சாமானியர்களை முன்நிறுத்தும் போதையற்ற அரசியலின் அவசியம் .

சுகு-ஸ்ரீதரன்

“நாடு சுதந்திரம் அடைந்தகாலம் தொட்டு புதியஅரசியல் சாசனம்

உருவாக்கப்பட்டு தேசியபிரச்சனைக்கு தீர்வுகண்டு நாங்களும் சமத்துவமாக ஒsugu sritharanற்றுமையாக வாழவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். புதியஅரசாங்கத்தின் உருவாக்குவதில் தமிழ் மக்களும் முஸ்லீம்மக்களும் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

ராஜபக்சஅரசாங்கத்திற்கும் புதியஅரசாங்கத்திற்குமிடையே மாற்றமொன்றைக்  காண்கிறோம். பதவி ஏற்று 2 வருடங்களாகியும் காணிகள் ஓரளவுதான் விடுவிக்கபட்டிருக்கின்றன.

வடக்குகிழக்கில் சகலமாவட்டங்களிலும் மக்களுடையகாணிகள் விடுவிக்கப்பட் வேண்டும். படையினர் இங்கு விவசாயம் செய்து வியாபாரம் பார்க்கிறார்கள். காணாமல் போனவர்கள் சம்பந்தமாக ஒரு முடிவு விரைவில் கிட்டவேண்டும்.

பயங்கரவாததடைச்சட்டம் நீக்கப்பட்டால் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அச்சட்டமும் நீக்கப்படவில்லை . கைதிகளும் விடுவிக்கப்படவில்லை. இரண்டுவருடங்களாக புதியஅரசாங்கம் ஆட்சியல் இருக்கிறது.  மக்கள் காணிகளை விடுவிக்ககோரி காணாமல் போனோர் சம்பந்தமாக முடிவைக் கேட்டு   கைதிகளை  விடுவிக்க  கோரிவீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆயிரக்கணக்கானபட்டதாரிகள் வேலைவாய்ப்பு   கேட்டு   போராடிக் கொண்டிருக்கிறார்கள். எமதுமக்கள் இனியும் பொறுமையாக இருக்கமுடியாது . இப்பிரச்சனைகள்  புறக்கணிப்புக்கள் தொடரமுடியாது.  இந்நிலை  தொடருமானால் இவ்வரசாங்கத்தை  மக்கள் வெறுக்கவேண்டிஏற்படும்”.  இவ்வாறு   சம்பந்தன் நெடுங்கேணியில் ஞானம் அறக்கட்டளைசார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வைபவத்திற்கு    தலைமையேற்று    உரையாற்றும் போதுதெரிவித்தாh.;

மக்களின் வெறுப்பு விரக்திகோபம் ஏன்பன  ஏற்கனவே  பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன.   ஏற்கனவே அவர்கள் வீதியில் இறங்கிபோராடுகிறார்கள்.  ஆனால் மக்களுக்கும் அரசியல் தலைமைத்துவத்திற்குமிடையே   பாரிய இடைவெளிகாணப்படுகிறது.   வரலாற்றுஅனுபவங்கள் மக்களின் அன்றாட வாழ்வனுபவங்கள் இந்தபிரமாண்டமானதகவல் தொழில் நுட்பயுகத்திலும் கூட அரசியல் தலைமைத்துவங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.??   அல்லதுபுரிந்துகொள்ள இத்தலைமைத்துவங்களின் வர்க்க இயல்பு   அனுமதிக்கவில்லையோ   என்னவோ.

ஆனால் அதுதான் உண்மை

மக்களின் பிரச்சனைகளை சமாளித்துக் கொண்டு தமது அதிகாரத்தை பலப்படுத்துவதென்பதே இலங்கையின் ஆளும்  அணியினரின் அங்கலாய்ப்பாக இருக்கிறது.  மானசீகமான ஈடுபாடில்லை.  இது மத்தியில் ஆள்பவர்களுக்கும் தமிழர்களின் தலைவர்கள் எனப்படுவோருக்கும் பொருந்தும். மிக எளிமையான விடயங்கள சாதாரணமாக நிகழ்ந்திருக்கவேண்டிய காரியங்கள் ஆற்றப்படவில்லை ஆக்கிரமிகப்பட்டபிரதேசங்களிச் சனங்களின் நிலங்களைஅபகரித்து தொழில் செய்வதும்  படையினர் உல்லாசவிடுதிகளை அமைப்பதும் மக்களின் நிலங்களில் விவசாயம் செய்வதும் வியபாரம் பார்ப்பதும்  மக்கள் அகதிமுகாம்களிலும்  உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்வதும் அலைக்கழிவதும் மக்களின் இறையாண்மை தொடர்பான பாரதூரமான பிரச்சனையாகும்.

இத்தகையநிலைமக்களை  சினமுறவும் ஆவேசமடையவும் செய்யும்.  இராணுவமுகாம்கள் உலகில் எந்தநாட்டில் இல்லை.  நாடுகளின் எல்லாபாகத்திலும் தானே இருக்கின்றன என்ற வாதங்கள் அதிகாரவர்க் க மனேநிலைசார்ந்தவை. 

பல்லினமக்கள் வாழும் நாட்டில் பெரும்பான்மை மேலாதிக்க வகைப்பட்டதாக படையமைப்ப நிலவும்போது அதுபல்லின இயல்புக்குபாதகமானதாகவும் எதிரானதாகவும் பதட்டத்ததை ஏறப்படுத்துவதுமாகவுமே mஅமையும.; அது இலங்கையில் மாத்திரம் அல்லஉலகநாடுகள் பலவற்றின் அனுபவமுமாகும்.

எம்மைப்போன்ற நாடுகளுக்கு அக்கட்டமைப்பு பெரும் சுமையானதுமாகும்.  கடந்த 40  ஆண்டுகளில் மனிதஉரிமைமீறல்கள் ஜனநாயககட்டமைப்புக்கள்  விரிவு வளர்ச்சி அடைவதற்கு பதிலாக சிதைவடைந்ததற்கு காரணங்களில் ஒன்று பேரினவகைப்பட்ட படைக்கட்டமைப்பின் அசுரவளர்ச்சியே. எமதுநாட்டின் சட்டம் ஒழுங்கும் அவ்வாறு பாரபட்சமான கட்டமைப்பாகவே வரலாற்றில் வளர்ச்சிபெற்றது.  இவற்றை இவ்வாறே வைத்துக் கொண்டு சமூகபொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

மக்களைவிட படைமற்றும் அதிகாரகட்டமைப்பு முதனிலைஎன்பது தெற்கிலோ வடக்கிலோவன்முறை சார்ந்த கிளர்ச்சிகளுக்கே வழிவகுக்கும். தற்போதுபொதுமக்கள் வீதியில் இறங்கிபோராடுகிறார்கள்.   இவற்றைஎதிர் மறையாகmநோக்கத் தேவையில்லை. இதுநாட்டின் ஆரோக்கியத்தின் அறிகுறி. மக்கள் வீதியில் இறங்கிnதமதுnகோரிக்கைகளை முன்வைப்பதற்கான உரிமை-கருத்து சுதந்திரம் என்னவிலை கொடுத்தாவது பாதுகாக்கப்படவேண்டும். இந்தபோராட்டங்கள் தான் வரலாற்றில் சாமானியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஓரவஞ்சனையை இட்டுநிரப்புகின்றன.

பொதுமக்கள் வீதிக்கு இறங்காதவரை அவர்களுக்கு எந்தமுக்கியத்துவமும் கிடைப்பதில்லை. பிலவுக் குடியிருப்பு கேப்பாபுலவு போராட்டங்கள் சிலதேசிய வெகுஜனமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளன. அதாவது நாடாளாவிய அளவில் சாமானியமக்களின் நிலஉரிமைபற்றியது. அநாவசியமான படைமுகாம்கள் எதற்கு என்றகேள்வி.

கார்ப்பிரேட் தேவைகளுக்காக பல்லாயிரம் ஏக்கர்களை வளங்கத் தயாராக இருக்கும் போது சாதாரணமக்களின் அவர்களுக்கு சொந்தமான நிலங்களை படையினரிடம்  இருந்து மீட்டுவளங்குவதில் காணப்படும் கையாலாகாத்தனம் -அலட்சியம் -விருப்பமின்மை 

லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை குறைகூறஅல்ல.  சாதாரண மக்களின் அடிப்படை ஜீவாதாரநலன்களை அலட்சியப்படுத்துவது சமூகப்பாதுகாப்புஅரசினால் பேணப்படவேண்டியது. மாகாணஅரசுக்கும் பொருந்தும். இதில் மாகாணஅரசு சம்பந்தம் இல்லாததுபோல் ஒதுங்கிக் கொள்ளமுடியாது. காணி- வீடுசுகாதாரம்- வைத்தியம்  நீர்-  குடிநீர் கல்வி -உயர்கல்வி-  தொழில் கல்விமின்சாரம்  உள்ள+ர் பாதைகள் பெண்கள் சிறார்களுக்கான சுதந்திரமானசூழல் சுற்றாடல் பாதுகாப்பு –வன்முறை ஒழிந்த சுதந்திரமான மகிழ்ச்சியான வாழ்வ எனபன மாகாணசபையினால் மேற்கொள்ளப்படவேண்டியவை.

பாரதியின்வார்த்தைகளிலேயே“ காணிநிலம் வேண்டும் பராசக்திகாணி நிலம் வேண்டும் 10 12 தென்னை மரங்களும் பக்கத்திலேவேண்டும்” என்றிருக்கிறது. இலங்கையின் படைகட்டமைப்பு மாத்திரமல்லபுலனாய்வு கட்டமைப்பும்  தார்மீக அற விழுமியங்களுக்கு முரணாhனவையாக  சிதைவுற்றுள்ளன. மனிதகண்ணியத்திற்கு பதிலாக மனிதவதையினூடாக அவை ஒருசிதைவியக்கமாக உருவாகி இருக்கின்றன. எனவே தீவிரசிர்திருத்தங்கள் அவசியப்படுகின்றன.

சுதந்திரமானநீதிச் சேவை பொலிஸ் சேவை பொதுச்சேவைதேர்தல் ஆணைக்குழுக்கள் தகவல் அறியும் உரிமை போன்ற எண்ணக்கருக்கள் உருவாவதற்கான காரணிகள் எவையாக இருந்தனவோ இன்னும் ஆழமாக சிந்தித்தால் இந்தகட்டமைப்புக்களின் மறு சீரபை;புதொடர்பாகவும் சமூகபிரக்ஞைஉள்ளவர்கள் ஜனநாயக கட்டுமானங்களை விரிவுபடுத்த எண்ணங்கொண்டவர்கள் புரிந்துகொள்ளமுடியும.; சுதந்திரமான ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றில்லை.

சொற்ப அசைவியன ஆர்வமும் குன்றிப்போயிருக்கிறது. அராஜகமாக இருந்தாலும் இன்றுள்ளநிலையில் இருந்து முட்டிமோதல்கள்- முரண்கள்- உடன்களுடன் முன்னேற முயல வேண்டும். பாசிச-அதிகாரத்துவ ஜனநாகவிரோதசூழல் மீண்டும் தலைதூக்க இடமளிக்க கூடாது.

நிலஉரிமை என்றுவரும் போது நிலம் 13 வதன் கீழ் மாகாணங்களுக்குரியவிடயம்.
இதற்கான நியதிச் சட்டங்களை தம் பங்கிற்கு வக்கங்கள் உண்மையே . இந்தமாற்றங்கள் தேவையே . ஆனால் இவை அதிகாரத்தின் இன்னொரு புது அங்கமாக மாறிவிடாதிருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்ற ஒருகேள்வி இருக்கிறது.

உதாரணமாக விசேடஅதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறைநீக்கப்படவேண்டும் என்பது நல்லாட்சிக்கானவர்களின் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான பிரதான வாக்குறுதி.  ஆனால் இன்று அதனை நீக்குவதற்கான விருப்பார்வம்  அதிகாரமட்டத்தில் குறைவடைந்திருக்கிறது. அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற் காடக்கு மற்றும் கிழக்குமாகாணசபைகள் உருவாக்கியிருக்கவேண்டும். ஜெனிவா மேலதிகமான ஒரு இடமாக இருக்கலாம். ஆனால் இங்கு உள்ள+ரில் வீட்டுவேலை செய்யப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட்டிருந்தால்  நிலஉரிமை தொடர்பானமாகாணங்களின் பாத்தியதை பற்றிய பிரச்சனை முக்கித்துவம் பெற்றிருக்கும்  அதிகாரப்பகிர்விற்காக எமதுகட்டமைப்புக்கள் தம்மளவில் தீவிரமாக இயங்கவில்லை என்பது துரதிஸ்டமான உண்மையாகும் .

தமிழர்தரப்பு இருக்கும் அதிகாரங்களைபாவித்து முதலில் செய்யவேண்டிய காரியங்களைச் செய்யவேண்டும். பலபணிகளை ஆற்றியிருக்கமுடியும். ஆற்றுவதற்கான வாய்ப்புகளும் சூழலும் இன்றளவில் இருக்கின்றன. இருக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி உறுதியான அத்திவாரத்தை இடவேண்டும். உள்ள+ர் அதிகாரங்களையும்  இந்திய-சர்வதேசவாய்ப்புக்கள-; புலம்பெயர் சமூகபலம்  இவை சரியானமுறையில்  உரியவழிகாட்டல்களுடன்பிரயோகப் படுத்தப்படவேண்டும். குறுகிய சிந்தனைகளை வெறுப்புணர்வுகளை குரோதங்களை வெற்றுஉணர்ச்சி போதைஊட்டும் நிலைகளை களைந்தெறிந்துவிட்டுசெயற்படமுடிந்தால் நாம் சாதிக்கமுடியும். இங்குசிறப்பானவாழ்வொன்றை ஸ்தாபிக்கமுடியும்.

சகமனிதர்கள ்-சகசமூகங்கள் நாங்கள் மனிதர்கள் என்றசிந்தனையே சிறந்த ஏதிர்காலத்திற்கானதாகும். இலங்கையின் சமூகங்களிடையே நல்லுறவு சமத்துவமான உறவு உருவாகுவதற்கு எத்தகைய மாற்றங்கள் நிகழவேண்டும் எத்தகையநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுமுக்கியமானதாகும்  எளிமையான அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் “எல்லோரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு”-தாயுமனவர்

“எம்மில் ஒற்றுமைநீங்கில் அனைவர்க்கும் தாழ்வே”-பாரதி  விரேதங்கள் வெறுப்புக்களைவன் மங்களைஅதிகாரஅகங்காரத்தை சாமானியர்களிடையே பகை கொண்ட மனநிலையை பராமரிக்கும் சக்திகள் திரும்பவும் திரும்பவும் பலம் பெறுவது சமூகத்திற்கோ நாட்டிற்கோ உலகத்திற்கோ நல்லதல்ல. அவ்வப்போது மக்களை உருவேற்றிபின்னர் தணியச்செய்து திரும்பவும் உருவேற்றிமுடிவிலாமல் நிகழும் தமிழ் விவஸ்தைகெட்ட அரசியல் முடிவுக்குகொண்டுவரப்படவேண்டும்

போலிக் கனவான்கள-; களவாணிகள் அதிகாரபோதை வம்சஆட்சி தமதுதலைவிதியை நிர்ணயிக்க மக்கள் மீண்டும் அனுமதிப்பது தமதுதலையில் தாமே மண்ணை வாரிப்போடும் செயலாகும். சாதாரணமனிதர்களின் முகத்தை முன்நிறுத்தும் அரசியல் பாரம்பரியம் ஒன்றுக்கானபாதை திறக்கப்படவேண்டும். இப்போதிருக்கும் நிலையில் இருந்துமுன்னேற முயல வேண்டும். இதனைவிடமோசமானஅபாயகரமானநிலைக்குவழிவகுத்துவிடக் கூடாது. அதிகாரத்துவமற்றும் படைமேலாண்மைநீங்கியபயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட்ட சமூகஅரச சகலமட்டங்களிலும் ஜனநாயகத்தையும் மனிதஉரிமைகளையும் முன்நிறுத்தியசமூகங்களிடையேசமத்துவமும் தீண்டாமைநீங்கிய சமூகநீதியும் பால் சமத்துவமும் உறுதிசெய்யப்பட்டஉண்மையானசுதந்திரதரிசனஉலகினுள் பிரவேசிக்கமுயல்வோம்.

சுகு-ஸ்ரீதரன்

Theneehead-1

Vol: 14                                                                                                                                                                21.04.2017

dantv