Theneehead-1

Vol: 14                                                                                                                                                13.03.2017

நடிப்புச் சுதேசிகள்

கருணாகரன்

தற்போது தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதங்களை எழுப்பியிருப்பது, இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வழங்க வேண்டும் எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைTNA MPSப்பு கோரிய விவகாரம். இதைவிட வேறு சில விசயங்களும் உண்டு. ஆனால், இதுவே முதல்நிலையில் உள்ள விவகாரமாகும்.   இந்தக் குற்றச்சாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக உரத்த தொனியில் முன்வைத்திருக்கிறது. தமிழ் ஊடக வெளியும் சீறிக் கொண்டேயிருக்கிறது. இணையத்தளங்கள் கூட்டமைப்பைக் கிழித்துத் தோரணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. முகப்புத்தகங்களைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. அவை நெருப்பாக எரிந்து கொண்டிருக்கின்றன. இதில் முதலாம் நிலைக்  குற்றவாளியாக்கப்பட்டிருப்பவர் சுமந்திரன். இரண்டாவது, மூன்றாவது நிலைக் குற்றவாளிகள் சம்மந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர். ஏனையோர் அடுத்த வரிசையில் இருப்பவர்கள்.ஆனால், பொதுப்பார்வையில் ஒட்டமொத்தமாகக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தவறென்றே கருதப்படுகிறது. தனிப்பட்ட சிலரின் நலன்களுக்காக வரலாற்றுத் துரோகத்தைக் கூட்டமைப்பு இழைக்கிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறது.    (மேலும்) 12.03..2017

____________________________________________________________________________________________________ __________

அரசியலுக்குள் ஒரு கருணா உதயமாகி உள்ளதுடன் ஸ்ரீலங்காவின் எதிர்காலம்

                                     இஃப்ஹ}ம் நிஸாம்

கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனின் சமீபத்தைய நகர்வான தமிழர் ஐக்கிய சுதந்திர மkaruna2ுன்னணி என்கிற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை சில அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பாராட்டியுள்ளார்கள். கருணா அம்மான் சொல்வதின்படி, புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதின் நோக்கம் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விதவைகள் மற்றும் போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகள் செய்வது என்பனாகும். இந்த கட்சி கிழக்கு - மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் அதில் வாழும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தும்.   எனினும் சமூகத்தின் சில பகுதியினர், கருணா அம்மான் போன்ற நபர்கள் ஜனநாயக நடைமுறைக்கு மாறாக வேலை செய்தவர்கள் மற்றும் குறிப்பாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருந்தவர்கள் அதனால் இவர்கள் அரசியல் கட்சியின் அங்கமாக இருக்கக் கூடாது என நம்புகிறார்கள்.    கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன், ஒரு உயர்மட்ட இராணுவ தளபதியாகவும் ஒரு சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஆகவும் இருந்தவர்.  (மேலும்) 12.03..2017

____________________________________________________________________________________________________ __________

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற அவகாசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடு

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கடும் நிபநvavuniya tna meeting்தனையுடன் கால அவகாசம் வழங்க வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எஃப் கட்சி இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை என தெரிவித்திருக்கின்றது.   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபைகளின் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.   இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பது குறித்து நீண்ட நேரம் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு இறுதியில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அந்தத் தீர்மானம் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.     (மேலும்) 12.03..2017

____________________________________________________________________________________________________ __________

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மை நிலையை தெரிய வேண்டிய காலம் கனிந்துள்ளது.

வீ.ஆனந்தசங்கரி       

நான் பழையவற்றை கிளறுகிறேன் என எவரும் என்மீது குற்றஞ் சுமத்தமாட்டீர்கள். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்தத்தை பற்றியும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு sangary4காண்பதற்காக கட்சிக்கு அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் வரிசை கிரமமாக கடந்தகால சம்பவங்களை சரியாக பதிய வேண்டிய புனிதமான கடமை என்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி;, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பற்றிய விடயங்களின் எல்லைக்குள் என்னை வரையறுத்துக்கொள்வேன். இன்றைய தலைமுறையினர் எமது கடந்தகாலத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்தும் பூரணமாக தெரியாமலும் இருப்பதால் எனது முயற்சி பெரிதாக பாராட்டப்படுமென எண்ணுகிறேன். ஏனெனில் இது உண்மை சரித்திரம். சரித்திரத்தை பல கோணங்களிலும் ஆராயும் பக்குவத்தை கொண்டவனல்ல நான். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆரம்பகால உறுப்பினர் என்பதால் அவற்றினதும் அவற்றின் தலைவர்கள் பற்றிய வரலாற்றை கூறக்கூடிய தகுதிபெற்ற தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவன். அதுமட்டுமல்ல தற்போது இயங்குகின்ற இலங்கை தமிழரசு கட்சிக்கும், அதற்குப் பதிலாக தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டுச்சென்ற பெருந்தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழரசு கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை.  (மேலும்) 12.03..2017

____________________________________________________________________________________________________ __________

கருணாவின் புதிய கட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவkaruna officeர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   இன்று காலை மட்டக்களப்பு, கல்லடி, புதிய கல்முனை வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.   முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உபதலைவரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.    இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.    இதன்போது விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கட்சி தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யாத நிலையிலேயே தமிழர்களுக்கான புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக இங்கு உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________________ __________

கேப்பாப்பிலவில் இருவர் உண்ணாவிரதம்: நில விடுவிப்புப் போராட்டம் தீர்வின்றித் தொடர்கிறது

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்தில் இன்று இkeppapilavu-5ருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், கேப்பாப்பிலவு மக்களின் நில விடுவிப்புப் போராட்டம் தீர்வின்றித் தொடர்கின்றது.படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தின் பதினொராவது நாள் இன்றாகும்.சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களின் 128 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை, கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.பல வருடங்களாக குறித்த பகுதியில் வசித்து வரும் தமக்கான காணி உரிமத்தை வழங்க வேண்டும் என்பதே பன்னங்கண்டி மக்களின் கோரிக்கையாகும்.

____________________________________________________________________________________________________ __________

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.amithsha   மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.    (மேலும்) 12.03..2017

____________________________________________________________________________________________________ __________

காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்; இருவர் கைது

காத்தான்குடியில் நேற்று (10.3.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.   தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் (10.3.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெறவிருந்த நிலையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.   இந்த மோதல் சம்பவத்தில் வாள்வெட்டு மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் இரண்டு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்துள்ளதாகவும், அதில் வாள்வெட்டுக்கு இழக்கான ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்வீச்சினால் காயமடைந்த இருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் தெரிய வருகின்றது.   இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர்.   சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

____________________________________________________________________________________________________ __________

ஜெனிவா என்ற பெருந்திருவிழா ஒரு பம்மாத்து அரங்கு

           கருணாகரன்

“போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல், அரசியலமைப்புத்திருத்தம் போன்றவற்றில் இலங்கைக்குக் கால அவகாசத்தைக் கொடுப்பதற்காகச் சுமந்திரன் கடுமையாகப் பாடுபடுகிறார். இதற்காக ஜெனீவாவுக்குப்போய், அgenewaங்கே 13 நாடுகளின் முக்கிஸ்தர்களிடம் சுமந்திரன் இதைக் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்” என்று சுமந்திரன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார் கஜேந்திரகுமார். “இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் சுமந்திரனுக்கு ஏன் இந்தளவு கரிசனை?” என்று கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் கஜேந்திரகுமார்.   கஜேந்திரகுமார் இப்படிச் சொல்லும்போது சுமந்திரனின் மீது அநேகமான தமிழர்களுக்குக் கொதிப்பும் கோபமும் எழக்கூடும். அப்படி எழுந்துமிருக்கிறது. பலரும் சுமந்திரனையும் சம்மந்தனையும் திட்டித்தீர்க்கிறார்கள். ஜெனிவாவில் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது சனங்களின் கோபம் வரவரக் கூடி வருகிறது. அதிருப்தி பெருத்துக் கொண்டிருக்கிறது. கஜேந்திரகுமாரின் நோக்கமும் அதுதான். குழம்பிய குட்டையில் தனக்கான தங்க மீனைப்பிடித்துக் கொள்வது. இதனால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமை மீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்  தீவிரமாகச் செயற்படுகிறார். அதற்குத் தோதாக  இந்த மாதிரி விசயங்கள் கஜேந்திரகுமாருக்குப் பயன்படுகின்றன.   (மேலும்) 11.03..2017

____________________________________________________________________________________________________ __________

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்; அரசு ஆராய்வு

தலைநகர் கொழும்பில் நாளாந்தம் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்கFamers-protestள் காரணமாக நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டங்கள். ஊர்வலங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை இவ்வாறான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை வாரத்தில் ஒரு நாளில் மட்டும் நடத்தக்கூடியதான செயல் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களால் தலைநகரினதும், மக்களதும் இயல்புநிலை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கடந்த பல மாதங்களில் தினசரி ஏதாவது பிரச்சினையை முன்வைத்து நாட்டின் பொருளாதார கேந்திர நிலையமான கொழும்பு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றன.   (மேலும்) 11.03..2017

____________________________________________________________________________________________________ __________

தனி ஒரு சிகரட் விற்பனை செய்வதற்கான தடை வரவேற்புக்குறியது

தனி சிகரட் விற்பனை செய்வதை தடைசெய்வதற்கான சட்டம் இயற்றுவதற்கு அதிகcigaratteாரிகள் கவனம் செலுத்தி இருப்பதை வரவேற்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. b  அது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை விரைவாக தாக்கல் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்.  இலங்கையினுள் சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான 10 யோசனைகள் அடங்கிய பட்டியல் ஒன்று தமது சங்கத்தினால் இதற்கு 06 மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.  சிகரட்டுக்களை ஒவ்வொன்றாக அல்லது குறைந்தளவு சிகரட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட பெட்டிகளை விற்பனை செய்வது தடைசெய்யப்பட வேண்டும் என்பது அந்த யோசனைப் பட்டியலில் முதலில் கூறப்பட்டிந்த முக்கியமான விடயமாகும் என்று அவர் மேலும் கூறினார்.அதன்படி இப்போதாவது இதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருப்பது சந்தோஷப்பட வேண்டிய விடயமாகும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் கூறியுள்ளார்.

____________________________________________________________________________________________________ __________

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 77 பேர் இன்று விடுதலை சindian fishersெய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது. அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 இந்திய மீனவர்களும் மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விடுவிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது. அவர்களை இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரிடம் விரையில் ஒப்படைத்து, அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________________ __________

ஜெர்மனி ரயில் நிலையத்தில் கோடரித் தாக்குதல்: 9 பேர் காயம்

ஜெர்மனியின் டஸல்டார்ஃப் நகர ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட கோடரித் தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்.  வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த அந்த சம்பவம் தொடர்பாக கொசோவோவைச் சேர்ந்த ஃபத்மீர் என்கிற 36 வயது நபர் கைது செய்யப்பட்டார்.  டுஸல்டாஃப் நகரின் பிரதான ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் இருந்து இறங்கிய அவர் தன்னிடமிருந்த கோடரியால் பயணிகளை திடீரென தாக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிரடிப் போலீஸார் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். தப்பியோட முயன்ற அந்த நபரை போலீஸார் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மிகுந்த பதற்ற நிலையில் இருப்பது தெரிய வந்தது. இது போன்ற செயலில் ஈடுபட்டால், போலீஸார் தன்னை சுட்டுக் கொல்வார்கள் என்று எதிர்பார்த்ததாக அவர் விசாரணையின்போது தெரிவித்தார்.

____________________________________________________________________________________________________ __________

வறட்சியில் இலங்கை; இலட்சக்கணக்கானவர்கள் பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடையை விட சுமார் 5 இலட்சத்து 45,000 மெட்ரிக் தொன் குறைவடைந்திருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.   பெரும்போகத்தில் சுமார் 19 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்ய எதிர்பார்த்த போதிலும் வறட்சி காரணமாக அது 13 இலட்சம் மெட்ரிக் தொன்களாக குறைவடையலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.   இதேவேளை எதிரில் ஏற்பட வாய்ப்புள்ள உணவு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்க தயாராகுமாறு ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.   எவ்வாறாயினும் இந்தோனேசியா, இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு அரிசி உதவி கிடைக்கப் பெறுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார்.   இதுதவிர நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக 03 இலட்சத்து 20,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 12 இலட்சம் பேர் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.   நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________________ __________

அவுஸ்திரேலியா - மெல்பனில்   அனைத்துலக பெண்கள் தின விழா

பெண்களின் ஆளுமைப்பண்புகள் தொடர்பான நிகழ்ச்சிகளின் அரங்குகள்

சனிக்கிழமை 11 ஆம் திகதி (11-03-2017)

அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக  கலை இலக்கியப்பணிகளை முன்னெடுத்துவரATLAS Logo01ும்   தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான அனைத்துலக பெண்கள் தின விழா நாளை சனிக்கிழமை 11 ஆம் திகதி (11-03-2017) மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.    மெல்பனில் பல வருடங்களாக கலை, இலக்கியம், கல்வி, மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் ஏழு மூத்த பெண்மணிகள் இவ்விழாவை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள்.   கண்காட்சி, கருத்தரங்கு, மெல்லிசை அரங்கு, நடன அரங்கு, பட்டி மன்றம், ஆவணப்படக்காட்சி என்பனவற்றுடன் சிங்கப்பூரிலிருந்து வருகை தரும் எழுத்தாளர் திருமதி கௌரி அனந்தனின் சிறப்புச்சொற்பொழிவும் இடம்பெறும்.  அனுமதி இலவசம்.         (மேலும்) 10.03..2017

____________________________________________________________________________________________________ __________

பிரபாகரனின் வரலாற்றுத் தவறுகள்

                                          புறூஸ் தமிழ்சன்

முதலாவதாக சிறுபான்மை தமிழர்களுக்கும் மற்றும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் பல தசாப்தங்களாக ஒரு இனப்பிரச்சினை இருந்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை உpraba1ள்ளது. சேர். பொன் இராமநாதன் மற்றும் சேர்.பொன் அருணாச்சலம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் சிறுபான்மை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த திரு,ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் திரு.செல்வநாயகம் போன்ற மற்றவர்கள் தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காக அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ஆனால் பெரும்பான்மை சிங்களவர்கள் அவர்களை எப்படி நடத்தினார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் பல வழிகளில் தமிழர்கள் இன ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உள்ளானார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை மற்றம் அரசியல் நிலமைகள் வன்முறைகளை தெரிவு செய்வதற்கு தமிழர்களைக் கட்டாயப் படுத்தின. மற்ற எல்லா நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததின் பின்பே தமிழர்கள் வன்முறை நடவடிக்கைகளைப் பற்றிப் பிடித்தார்கள் என்பதை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நியாயமாகக் கருதலாம்.   (மேலும்) 10.03..2017

____________________________________________________________________________________________________ __________

தமிழ்ப்புத்தாண்டு-காலக்கணித மரபு

முனைவர் பால. சிவகடாட்சம்

உலகிலேயே ஆண்டுக்கு மூன்றுமுறை புத்தாண்டு கொண்டாடப் பின்வாங்காதவர்கள் தமிழ் மக்கள். இதனால்தான் எமது புத்தாண்டு எது என்பதை விவாதிப்பதிலேயே பல ஆண்டுகளைச் செலவிட நேரிடுகின்றது. இன்று தமvaniyalிழ்மக்கள் உட்பட உலகெங்கும் வாழும் மக்களில் மிகப்பெரும்பாலானோர் இன மத மொழி பேதமின்றிக் கொண்டாடும் புத்தாண்டு தினமாக ஜனவரி முதலாம் தியதியை அடையாளம் காட்டுவது கிரகேரியன் கலண்டர். கிரகேரியன் கலண்டர் என்பது கிறீத்துவுக்குப்பின் 1582 இல் போப் கிரகரி என்பவரால் மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பழைய கிறீத்தவ கலண்டராகும்.  கிறீத்தவ மரபின்படி ஈஸ்ரர் பண்டிகை வசந்தகாலச் சமவிராக் காலத்தை ஒட்டி வரவேண்டிய ஒன்று.  ஐரோப்பாவில் வழக்கில் இருந்து வந்த ஜூலியன் கலண்டரின்படி பலநூறு ஆண்டுகளாக மார்ச் 21 ஆம் தியதியே வசந்த காலத்து சமவிராக் காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இதன்படி மார்ச் 21 ஆம் திகதியை அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ரர் பண்டிகை தினமாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.  பூமியின் அச்சு 72 வருடங்களுக்கு 1 டிகிரி என்ற அளவில் சாய்ந்து வருவது விஞ்ஞானம் அறியத்தரும் உண்மை. இதன் விளைவாக இரவும் பகலும் சமமாக இருக்கும் ‘ஈக்கியூனெக்ஸ்’ (equinox) எனப்படும் சமவிராக்காலம் கலண்டரில் பின்னோக்கி நகருகின்றது.    (மேலும்) 10.03..2017

____________________________________________________________________________________________________ __________

ஸ்மார்ட்போன்கள்- ஸ்மார்ட் டிவி மூலம் வேவு பார்க்கும் அமெரிக்க உளவு நிறுவனங்கள்

ஸ்மார்ட்போன்கள்- ஸ்மார்ட் டிவி மூலம் வேவு பார்க்கும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் சிஐஏ, எப்பிஐ ஆகியவCIAை உளவு பார்க்கின்றன  சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான "ஸ்மார்ட் டிவி'க்களில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவு செய்துள்ளதன் மூலம், அந்த சாதனம் வழியாக வீடுகளில் நடைபெறும் உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ ஒட்டுக் கேட்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.   ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் கில்லாடியான இணையதளம் விக்கிலீக்ஸ். இந்த தளமானது தற்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய தகவல்கள் மற்றும் கோப்புகளை வெளியிட்டுள்ளது. வால்ட் 7 என்ற பெயரில், அமெரிக்க உளவு அமைப்பின் 8,761 கோப்புகளை வெளியிட்டுள்ளது. இனியும் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. மக்களின் மொபைல்போன், ஸ்மார்ட் டிவி, கணினி ஆகியவற்றை எந்தெந்த வழிகளில் எல்லாம் சி.ஐ.ஏ உளவு பார்க்கிறது என்பதனை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.    (மேலும்) 10.03..2017

____________________________________________________________________________________________________ __________

கொழும்பு பல்கலையின் கலைப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

​கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருடத்திற்கான கலைப் பிரிவு மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் குறித்த பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் லக்ஷ்மன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  நேற்று இரவு ​கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்தனர்.  இவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து, விடுதியில் இருந்த கலைப் பிரிவு மாணவர்களை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உப வேந்தர் கூறியுள்ளார்.  இதேவேளை இந்த மோதலுக்கு காரணம் மாணவர்களுக்கான தேர்தல் எனத் தெரியவந்துள்ளது.  எதுஎவ்வாறு இருப்பினும், கலைப்பிரிவின் முதலாம் வருடம் மற்றும் ஏனைய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறும் என, அப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

____________________________________________________________________________________________________ __________

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள்  இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன்  மேற்கொள்ளப்பட வேண்டும்!

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்களdouglas devantha், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெற்காசிய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், உலகளாவிய ரீதியில் தனியார்த்துறை மூலமான மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், மிக அதிகளவிலானவை இந்தியாவிலேயே உள்ளன. அந்த வகையில், 190 அரச மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில் 222 தனியார்த்துறை மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் செயற்பட்டு வருகின்றன.     (மேலும்) 10.03..2017

____________________________________________________________________________________________________ __________

பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்க்கொண்டு வரும் கவனயீர்ப்பு: போராட்டம் நியchandrakumar32017-1ாயமானது  அதனை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.   இன்று வியாழக்கிழமை ஆறாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிவபுரம், நாதன் குடியிருப்பு, உழவனூர் மக்களின் பிரச்சினைகளையும் உரிய மட்டங்களுக்கு எடுத்துச் சென்று  பல அழுத்தங்களை கொடுத்து காணி அமைச்சின் உயரதிகாரிகளை கிளிநொச்சி அழைத்து வந்து மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடச் செய்து  பிரச்சினைகளை தீர்த்து வைத்தோம், தற்போது மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் வீட்டுத்திட்ங்கள்  அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.    (மேலும்) 10.03..2017

____________________________________________________________________________________________________ __________

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எவ்வாறு வெளிநாடு சென்றிருக்க முடியும்?

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எவ்வாறு வெளிநாடு சென்றிருக்க முடியும் என காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாய் ஓமந்தையில் இன்று கேள்வி எழுப்பினார்.   காணாமலாக்கப்பட்ட உறவுகளprotest7ைத் தேடித்தருமாறு வலியுறுத்தி இன்றும் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.   கிளிநொச்சி மாவட்டத்தில் 18 ஆவது நாளாகத் தொடர்கிறது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம்.    இருப்பினும், இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டனர்.  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 14 ஆவது நாள் இன்றாகும்.    முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். திருகோணமலை ஆளுநர் அலுவலகம் முன்பாக ஐந்தாவது நாளாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மூதூர் பாரதிபுரம் சிவன்கோவில் வளாகத்தில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4 ஆவது நாளாகத் தொடர்கிறது.

____________________________________________________________________________________________________ __________

இலங்கை மீனவர்கள் காவலில் வைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.   அவர்களை 23-ம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.    இதேவேளை, இலங்கை மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ‘இந்திய கடற்படையினர் உங்களைத் தாக்கினார்களா?’ என கேட்டார். இதற்கு பதிலளித்த இலங்கை மீனவர்கள், “எங்களை கைது செய்த அதிகாரிகள் எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினார்கள்’ என்று கூறினர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.   இதையடுத்து பேசிய நீதிபதி, இந்திய அதிகாரிகள் கண்ணியமாக நடந்துகொள்ளும்போது, இலங்கை அதிகாரிகள் மட்டும் ஏன் தமிழக மீனவர்களை சுடுகிறார்கள்? என கேள்வி எழுப்பினார். அத்துடன், இந்திய அதிகாரிகளின் கண்ணியம் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அந்த மீனவர்களுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

____________________________________________________________________________________________________ __________

சமூகத்தின் மனச்சாட்சி எழுத்தாளர்களே

அம்ரிதா ஏயெம் நேர்காணல்

-    கருணாகரன்

'விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று' என்ற சிறுகதைத் தொகுதியின் 1815மூலம் புதிய கதைப்பிராந்தியத்தில்; கவனமாகியவர் அம்ரிதா ஏயெம். தாவரங்களும் உயிரினங்களும் நிலமும் கடலும் காடும் மனிதர்களும் இணைந்த சூழல் தொகுதியில் நிகழும் சவால்களே வாழ்க்கை என்றுணர்த்தும் கதைகள் அம்ரிதா ஏயெம்மினுடையவை. அம்ரிதா ஏயெம் படித்ததும் பணியாற்றுவதும் விலங்கியல்துறை. இதனாலேற்படும் அறிவையும் அனுபவங்களையும் புதிய சிந்தனைகளையும் தன்னுடைய கதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதுகிறார் அம்ரிதா. இதுவரையில் பத்து நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இரண்டு புத்தகங்கள் அச்சில் உள்ளன. இதில் எட்டு நூல்கள் சூழலியல் மற்றும் சூழலும் வாழ்வும் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றியவை. மனிதர்கள் மீதான கரிசனையின் அளவுக்கு சூழலியலிலும் கவனத்தைக் கொண்டுள்ள அம்ரிதா ஏயெம், மொழிபெயர்ப்புச் செயற்பாட்டிலும் இயங்குகிறார். அவர் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தொகுப்பு அச்சில் உள்ளது. இன்னொரு நூல் இலக்கிய விமர்சனமும் பன்மைத்துவமும்.    (மேலும்) 09.03..2017

____________________________________________________________________________________________________ __________

கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்புப்போரட்டம்  எட்டாவது நாளாகவும் தொடரப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமதுகாணிகளKeppapulavu1ை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்புப்போரட்டம் எட்டாவது நாளாகவும் தொடரப்பட்டு வருகின்றது. யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்களாகியும் தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்த இடத்தில் தங்களை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற அனுமதிக்காதது தான், நல்லாட்சி அரசின் நல்லிணக்கமா? எனக்கேள்வி எழுப்புகின்றனர் கேப்பாப்புலவு மக்கள்.கோப்பாப்புலவான தங்களது சொந்த கிராமம் பற்றி போராட்டத்தில் ஈடுபடும் அக்கிராம மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.கேப்பாப்புலவு கிராமம் புலக்குடியிருப்பு சூரிபுரம் கேப்பாப்புலவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகும்.கேப்பாப்புலவு கிராமானது மிகவும் பழமைவாய்ந்த பூர்வீக விவசாயக் கிராமமாகவுள்ளதுடன் முன்னைய காலத்தில்  கேப்பை (குரக்கன்) பயிரிடப்படும் நிலமாக இருந்தமையால் இதற்கு கேப்பாப்புலவு எனப் பெயர் வந்துள்ளது.  (மேலும்) 09.03..2017

____________________________________________________________________________________________________ __________

இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு

இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் 302 மற்றும் 307 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.Dr._C._Sylendra_Babu_IPS    திங்கட்கிழமை இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் படகில் பிரிட்ஜோ, ஜெரோன், அந்தோனி, கிளிண்டஸ், சாம் பிரிட்ஜோ, ரிமோட்சன் ஆகிய 6 மீனவர்கள் இரவு 10.00 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.   அப்போது மீனவர்களின் படகை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பிரிட்ஜோ (21) என்ற மீனவர் குண்டடிபட்டு உயிரிழந்தார். மேலும் ஜெரோன் காயங்களுடன் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து படகிலிருந்த கிளிண்டஸ் என்பவர் மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் இலங்கை கடற்படையினர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குறித்து செவ்வாய்கிழமை புகார் அளித்தார் என தமிழக ஊடகமான தி ஹிந்து செய்து வௌியிட்டுள்ளது.      (மேலும்) 09.03..2017

____________________________________________________________________________________________________ __________

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்man chain protestகப்பட்டு வருகின்றது.   வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.    யாழ். மாவட்ட செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது, வேலையற்ற பட்டதாரிகளின் அவலங்களை வெளிக்காட்டும் வீதி நாடகமொன்றும் இடம்பெற்றது.இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டனர்.அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆளுநருடன் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டது.   (மேலும்) 09.03..2017

____________________________________________________________________________________________________ __________

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைpillaiyanது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.   சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வை.எம் இசதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போதே தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுதளிப்பதாக பிரதிவாதிகள் நீதிபதி முன்னிலையில் அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.    (மேலும்) 09.03..2017

____________________________________________________________________________________________________ __________

ட்விட்டரில் சர்ச்சை கருத்து: சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர்கள் கோரிக்கை

மீனவர் பிரிட்ஜோவை இலங்கைக் கடற்படை படுகொலை செய்தது தொடர்பாக ட்விட்டரswamyில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ''தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார்.இது குறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவப் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது, ''தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரணிமணியன் சுவாமி தான் என்பதை ஏற்கெனவே அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 140 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.     (மேலும்) 09.03..2017

____________________________________________________________________________________________________ __________

தினேஸ் குணவர்த்தனவுக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்ளத் தடை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ஒரு வாரங்களுக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.   விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்றத்திdineshல் சுயாதீன உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என, சபாநாயகர் தெரிவித்ததை அடுத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அமிளிதுமிளியில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டமையால், அவரை வௌியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். எதுஎவ்வாறு இருப்பினும், தினேஸ் குணவர்த்தன அதனை பொருட்படுத்தாது தொடர்ந்தும் அமிளியில் ஈடுபட்டதால் இரண்டாவது முறையாக சபாநாயகர் அவரை வௌியேற உத்தரவு பிறப்பித்தார். பின்னர் பாராளுமன்றத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.இந்தநிலையில், தான் வௌியேற வேண்டுமாயின் சபையில் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டும் என தினேஸ் குணவர்த்தன கூறியதோடு, தொடர்ந்தும் அவர் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டதாக தெரிகிறது.

____________________________________________________________________________________________________ __________

யாழில் கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.    ன்று காலை நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர் கடலில் பொதியொன்று மிதந்து வருவதை அவதானித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக நயீனாதீவில் உள்ள பொலிஸ் காவலரனுக்கு அவர்கள் தகவலளித்துள்ளனர்.   பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட போது, அதனுள் கேரள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.   இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு அதனை எடுத்துச் சென்று அளவிட்டு பார்த்தபோது, அதன் நிறை 52 கிலோகிராமாக காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.   எனினும் கேரள கஞ்சாவின் மொத்த நிறை குறைவாகவே இருக்கும் என கூறிய பொலிஸார், தற்போது கடல் நீரில் நனைத்திருப்பதால் அது கூடிய நிறையாக உள்ளதாகவும், தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

____________________________________________________________________________________________________ __________

எல்.ரீ.ரீ.ஈ யின் முடிவு ஒரு இரத்தக்களறியாக இருக்கும் என்று அன்ரன் பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார்

                                           பிர்சன்னா சண்முகதாஸ

பாலசிங்கத்தின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், பிரபாகரன் மற்றும் பாலசிங்கம் ஆகியோர் சுமுகமான Prasannaஉறவைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டது. தனது வாழ்வின் கடைசி வாரத்தின்போது பாலசிங்கம் எரிக் சொல்ஹைம் அவர்களைச் சந்தித்தார் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ வடக்கு மற்றும் கிழக்கை இழந்துவிடும் என்று அவர் சொல்ஹைமிடம் சொன்னார். சொல்ஹைம் சொல்வதின்படி, பிரபாகரனால் பாலசிங்கம் ஏமாற்றம் அடைந்துள்ளார் மற்றும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு பகுதிக் காரணம் பிரபாகரன்தான் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார். பிரபாகரனின் செயற்பாடுகளினால் தமிழர்களின் முடிவு இரத்தக்களரியாக இருக்கும் என்று பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார், உண்மையில் அதுதான் நடந்தது. அரசியல் ரீதியான நடைமுறைக்கு ஏற்றபடி செயலாற்றும் பாலசிங்கம், டிபிஎஸ் ஜெயராஜூடனான ஒரு சம்பாஷணையின்போது தீர்க்கதரிசிபோல ஒன்றை எதிர்வு கூறினார், சீனா, பாகிஸ்தான் மற்றும் “இந்தியா என்பன ராஜபக்ஸ ஆட்சிக்கு பின்துணை வழங்குவதால் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்படும்”.; பாலசிங்கத்தின் சொந்த வார்த்தைகளின்படி “பிரபாகரன் ஒரு போர்த் தலைவன் அவருக்கு அரசியல் கருத்துகளில் உண்மையான ஆர்வம் கிடையாது” என்று அவர் சொல்லியுள்ளார். தனது செயல்களால் ஏற்படும் அரசியல் விளைவுகளைப் பற்றிய புரிந்துணர்வு கிட்டத்தட்ட பூச்சியமாக உள்ள ஒரு மனிதர்தான் பிரபாகரன். பிரபாகரனின் அரசியல் புரிந்துணர்வின் குறைவுதான் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவிதிக்கு முடிவு கட்டியது. பல சந்தர்ப்பங்களில் இது வெளிப்படையாகியுள்ளது. மிகவும் வெளிப்படையான ஒரு விடயம்தான், ராஜிவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் மேற்கொண்ட அரசியல் முடிவு.    (மேலும்) 08.03..2017

______________________________________________________________________________________________________________

உற்பத்திசார் பொருளாதாரக் கொள்கையே தேவை

   - கருணாகரன்

வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் றோட்டிலுமாக நிறைந்து போயிருjoblessக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப் படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள். அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.   மட்டக்களப்பிலும்யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதிலும் பட்டதாரிகளுக்கு வேலையில்லாப் பிரச்சினை உண்டு. அதனால் பட்டதாரிகள் எல்லா இடங்களிலும்  வேலைகோரும் போராட்டங்களை அவ்வப்போது நடத்திக் கொண்டிருக்கின்றனர். “வேலை தா” என்று சத்தமிட்டவாறு தெருக்களில் ஊர்வலம் போகும் பட்டதாரிகளை அவ்வப்போது நாம் பார்க்க முடியும்.    (மேலும்) 08.03..2017

____________________________________________________________________________________________________ __________

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி------

ஞானசக்தி ஸ்ரீதரன்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் நிகழும் இடங்களாக எமது பிரதேசங்கள் மாறியுள்ளன.Gnasakthi பெண்கள் சிறார்களுக்கான சமூக  பாதுகாப்பு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது. ஆளரவமற்றுப்போகும் ஊர்கள் என்பன  பெண்களுக்கெதிரான வன்முறைகளின் களமாக மாறுகின்றன.  கைக்கோடரி வாள் வீச்சு கோஸ்டிகள் பொதுவாக சமூகத்திற்கு மாத்திமல்ல குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை இலக்காக கொண்டவை. இலங்கையின் சமூக வாழ்வை ஜனநாயக மயப்படுத்துவதே 2015 ஜனவரி 8 இல்  ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பிரதான வாக்குறுதியாக இருந்தது.  இந்த பிராதான வாக்குறுதி கருதியே அனைத்து இன சமூக மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தார்கள்.  தற்போது அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஆனால்் இன சமூகங்களின் சமத்துவமான ஐக்கியம் ஒடுக்கப்பட்ட சமுகப் பிரவினர் பால்நிலை சமத்துவம் சுற்றாடல் பற்றிய அக்கறைகள் எந்தளவு தூரம் அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சமகால உலகுடன் வேகமாக நடைபோட எம்மால் முடியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள் நில ஆக்கிரமிப்பு- பாலியல் வன்முறைகள் படுகொலைகள் தொடர்பான போராட்டங்களில் பெண்களே முன்நிலை வகிக்கிறார்கள்.       (மேலும்) 08.03..2017

____________________________________________________________________________________________________ __________

இன்று சமூகத்திற்கும் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை. அது தனியே வேலைக்கு ஆட்களைத் தயார்செய்துகொண்டிருக்கிறது.

சயந்தன் நேர்காணல் –

நேர்கண்டவர் - கருணாகரன்

அரசியற் சிந்தனைகளை முழுநேரமாகச் செயற்படுத்திவரும், ஓர் இளைய தலைமுறையை முழு இலங்கையிலும் காணுகிறேன். சமூகம் அவர்களைத் தாங்கிக்கொண்டால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து இயங்க முடியும். sayanthan-1 அந்த நிலைமை தோன்றும்போதே அரசியல் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் மாறும். இன்று நம்மிடையில் உள்ள அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அரசியலை பொழுதுபோக்காகச் செய்பவர்கள், தங்களுடைய ஓய்வு காலத்தில் செய்பவர்கள், பகுதி நேரமாகச் செய்பவர்கள், அல்லது தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்பவர்கள். இவர்களுடைய தலைமையில் இயல்பாகவே அரசியலின் தார்மீக அறம் இல்லாமற் போய்விடுகிறது.   எங்களிடையே ஒரு சாமானிய மனிதன், கட்சியொன்றின் கடைசி உறுப்பினராகி, படிப்படியாக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று, தலைவனாகும் சந்தர்ப்பமேதாவது உள்ளதா.. ? ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா..? பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா..? கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன..? அதிலேதாவது ஜனநாயக வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா..? இவற்றுக்கெல்லாம் ஆம் என்ற பதில் கிடைக்கும்போதே, கிராமிய மட்டங்களிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாகும் வாய்ப்புத் தோன்றும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் உணரத்தொடங்கும். அதுவரை தமிழ் அரசியலின் தலைமைத்துவம் அதன் சரியான அர்த்தத்தில் வெற்றிடமாகவே இருக்கும்.    (மேலும்) 08.03..2017

____________________________________________________________________________________________________ __________

வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த மாணவர்கள்

வேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கையினை நிறைவுசெய்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்graduate protest-battiடன.  மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நியாயமான கோரிக்கையினை பூர்த்திசெய்ய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர். பட்டதாரிகளின் தொழில் உரிமையினை உறுதிசெய், பட்டதாரிகள் பட்டம்பெற்றது வீதியில் சத்தியாக்கிரகம் செய்வதற்கா, நல்லாட்சி என்பது நஞ்சிஊட்டும் ஆட்சியா, ஆட்சி மாற்றத்தினால் பட்டதாரிகளுக்கு கிடைத்து என்ன, நடுவீதியில் பட்டதாரிகள் மாளிகையில் அரசியல்வாதிகள் போன்ற பதாகைகளையும் ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.   (மேலும்) 08.03..2017

____________________________________________________________________________________________________ __________

வட  கொரியா-மலேஷியா: போர் மூளுமா?

-எஸ். ஹமீத்.

வட கொரியாவுக்கும் மலேசியாவிற்குமிடையில் போர் ஒன்று மூளும் அபாயத்தை அவ்வளவு இலகுவில் மறுதலித்துவிட முடியாத நிலைமைகளே தற்போது காணப்படுகின்றன.nordkorea   வட கொரியாவின் சர்வாதிகார  அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நம் என்பவர் அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் கொலைக்கு உலக நாடுகளினால் தடை செய்யப்பட VX  என்ற இரசாயனம் பயன்படுத்தப்பட்டிருந்தது. சர்வதேசத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இக்கொலையைத் தொடர்ந்து, மலேஷிய போலீசார் சந்தேகத்திற்குரியவர்கள் சிலருடன் மேலும் இரண்டு பெண்களைக் கைது செய்திருந்தனர். இவ்விரு பெண்களில் ஒருவர் வியட்நாமைக் சேர்ந்த தேயன் தி ஹூயோங் . மற்றவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்த சிட்டி அய்ஷ்யா. ஆயினும் தாங்கள் அப்பாவிகள் என்றும் வேடிக்கையான ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் பங்கு கொள்வதாக எண்ணியே வேறு சிலரால் தமக்குத் தரப்பட்ட  குறிப்பிட்ட இரசாயனத்தைத் தாங்கள் கிம் ஜாங் நாமின் மீது பூசியதாகவும் அப்பெண்கள் கூறியுள்ளனர். என்றாலும் கூட, அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால்  மரண தண்டனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மலேஷிய அட்டர்னி ஜெனரல் முகமது அபான்டி அலி தெரிவித்திருக்கிறார்.    (மேலும்) 08.03..2017

____________________________________________________________________________________________________ __________

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என கடிதம்: மூவர் கையொப்பமிடவில்லை என்கிறார் சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகsumanthiran9ாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் தற்போது அதிகம்பேசப்படுகிறது.   எவ்வாறாயினும், இந்தக் கடிதத்தில் கையொப்பமிடாத பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அடங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுக்கும் வகையில் அனுப்பப்பட்டிருந்த இந்தக் கடிதத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 11 பேர் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.ஶ்ரீதரன், எஸ்.யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், ஜீ.ஶ்ரீநேசன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா, எஸ்.சிவமோகன், எஸ்.வியாழேந்திரன், கே.கோடீஸ்வரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்கள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.   (மேலும்) 08.03..2017

____________________________________________________________________________________________________ __________

இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயதான பிரிட்சோ உயிரிழந்தார் என, செய்திகள் வௌியாகியுள்ளது.   இதனை கண்டித்து மே 17 இயக்கம் சார்பாக மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெற்றது.    போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை திலகர் திடல் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான பொலிசார் கைதுசெய்துள்ளனர். இதேவேளை, இலங்கை கடற்படை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தவில்லை என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.  இந்திய மீனவர்கள் சிலரை இலக்காக கொண்டு இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறிய வள்ளங்களிலிருந்த கடற்படையினரால் நேற்று (6) இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும் என்று கூறி இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________________ __________

வரிச் சுமைகளிலிருந்து சாதாரண மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!

நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது பாரிய வீழ்ச்சி நிலையை நோக்கிச் செனdouglas deva்று கொண்டிருக்கின்ற தருணத்தில், பல்வேறு வரி முறைமைகள் குறித்து நாம் இந்தச் சபையிலே தொடர்ந்து வாதப் பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறானதொரு நிலையில், எமது கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்படுகின்ற கணக்காய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஊடகங்கள் வெளியிட்டு வருகின்ற விமர்சனங்களை – ஆய்வுகளைப் பாரக்கின்றபோது, இங்கு குறிப்பிடப்படுகின்ற வரிகளை அறவிடக்கூடிய அரச நிறுவனங்கள், அந்தந்த வரிகளை உரிய முறையில் அறவிட்டுக் கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவா என்ற சந்தேகமே எழுகின்றது. ஊடகங்கள் கூறுவதெல்லாம் உண்மையல்ல என்று எவரேனும் கூறினாலும், ஊடகங்களில் வெளிவரும் இவ்வாறான தகவல்களே எமது மக்களுக்கு நேரிடையாகச் செல்லக்கூடிய தகவல்களாக அமைகின்றன. எனவே, இவற்றை ஏற்றுக் கொள்கின்ற தரப்பினர் அதிகமானவர்களாகவும், மறுக்கின்ற தரப்பினர் மிகக் குறைந்த எண்ணிக்கையினராகவும் இருப்பதால், ஊடகங்கள் வெளியிடுகின்ற தகவல்கள் தொடர்பில் நாம் உதாசீனமாக இருந்துவிட முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்       (மேலும்) 08.03..2017

____________________________________________________________________________________________________ __________

அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்: மருத்துவ அறிக்கை தகவல்

- பி.பி.சி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,மயக்க நிலையிலேயே இருந்தார் என்று தமிழக அரசால் வjeya2ெளியிடப்பட்ட புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார்.புது தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கு 5 முறை சென்னை வந்து சிகிச்சை அளித்தனர். அது தொடர்பான விவரங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசிடம் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   (மேலும்) 07.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

யாழ்ப்பாணம் நெல்லியடி குழு பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதilanchchelianலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் இரண்டு எதிரிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திங்களன்று தீர்ப்பளித்துள்ளார்.  இந்த வழக்கில் மூன்றாம் எதிரி ஆரம்பத்தில் இருந்தே கைதாகாமல் தலைமறைவாக இருந்ததையடுத்து, அவர் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று 18 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனுடன் ஒதுக்குப் புறமாக இருந்த வேளையில் அங்கு வந்த மூன்று பேர் காதலனைத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர்.    (மேலும்) 07.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

கிளிநொச்சியில் கர்ப்பிணிகள், சிறுவர்கள் அடங்கலாக 37 பேருக்கு பன்றிச் காய்ச்சல்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H!N!H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கடந்த 10.02.2017 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் கடந்த 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பேர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 25 கர்ப்பிணிகளும், 9 சிறுவர்களும் அடங்கலாக 37 பேர் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளமை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இவர்கள் பொது இடங்களில் ஒரே நேரத்தில் சந்தித்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உதாரணமாக ஒரு கிராமத்தில் இரு கர்பிணிகள் மரணவீடு ஒன்றில் சந்தித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மூலம் மற்றையவரும் பன்றிக் காய்ச்சல் தொற்றிற்கு இலக்காகியுள்ளார்   (மேலும்) 07.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

அதிபர்களுக்கு இராணுவக் கல்லூரியில் பயிற்சி வழங்க எதிர்ப்பு

பாடசாலை அதிபர்கள் பயிற்சிச் செயலமர்வுக்காக இராணுவக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.  தென் மாகாண கல்வித் திணைக்களத்தால் எதிர்வரும் 22ம் திகதி இந்த பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன் நிமித்தம் மாத்தறை வலயத்திலுள்ள அனைத்து அதிபர்களும் ஊவா குடாஓய கமாண்டோ ரெஜிமேன் பயிற்சிக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மாத்தறை உதவி வலயக் கல்விப் பணிப்பாளரின் கையெழுத்துடன் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், இந்த பயிற்சியில் அனைத்து அதிபர்களும் கலந்து கொள்வது கட்டாயம் என தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 ____________________________________________________________________________________________________ __________

விமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழுwimal-weerawansa-1ம்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜராகி, நேரடியாக வாக்குமூலம் அளித்தார்.அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே விமல் வீரவன்ச நேரடி வாக்குமூலம் அளித்துள்ளார்.பொது உடைமைகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக தாம் கைதுசெய்யப்பட்டு, கடந்த 54 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு காரணமான பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்தார்.நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் பதவியை தாம் பொறுப்பேற்ற பின்னர், அப்போதைய அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஆங்சு மாரசிங்கவே, தமது செயற்குழுவின் பயன்பாட்டிற்காக 11 வாகனங்களை வழங்கியிருந்தார் என்றும் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.     (மேலும்) 07.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

கொழும்பு குப்பை வேண்டாம்; வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

இன்று (06) காலை முதல், மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போரcolombo protestாட்டம் காரணமாக கொழும்பு – அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் காரணமாக பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறித்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பலர கலந்து கொண்டுள்ளனர்.இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஒருகொடவத்தை பழைய வீதிக்கு நுழையும் இடத்திலிருந்து வெல்லம்பிட்டிய சந்தி வரையான கொழும்பு - அவிசாவளை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகனசாரதிகள், முடியுமான வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 ____________________________________________________________________________________________________ __________

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கி சூட்டில் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் டிட்டோ (வயது 22) என்பவர் உயிரிழந்துள்ளார்.  4 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை அடுத்து மீன்பிடிக்க சென்றிருந்த தமிழக மீனவர்கள் ஆபத்தான நிலையில் கரைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.  உயிரிழந்த மீனவர் உடலுடன் ராமேஸ்வரம் நோக்கி அவர்கள் வந்து கொண்டுள்ளனர்.

 ____________________________________________________________________________________________________ __________

தமிழ்த்தேசியகூட்டமைப்பு:  எழுந்துவரும் அதிருப்திகளும் எழுச்சியுறும் மக்கள் போராட்டங்களும்

     கருணாகரன்

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை, மொழி, மத சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடுமையான நிபந்தனைsampanthan-tnaகளுடன் கூடிய கால அவகாசமொன்றை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் தெரிவித்திருக்கின்றனர். அதாவது கூட்டமைப்பின் உயர் பீடம் இதைத் தெரிவித்துள்ளது.   ஆனால், “இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை. எந்த வகையிலும் இலங்கை அரசுக்குக் கால அவகாசத்தை வழங்க முடியாது. ஆகவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டிய தன்னுடைய பணியைச் செய்தே ஆகவேணும். இதற்கு இனியும் கால அவகாசத்தை வழங்க முடியாது ” என்று கூட்டமைப்பின் எட்டுப்பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியிருக்கின்றனர்.இந்தக்கடிதத்தில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், யோகேஸ்வரன், சிறிதரன் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப்பேர் இந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்றால் அரைவாசிப்பேர் இலங்கை அரசுக்குக் கால அவகாசத்தை வழங்குவதற்கு எதிராக உள்ளனர்.    (மேலும்) 06.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

பிளவுபட்ட பாதுகாப்பு இயந்திரம் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினை எதிர்க்கும் முயற்சியினை பலவீனப் படுத்துகிறது

                                              டி.பி.எஸ்.ஜெயராஜ்

பகுதி - 2

பொன்னையா செல்வநாயகம் கஜீபன் என்கிற கோபி

கோபியின் உண்மைப் பெயர் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் என்பதாகும் இவருக்கு சுமார் 31 வயதிருக்கும். இவரது மற்றொரு புனைபெயர் காசியன் ஆகும். கோபி, கிளிநொச்சி மாவட்டtheiveeganம் பச்சிலைப்பள்ளி பிரிவில் உள்ள இயக்கச்சியை சேர்ந்தவர். இவரும் தனது ஆரம்ப பதின்ம வயதுகளில் எல்.ரீ.ரீ.ஈ யில் தானாகவே முன்வந்து சேர்ந்தவர் மற்றும் எல்.ரீ.ரீ.ஈயின் கிட்டு ஆட்டிலறி பிரிவில் சேவையாற்றினார்.பின்னர் இவர் பொட்டு அம்மான் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றினார். இவர் நீண்ட காலமாக கொழும்பில் நிலை கொண்டிருந்து பிரதானமாக உளவு பார்ப்பது மற்றும் தளவாட விநியோக போக்குவரத்து என்பனவற்றில் ஈடுபட்டிருந்தார். அவர் வெகு சரளமாக சிங்களம் பேசக்கூடியவர். இவர் திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சர்மிளா பாலமுருகன் என்பவரை மணமுடித்து இருந்தார். யுத்தம் முடிவடைந்தபோது இருவரும் வன்னியில் இருந்தார்கள். கோபி அப்போது கர்ப்பமுற்றிருந்த அவரது மனைவியுடன் ஒரு பொதுமகனைப் போல நடித்து செட்டிகுளத்தில் இருந்த உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான ஆனந்தகுமாரசுவாமி முகாமில் தங்கியிருந்தார்.        (மேலும்) 06.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு  போராட்டமும் தொடர்கிறதுpannankandiiiii4

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்களும் இன்று ஞாயிறு இரண்டாவது நாளாக தொடர்கிறது. 1990 ஆம் ஆண்டு தொடக்கம்  இன்று வரை குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையிலும், தங்களுக்கு காணி அனுமதி பத்திரம், மற்றும் நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன  கிடைக்கவில்லை என்றும்  மீள்குடியேற்றம் தொடக்கம் தற்போது வரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள் ,அதிகாரிகள் ஆகியோரிடம் எழுத்து மூலமும் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை  எனக் குறிப்பிடும்  பொது மக்கள் தங்களுக்கு உறுதியாக தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

 ____________________________________________________________________________________________________ __________

மீனவர் விவகாரம்: அமைச்சருடன் வாக்குவாதம்

தமிழகத்தின் நாகை மாவட்டம் அக்கறைப்பேட்டையை சேர்ந்த மீனவர்களை கடந்த மார்ச் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து நிவாரணம் வழங்க அமைச்சர் மணியன் அக்கரைப்பேட்டை சென்றார். இது பற்றி தகவலறிந்த மீனவர்கள் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வராத நீங்கள் தற்போது வந்துள்ளது ஏன்? வசதியுடன் வாழ்ந்த நாங்கள் தற்போது அனைத்தையும் இழந்துவிட்டு கஷ்டப்படும் நிலையில் உள்ளோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த மணியன், படகுகளை மீட்கும் அதிகாரம் மாநில அரசிடம் (தமிழக) இல்லை. இந்திய மத்திய அரசிடம் தான் உள்ளது. படகை மீட்பது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய அரசு இதுவரை உறுதியான பதிலை அளிக்க மறுக்கிறது. மத்திய அரசு உறுதியான பதிலை அளித்ததும், மீனவர்கள் குடும்பங்களுக்கு தேவையான உதவி செய்யப்படும் என்றார் என தினமலர் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

 ____________________________________________________________________________________________________ __________

அமெரிக்காவில் சீக்கியர் மீது துப்பாக்கிச் சூடு: இந்தியர்கள் மீதான 3-ஆவது தாக்குதல் சம்பவம்

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஏற்கெனவே இந்தியர்கள் 2 பேர் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.theep rai     அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கென்டில் வசிப்பவர் தீப் ராய் (39). அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி சீக்கியர் ஆவார். கென்டில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளிக்கிழமையன்று அவர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே முகமூடி அணிந்து கொண்டு வந்த மர்ம நபர், தீப் ராயிடம் ஏதோ பேசியுள்ளார்.இதையடுத்து இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முகமூடி நபர், தீப் ராயை பார்த்து "உனது நாட்டுக்கு திரும்பிச் செல்' என்று முழக்கமிட்டபடி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதில் காயமடைந்த தீப் ராய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்      (மேலும்) 06.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

உண்ணாவிரதம் இருந்த ஈழ அகதிகள் வைத்தியசாலையில்

தஞ்சக் கோரிக்கை விடுத்த 350ற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள், இந்தோனேசியாவின் தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக அங்குள்ள அகதிகள் போருக்கு பிறகும் இலங்கையில் தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக படகு வழியே இந்தோனேசியா வந்தவர்கள் என சொல்லப்படுகின்றது. இதில் பலருக்கு தஞ்சக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கே திருப்பியனுப்பப்படும் சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது. அப்படியான நிலையில், இந்தோனேசியாவின் மெடன் பகுதியில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் நான்கு குடும்பத்தினர் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர்.  அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்றாம் தரப்பு நாடுகளில் குடியமர்த்தப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ____________________________________________________________________________________________________ __________

பிளவுபட்ட பாதுகாப்பு இயந்திரம் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினை எதிர்க்கும் முயற்சியினை பலவீனப் படுத்துகிறது

                                              டி.பி.எஸ்.ஜெயராஜ்

பகுதி - 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பு(ரி.என்.ஏ) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான sumanthiran-2மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தொடர்பான வழக்கு இல. 85ஃ17,கடந்த பெப்ரவரி 27, 2017ல் கிளிநொச்சி நீதிமன்றில் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஐந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி (எல்.ரீ.ரீ.ஈ) உறுப்பினர்கள், பிரதான சந்தேக நபர்களாக காவல்துறை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ டி) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்கள். இந்த ஐந்து முன்னாள் புலிகளும் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்வதற்காக வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களால் தூண்டிவிடப்பட்டு திட்டமிடப்பட்ட சதியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப் பட்டார்கள்.ஆரம்பத்தில் ரி.ஐ டி உத்தியோகத்தர்கள், மிகவும் பிரபலம் வாய்ந்த நிலையில் உள்ள சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாக இருப்பவரும் மற்றும் ரி.என்.ஏ யின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மற்றும் அதேபோல இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக உள்ளவருமான திரு.சுமந்திரனுக்கு எதிராக தீட்டப்பட்ட கொலைச் சதித்திட்டம் பற்றிய விசாரணையில் முன்னேற்றங்கள் பற்றிய விபரங்களை ஒரு மேலதிக அறிக்கையாக நீதிமன்றில் சமர்ப்பித்தார்கள். சாராம்சத்தில் அந்த காவல்துறை அறிக்கை மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருந்தது.     (மேலும்) 05.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

ஐநா அறிக்கையை வரவேற்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு; விஷேட நீதிமன்றம் வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.TNA    தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.   அதேவேளை சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விஷேட நீதிமன்றத்தினூடாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பிலான அறிக்கை நேற்று மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசைனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.   இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பயணம் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   அதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான பரந்தளவிலான மூலோபாய வழிமுறை ஒன்று இல்லை என்றும் மனித உரிமைகள் ஆணையகம் கூறியுள்ளது.   (மேலும்) 05.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

கடத்தப்பட்ட 11 பேர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: கடற்படையைச் சேர்ந்த இருவருக்கு விளக்கமறியல்

2007 ஆம் ஆண்டில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையைச் சேர்ந்த இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் ஒருவர் 11 பேரைக் கடத்திச் சென்று, கப்பம் கோரி பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கடத்தப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வந்தது.இதன் அடிப்படையில், படை சிப்பாய் ஒருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.11 பேர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 ____________________________________________________________________________________________________ __________

ஆர்ப்பாட்டம் செய்து தவறில்லை. அதனைவிட பிரச்சினையை கலந்தாலோசித்து தீர்ப்பது சிறப்பானதாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பsrisena-3ேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார்.  யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.   இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் கிழமையிலேயே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய தீர்மானித்திருந்தேன்.   ஜனவரி நான்கு அல்லது 7 ஆம் திகதிகளியே இந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் சில காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய்விட்டது.எனினும் இரு மாதங்கள் கடந்து உங்களை சந்தித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.     (மேலும்) 05.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

கண்களை கறுப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை பதின்முன்றாவது நாளாக தclose eye protestொடர்கிறது. இன்று யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்களால் கண்களை கறுப்பு துணியால் கட்டியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எமது உறவுகளுக்கு இன்னும் பதிலளிக்காது இந்த அரசு பாராமுகமாக இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக கண்களை கறுப்பு துணியால் கட்டியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  காணாமல் போனவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும், இலங்கை அரசுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐநா கால அவகாசம் வழங்க கூடாது என்றும் காணாமல் காணாமல் போனவர்களின் உறவினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 ____________________________________________________________________________________________________ __________

தலைமையற்ற இந்தப் போராட்டங்கள் எங்கே போய் முடியும்?

ஜியா டொலன்டினா | தமிழில்: சாரி

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதலாகவே அவருக்கு எதிரான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் தொடங்கிவிட்டன. முதல் வார இறுதிக்குப் பிறகு பெண்கள் பேரணி சென்றார்கள். அமெரிக்காவில் குusa protestடியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து, விமான நிலையங்களிலும் பிற இடங்களிலும் எதிர்ப்பாளர்கள் குவிந்தனர். அடுத்து, யேமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடைகளை மூடிவிட்டு, புரூக்ளின் நகர பாரோ அரங்குக்கு வெளியே திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.   அடுத்து, பொது வேலைநிறுத்தம் நடந்தது. இப்போது பெண் பேரணியாளர்களின் ஆதரவில் மார்ச் 8-ல் இன்னொரு பொது வேலைநிறுத்தத்துக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இப்போது போராட்டங்கள் இல்லாத நாள் இல்லை என்று சொல்லும் அளவுக்குச் சூழல் உண்டாகியிருக்கிறது.இந்தப் போராட்டங்களில் சில புதிய போக்குகள் தென்படுகின்றன. நியூயார்க் நகரில் வாஷிங்டன் சதுக்கப் பூங்காவில் நடந்த போராட்டத்தில், ட்ரம்புக்கு போலியாக இறுதி ஊர்வலம் நடத்தினர் போராட்டக்காரர்கள். ட்ரம்ப் டவரில் ஓரினச் சேர்க்கையாளர் - மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்டோர் பங்கேற்ற போராட்டம் முத்தமிடும் போராட்டமாக நடந்தது.        (மேலும்) 05.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

ஜோர்டான் நாட்டில் ஒரே நாளில் 10 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 15 பேர் தூக்கில் போடப்பட்டனர்.

மரண தண்டனையை நிறுத்திய நாடு

அரபு நாடுகளில் ஒன்று ஜோர்டான். இந்த நாட்டில், ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி கடந்த 2005–ம் ஆண்டு மரண தண்டனைக்கு தடை விதித்து மன்னர் இரண்டாம் அப்துல்லா உத்தரவிட்டார். இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் மரjordanண தண்டனையை நிறுத்திய முதல் நாடு என்ற பெயர் அந்த நாட்டுக்கு கிடைத்தது. ஆனால் அந்த நாட்டு கோர்ட்டுகள் தொடர்ந்து கடுமையான குற்றங்கள் செய்த கிரிமினல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி வந்தது. ஆனால் அந்த தண்டனைகள் நிறைவேற்றப்படவில்லை. ஜோர்டானில் மரண தண்டனை நிறைவேற்றப்படாத காரணத்தால், கொடிய குற்றங்கள் பெருகி வருவதாக மக்கள் மத்தியில் கருத்து எழுந்தது. இதையடுத்து 2014–ம் ஆண்டு முதல் அங்கு மரண தண்டனைக்கான தடை விலகியது. அதே ஆண்டில் கொலை குற்றவாளிகள் 11 பேர் மரண தண்டனை விதித்து தூக்கில் போடப்பட்டனர். இது சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்துக்கு வழிவகுத்தது. ஆனாலும் ஜோர்டான் அதைக் கருத்தில் கொள்ளவில்லை.   
(மேலும்) 05.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

முறையான திட்டங்களும் சரியான பயணமும்

          கருணாகரன்

அவளுக்கு இரண்டு கால்களுமில்லை. வயது 29. இன்னும் திருமணமும் ஆகவில்லை. முன்பு போராளியாக இருந்தாள். யுத்தம் அவளுடைய கால்களைத் தின்றுவிட்டது. புனர்வாழ்வு முகாம்வரை சென்று மீண்டவளின் முன்னே புதிex ltteய வாழ்க்கைச் சவால்கள் நிற்கின்றன. அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்வதென்று அவளுக்குப் புரியவில்லை. கால்களும் கைகளும் உருப்படியாக இருப்பவர்களாலேயே வாழ்க்கையை எதிர்கொள்ளக்கடினமாக இருக்கும்போது கால்களில்லாதவளால் ஓரடி நகர முடியுமா?   அப்படியென்றால், அவளின் கதி என்ன? இதுதான் பெரிய கேள்வியே. இப்படிப் பலர் இந்த மாதிரியான  நிலைமையில், இந்த மாதிரியான கேள்விகளின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்து விட்டது. ஆனால், யுத்தம் உண்டாக்கிய பாதிப்பும் அது உருவாக்கிய கேள்விகளும் முடியவில்லை. அவையெல்லாம் பெரிய துயர்க்காடாக, அவலக்காடாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றுக்கான தீர்வைக் காணவில்லை என்றால், அது லட்சக்கணக்கானவர்களை உயிரைச் சப்பித்தின்று கொண்டேயிருக்கும். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.    (மேலும்) 04.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

இந்தியா, கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டது என்பதில் உண்மை இருக்கிறதா?

- யதீந்திரா

க்கு முன்னர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்தSampanthan-Jaishankar-01ிருந்தார். இதன்போது அவர் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஜெயசங்கர் அப்படி என்ன கூறினார்?  ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட்ட அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் கூட்டமைப்பின் கருத்துக்களை அறிந்துகொள்ளும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது. சந்திப்பின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்திடம் நாங்கள் என்ன கூற வேண்டும் என்பதை கூறுங்கள் என்பதே ஜெயசங்கரின் வேண்டுகோளாக இருந்தது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழமைபோல் பழைய கதைகளை பேசி நேரத்தை எடுத்துக்கொள்ள முற்பட்ட போது, ஒரு இடத்தில் ஜெயசங்கர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார், “உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விடயங்களை பேசுவதை விடுத்து, இப்போதைய விடயங்களுக்கு வாருங்கள்.” ஜெயசங்கரின் நோக்கம் தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதாகவே இருந்திருக்கிறது.       (மேலும்) 04.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி உதயமானது

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சexltte1ி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் என்ற பெயர் அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தலைவர் அன்பரசன் கூறினார்.  இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் அன்பரசன் மேலும் குறிப்பிடுகையில், கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி கொழும்புக்கு சென்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து இந்தக் கட்சியை பதிவு செய்ததாகவும், புனர்வாழ்வு பெற்ற 12,000 இற்கும் அதிகமான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சார்பாக ஜனநாயக ரீதியான அரசியல் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.   (மேலும்) 04.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள்: ஐ.நா.வின் வலியுறுத்தலை நிராகரித்து விட்டேன்

போர்க்குற்றம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகளையும் ஈடுபடுத்த வsrisenaேண்டும் என்ற ஐ.நா.வின் வலியுறுத்தலை துணிச்சலுடன் நிராகரித்து விட்டதாக இலங்கை ஜனாதிபதி் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார்.  இதுதொடர்பாக கொழும்பில் நடைபெற்ற சுதந்திரா கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சிறீசேனா பேசியதாவது:2 வாரங்களுக்கு முன்பு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பேசியபோது, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளையும் இலங்கை ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கடுத்த நாளே, அதை துணிச்சலுடன் நிராகரித்து விட்டேன்.இதன்மூலம், எனது முதுகெலும்பின் பலத்தை வெளிப்படுத்தினேன் என்றார் சிறீசேனா.இதனிடையே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தீர்மானத்தை செயல்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டனர்.   (மேலும்) 04.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பணி நியமனம் எப்போது: போராட்டங்கள் தொடர்கின்றன

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கக் கோரி கிழக்கு மgraduate-protest1ாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் 11 ஆவது நாளை எட்டியுள்ளது.  தமக்கான நியமனத்தை வழங்கும் வரையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற உறுதியுடன் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். 2012 மார்ச் 31 க்கு பின்னர் பட்டதாரிகளானவர்களுக்கு இதுவரையில் மத்திய மற்றும் மாகாண அரசுகள் நியமனங்களை வழங்காமல் இழுத்தடிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காரைத்தீவு சுகாதார அலுவலகத்திற்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, கிண்ணியா பகுதியில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளும் இன்று இரண்டாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈட்டுபட்டனர்.  கடந்த திங்கட்கிழமையிலிருந்து வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளும் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ____________________________________________________________________________________________________ __________

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 16 பேருக்கு வகுப்புத்தடை

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் முறையற்ற வகையில் நடந்துகொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 16 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (02) முதல் அமுலாகும் வகையில், மறு அறிவித்தல் வரை இந்த வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் கே.கனகசிங்கம் தெரிவித்தார். கடந்த செவ்வாய் அன்று மாலை சுமார் 6 மணித்தியாலங்கள் பல்கலைக்கழக ஊழியர்களையும் விரிவுரையாளர்களையும் வெளியேறவிடாது தடுத்து வைத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தை அடுத்து, திருகோணமலை வளாக ஊழியர்களும் விரிவுரையாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  சம்பவம் தொடர்பான முறைப்பாடுகளும் பணியாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கோரிக்கைகளும் உபவேந்தரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திருகோணமலை வளாக முதல்வர் குறிப்பிட்டார்.அதற்கமைய, தற்போது மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமையை அடுத்து விரிவுரையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ____________________________________________________________________________________________________ __________

நீடித்த சமாதானத்திற்கான இலங்கையின் பயணம் மந்தகதியில்


இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பயணம் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூறியுள்ளது. அதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான பரந்தளவிலான மூலோபாய வழிமுறை ஒன்று இல்லை என்றும் மனித உரிமைகள் ஆணையகம் கூறியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இன்றைய தினம் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசைனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பிலான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் சயிட் அல் ஹுசைன் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இன்று வௌியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,   (மேலும்) 04.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

புதுக்குடியிருப்பு முதற்கட்ட காணி விடுவிப்பு நாளை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகள் கட்டம்Rubavathi கட்டமாக விடுவிக்கப்படுவதுடன் நாளை முதற்கட்ட காணி விடுவிப்பு இடம்பெறும் என முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக் குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே நாளை முதல் இக்காணிகளை படிப்படியாக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நேற்று ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபரை தினகரன் சார்பில் சந்தித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-படையினர் வசமிருந்த முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்புலவு நிலக்குடியிருப்பு காணிகள் முழுவதுமாக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 42 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன் இதனை விமானப்படையினரே இதுவரை காலமும் தம்வசம் வைத்திருந்தனர்.   (மேலும்) 03.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

படித்தோம் சொல்கின்றோம்:

கானா பிரபா எழுதிய ' அது எங்கட காலம் ' நேற்றிருந்த  வீட்டினிலே நிலைத்திருக்கும் எங்கட காலம்

                                                                             முருகபூபதி

 மனிதவாழ்வில்  மூன்று  காலங்கள்  முக்கியமானவை.  இறந்த காலம், நிகழ்காலம்,  எதிர்காலம்.  இதுபற்றி  ஆரம்பப் பாடசாலையிலேயே சொல்லித் தந்துவிடுவார்கள்.athu engada kalam

இறந்த காலமானது, நிகழ்காலத்தில்  பின்தொடர்ந்து வந்து கணங்கள்தோறும்  நினைக்கத்தூண்டுவது.  அந்தக்கணங்களும்  கடந்துவிடும்போது  இறந்தகாலத்தில் மேலும் ஒரு அங்கம் இணைந்துவிடும்.   எதிர்காலம்  நிச்சயமற்றது. நினைப்பது ஒன்று நடப்பது வேறு ஒன்றாகவும் மாறிவிடும்.அதனால்தான்  இறந்தகாலமென்பது  ஒவ்வொருவர் வாழ்விலும் வசந்த காலமாகவோ -  வலிநிறைந்த காலமாகவோ - அடிக்கடி நினைத்துப் பார்க்கத்தூண்டும்  நனவிடை  தோய்தலுக்கு உகந்த பொற்காலமாகவோ மனதில் சாசுவதமாக  நீடித்து  நிலைத்துவிடுகிறது.   கானா. பிரபாவின் அது எங்கட காலம்  நூல் முழுமையாகவே இறந்த காலத்தை நனவிடைதோய்தலாக  சித்திரிக்கும் அழியாதகோலங்களாக  பதிவாகியிருக்கிறது.    அவுஸ்திரேலியாக் கண்டத்தின்  கங்காரு தேசத்தின்  அந்நிய சுவாத்தியத்தில்  கணினி யுகத்தில் புகலிடம்பெற்று வாழநேரிட்ட  பின்னரும்,    இலங்கையின்   வடபுலத்தில் அனைத்துத் தமிழ்ப்பாண்பாட்டுக்கோலங்களும்  குடியிருந்த   கிராமத்திலிருந்து வந்த  அவரிடத்தில்       பால்யகாலத்து நினைவுகள் அலையலையாக மோதிக்கொண்டிருக்கின்றன. " இறந்தகாலத்திற்கே  உரித்தான பலம்  நினைவாற்றல்தான்" என்பதை  இந்தநூலின் ஒவ்வொரு அங்கமும் சொல்லிக்கொண்டிருக்கிறது.   (மேலும்) 03.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

ஐ.நா. வாக்குறுதி: இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க தயார்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது உள்பட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமையான நிபந்தனைகளுடன் கூடுதல் கால அsumanthiran8வகாசம் அளிக்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில், இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒரு நீதி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இலங்கை அரசு உறுதியளித்திருந்தது. மேலும், இலங்கையில் வாழும் மொழி, மத சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 34-ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   (மேலும்) 03.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

காணிகளை விடுவிக்கக் ​கோரி சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்

இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் நேற்று (01) ஆரம்பித்த போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.சீனியாமோட்டை, சூரிபுரம், கprotest-4ேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 128 குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள சுமார் 530 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதேவேளை, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு இராணுவ முகாம் அமைந்துள்ள 19 ஏக்கர் நிலப்பரப்பு மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.இதில் முதற்கட்டமாக 7 ஏக்கர் காணியை எதிர்வரும் 4 ஆம் திகதி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 20 குடும்பங்கள் அன்றைய தினம் சொந்த இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் 28 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ____________________________________________________________________________________________________ __________

சயிடம் விவகாரம்: வௌியான தகவல்களில் உண்மையில்லை!

தனக்குத் தானே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வௌியான தகவலில் உண்மை இல்லை என, சயிடம் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.saitam2   அத்துடன், தான் அந்த துப்பாக்கி பிரயோகத்தை ஏற்பாடு செய்யவில்லை எனவும், தற்போது இந்த விடயம் குறித்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை தனக்குத் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.இதேவேளை, சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிஸார் இந்த விடயம் குறித்து தன்னிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் சமீர குறிப்பிட்டுள்ளார்.மேலும், அச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் தன்னை சிறந்த முறையில் நடத்தியதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   (மேலும்) 03.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு ஆட்கொணர்வு மனு: வழக்கு விசாரிக்கப்பட்டது

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எழிலன் உள்ளிட்டவர்களை முன்னிலைப்படுத்துமாறு தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட சரணடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரச தரப்பில் பிரதி சொலிஸிட்டர் நாயகம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

 ____________________________________________________________________________________________________ __________

பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை தீர்மானம்: பிரதமர் தெரசா மேவுக்குப் பின்னடைவு

ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் தேவை என்று அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் தீர்மானம் நிறைவேறியது.ஆளும் கட்சிUk Prime ministerக்கு மேலவையில் பெரும்பான்மை கிடையாது. இது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்குத் தனிப்பட்ட தோல்வி என்றாலும்கூட, அரசு கவிழும் அபாயம் இல்லை.  இது பிரதமர் தெரசா மேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.பிரெக்ஸிட் மசோதாவுக்கு நாடாளுமன்ற கீழவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், மேலவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படுவது வெறும் சடங்காக கருதப்பட்டது. இந்த நிலையில், மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ஐரோப்பியர் குடியேற்றம் தொடர்பாக மசோதாவில் முக்கியத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று 358 எம்.பி.க்களும், திருத்தம் தேவையில்லை என்று அரசுக்கு ஆதரவாக 256 பேரும் வாக்களித்தனர்.ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறினாலும், பிரிட்டனில் வசித்து வரும் பிற 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அது தொடர்பாக மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அதிக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.   (மேலும்) 03.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கியarjuna அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டதாவது, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு காணிகளை வழங்கிய அனைத்து மக்களிற்கும் சாதாரணத்தை நிலைநாட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும். காணிகளை வழங்கியதன் மூலமாக தம்முடைய இருப்பிடங்களை இழந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் பொருட்டு மற்றும் அம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் ரூபாய் 2 பில்லியன்கள் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்நிதியை உரிய முறையில் பயன்படுத்துமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கினார     (மேலும்) 03.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

கெப்பாபிலவை புரிந்துகொள்ளும் முயற்சி: எதிர்ப்பு, ஒற்றுமை மற்றும் அரசியல்

                                              மகேந்திரன் திருவரங்கன்

கடந்த இருபத்தியெட்டு நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு ம ற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்தபெண்கள் Kep.protest-1மற்றும் குழந்தைகள் உட்பட்ட தமிழ்மக்கள், அவர்களின் தாயகம், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையினரின் சர்வாதிகார ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருப்பதனை எதிர்த்துப்போராட்டம் நடாத்திவருகிறார்கள். உள்நாட்டுயுத்தத்தினால் இடம்பெயர்ந்திருந்த இந்தமக்கள்தங்கள்சொந்தநிலங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்புவதற்கு விரும்புகிறார்கள். தாங்கள் பலகாலங்களாக வாழ்ந்தஇடங்களுக்கு மீண்டும் திரும்பிச்சென்று அங்கு மீள்குடியேறுவதுதான் இந்தமக்களின் விருப்பமாக இருக்கிறது. அதுஅவர்களின ்உரிமையும்கூட. அரசாங்கமும், இராணுவமும் அவர்களின்உரிமையை மறுக்கமுடியாது. அவர்களின்வீடுகள், நிலங்கள் மற்றும் இடப்பெயர்வுக்குமுன்னர் அவர்களின்வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகஇருந்த சுற்றுச்சூழலை அவர்களுக்குத் திரும்பவும ்பெறுவதனை அரசுஎந்த ஒருகாரணத்துக்காகவும் மறுக்கமுடியாது. பெண்கள் தலைமையேற்று நடத்தும் முப்பதுகுடும்பங்கள ்உட்படஎண்பத்துநான்கு குடும்பங்களுக்குக் கேப்பாப்புலவில் உள்ளஅவர்களின் காணிகளுக்குச் செல்வதற்கு இராணுவத்தால் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது..   (மேலும்) 02.03..2017

 ____________________________________________________________________________________________________ __________

“கேப்பாப்பிலவுக் காணிகள் விடுவிப்பு: மறைக்கப்படும் மக்களின் போராட்டம்

-     கருணாகரன்

“கேப்பாப்பிலவுக் காணிகள் விடுவிப்பு” என்ற செய்தி எல்லா இடத்திலும் பரபரப்பை அkeppapilavu-Protestல்லது கவனத்தை உண்டாக்கியுள்ளது.  கூடவே விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்தக் காணி விடுவிப்பை அரசியற் தரப்புகள் தமக்கேற்ற வகையில் பயன்படுத்த முனைந்திருப்பதேயாகும். “எல்லாமே அரசியல்தான்” என்று சாதாரணமாகப் பொதுமக்களால் சொல்லப்படும் கூற்று இங்கே முற்று முழுதாகப் பொருந்தியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் காணிகளை உடனடியாக மக்களிடம் கையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். ஆகவே இது நல்லாட்சி அரசாங்கத்தின் (நல்லிணக்கச்) செயற்பாட்டுக்கு ஒரு சிறப்பான அடையாளம்“ என்று அரசாங்கத்தை ஆதரிப்போர் சொல்கின்றனர்.  “இல்லையில்லை. இந்தப் பிரச்சினையைப்பற்றி அரசாங்கத்துடன் பேசி, உடன்பாடு கண்டது சம்மந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே. ஆகவே, இந்தக் காணிகளின் விடுவிப்பு என்பது கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கும் வெற்றியே. அதிலும் சம்மந்தனின் அணுகுமுறைக்கும் முயற்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றியே” என்கின்றனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்.   (மேலும்) 02.03..2017__

dantv