் போக்காளர்களையும் வன்மையாககண்டிக்கின்றோம்

வடக்குவாழ் மலையகத்தமிழ் மக்கள் ஒன்றியம்

கரைச்சி கரை எழில் 2016 இல் வெளிவந்த தமிழ்க்கவியின்  கிளிநொச்சியும் மலையகத்தமிழ்ர்களும் கட்டுரைக்கு வடக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில்  அதன் இணைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்பி நடராஜ் அவர்ள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மலையாளப்புரத்தில் 08.04.2017 அன்று கரைச்சி பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட கலாசார நிகழ்வில் 'கரைஎழில்-2016'என்ற நூல் வெளியிடப்பட்டது. இந் நூலில் தமிழ்க்கவி என்ற அம்மையார் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்து வாழும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வாதார முறைமைகளைமையப்படுத்தி கட்டுரை எழுதுவதாக பாசாங்குசெய்து, மலையகத் தமிழ் மக்களின் மீதும் அவர்களுடைய வாழ்க்கைமுறைமைப் பற்றியும் அபாண்டமான கருத்துக்களை கண்மூடித்தனமாக முன்வைத்துள்ளார்.

வன்மையான கண்டனத்திற்கு உட்படும் இக் கருத்துக்கள் கிளிநொச்சியில் வாழும் மலையகத் தமிழ் மக்களை மாத்திரமின்றி வடக்கு,கிழக்கு மற்றும் இலங்கை முழுவதும் வாழும் மலையகத்  தமிழ்மக்களின் மனங்களைக் காயப்படுத்தி மாறாதவடுவை தோற்றுவித்துள்ளது. தமிழ்க்கவி அம்மையாரும் இந்நூலினை அச்சிலேற்றி வெளியீடு செய்த கரைச்சி கலாசார பேரவையும் மலையகத் தமிழ் மக்களின் மனத்தாக்கத்தை உணர்ந்து மன்னிப்பு கோரவேண்டும்.

இம் மக்கள் மூன்று சாப்தங்களுக்கு மேலாக நாடு முழுவதிலும் தமிழ்த் தேசியபற்றுதலுக்காகபட்ட வேதனைகளையும், துயரங்களையும் மனதில் எடுத்துக் கொள்ளாது மாற்றான் தாய் மனநிலையில் தான் இன்னும் பலர் உள்ளனர் என்பதை இவ்விடயம் வெட்டவெளிச்சமாக்குகின்றது. மலையகத் தமிழ் இளைஞர்,யுவதிகள் தொடக்கம் வளர்ந்தோர் வரை தமிழ்த் தேசிய போராட்ட வரலாற்றில் சாதாரண போராளிகளாகவும்,தளபதிகளாகவும்,மண் மற்றும் தன் மானதமிழ் பற்றுடன் களம் இறங்கிபோராடியதையும் வீரசாவடைந்ததையும் தமிழ்க்கவி அம்மையார் போன்றவர்கள் தேசியபற்றற்றதெனக்கூறி கொச்சைப்படுத்த முடியாது.

எனினும் மலையகதமிழ் மக்களின் உயர்ச்சியில் அக்கறையும்,அவர்களின் வாழ்க்கையில் இரக்கமும் பரிதாபமும் கொண்ட நல்லுள்ளங்கள் பலபேர் இச்சமூகத்தில் உள்ளனர். ஆனால் இருக்கின்ற சில ஆதிக்க வெறியாளர்களினாலும், மேட்டுக்குடியாளர்களினாலும்,பிரதேசவாதகடும் போக்காளர்களினாலும், வடக்குவாழ் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பிரதேசவாத கடும் போக்குடனும் ,வர்க்கப்பேதத்துடனும் நடத்தப்பட்டால் அல்லது நசுக்கப்பட்டால் இது எமது தமிழ் மக்களுக்குள் பாரிய பிளவினைஏற்படுத்தி தமிழ்தேசிய உணர்வை மலுங்கடிக்கச் செய்யும் என்பதையாவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

தமிழ் அரசியல் தலைமைகளும், சமூகசெயற்பாட்டாளர்களும், தமிழ்பற்றாளர்களும்,மலையகத்தமிழ் மக்கள் மீது இரக்கமும் பரிவும் உள்ள நல்லுள்ளங்களும் வெறுமனே இதனைபார்த்துக் கொண்டிராது. இத்துர்ப்பாக்கிய செயலைகண்டிப்பதுடன் இவ்வாறான பிரதேசவாதகடும் போக்காளரிடமிருந்து இம்மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்று செயற்படவேண்டுமெனகேட்டுக் கொள்கின்றோம்.


எம்.பி. நடராஜ்

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும்

வடக்குவாழ் மலையகத்தமிழ் மக்கள் ஒன்றிய இணைப்பாளரும்

 

dantv