Theneehead-1

Vol: 14                                                                                                                                                11.02.2017

சைட்டம்: ஒரு சுவையான நொறுக்குத்தீனியாக மாறி வருகிறது, ஜாக்கிரதை

                                         குசல் பெரேரா

இந்த நாட்டுக்கு உடனடியாக தேவையாக உள்ளது என்னவென்றால் ஆரம்ப பாடசாலைsaitam முதல் பல்கலைக் கழக மற்றும் மூன்றாம் நிலை கல்வி உட்பட்ட உயர்கல்வி வரையில் தொலைநோக்கு பார்வையுள்ள கல்வி சீர்திருத்தமே ஆகும்.  மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி31, 2017ல் எடுத்த முடிவு ஒருபுறம் இருந்தாலும்,சைட்டம் (ளுயுஐவுஆ) எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கியுள்ளார்கள் மற்றும் ஊடகங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (ஐ.யு.எஸ்.எப்) மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) என்பன இந்த ஆர்ப்பாட்டங்களிலேயே வாழ்கின்றன.  மாணவர்கள் மத்தியில் ஆதிக்கத்தை நிறுவும் அரசியல் குழுக்களுக்கு இடையேயான போட்டியில், பல்கலைக்கழகங்களுக்குள்; சைட்டம் ஒரு அறைகூவலாகவே மாறிவிட்டது.தற்போதைய ஐ.யு.எஸ்.எப் அரசியல் தலைமை அதன் அரசியல் போட்டியாளர்களை வெளியே நிறுத்தும் முயற்சியாக இந்த சூட்டை தொடர்ந்து பேணவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது      (மேலும்)  11.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

சுமந்திரன் மீதான இலக்கு

-           கருணாகரன்

“மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் மட்டுமல்ல, மைத்திரி – ரணில் நல்லாட்சியிலும் புலிப் புச்சாண்டியா?“ என்று கேட்கிறார்கள் சனங்கள். “இது எதற்காக?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.  “நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் உறப்பினsumanthiran6ர்கள் சிலர் முயற்சி. கொலை முயற்சி முறியடிப்பு. சூத்திரதாரிகள் கைது. விசாரணைகள் தொடர்கின்றன. வெளிநாடுகளில் இருக்கும் புலிகள் தூண்டுதல்” என்றவாறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதையொட்டிய கைதுகள், விசாரணைகள், நீதி மன்ற நடவடிக்கைகள், சிறைவைப்பு என தொடர் காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர், நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக்குறித்து பத்திரிகைகளில் விரிவான ஆய்வுகளும் விவரணங்களும் எழுதப்படுகின்றன      (மேலும்)  11.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

நெஞ்சத்தில் நிறைந்த ஆசிரியர்கள்.

நடேசன்

கரையில் மோதும் நினைவலைகள்

ஒருவர் நமக்கு நல்லவராகவும் மற்றவருக்கு வில்லனாகவும்இருப்பதை பல தடவை பார்த்தhindu colegeுள்ளேன்   2011ல் இலங்கையில் கட்டுநாயக்கா ஏர்போட்டால் வந்து இரவு ஒரு மணியளவில் நீர்கொழும்பிலுள்ள ஒரு கடற்கரையோர ஹோட்டலில் படுத்தேன். அதிகாலை நேரம். கடல் அலைகள் கரைமீது மோதும் ஓசை சங்கீதமாக இருந்தது. ஆனாலும் அவுஸ்திரேலிய நேரத்திற்குப் பழக்கமான உடல் என்பதால் கண் விழித்துவிட்டேன். ஆனால் உடல் அயர்வாக இருந்தது.எனது மோபைல் சத்தமிட்டது.   நான் இலங்கைக்கு வந்த காலத்திலே எனது மகனோடு எனது மனைவியும் வருங்கால மருமகளின் குடும்பமும் திருமணத்திற்காக நகை, சேலை வகையறாக்களை எடுப்பதற்காகச் சென்னைக்குச் சென்றிருந்தார்கள்.அப்பொழுது எனது மகன் தொலைப்பேசியில் ‘சிறி அங்கிளது பாஸ்போட்டடை வாங்கி சென்னை ஏர்போட்டில் வைத்துவிட்டார்கள்’ என்றான். ஏன்?’    அவரது பெயரில் தேடப்படும் ஒருவர் இருப்பதாக நினைக்கிறார்கள்’        (மேலும்)  11.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு!

மீரா ஸ்ரீனிவாசன்

ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அHinndu articleரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களர்கள் மத்தியில் அவருக்கு உருவான செல்வாக்கும் செல்லரித்துப்போனது.மாற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு அரசியல் சக்திக்கும் வாய்ப்பு உண்டு எனும் அளவுக்கு ஒரு அரசியல் சூழல் உருவானது. ‘மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும், நல்ல நிர்வாகத்தைத் தருவோம்’ என்றும் பிரச்சாரம் செய்து, தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. கிராமப்புறங்களைச் சேர்ந்த கணிசமான சிங்களவர்கள், வடக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோருடன் சர்வதேச அளவிலும் ஆதரவு கிடைத்ததால் ராஜபக்சவை சிறிசேனாவால் தோற்கடிக்க முடிந்தது.     (மேலும்)  11.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

2000 மாணவர்களைச் சென்றடைந்த ராவணேசன்

  கலாநிதி சி. மௌனகுரு

நம் மாணவர் மத்தியில் காத்திரமான ஒர் நாடகப் பண்பாட்டை உருவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவதன் மூலம் ஒர் காத்திரமான சமூகத்தையும் உருவாக்கவும் முடியும்wert(1)   சென்றவாரம் மட்டக்களப்பில் 4.2.2017 அன்று காலை மட்டக்களப்புத் தேவனாயகம் மண்டபத்திலும்   6.2.2017 அன்று காலையும் மாலையும் இரு காட்சிகளாக கழுதாவளை மஹாவித்தியாலய மண்டபத்திலும் மேடையேறியது. ஒவ்வொரு காட்சிகளிலும் 700க்குக் குறையாத மாணவர்கள் கலந்து கொண்டனர்      இம்முறை இராவணேசனை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இளைஞரகள் மத்தியிலும் கொண்டு செல்வதே எமது நோக்கமாக இருந்தது  இச் சிந்தனை காரிய சித்தியாகப் பல நண்பர்களும் எனது பழைய மாணவர்களும் தாமாக முன் வந்து உதவினர்   நகரப் புறப் பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றிக் கிராமப் புறப் பாடசாலை மாணவர்களும் இராவணேசன் காண வந்திருந்தனர்   மிகத் தொலைதூரத்திலிருந்தும்  வாகனம் ஒழுங்கு செய்து வந்து   நாடகம் கண்டு களித்தனர்     (மேலும்)  10.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

 சரோ என்றால் லயன்

நடேசன்

இதுவரையும் வர்த்தக விளம்பரங்களைப் படமாக்கிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியன் டைரக்ரரின்(Garth Davis) படம் லையன். முதல் படத்திலே ஓஸகாருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் அறச்சீற்றதlion்துடன் புதிதான கருத்தை எடுத்து அன்னியமான கலாச்சாரத்தில் உள்ள கதையை படமெடுப்பதற்கு மிகுந்த துணிவு வேண்டும்.  நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட திரைப்படம். மிகவும் நேரடியான கதை. அனாதையாகச் சிறுவன் தத்தெடுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரத்தில் வளர்ந்த பின்பு தனது குடும்பத்தை தேடுதலே இந்தப்படம்.   உள்ளுணர்வுகளின் தேடுதலே தொடர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது சிலம் டக் மிலியனரில் வந்த தேவ் பட்டேலின்(Dev Patel) மிகவும் இயற்கையான நடிப்பு. ஆனால், ஐந்து வயதான சன்னி பவரே(Sunny Pawar) எனது மனத்தைக் கவர்ந்த பாத்திரம்.   தொலைந்த சரோ என்ற பையன் உத்தரப்பிரதேசத்தில் இரயில் ஏறி கல்கந்தா வந்து சேர்வதும், ஓடும் அந்த இரயிலில் வெளியேற முயலுவதும் மிகவும் இயற்கையானவை. கல்கத்தாவில் உணவிற்காகத் திரிவதும் அவனை, மனித வல்லுறுகளாக கொத்தத் திரிபவர்கள் அதிர்வுகளைக் கொடுத்தபோதும், இந்திய நிலம், மக்கள், வறுமை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.       (மேலும்)   10.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

யதீந்திரா

அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஒருபுறம் அதற்கான வீட்டு வேலைகளை செsumanthiran5ய்து கொண்டும், மறுபுறம் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திர நெருக்கங்களை அதிகரித்தும் வருகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஆபிரிக்காவின் கொம்பு என்று வர்ணிக்கப்படும் எதியோப்பியாவில் புதிய தூதரகம் ஒன்றை திறந்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறானதொரு நகர்வை முன்னெடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுகள் தொடர்பில் விரிவாக நோக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. அதனை பிறிதொரு சந்தர்ப்பத்தில் இப்பத்தி பதிவு செய்யும். இந்தக் கட்டுரை முன்னிறுத்த முற்படும் விடயம் வேறு. அதாவது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னிறுத்தி பலவாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.    (மேலும்)   10.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

கடின உழைப்பினால்தான் இந்துக் கல்லூரிக்கு தொழிநுடப் பிரிவு கிடைத்தது  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா்

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில்   தொழிநுட்ப பிரிவை  ஆரம்பிப்பதற்கு நாம் பெருமIMG_2067் போராட்டத்தையே நடத்தியிருந்தோம். ஒரு வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கே தொழிநுட்ப பிரிவு என்று இருந்த நிலையை மாற்றினோம் அதற்காக வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒரு போராட்டத்தையே நடத்தியிருந்தோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.   இன்று 09-02-2017 கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப  பிாிவு கட்டடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில்இந்தப் பாடசாலைக்கு தொழிநுட்ப பிரிவை கொண்டு வருவதற்காக நாம் கடந்த காலத்தில்  கடுமையாக உழைத்திருந்தோம், கடந்த உயர்தர பாீட்சை பெறுபேறுகளில் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில்  இந்துக் கல்லூரி மாணவன்  முதல் இடத்தை பெற்ற செய்தி எமது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.   (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

தமிழக அரசியல் நிலவரம்: மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகை தந்தார். அவரை நேரில் சந்தித்த முதல்வர் பvidyasagarraoன்னீர்செல்வம், தம்முடைய ராஜினாமாவை கட்டாயப்படுத்தி வாங்கினார் சசிகலா சட்டப் பேரவையில் தாம் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்த சசிகலா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அத்துடன் தம்மை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் விவரங்களையும் ஆளுநர் வித்யாசகரிடம் அளித்தார்.  இதையடுத்து இருதரப்பு விவரங்களையும் சேகரித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையின் நகல் குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஆளுநர் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உரிய ஆலோசனைக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

__________________________________________________________________________________________________________________________________ ___

வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு –

கௌரவ சபாநாயகர் அவர்களே!

1995ம் ஆண்டின் 30ம் இலக்கச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சமுர்த்திdouglas devantha அதிகார சபை மற்றும் சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களம் என்பன வறுமையை ஒழிக்கும் தளத்தில் நலன் உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அபிவிருத்தி, குறு நிதியுடன் தொடர்பான வங்கி வலையமைப்பு போன்ற பிரதான மூன்று நிலைகளில் பங்காற்றியுள்ளன. இந்த வேதை;திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, உணவுப் பாதுகாப்பு, நிலையான அபிவிருத்தி, மக்கள் பங்கேற்பு போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு மத்தியில் 2013ம் ஆண்டின் 01ம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை சமுர்த்தி அதிகார சபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மலைநாட்டு அபிவிருத்தி அதிகார சபை, சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் அதன் கீழ் கொண்டு வரப்பட்டன.    (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

பொதுப்பணம் சூறையாடப்படுகின்ற போது நமக்கு ஆவேசம் வரவில்லையென்றால், நமது தேசப்பற்று பொய்யானது என்பதே பொருளாகும்"

சுதந்திர தின உரையின் போது NFGG தவிசாளர் பொறியாலாளர் அப்துர் ரஹ்மா"ன்

"நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்ற போது நமக்கு வலிக்க வேண்டும். பொதுப்speechபணம் சூறையாடப்படுகின்ற போது நமக்கு ஆவேசம் வர வேண்டும். அப்படி வரவில்லையென்றால், நமக்கிருப்பதாக  நாம் கூறுகின்ற தேசப்பற்று பொய்யானது என்பதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும்"   என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.   இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடு முகமாக NFGGயினால் காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு விசேட உரையொன்றை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.    பொறியாலாளர் அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது , "இன்றைய நாளில் நமது சுதந்திர தினமானது பரவலாக எல்லோராலும் கொண்டாடப்படுகின்றது. நமது காத்தான்குடிப் பிரதேசத்திலும் கடந்த காலங்களைப் போலல்லாது இன்று மிக அதிகமான சுதந்திர தின நிகழ்வுகள் நடக்கின்றன. இவ்வாண்டு தேசியக் கொடிகளுக்கான கேள்விகளும் விற்பனையும் அமோகமாக இருந்ததாக ஒரு செய்தியைப் பார்த்தேன்.      (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

பெண்கள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பெண்கள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் சில்மிஷங்களைத் தடுப்பது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   அடுத்த மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.   இலங்கை பொலிஸார், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து மக்களுக்கு இது குறித்து தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

__________________________________________________________________________________________________________________________________ ___

யாழில் ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.   சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.அதன்படி இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனபோது சந்தேகநபர்களான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.


__________________________________________________________________________________________________________________________________ ___

தீர்வை மேலும் மேலும் வலியுறுத்தும் படுகொலைச் சதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ. சுமந்திரனைப் படுகொலை செய்வதற்காகச் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.   tm article   இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, அச்சதிகாரர்களைப் போலவே, இந்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிகிறது. அந்தச் செய்தியைத் தத்தமது அரசியல் சித்தாந்தங்களுடன் பொருந்தும் வகையில் வியாக்கியானம் செய்வதில் உள்ள கஷ்டத்தினாலேயே, அவ்வாறு சிலர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.  எனவே சிலர், அவ்வாறு ஏதும் நடந்து இருக்காது என எடுத்த எடுப்பில் செய்தியை தூக்கியெறிந்துவிட முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அரசியல் காரணங்களுக்காகவே அவ்வாறு கூறுகிறார்கள்.   (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

அரச காணிகளிலேயே படை முகாம்

மக்களின் காணிகள் என்பதை உறுதிப்படுத்தினால் உடன் நடவடிக்கை

அரசாங்கத்திற்கு சொந்தமான காணியிலேயே கேப்பாப்புலவில் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமது காணிகள் இருப்பதாக மக்கள் பிரதேச செயலாளரினூடாக உறுதிப்படுத்தினால் தேவrosanையான நடவடிக்கைகளை எடுக்க தயார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.  உண்மை நிலைமை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாகக் கூறிய அவர் வேறு நோக்கத்தில் மக்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டார்.  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கேப்பாப்புலவு உண்ணாவிரதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், கேப்பாப்புலவு தொடர்பான பிரச்சினை தொடர்பில் அந்த மக்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளோம். இரு வாரங்களுக்கு முன்னர் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. வவுனியாவில் 16 ஏக்கர் காணி
யை விடுவித்துள்ளோம். மக்கள் உறுதிப்படுத்தியமைக்கமைய அவர்களின் காணிகளை இராணுவம் விடுவித்து வருகிறது     (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

22 எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சுவார்த்தை: களமிறங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் மகன்கள்

அதிமுகவைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைசops்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சார்பில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், மகாபலிபுரத்தில் விடுதியில் தங்கியுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களின் செல்லிடப்பேசி எண்கள், பேச்சுகள் உள்ளிட்ட அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.   அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 127 பேர் பேருந்து மூலமாக, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் தொடர்பு கொள்ளாமல் இருக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு சில வாரங்களாக...: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலா தரப்பில் இருந்து நெருக்கடி அதிகரித்ததாகவும், இதைத் தொடர்ந்து அவர் கட்சியை உடைக்கும் வேலையை கடந்த சில வாரங்களில் இருந்தே தொடங்கியதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மூத்த நிர்வாகிகள் யார் யாரெல்லாம் சசிகலாவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் மூலமாக முதலில் எதிர்ப்பு அலைகளை உருவாக்கினார் எனவும் தெரிவிக்கின்றன.    (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

யுத்தக் குற்றச்சாட்டு விசாரணை: மேலும் காலஅவகாசம் கோரும் இலங்கை

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் காலஅவகாசம் தேவை என இலங்கை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில், இலங்கை இது தொடர்பில் கோரவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

காணி (பாரதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு –

காணிகள் தொடர்பில் இங்கு எனது கருத்துக்களை முன்வைக்கின்ற நிலையில் குறிப்பாக, வடdouglas devananthaக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து, மீண்டும் தங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதிலும், உரித்தைப் பெற்றுக் கொள்வதிலும் ஏற்படுகின்ற காணிப் பிணக்குகள் அதிகமாகக் காணப்படுகின்ற நிலையில், இதற்கு துரித ஏற்பாடாக அப் பகுதிகளில் காணிக் கச்சேரிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றேன்.அந்த வகையில், பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தல், மக்களது ஆதனங்களை இனங்கண்டு கொள்ள முடியாமை, உரிய ஆவணங்கள் அல்லது பதிவேடுகள் அழிந்து போயுள்ளமை, அந்த ஆதனங்களில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றமை, விவசாய நிலங்களில் பிறர் பயிர்ச் செய்கையினை மேற்கொள்கின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்      (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

மஹிந்தவை கொலைக் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றிய சரத் என் சில்வா

அன்றைய காலத்தில் நீதவான்கள் நீதிமன்ற மனநிலையில் இருந்து செயற்பட்டனர், ஆனால் தற்போது அவர்கள் அவ்வாறு இல்லை என, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வா தெரிவித்துள்ளார்.மேலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இரண்டு கொலை மற்றும் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, பின் அவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இது குறித்து கேள்விப்பட்டதும் எனது நண்பரான அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் விசாரித்தேன் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார். இது பற்றி தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,  இதன்போது, தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை என கூறிய மஹிந்த, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட 10 நிமிடங்களுக்கு முன்பதாகவே தான் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டதாகவும் குறிப்பிட்டார்.     (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

வித்யா படுகொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோvithya murdersகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.  குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.விசாரணையின் பின்னர் குறித்த 09 நபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

தேசிய பாடசாலைகளுக்கு 1,093 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்  * அதிபர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

வடக்கு, கிழக்கில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் 1,732 ஆசிரியர்கள் தகைமை அடிப்படையில் நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.   இதேவேளை வடக்கு, கிழக்கு, தோட்டப்புறம் மற்றும் அறநெறி பாடசாலைகளில் கடமையாற்றும் உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை 6 ஆயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் அகில விராஜ் உறுதியளித்துள்ளார்.ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவையை ஸ்தாபித்தல், அதிபர்களுக்கான கொடுப்பனவுகளை 6,500 வரை அதிகரித்தல், தேசிய பாடசாலைகளுக்கென 1,093 பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தல், ஆசிரிய நியமனங்களுக்கான வயதெல்லெயை 30 தொடக்கம் 35 வயது வரை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் தேசிய மற்றும் மாகாணசபை பாடசாலைகளில் 06 தொடக்கம் 11 ஆம் வகுப்பு வரை நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.   (மேலும்)   09.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில் நிலவும் விடுதிப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  வருடாந்த கல்வி கால எல்லை மற்றும் அரையாண்டு கால எல்லை நீடிக்கப்பட்டமைக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.  தமது விடுதிகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

__________________________________________________________________________________________________________________________________ ___

“கொழும்பிலே சுதந்திர தினக் கொண்டாட்டம். கேப்பாபிலவில் நாங்கள் திண்டாட்டம்”

-           கருணாகரன்

“2020 இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.

"2020 இல் இலங்கை என்று ஒரு நாடு அனேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு இன்னும் குட்டிக் குட்டியா பிரிஞ்சி ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும், அமெரிக்காவுடையதும், ரஷ்யாவுடையதும் இந்தியாவினுடையதும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும்.keppapilavu-1     இலங்கைக் கொடி எங்கும் பறக்காது. அப்படிப் பறந்தாலும் அது ஏதோ ஒரு ஒதுக்குப் புறத்தில்தான் அசைந்து கொண்டிருக்கும். பறக்கும் திராணியெல்லாம் அதற்கிருக்காது. இங்கே உள்ளவர்கள் எல்லாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் காரில் போகவும் விஸா எடுக்கவும் போர்டரில் பாஸ்போர்ட் காட்டவும் வேண்டி வரும். புறாக்கூடு போல சின்னச் சின்ன ஃப்ளட்களில் நாங்கள் எல்லோரும் வசிக்க வேண்டி வரும். அது நவீன சேரி என்றழைக்கப்படும். தண்ணீர் காசு கொடுத்து சின்னச் சின்ன போத்தல்களில் வாங்க வேண்டி வரும். வெளியே நல்ல காற்று இருக்காது. எனவே, எப்போதும் ஒக்‌ஷிஜன் கெஜெட்டோட தான் வெளியே போக வர வேண்டி இருக்கும். இப்படியாக, நாங்கள் இருந்த நாடு நமக்கு இல்லை என்றாகி, வேறு நாட்டின் கூலி அடிமைகளாக நாம் மாற வேண்டி இருக்கும்.     (மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

நோர்வே புலம்பெயர் புலி தலைவர் நெடியவனை ஸ்ரீலங்காவிடம் கையளிக்குமா?

                                                      டி.பி.எஸ்.ஜெயராஜ்

பாகம் - 2

துரோகத்தனமான நிகழ்வுகள்

இந்த துரோகத்தனம் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கை என்பனவற்றைபnediyavan்பற்றி விரிவாக “தமிழ் தேசியவாத அரசியலில் துரோகத்தனத்தின் தொடர் நிகழ்வுகள்” என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று 14 மார்ச் 2015 டெய்லி மிரர் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது:“எந்த ஒரு தமிழனும் சமரச அரசியலை முன்மொழிந்தால் அல்லது அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதற்கு ஆதரவு தெரிவித்தால் அவரைத் தாக்குவதற்காக அவரது தலைக்கு மேல் துரோகத்தனத்தின் வாள் ஒன்று மயிரிழையில் தொங்கிக் கொண்டிருக்கும். தற்போதைய நிலமையில் ஒப்பீட்டளவில் மிதவாத தலைவர்களான ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய படங்கள் மற்றும் கொடும்பாவிகள் என்பன எரியூட்டப் பட்டுள்ளன. ரி.என்.ஏ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் எல்.ரீ.ரீ,ஈ சக்திகளின் விருப்பத்துக்குரிய இலக்கு. அவர் துரோகி என பரவலாக இழிவு படுத்தப்பட்டு வருகிறார். முன்பு குறிப்பிட்டதைப் போல கடந்த கால நடைமுறை என்னவென்றால் புலிகள் ஒருவரை அழிக்க நினைத்தால் அவரை ஒரு துரோகி என அரக்கத்தனமாக சித்தரிப்பது பின்னர் அவரைப் பூண்டோடு அழிப்பதுதான் நடைமுறை.    (மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

சயிடத்திற்கு வடக்கு, கிழக்கில் எதிர்ப்பு

சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்கprotest-sள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்க கோரியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.  இதன்போது மட்டக்களப்பு - அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.போராட்டக்காரர்கள் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பு நகருக்கு சென்று பின், கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக பீடத்தினை வந்தடைந்தனர்.இதன்போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக் கோரியும் இலவச கல்வியை பாதுகாக்க கோரியும் காந்திபூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் மாணவர்களினால் நடாத்தப்பட்டது.   (மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான கட்டளைகள் -

-  டக்ளஸ் தேவானந்தா

கௌரவ சபாநாயகர் அவர்களே!

உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வருடம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் உலகில் 12.5 இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் வீதி விபத்துகளில் பலியாவதாகவும், இதன்படி பார்க்கும்போது நாளொன்றுக்கு 3,472 douglas devaபேர் பலியாவதாகவும், இவர்களில் அதிகமானோர் 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோர் என்றும், மரணங்கள் நிகழ்வதற்குரிய காரணங்களில் வீதி விபத்துகள் 9வது இடத்தை வகிப்பதாகவும், 2030ம் ஆண்டளவில் இது 7வது இடத்தைப் பிடித்துவிடும் என்றும் தெரிய வருகிறது. மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளில் வீதி விபத்து மரணங்கள் 90 வீதம் நிகழ்வதாகவும், போக்குவரத்திற்குரிய அவசியமான உட்கட்டுமானங்கள் அபிவிருத்தி, கொள்கை மாற்றங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாட்டு முறைமைகள் என்பன சிறப்பாக இல்லாமையே இதற்குக் காரணமென்றும் அதில் தெரிவிக்கப்படுகின்றது. எமது நாட்டில் ஏற்பட்டு வருகின்ற வீதி விபத்துக்களை பார்க்கின்றபோது, தற்போது அது ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.  
(மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்: பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்panneer செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.   அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல் படுத்தியது அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய சூழல் உள்ளது என்று  என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.   (மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

பாலியல் தொழிலுக்காக விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமி... காப்பாற்றினார் விமானப் பணிப்பெண் ஷீலா!

எஸ். ஹமீத்

அவரது பெயர் ஷீலா பெட்ரிக். 49 வயது. பத்து வருடங்களாக விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றுகிறார்.    seela     இரண்டொரு தினங்களுக்கு முன்பு அவர் பணியாற்றும் அலாஸ்கா எயார் லைன்சுக்குச் சொந்தமான விமானம் சியாட்டிலிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்குப் பறந்து கொண்டிருந்தது. அவ்வேளைதான் அவர் அந்த ஏழைச் சிறுமியைக் கண்டார்.மிகவும் கசங்கிய ஆடைகளுடனும் கவலை தோய்ந்த முகத்துடனும் அந்தச் சிறுமி, உயர்தரமான ஆடையணிந்த ஒரு மனிதனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் விமானப்  பணிப்பெண் ஷீலாவின் மனதுக்குள் ஒரு சிறு சந்தேகம் முளைத்தது. 'எங்கேயோ ஒரு தவறு நடக்கின்றது.' என அவரது உள்மனது கூறியது.அந்தச் சிறுமியுடன் பேச்சுக் கொடுக்க முயன்றார் ஷீலா. ஆனால், அவள் பேசவில்லை. மாறாக, அந்தச் சிறுமியிடம் கேட்ட சில கேள்விகளுக்கு அவளுக்குப் பக்கத்திலிருந்தவனே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அத்தோடு விமானப் பணிப்பெண் சிறுமியுடன் பேசுவதையும் விரும்பாதவனாய் இருந்தான்.   (மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்துக்கு தடை விதித்தது பாகிஸ்தான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ராய்ஸ் படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதraeesிக்கப்பட்டுள்ளது.   பாலிவுட்டின் முன்னணி கதாநாயகரான ஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படம் குடியரசு தினத்தில் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் நடிகை மஹிரா கானும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பாகிஸ்தானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ‘ராய்ஸ்’ படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.   இதற்காக பாகிஸ்தான் தணிக்கை குழுவினர் பார்வைக்கு ‘ராய்ஸ்’ படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகவும் தேடப்படுபவர்களாகவும் சித்தரிக்கும் சர்ச்சைகாட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து பாகிஸ்தானில் ‘ராய்ஸ்’ படத்தை திரையிட தடை விதித்து உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.     (மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

பேரறிவாளன் மறு ஆய்வு மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெறவேண்டும் என்ற அம்சத்தை மறு ஆய்வு perarivalanசெய்யக்கோரி தமிழக அரசு மற்றும் பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுதலை செய்ய முடியாது. மத்திய அரசின் ஒப்புதலை பெற்றே விடுவிக்க முடியும் என்று தீர்ப்பு வழங்கியது.மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெறவேண்டும் என்ற அம்சத்தை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பிலும், பேரறிவாளன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.   (மேலும்)   08.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

நோர்வே புலம்பெயர் புலி தலைவர் நெடியவனை ஸ்ரீலங்காவிடம் கையளிக்குமா?

                                                      டி.பி.எஸ்.ஜெயராஜ்

பகுதி - 1

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊடக நேர்காணலில்  “உங்கள் முதல் இராணுவ நடவடிக்கை எது?” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிளalfred்ளை பிரபாகரன் “அல்பிரட் துரையப்பா” என்று பதிலளித்தார். பிரபாகரன் நிச்சயமாக யாழ்ப்பாண குடாநாட்டில் வைத்து ஜூலை 27,1975ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட  பிரபலமான மேயரும் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரன் மற்றும் கலாபதி,கிருபாகரன் மற்றும் சற்குணம் என்கிற ஏனைய மூவரும்தான் பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்துக்கு முன்பாக நடைபெற்ற அந்த குரூரமான படுகொலைக்கு பொறுப்பானவர்கள். தேர்தல் மூலம் பதவியொன்றை வகித்துவரும் நிராயுதபாணியான ஒரு குடிமகனைக் கொலை செய்வது பொதுவாக ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று பார்க்கப்படுமே தவிர ஒரு இராணுவச் செயற்பாடாக அல்ல. ஆனால் துரையப்பாவின் கொலையை பிரபாகரன் தனது முதல் இராணுவ நடவடிக்கை என்று கோருவது, ஒரு பயங்கரவாத செயலை இராணுவ நடவடிக்கை என்ற உணர்வில் தெரியப்படுத்துவது, உண்மைகளை திரித்துக் கூறும் பிரபாகரனின் மனப்போக்கை அடையாளப்படுத்துகிறது.    (மேலும்)   07.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்தும் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் இன்று வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பில் விமானப்படை முகாம் அமைந்துள்ள keppapilavu-1தமது காணியினை விடுவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.   தொடர்ச்சியாக ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் உடல் நிலை தொடர்பில் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் இன்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.  இதேவேளை, கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரியும், புதுக்குடியிருப்பில் மக்கள் ஆரம்பித்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னபாக தற்காலிகக்கூடாரம் அமைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வாயிலை மறித்து இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

__________________________________________________________________________________________________________________________________ ___

சந்திரிக்கா கூறியது உண்மை இல்லை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியது உண்மையில்லை என, சீனத் தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளது.   நுரைச்சோலை வேலைத்திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 15 பில்லியன் ரூபா தரகுப் பணமாக (கொமிசன்) எடுத்துக் கொண்டதாக, சீன தூதுவர் தன்னிடம் குறிப்பிட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்தார்.  அத்தனகலையில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டிருந்தார்.  இந்தநிலையில், இந்த கருத்து எந்தவொரு தகவலையோ முலத்தையோ அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டதல்ல என, சீனத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

கவர்னரின் வருகை உறுதியாகாததால் சசிகலா பதவியேற்பதில் குழப்பம்: தடைகேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சசிகலா நடராஜன் முதல்வராக பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பதவியேற்பு விழா இன்று sasikala2நடத்த திட்டமிட்டிருந்தனர்.  இந்த விழாவில், 32 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் கவர்னர் வருவது உறுதியாகததால் பதவி ஏற்பதை அறிவிக்க முடியாமல் அதிமுக தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் பதவி ஏற்புக்கு தடை கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார்.  இதையடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவே, தமிழக முதல்வராகவும் பதவியேற்க வேண்டும் என்று அக்கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர்    (மேலும்)   07.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

மாலபே மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்

மாலபேயிலுள்ள சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீர சேனாரத்ன தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மாலபேயில் உள்ள சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தையில் சமீர சேனாரத்னவின் கார் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

நாடளாவிய ரீதியில் வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி சுமார் 350 பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. இதில் 100 பஸ்கள் வரை மாகாணங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.  வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸாருக்கு தகவல் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தியுள்ளவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பதற்கான அதிகாரம் உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.   இதனைத் தவிர, நீதிமன்றத்தின் ஊடாக இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கவும் முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.விலைமனு கோரல் நடைமுறையைப் பின்பற்றி புதிதாக பஸ்களுக்கான வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

யாழ் தாக்குதல் சம்பவம் - நான்கு இளைஞர்கள் கைது

யாழ் - நல்லூர் பகுதியில் இருவரைத் தாக்கி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம், அருகிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியது. இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  பின்னர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்த நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

__________________________________________________________________________________________________________________________________ ___

பெனிலோப் ஈவா வில்லிஸ்

-           சிக்மலிங்கம் றெஜினோல்ட்

சரியாக வழியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இருட்டு வேறு வளர்ந்து கொண்டிருந்தது. ட்ரக்ரருக்கு லைற்றும் கிடையாது. அதைத் தள்ளி இயக்கிக் கொண்டு வந்திருந்தோம். மங்கிய ஒளியில் வண்டி போய்க்கforest1ொண்டிருந்தது. ஆளரவமே இல்லாத வெளியில் யாரிடம் விவரம் கேட்க முடியும்? எனவே, ஏதோ போகிறபோக்கில் போவோம். எப்படியாவது ஊருக்குக் கிட்டவாகப் போய்ச் சேரலாம். அல்லது கடல் முகத்தில் ஏறலாம் என்ற நம்பிக்கை இருந்தது.  அப்படித்தான் பல தடவை அங்கே போயிருக்கிறேன். ஆயிரம் தடவை அந்த வழியில் போய் வந்தாலும் அடையாளம் தெரியாத மர்மப்பாதைகள். நானும் ஐந்தாறு வருசமாக இந்த வழியில் அடிக்கடி போய் வருகிறேன். பகல் என்றால் பிரச்சினையில்லை. அடையாளம் தெரியும். இரவென்றால் கண்ணாமூச்சி ஆட்டம்தான். எப்போதாவதுதான் சரியாகச் சேரவேண்டிய இடத்துக்குப் போக முடிந்திருக்கிறது. மற்றும்படி ஏதோ ஒரு பாதையில் சிக்கி, இன்னொரு பக்கமாகப் போய்ச் சேர்ந்து, பிறகு திரும்பி எங்கெல்லாமோ சுற்றி உரிய இடத்துக்கே வந்திருக்கிறேன்.   (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

டிரம்ப் ஆட்சியின் முதல் பத்து நாட்கள்

People’s Democracy தலையங்கம்

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபின், முதல் பத்து நாடnot my்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை ஆராய்ந்தோமானால் அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிப்படுத்திய வெறித்தனமான பேச்சிற்கு உண்மையாக இருக்கிறார் என்பதைக் காணமுடியும். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள நிர்வாக உத்தரவுகள் அவர் எந்த அளவுக்கு அமெரிக்காவில் குடியேறி யிருப்பவர்களுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக, பெரும்வர்த்தகப் புள்ளிகளுக்கு ஆதரவாகஇருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.  அவர் பிறப்பித்த நிர்வாக உத்தரவுகளில் முதலாவது, மெக்சிகோவுடனான எல்லையில் சுவர் கட்டி எழுப்புவது தொடர்பானதாகும். சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுத்திட இது தேவை என்று டிரம்ப் கூறுகிறார். மேலும் டிரம்ப், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல, இவ்வாறு கட்டி எழுப்பப்படும்சுவருக்கான செலவையும் மெக்சிகோவேஏற்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.  மெக்சிகோ ஜனாதிபதி இதனைச்செய்யமுடியாது என்று கூறி மறுத்திருக்கிறார். தற்போது டிரம்ப் நிர்வாகம் மெக்சிகோவிலிருந்து வரும் பொருள்களுக்கு 20 சதவீதம்கூடுதல் வரி விதித்து அதன்மூலம் சுவர் கட்டுவதற்கான செலவுத் தொகையை எடுத்துக் கொள்வோம் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது.   (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

வவுனியா பேருந்து சேவை பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று யோசனைகள்: லிங்கநாதன் அரச அதிபரிடம் முன்வைப்பு

வவுனியாவில் தனியார் பஸ் சேவையாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார். vavuniya busstand   இரு தரப்பினரும் ஒரே இடத்தில் இருந்து சேவையாற்ற முடியாது என்பது தெளிவாகியிருப்பதனால், வவுனியா நகரில் பழைய இடத்தில் இருந்தே இலங்கை போக்குவரத்துச் சபையினரை சேபையில் ஈடுபட அனுமதிப்பதுடன், பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள காணியொன்றில் தனியார் பஸ்களுக்கான நிலையத்தை அமைத்து, புதிதாக யாழ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலை கட்டிடத் தொகுதியில் வவுனியாவுக்கான பொருளாதார மையத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த யோசனைகளில் தெரிவித்திருக்கின்றார். தமது யோசனைகளை உள்ளடக்கியதாக லிங்கநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

யாழ்ப்பாண குடாநாட்டில் 17 ஆயுத குழுக்கள்

யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ava group    பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர்.இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கி சேதப்படுத்துதல், கப்பம் பெறுதல், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுதல் உட்பட பல குற்றச் செயல்களில் இந்த குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது   (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

7 நாட்டினர் அமெரிக்கா வர தடையை நீக்கியது கோர்ட்டு ஜனாதிபதி டிரம்ப் மேல்–முறையீடு 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்

7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர அனுமதி மறுக்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் தடை விதித்து, சியாட்டில் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து டிரம்ப் மேல்–முறையீடு செய்துள்ளார். இதை 3 நீதிபதிtrump-5கள் அமர்வு விசாரிக்கும். ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த பயணிகள் 3 மாத காலம் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 20–ந் தேதி உத்தரவிட்டார். இதனால் அந்த நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் பேரின் விசாக்கள் ரத்தாகின. உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் மட்டுமல்லாது, லண்டன், பாரீஸ் என பிற நாட்டு நகரங்களிலும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

சய்டமுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் மஹிந்த

மாலபே சய்டம் நிறுவனத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆmahinda Rர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தவறாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.  தமது குறைகளை கூறுவதற்கு ஜனாதிபதியை தேடிச் செல்வது, அவற்றை கூறுவதற்கு வேறு யாரும் இல்லை என்பதனாலேயே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.வைத்திய பீட மாணவர்கள், எதிர்கால வைத்தியர்கள் என்பதுடன் அவர்கள் எமது பிள்ளைகள் என்பதால், அவர்கள் கூறுவதை செவிசாய்க்க வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதென்றால் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.     (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

சசிகலாவை முதல்வராக்குவது ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு விரோதமானது: ஸ்டாலின்

சசிகலாவை முதல்வராக்குவது ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு விரோதமானது என்று மு.stalinக.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.  3 நாட்களுக்கு முன்பு பி.டி.ஐ யில் என்னிடம் பேட்டி எடுத்தார்கள். அப்போது இந்த கேள்வியை என்னிடம் கேட்டார்கள். அதாவது சசிகலா முதல்வராக வந்தால் என்ன செய்வீர்கள் என்று, அப்போதே தெளிவாக ஒரு பதில் சொன்னேன். அதே பதிலை இப்போதும் நான் உங்களிடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.தமிழக மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தல் நடந்தபோது ஆளுங்கட்சியாக அதிமுகவையும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுகவும் வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்கள்.    (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்-அமைச்சர் ஆகிறார் சசிகலா...!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்-அமைச்சராக பதவியேற்கிறார்.sasikala   அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராகிறார். அநேகமாக அவர் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.7ஆம் தேதி) முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் பெயரை முதல்வரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அதை வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.்.    (மேலும்)   06.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

தன்னெழுச்சிப்போராட்டங்கள்

-     கருணாகரன்

மீண்டும் போராட்டங்களைப் பார்க்க முடிகிறது. இந்தப் போராட்டங்கள் முன்னைய போராட்டங்களைப் போல, அரசியற் கட்சிகள் சம்மந்தப்பட்டவை அல்ல. அல்லது அரசியல் கட்சிகளால் நடத்தப்படுtamil protestகின்றவையும் அல்ல. அரசியற் சக்திகளிலும் அரசியற் தலைமைகளிலும் நம்பிக்கை இழந்த நிலையில் சனங்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்காகத் தாங்களாகவே போராட முயற்சிக்கிறார்கள். எனவே தங்களுக்குத் தெரிந்த வகையில், தங்களால் சாத்தியப்பட்ட அளவில் இந்தப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். இது ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்பட வேண்டியது. புதிய தொடக்கம் என்று இங்கே நான் கூற முற்படுவது,  இவை கொண்டிருக்கும் அர்த்தத்தின் அடிப்படையிலேயே.   அரசியற்கட்சிகளினால் நடத்தப்படுகின்ற போராட்டங்களில் மக்களுடைய நலனோடு அந்தக் கட்சிகளின் அரசியல் நலனும் கலந்திருக்கும் என்ற வாதமிருக்கும். இங்கே அதற்கு இடமேயில்லை. இது சனங்களின் வாழ்க்கைப்பிரச்சினை. உயிர்ப்பிரச்சினை. இந்தப்போராட்டங்களை முன்னெடுத்து வரும் சனங்கள் மிக அடிமட்டத்திலானவர்கள். பொருளாதார பலமோ, அரசியற்பலமோ, பிற அறிவுசார்பலமோ இல்லாதவர்கள். இன்னும் ஒரு வகையில் சொன்னால், யாராலும் கவனிக்கப்படாதவர்கள். யாருடைய தூண்டலின் பேரிலும் இவர்கள் போராட்டத்துக்கு வரவில்லை.       (மேலும்)   05.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

மகள் திருமணத்திற்கு செல்ல நளினி மனு

வேலூர் மத்திய சிறையில் நளினி-முருகனை சட்டத்தரணி புகழேந்தி இன்று சந்தித்து பேசியுள்ளார்.   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளnaliniன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.    இதே வழக்கில் குற்றவாளியான முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுவிக்கக் கோரி நளினி-முருகன் உள்பட மற்ற குற்றவாளிகள் தரப்பும் போராடி வருகிறார்கள்.   விடுதலை வழக்கு விபரம் குறித்து, நளினி-முருகனை அவர்களது வக்கீல் புகழேந்தி அடிக்கடி சந்தித்து விவரித்து வருகிறார்.    (மேலும்)   05.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல.

கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 27 ஆவது இதழ் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அநுராதபுரம் கெகிறாவை இலக்கிய செயற்பாட்டாளர் திருமதி. கெகிறாவை ஸஹானாவின் முன் அட்டPoongavanam 27 Front Coverைப் படத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது.    வழமைபோன்று இதழின் ஆசிரியர் ஒரு நிமிடம் எங்களை எல்லாம் சிந்திக்க வைத்துவிட்டுத்தான் வாசகர்களாகிய எங்களை பூங்காவினுள்ளே அனுமதிப்பார். இவ்விதழில் மனித உரிமை தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியைக் குறிப்பிட்டு மனித உரிமைகள் பற்றிய தனது சிறு குறிப்புகளைத் தந்திருக்கின்றார்.    வாழ்வாதரத்துக்குத் தேவையான சகலதும் மனிதனது உரிமைகள்தான். இவ்வுரிமைகள் மீறப்படும் போதுதான் மனித அழிவுகளும் உயிரிழப்புகளிலும் சொத்தழிப்புகளும் ஏற்படுகின்றன. உரிமைகளையும் கடமைகளையும் சரிவரப் புரிந்து நடுநிலையுடன் செயற்படும்போதுதான் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற கருத்துப்பட தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.     (மேலும்)   05.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

அலரி மாளிகையின் முன்னால் படம் பிடித்துக் கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

அலரி மாளிகையின் முன்னால் படம் பிடித்துக் கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    இன்று பகல் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.     தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் வெள்ளவத்தை பிரதேசத்தில் தங்கியிருக்ககூடியவர் என்று தெரிய வந்துள்ளது.     அவர் சட்ட ரீதியான முறையிலேயே நாட்டில் தங்கியிருந்துள்ளார். சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

__________________________________________________________________________________________________________________________________ ___

7 நாடுகளுக்கு விசா மறுப்பு: கோர்ட்டு தடை உத்தரவை நிராகரித்தார், டிரம்ப்

7 நாடுகளுக்கு அமெரிக்கா விசா மறுத்ததை கோர்ட்டு தடை செய்துள்ளது. இதை டிரம்ப் நிராகரித்தார்.    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றதுமுதல் தனது நிர்trumpவாக உத்தரவுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளுக்கு 3 மாத காலம் விசா வழங்குவதை மறுத்து பிறப்பித்த உத்தரவு, உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.    இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்குகள் தாக்கலாகி வருகின்றன. அப்படி சியாட்டில் மத்திய கோர்ட்டில் தாக்கலான வழக்கை நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் விசாரித்து, டிரம்ப் உத்தரவுக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதித்தார். இதை டிரம்ப் நிராகரித்தார்.து தொடர்பாக டிரம்ப் கடுமையாக சாடி டுவிட்டரில் நேற்று இரண்டு கருத்துகள் வெளியிட்டார்.அதில் ஒன்றில், “பாதுகாப்பு காரணங்களையொட்டி, யார் நாட்டுக்குள் வருவது, வெளியே செல்வது என சொல்ல முடியாத நிலை வந்துவிட்டால், அது பெரும் சிக்கலானது” என கூறி உள்ளார்.   (மேலும்)   05.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று முற்பகல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.freedom     ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர தினத்திற்கான தேசிய நிகழ்வுகள் நடைபெற்றன.   இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முப்படைத்தளபதிகள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.    (மேலும்)   05.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

வாசுதேவவின் அடிப்படை உரிமை மீறல் மனு 13ல் விசாரணை


இரண்டு சீன நிறுவனங்களுடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தாக்கல்vasudeva nanayakkara செய்த மனு இம்மாதம் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.   இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பரசீலனைக்கு எடுக்கப்பட்டது. குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் ஒப்புதலை இன்னும் பெறவில்லை என்பதால் அதற்கு சட்டவலு இல்லை. எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி உத்தரவிடவேண்டுமென மனுதாரர் தனது மனுவில் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.அதேநேரம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2012ம் ஆண்டு கைச்சாத்திட்டப்பட்டதாகவும் மனுதாரர் அந்த உண்மையை தனது மனுவில் குறிப்பிடாமல் மறைத்திருப்பதாகவும் இலங்கை துறைமுக அதிகாரச சபை சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய் ராஜரட்ணம் தெரிவித்தார்.     (மேலும்)   05.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

நீலன்,சுமந்திரன் மற்றும் தமிழ் மக்களுக்கான துரோகத்தனமான ஆபத்துகள்

                                                  தரிஷா பஸ்தியான்ஸ்

“அமிர்தலிங்கம் ஒரு துரோகி என அழைக்கப்பட்டார் மற்றும் கொல்லப்பட்டார்.Neelan_Tiruchelvam நீலன் திருச்செல்வம் ஒரு துரோகி என அழைக்கப்பட்டார் மற்றும் கொல்லப்பட்டார். 30 வருடங்களுக்கு மேலாக நாம் இந்த மனிதர்கள் அனைவரையும் இழந்திருக்கிறோம். மற்றும் அவர்களைக் கொன்றதின் பின்னர் நாங்கள் என்னத்தை அடைந்தோம்? ஆகவே சுமந்திரனை நீங்கள் இப்போது துரோகி என அழைக்கிறீர்கள் மற்றும் என்னையும் நீங்கள் கொல்லலாம். அதன் பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்?”    -ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒக்ரோபர் 2016ல் வவுனியாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது    18 வருடங்களுக்கு முன்பு எல்.ரீ.ரீ.ஈ கலாநிதி. நீலன் திருச்செல்வத்தை கொல்வது என்று தீர்மானித்தபோது, அதன் தெரிவாக இருந்த ஆயுதம் அதன் உயர்மட்ட  கரும்புலிகள் அமைப்பில் இருந்து இழுக்கப்பட்ட ஒரு தற்கொலைக் குண்டுதாரியாக இருந்தது.  இந்தப் பிரிவு பிரிவினைவாத குழுவுக்குள் மதிப்புக்குரிய ஒன்று, வாழ்விலோ மற்றும் மரணத்திலோ புலிகளினால் வழங்கப்படும் உயர்ந்தபட்ச கௌரவத்துக்குரியது. எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மேதாவித்தனம் தனது கெரில்லா போராளிகள் இடையே ஒரு தியாக கலாச்சாரத்தை ஊக்குவித்ததில்தான் அடங்கியுள்ளது.    (மேலும்)   04.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

முன்னாள் போராளிகள் அச்சமடைய தேவையில்லை

டக்ளஸ் தேவானந்தா

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக முன்னாள் போராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.   douglas deva  உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பொது செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய என்.கே.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  உங்களது நியாயங்களை நான் நிச்சயம் பாதுகாப்பதுடன் உங்களது வாழ்வியலில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கி தருவேன்.   நேற்று தினம் நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,    நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சிலர் படுகொலை செய்ய முயற்சித்ததாகவும், இதில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பு பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.. குறித்த செய்திகளால் தமது எதிர்காலம் குறித்து அச்சமடைந்த சூழ்நிலையில் வாழ்ந்து வரும் முன்னாள் புலி போராளிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.   (மேலும்)   04.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

அரிசி விலை குறைக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அரிசி விலை தொடர்பாக அசௌகரியத்திற்கும் உள்ளாகும் பொதுமக்களுக்கு நிவாரriceணம் வழங்கும் நோக்கில் குறைக்கப்பட்ட அரிசி விலைகளை இதுவரை வர்த்தகர்கள் அமுல்படுத்தவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.   எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டு வர்த்தகர்கள் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.   எதிர்வரும் வாரத்திற்குள் 65 ரூபா தொடக்கம் 70 ரூபாவரையான விலையில் நாட்டரிசி கிலோவொன்று விற்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.   ச.தோ.ச விற்பனை நிலையங்களில் நாட்டரிசி கிலோவொன்று 76 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.   எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த சலுகையை பொதுமக்களிடம் பெற்றுக்கொடுப்பது வர்த்தகர்களின் கடமை என அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

கேப்பாப்பிலவு மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் புதுக்குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் இன்று காலை முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும், புதுக்குடிப்பு மத்திய பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது வீடுகளையும் காணிகளையும் விடுவிக்கக் கோரியும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

__________________________________________________________________________________________________________________________________ ___

டெனீஸ்வரனின் கொடும்பாவி எரிப்பு  : வுனியா இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை உத்தியோகத்தர்கள் சாகும்வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது வடமாகாண போக்குவரத்து அமைச்சdenniswaranர் பா.டெனீஸ்வரனின் கொடும்பாவியும் எரியூட்டப்பட்டுள்ளது.   இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் கடந்த 40 ஆண்டுகளாக வவுனியா நகர மத்தியிலிருந்து சேவையாற்றிய பேருந்து தரிப்பிடத்தினையே தமக்கு வழங்க வேண்டும் எனவும், தாம் புதிதாக அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு செல்லமாட்டோம் எனவும் தெரிவித்து இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்குள் சேவைப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் இன்று (03) சாலைக்கு முன்பாக கொட்டகை அமைத்து சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதேவேளை, வட மாகாணத்திலுள்ள அனைத்து சாலை ஊழியர்களும் இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக வட மாகாணசாலைகளில் இருந்து வருகை தந்த ஊழியர்கள் சிலரும் இவர்களுடன் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதாதைகளை தாங்கியுள்ள போராட்டக்காரர்கள் அவரின் கொடும்பாவி ஒன்றையும் காட்சிப்படுத்தியிருந்ததுடன் அதன் பின்னர் அதனை எரியூட்டினர்.   தாம் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டபோதிலும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தமது பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறியவில்லை எனவும் எந்த சாலைக்கும் அவர் நேரடியாக வந்து பார்வையிடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.   டெனிஸ்வரனே சட்டம் தெரியாதா, நீயா சட்டத்தரணி, எமது பஸ் நிலையம் எமக்கு வேண்டும், வட மாகாண போக்குவரத்து அமைச்சரே நீர் அமைச்சரா தனியார் பேருந்து சங்க தலைவரா, பஸ் நிலையம் இல்லாதவர்களுக்கு பஸ் நிலையத்தினை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

 ________________________________________________________________________________

டொனால்டு டிரம்பிற்கு எதிர்ப்பு 40 சதவீதமாக அதிகரித்துள்ளது கருத்து கணிப்பில் தகவல்

35 சதவீதம் பேர் கடந்த வாரம் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அது தற்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறதுtrump-5    அமெரிக்காவின் 45 வது அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று உள்ளார். இவர் பொறுப்பேற்று 14 நாட்களை கடந்துள்ள நிலையில், அவரின் செயல்பாடுகள் பலருக்கும் அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.    இதனால் ஜனாதிபதியான பின்பும் டிரம்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் அமெரிக்காவிற்கு யார் அதிபராக வரவேண்டும் என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.    இதற்கு காரணம் டிரம்ப் மீது எழுந்துள்ள அதிரடி குற்றச்சாட்டுக்கள். அண்மையில் கூட 500,000 மேலானோர் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை டிரம்ப் மீது எழுப்பினர். இது டிரம்பிற்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை டிரம்ப் குறைவாகவே பெற்றிருந்தார்.      (மேலும்)   04.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

 மருத்துவ மாணவர்களின் போராட்டம் எதனால் தோற்றுப்போனது ?

-யதார்த்தன் –

இனி நாங்கள் ஊடகங்களில் போலி மருத்துவர் , போலி மருந்து , போலி வைத்திய சாலை போன்ற சொற்களைக்கேள்விப்படப்போகின்றோம். சினிமாக்களில் வருவதைப்போல  வயிற்றுக்குள்yatharthan கத்தியையோ , மணிக்கூட்டையோ வைத்து தைக்கும் சுவாரஸமான செய்திகள் அதிகரிக்கப்போகின்றன.  இதுவரை தென்னாசியாவின் தரமான மருத்துவ சேவை நிலவும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மருத்துவ சேவைகளின் கட்டிறுக்கமும் தரமும் மிக்க செயற்பாடுகளில் தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய முதலாளித்துவ மருத்துவர்களின் உற்பத்திக்கூடங்களுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனநாயக சோசலிசகுடியரசின் நீதித்துறை அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது இதனை இன்னொரு வகையில் சொன்னால் தரமற்ற மருத்துவத்தின் இடைவருகைக்கு எதிராக போராடிய இலங்கை மருத்துவ உலகம் தனது போராட்டத்தில் தோற்றுப்போயுள்ளது.   ஒரு நிஜமான மக்கள் போராட்டம் என்பது  சின்ன அசைவினைக்கூட ஏற்படுத்தாமல் எப்போதும் தோற்றுப்போகாது , அது குழாயில் தண்ணீர் வரவில்லை என்பதில் தொடங்கி பெரும்  விடுதலைப்போராட்டம் வரை பொருந்தும், அசலான ஒரு மக்கள் போராட்டத்திற்கு கண்முன்னே உருத்திரளும் வெற்றியென்பது கிடைக்காமல் போகலாம்  (மேலும்)   03.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

வேலைவாய்ப்பின்மை: இன்றைய இளைஞர்களுக்கான வழிதான் எது?

       கருணாகரன்

“இருபது வயதுப் பையன். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான். இப்பிடியே அவனை விட்டு வjobிடமுடியாது. எங்காவது அவனுக்கொரு வேலை எடுத்துக் கொடுக்க முடியுமா?” என்று கேட்கிறாள் தோழி ஒருத்தி. அவளுடைய பொறுப்புணர்வை மதிக்கிறேன். ஆகவே, நிச்சயமாக உதவத்தான் வேண்டும்.   இந்த வயதில் ஒன்றில் படிக்க வேணும். அல்லது எங்காவது, ஏதாவது தொழில் ஒன்றைப் பழகி விட வேணும். இல்லையென்றால், எதிர்காலம் இருளாகி விடும். வேலை எதுவும் இல்லாமல் வயதுப் பையன்கள் வீட்டிலிருக்க முடியாது. வீட்டில் இருக்க முடியாதென்றால் தெருவிலே சுற்றுவார்கள். தெருவில் சுற்றத்தொடங்கினால், வீடு தேடி வந்து கதவைத்திறந்து கதிரையில் உட்கார்ந்து கொள்ளும் வம்பு.    கவே எப்படியாவது ஒரு வேலையைக் கண்டு பிடித்து, ஆளைப் பொருத்தி விடுவது அவசியம். ஆனால், வேலை என்ன நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடக்கூடிய கடைச்சரக்கா என்ன? அல்லது நானென்ன ஐந்தாறு கொம்பனிகளை நடத்திக்கொண்டிருக்கிற டொனால்ட்ஸா? இல்லாவிட்டால், நாட்டின் பென்னாம் பெரிய நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருக்கிற கறுப்புக் கண்ணாடி போட்ட முதலையா?   (மேலும்)   03.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கATLAS Logo01ம் 

 AUSTRALIAN TAMIL LITERARY & ARTS SOCIETY     

  அனைத்துலக பெண்கள் தின விழா  2017
11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில்
 PRESTON  CITY HALL, GOWER STREET, PRESTON, VIC 3072
  கண்காட்சி -  கருத்தரங்கு - பட்டிமன்றம்
 மெல்லிசை அரங்கு - நடனஅரங்கு
  அனுமதி இலவசம்
  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மின்னஞ்சல்:          atlas25012016@gmail.com
இணையத்தளம்:         www.atlasonline.org

__________________________________________________________________________________________________ ____

இது-
ஒரு சிரியச் சிறு பூவின் கதை!

-எஸ். ஹமீத்.

கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமkos.2ியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.  ''என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!'' இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது. அவளது பெயர் கோஸ்யாசி .மம்மூன் காலித் நாஸிர் என்பது அவளது தந்தையின் பெயர். அவருக்கு  இருபத்தி ஏழு வயது. சிரியாவின் இட்லிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சிரிய நாட்டின் அரச  படைகளினால் வீசப்பட்ட இரசாயனக் கொத்துக் குண்டுகளினால் தன் இரு கண்களையும் தனது இரண்டு கால்களையும், வலது கையின் பல விரல்களையும்  இழந்திருந்தார். உடல் முழுவதும் எரிகாயங்கள். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குச் சென்றுவிட்டார்.  (மேலும்)   03.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.kumar1   முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.   இதனையடுத்து, கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.  எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் எந்த சட்ட சிக்கல்களோ அல்லது தொந்தரவுகளோ இன்றி இலங்கைக்கு வந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்காக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.  (மேலும்)   03.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

கேப்பாப்பிலவு மக்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   பிலக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமkepapilavuான காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   இந்த பகுதியில் விமானப்படை வசமுள்ள 83 பேருக்கான காணியை விடுவிப்பதற்கு நேற்று முன்தினம் (31) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.  இந்த விவகாரம் தொடர்பாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.   விமானப்படை முகாம் அமைந்துள்ள காணி வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானதெனவும், உரிய அனுமதியுடனேயே அந்தப் பகுதியில் முகாம் இயங்கி வருவதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.   காணி தொடர்பில் மக்களுக்குப் பிரச்சினைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக அவற்றிற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளதாகவும் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன மேலும் குறிப்பிட்டார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

நாளை வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

நாளைய தினம் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.  நாளை காலை 08 மணிமுதல் 12 மணி வரை 4 மணித்தியாலங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.   சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

__________________________________________________________________________________________________________________________________ ___

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபரின் பிணை மனு நிராகரிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.   வித்தியாவின் கொலை வழக்கின் பத்தாம் இலக்க சந்தேகநபரின் பிணை மனு மீதான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.    கொலை நடைபெற்ற ஏழு மாதங்களின் பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கும் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.   எனினும், வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்து பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.   யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த பிணை மனுவை இன்று நிராகரித்துள்ளார்.    இதேவேளை, மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய 11 சந்தேகநபர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.    அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

__________________________________________________________________________________________________________________________________ ___

மஹிந்தவுக்கு சம்பந்தன் பகிரங்க அழைப்பு:  நிரந்தர தீர்வுக்கான பயணத்தில் இணையுமாறு வேண்டுகோள்

பிரிவினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைக் கைவிட்டு தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மோடு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எsampantha- rajapakshaன எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தார்.   அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரிக்க முடியாத ஐக்கிய நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், பிரிவினைக்காகச் செயற்படாமல் எம்மோடு சேர்ந்து செயற்படுவது முக்கியமாகிறது என்றும் தெரிவித்தார்.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அழைப்பை விடுத்தார்.       (மேலும்)   02.02.2017

__________________________________________________________________________________________________________________________________ ___

ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்!

பல்லவி ஐயர்

வட கிழக்கு ஆசியா எப்போதும் ராணுவரீதியாகக் கொதிநிலைக்கு உள்ளாகும் பகsilaiுதி. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. எப்படிச் செயல்படும் என்று எதிர்பார்க்கவே முடியாத வட கொரியா, ஏவுகணைகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இவற்றின் மத்தியில்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுமிக்கு எழுப்பப்பட்ட வெண்கலச் சிலை ஜப்பான் - தென் கொரியா இடையில் பூசலை உண்டாக்கியிருக்கிறது. தென் கொரியாவின் பூசன் நகரில், ஜப்பானியத் தூதரகத்துக்கு எதிரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய அந்தச் சிலை. இரண்டாவது உலகப் போர் காலத்தில் ஜப்பானியப் போர் வீரர்களுக்காகப் பாலியல் அடிமைகளாகக் கட்டாயப்படுத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்ட தென் கொரிய இளம் பெண்களின் நினைவாக வைக்கப்பட்ட சிலை அது என்பதுதான் பூசலுக்கான காரணம். கொரியாவிலிருந்து மட்டுமல்லாமல், சீனத்திலிருந்தும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும்கூட இளம் மகளிர் இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டு அக்காலத்தில் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.       (மேலும்)   02.02.2017_7

dantv