Theneehead-1

Vol: 14                                                                                                                                                22.03.2017

யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

நாட்டில் நிலவிய மூன்று தசாப்தகால யுத்தத்தில் 150,000 இற்குSampanthan-Jaishankar-01ம் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரை மேற்கோள்காட்டி தி ஐலண்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஆயுதமேந்திப் போராடிய குழு மற்றும் இலங்கை அரசாங்கம் என இருதரப்பினரும் மீறியுள்ளதாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

2015 ஆம் ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் தற்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் மீளாய்வு செய்யப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தி ஐலண்ட் கூறியுள்ளது.

நிலைமாற்று நீதி நடைமுறைகள், காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மற்றும் இந்த முரண்பாட்டிற்கு நியாயமானதும், ஏற்றுக் கொள்ளத் தக்கதுமான ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை வகுத்தல் போன்ற விடயங்களை இந்தத் தீர்மானம் ஆராய்வதாக புதுடில்லியில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் என்றும் தி ஐலண்ட் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

dantv