”ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக கோட்டபாயாவும் பிரதமராக மகிந்தவும் வரவேண்டும் என்று நான் ஏன் விரும்புகிறேன்”

                                      கலாநிதி.தயான் ஜயதிலகா

ஹபீல் பாரிஸ் கோட்டபாய ராஜபக்ஸவின்மீதும் மற்றும் என்மீதும் ஒரு இருமுனையான விமர்சனத்தை எழுதியுள்ளார், நான்தான் முதன்மையான இலக்கு என்று அவர் சொல்கிdayanறார், ஏனென்றால் நான் தாங்கியிருக்கும் அறிவுசார் பரிமாணம் அல்லது அதன் போலிப் பகட்டுதான் அதற்குக் காரணம். அந்த கோட்பாட்டின் அதே மட்டத்தில் பதிலளிக்க எனக்குள் ஓரளவு ஆவல் தோன்றியது ஆனால் அது விடயத்தை வேறு வழியில் திசை திருப்பிவிடும். இந்த முழு விஷயமும் அதைப்பற்றியது அல்ல. அதனால் கோட்பாடு அல்லது அறிவுசார்ந்த உலகைப் பொறுத்தமட்டில் எனது விமர்சனங்களை தெரிவிப்பதை நானே மட்டுப்படுத்திக் கொள்கிறேன், மற்றும்  சாந்தா பார்பரா, கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தின் 21ம் நூற்றாண்டின் உலகளாவிய இயக்கவியல் மையத்தின் மின்னணு வெளியீடான 14ம் பிரசுரம் 10வது தொகுப்பில் “த கிரேட் கிராம்சி: மாற்றீடான ஒரு இடதுசாரி திட்டம் பற்றிய கற்பனை” என்கிற தலைப்பில் பிரசுரமாகியிருந்த எனது சமீபத்தைய கட்டுரையின் (மார்ச் 2, 2017) வாசகர்களுக்கு””(http://www.21global.ucsb.edu/global-e/march-2017/great-gramsci-imagining-alt-left-project) இது விரைவில் டொமினிக் பொலொட் மற்றும் ஜீன் பியே பேஜ் ஆகியொரின் விமர்சனங்களுடன் விரிவான பதிப்பாக லா பென்ஸ் லிப்ரே இதழில் பிரான்சில் மறுபிரசுரம் செய்யப்பட உள்ளது.   (மேலும்) 21.03..2017

______________________________________________________________________________________________________________

யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

நாட்டில் நிலவிய மூன்று தசாப்தகால யுத்தத்தில் 150,000 இற்குSampanthan-Jaishankar-01ம் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரை மேற்கோள்காட்டி தி ஐலண்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஆயுதமேந்திப் போராடிய குழு மற்றும் இலங்கை அரசாங்கம் என இருதரப்பினரும் மீறியுள்ளதாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார  (மேலும்) 21.03..2017

______________________________________________________________________________________________________________

யுத்தக்குற்றங்கள் குறித்து உரத்துத் தொனிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! தமதுபரம்பரைக் குற்றங்கள் குறித்தும்பொது மன்னிப்புக் கேட்கவேண்டும்!       

யோகா – ராஜன்

குறிப்பாக இக்கட்டுரையில்,ஐ. நா. வின் நடைமுறை குறித்தும், சர்வதேச அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்ட வகையிலும் சுமந்திரனால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் (சாணக்கிkajendrakumarயம்) ராஜதந்திரம் குறித்து ஆழமான அழுத்தத்தைபிரயோகிக்க முனைகிறோம். அதேவேளை மொப்பிங் முறையிலான பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் மூலம், சுமந்திரனின் கருத்துக்ளை முறியடிக்க முனையும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான அரசியல் பொறுக்கித்தனத்தை வெளிப்படுத்துவதும், அம்பலப்படுத்துவதுமே இங்கு எமது பிரதான நோக்கம் ஆகும்!    தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் கூட்டமைப்பின் மிதவாத நடவடிக்கைகளுக்கேற்ற இளையவராக சுமந்திரனை கொண்டுவந்தார் சம்மந்தன். மாவை சேனாதிராசாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சியின் ஏனையவர்களின் மௌனம்; சம்மதத்தின் அறிகுறியாயின. இன்று கட்சியின் தலைவர் சம்மந்தன் கூட சுமந்திரனின் ஆலோசனைக்குட்பட்டுத்தான் தமது நகர்வுகளை மேற்கொள்கிறார் என்றால் மிகையாகாது. சுமந்திரனின் திறன் மீது அவ்வளவுக்கு நம்பிக்கையுடையவராக இருக்கிறார் சம்மந்தன்.   (மேலும்) 20.03..2017

______________________________________________________________________________________________________________

மகிழ்ச்சியான  நாடுகள் வரிசையில் நோர்வே முதன்மை

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று (20) அனுஸ்டிக்கப்படுகின்றது.  இதன்படி, மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.  இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122 ஆவது இடத்தையும் அமெரிக்கா 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில், கடந்த வருடம் நான்காவது இடத்தை பிடித்திருந்த நோர்வே நாடு தற்போது முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  முதலாவது இடத்தில் இருந்த டென்மார்க் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தை நோர்வே பிடித்துக் கொண்ட விடயம் தெரியவந்துள்ளது. முறையே, ஐஸ்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் 3 தொடக்கம் 10 ஆம் இடம் வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

______________________________________________________________________________________________________________

வடக்கு, கிழக்கு மக்களுக்கு நியாயம் கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய சில கோரிக்கைகளை முன்வைத்து, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.  கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தின் முன்னாள் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ுல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகளில் இன்னும் இராணுவத்தினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அம் மக்களின் காணி உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

______________________________________________________________________________________________________________

மாதம் மும்மாரி பொழிகிறதா? மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?”

-    கருணாகரன்

“நாடு முழுக்கப்போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே. இது அரசாங்கத்துக்கு சவாலாக உள்ளது அல்லவா!” என்று ஊடகவியலாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் ரணில் விக்கிரமங்கவிடம் கேட்டிருக்கிறார்.protest in sri   “அப்படியா? இதைப்பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. இந்தப்போராட்டங்கள் எல்லாம் எங்கே நடக்கின்றன? எதற்காக நடக்கின்றன?” என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார் பிரதமர்.   இதைப் படிக்கும்போது உங்களுக்கு, “மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா? மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்கும் மன்னரின் நினைவு வரலாம். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத மன்னர்களையும் தலைவர்களையும் கொண்டதுதானே நமது வரலாறு. அதற்கு இந்த ஜனநாயக யுகத்திலும் விதி மாற்றமில்லை.“நாட்டில் நடக்கும் போராட்டங்களைப் பற்றித்தினமும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் போராடுவதையே தங்களுடைய தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதையெல்லாம் அறியாமல் எப்படி நீங்கள் இருக்க முடியும்?” என்று மறுகேள்வியை அவரிடம் கேட்டிருக்கலாமே என்று நீங்கள் எண்ணக்கூடும்.    (மேலும்) 20.03..2017

______________________________________________________________________________________________________________

அனுமதி இல்லாமல் பாடத் தடை: இளையராஜா பாடல்களை இனி பாட மாட்டேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் ஏன்? இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்!

அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்spb balaது நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.  திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன் இசை ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்: ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சலீஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.    (மேலும்) 20.03..2017

______________________________________________________________________________________________________________

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது காணியை குத்தைக்கு வழங்குமாறு விடுத்த ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டு சொந்தமாக வழங்க தீர்மானிக்கப்ட்டுள்ளது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை பதினைந்தாவது நாள் முடிவுக்கு வந்துள்ளது.pannagkaddy   18-03-2017 பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களை மாவட்ட அரச அதிபர் சுந்தரம்  அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரன் மற்றும காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று  சந்தித்து  காணிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது. என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதனையடுத்து பதினைந்து நாட்களாக தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் தங்களின் போராட்டத்தை இன்று மதியத்துடன் நிறுத்தியுள்ளனர்.   காணி அனுமதி பத்திரம்  வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி மக்கள் கடந்த 04-03-2017  அன்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.    (மேலும்) 20.03..2017

______________________________________________________________________________________________________________

மாவட்டச் செயலக காணியை இராணுவத்திற்கு வழங்கினார் முன்னாள் அரச அதிபர்    - சிறிதரன் எம்பி,

 காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டது நான் என்கின்றார் முன்னாள் அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்குரிய காணியை இராணுவத்திற்கு தன்னிச்சையாக  முன்னாள் கிளிநgaொச்சி அரச அதிபர் வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டினார். ஆனால் இராணுவத்திடம் இருந்த கிளிநொச்சி மாவட்டச் செயலக காணியை அன்றைய சூழலில் மீளப்பெற்று புதிய மாவட்டச் செயலகத்தை அமைத்தது நான்தான் இது உண்மைக்கு புறமானது எனநேரடியாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அதே மேடையில் வைத்து கடும் தொணியில் தெரிவித்தார் முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்.  இன்று காலை கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாகம் மண்டபத்தில் இடம்பெற்ற நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் மாவட்டச் செயலக காணியை இராணுவத்தினருக்கு தன்னிச்சையாக வழங்கி விட்டார் என்றும்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்காமல் அவர் இவ்வாறு வழங்கியுள்ளதாகவும், இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே மாவட்டச் செயலக காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது எனவும் பகிரங்கமாக முன்னாள் கிளிநொச்சி அரச அதிபரும் தற்போதைய முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருமான திருமதி றூபவதிகேதீஸ்வரன் முன்னிலையில் குற்றம் சாட்டினார்.   (மேலும்) 20.03..2017

______________________________________________________________________________________________________________

யாழிற்கும் கனடாவின் டொரன்டோ நகரத்திற்கும் இடையிலான அபிவிருத்தி உடன்படிக்கை கைச்சாத்து

யாழ்பாணத்திற்கும் கனடாவின் டொரன்டோ நகரத்திற்கும் இடையிலான அபிவிருத்தி உடன்படிக்கை இன்று (19) கைச்சாத்திடப்பட்டது.   கிளிநொச்சியை சென்றடைந்த கனடாவின் டொரன்டோ மாநகJaffna - torontoர மேயர் ஜோன் டொரி உள்ளிட்ட குழுவினரை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றார். பின்னர் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று இன்று (19) அஞ்சலி செலுத்தினர்.  இதனை அடுத்து முள்ளிவளை கலை மகள் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலிலும் இவர்கள் கலந்துகொண்டனர்.  இதேவேளை, கனடாவின் டொரன்டோ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.இந்த உடன்படிக்கையில் கனடாவின் டொரன்டோ மேயர் ஜோன் டோரி மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

______________________________________________________________________________________________________________

தனி சிகரெட்டுக்கு முற்றுப்புள்ளி - அமைச்சரவை பத்திரம் நாளை கைச்சாத்து

தனியான சிகரெட்டை விற்பனை செய்வதை தடுக்கும் சட்டதிட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் நாளை (20) கைச்சாத்திடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் காரணமாக நாட்டில் 47 சதவீதம் புகைத்தல் பாவனை குறைந்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.மல்வானை பிரதேசத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புகைத்தல் காரணமாக நோய் வாய்ப்புக்குட்பட்டவர்களுக்காக வருடாந்தம் 72 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக குறிப்பிட்டார்.

______________________________________________________________________________________________________________

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லம் முற்றுகை

திருகோணமலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமல் ஆக்கப்படsampanthan house்டவர்களின் உறவினர்கள் இன்று (19) மாலை எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் இன்று (19) மாலை திருகோணமலையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்திற்கு பேரணியாக சென்றனர்.   காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தும் பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு அவர்கள் அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.எவ்வாறாயினும் போராட்டக்காரர்கள் இன்று பிற்பகல் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அங்கு இருக்கவில்லை என எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

______________________________________________________________________________________________________________

ஆவா குழுவுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகளில் பிரதானமாக ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருடன் தொடர்புடையதாக சந்தேகநபர்கள் 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.  யாழ்ப்பாண பொலிஸூடன் தொடர்புடைய சில குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் வௌ்ளவத்தை பிரதேச பிரதேசங்களில் ஒழிந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆவா குழுவினருடன் தொடர்புடைய சந்தேகநபர்களால் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________________________________________

திருகோணமலையில் பிறிதொரு டெங்கு மரணம்

திருகோணமலை பள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கற்பிணிப்பெண் (29) டெங்கு நோயின் காரணமாக சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணமானார்.   கர்ப்பப்பைக்கு வெளியே கற்பம் தரித்திருந்த குறித்த பெண்னிற்கு டெங்கு நோயும் தாக்கியிருந்ததன் காரணமாக சிகிச்சை மிகவும் கடினமாக இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மரணத்திற்கு பிறகு திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.   இந்தநிலையில், டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,881 க்கும் மேலாக அதிகரித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________________________________________

ஏன் இத்தனை வெறுப்பு?

ஷங்கர்ராமசுப்ரமணியன்

நாம் பிறரை, நேசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் மன்னிப்பதற்கும் மறந்துபோகிறோமா?

சமீபத்தில் சுசிலீக்ஸ் என்ற பெயரில் நடிகர், நடிகையரின் அந்தரங்கப் படங்கள் விவகாரம், முகiswaryaநூல், வாட்ஸ்அப் மற்றும் பொதுவெளியில் அதிகபட்சமாக விவாதிக்கப்பட்டது. அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய பரதநாட்டியம் குறித்து சமூக ஊடகங்களில் வெவ்வேறு வகை மீம்ஸ்களாக கேலி வீடியோக்களாகப் பெருகியதையும் முக்கியமான அரட்டைப் பொருளாக மாறியதும் நமது ஆழமான பரிசீலனைக்குரியது.  சசிகலா, ஜக்கி வாசுதேவ் முதல் வைகோ வரை ஒரு சமூகம் நாள்தோறும் கேலிக் கதாபாத்திரங்களை உருவாக்கி தொடர்ந்து சிரித்துக்கொண்டேயிருக்கிறது. அதற்கு முன்னாள் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு எல்லாரும் சேர்ந்து நம் சமூகத்துக்கு உதவிவருகிறார்கள். சுசிலீக்ஸ், ஐஸ்வர்யா தனுஷ் போன்றவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பாக மட்டுமல்ல; வாடிவாசல் முதல் நெடுவாசல் வரையிலான பொதுப் பிரச்சினைகள் வரை சமூக ஊடகங்களில் வெளிப்படும் விமர்சனங்கள், கேலிகள், தார்மிக ஆவேசங்கள், நகைச்சுவைகளில் உச்சபட்ச வெறுப்பு செயல்படுகிறது.   (மேலும்) 18.03..2017

______________________________________________________________________________________________________________

கூடுதலாகக் கிடைக்கும் ஆதாயங்களை ஏற்றுக்கொண்டு சிங்கள சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு தெரிவு எதுவும் இல்லை

                                                 எம்.சூரியசேகரம்

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் ஆகிய அனைவரையும் ஐக்கியப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா அரசியலமைப்பு அவர்களின் அபிலாசைகள் மற்றும் தேவைகள் என்பனவற்றைப் பூரtamil sinhala community்த்தி செய்ய வேண்டும். பன்முகத்தன்மையில் ஐக்கியத்தை பேணுவதே வழிகாட்டும் கொள்கையாக இருக்கவேண்டும். அது எந்தவிதத்திலோ அல்லது வடிவத்திலோ பாகுபாடற்ற சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் அனைத்து ஸ்ரீலஙகாவாசிகளுக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதம் வழங்கவேண்டும். இந்த நிலமைகளின் கீழ் மட்டுமே ஸ்ரீலங்கா மோதல்கள் மற்றும் யுத்தங்கள் அற்ற ஒரு நாடாக வளர்ச்சி அடையமுடியும். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் தேசிய மற்றும் உத்தியோகபூர்வ மொழிகளாக ஆக்கப்பட வேண்டும். பௌத்தம், இந்துசமயம், இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவம் ஆகிய அனைத்து மதங்களும் சமமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ஸ்ரீலங்கா பாடசாலைகளில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் அனைத்து நான்கு மதங்களும் மற்றும் மூன்று மொழிகளும் போதிக்கப்பட வேண்டும்.  பல கலாச்சாரங்கள் மற்றும் பல மதங்கள் உள்ள ஒரு நாட்டில் எங்கள் பிள்ளைகளை நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு ஏற்றவகையில் அவர்களை தயாராக்குவதற்கு ஸ்ரீலங்காவால் முடிந்த சிறந்த வழி அதுதான். பாலின பாகுபாடு மற்றும் சாதி பாகுபாடு என்பன கட்டாயம் சட்டபூர்வமாக மற்றும் அரசியலமைப்பு ரீதியாக அகற்றப்பட வேண்டும்.  (மேலும்) 18.03..2017

______________________________________________________________________________________________________________

காணி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள்  இராணுவ வெளியேற்றம்   வலியுறுத்தி கோட்டையில் ஆர்ப்பாட்டம்

கரைச்சிநிருபர்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும20170317_101711_001 (1)் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏனைய தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சியிலிருந்து விவசாயிகள், வணிகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  இதன்போது  சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கையில்   “ உரிய நீதி விசாரணையின்றி, விடுதலைக்கான சாத்தியங்களற்ற நிலையில் நீண்டகாலமாக அரசியல் கைதிகள் கால வரையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆட்சிகள் மாறுகின்றன. அரசியல் போக்குகளும் மாறுகின்றன. (மேலும்) 18.03..2017

______________________________________________________________________________________________________________

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில பீடங்கள் தொடர்ந்து இயங்காது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் jaffna uni1யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் இன்று (17) வெளியிட்டுள்ளார்.  யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் இது தொடர்பாக தெரிவிக்கையில்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014, 2015 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.மேற்குறித்த கல்வியாண்டுக்கான விடுதி மாணவர்கள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) விடுதிகளுக்குத் திரும்ப முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   (மேலும்) 18.03..2017

______________________________________________________________________________________________________________

கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் பொசாசோ துறைமுகத்தை அடைந்தனர்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர்.aris-13   கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மாலை 5.30 அளவில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சோமாலியாவின் மொகடிசு துறைமுகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. பயணத்தின் போது ஜிபுடி துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ஏரிஸ் – 13 கப்பல், மொகடிசு துறைமுகத்தை நோக்கி மீள பயணத்தை ஆரம்பித்தது.    (மேலும்) 18.03..2017

______________________________________________________________________________________________________________

நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்' : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த மகன் என்று jeyalalitha sobanbabuஉரிமை கோரிய கிருஷ்ணமூர்த்தி என்பவரை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து அனுப்பியது.   ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்தவர் என்று உரிமை கோரலுடன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மகாதேவன் மிகவும் கோபமாக, “நான் இவரை நேரடியாக சிறைக்கு அனுப்பி விட முடியும். இவரை இப்போதே சிறையில் அடைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன்” என்று எச்சரித்தார்.  மேலும் நாளை போலீஸ் கமிஷனர் முன்பு இவர் நேரில் ஆஜராகி தன்னிடம் உள்ள அசல் ஆவணங்களை சரிபார்த்தலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.    (மேலும்) 18.03..2017

______________________________________________________________________________________________________________

இலங்கையர்களுக்காக தமது வீசா கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை

இலங்கையர்களுக்காக தமது வீசா கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொcanada visaள்ளவில்லை என கனடா அரசாங்கம் ​தெரிவித்துள்ளது.  90 நாட்களுக்கு இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவில் சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வௌியான தகவல்களை நிராகரிக்கும் வகையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ, சுற்றுலாவுக்காகவோ கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்ந்தும் வீசா அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என கொழும்புக்கான கனடா உயர்ஸ்தானிகர் காரியாயலம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக, தமது நாட்டிற்கு வருவதற்கு முன்னர் உரிய வீசா தேவைப்பாடுகளை தௌிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

ஸ்காட்லாந்தில் 2–வது கருத்தறியும் வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை தெரசா மே நிராகரித்தார்

இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் இரண்டாவது கருத்தறியும் வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என தெரசா மே நிராகரித்து விட்டார்.Theresa-May_   இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்து ஒரே நாடாக உள்ளது. இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் 2014–ம் ஆண்டு கருத்தறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற வேண்டாம் என 55.3 சதவீத மக்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து தொடர்ந்து நீடிக்கிறது.இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு எடுத்து விட்டது. இதற்கான நடைமுறைகள் தொடங்க உள்ளன. ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது ஸ்காட்லாந்துக்கு பிடிக்கவில்லை.இந்த நிலையில், இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் இரண்டாவது கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதன் முதல்–மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் விரும்புகிறார   (மேலும்) 18.03..2017

______________________________________________________________________________________________________________

முன்னாள் போராளி: வாழ்க்கைக்கான போராட்டம்

   கருணாகரன்

இரண்டு பசு மாடுகள். படிக்கிற வயதில் நான்கு பிள்ளைகள். அதிகம் விவரமில்லாத மனைவி. சரியான பாதையில்லாத வளவு. வசதியற்ற வீடு. சல்லடையாகக்கப்பட்ட உடல். நடக்க முடியாத மனிதன். இதை இணைத்து ஒரு சித்திரத்தை உங்களுடைthiyagarajahய மனதில் வரைந்து பாருங்கள். எப்படியிருக்கும் அந்தச் சித்திரம்? துடிப்பு நிறைந்த ஒரு போராளி. சண்டைக்களங்களில் எப்போதும் முன்னின்று களமாடியதால் தளபதிகளிடம் பாராட்டையும் மதிப்பையும் பெற்றவன். அப்போது உடலில் பட்ட காயங்கள் அவனுக்கு மதிப்பையும் பெருமையையும் ஏற்படுத்தியிருந்தன. ஒவ்வொரு காயத் தழும்பும் ஒவ்வொரு சண்டைக்களத்தில் அவன் நின்று இயங்கியதற்கு அடையாளம். இதெல்லாம் அவனுக்குச் சக போராளிகளிடத்திலும் சனங்களிடத்திலும் மதிப்பைக் கூட்டியிருந்தன. அவன் செல்லுமிடங்களில் அவனை நெருங்கி வந்து பலரும் கதைப்பார்கள். அவனோடு நட்பாக இருக்க விரும்பினார்கள். அவர்களோடு நெருங்கிப் பழக அவனுக்கும் விருப்பமிருந்தாலும் கால நேரம் போதியதாக இருப்பதில்லை. எல்லோருக்கும் மெல்லியதாக ஒரு சிரிப்பு. சிலரோடு சில வார்த்தைகள். பறந்து திரிந்தான் இயக்கம் என. இந்தச் சித்திரத்தையும் உங்கள் மனதில் வரைந்து கொள்ளுங்கள்.   எப்பிடியிருக்கும் இந்தச் சித்திரம்?  இந்த இரண்டுமே ஒருவருடையவைதான். இரண்டு விதமான வெவ்வேறு காலத்தில் எல்லாமே மாறித் தலைகீழாகி விட்டன. முன்பு செல்வாக்கோடும் மதிப்போடும் இருந்த போராளி, இன்று கவனிப்பார் இல்லாதிருக்கிறான். ஒரு காலம் பலரும் அவனோடு நெருங்கி உறவாட விரும்பியிருந்த நிலை இன்று முற்றாக மாறி, யாருமே கண்டு கொள்ளாத நிலை வந்திருக்கிறது  (மேலும்) 17.03..2017

______________________________________________________________________________________________________________

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 50 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் நேற்று (15) மாலை 4 மணி முதல் இன்று மாலை 3 denque fieberமணி வரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் 113 டெங்கு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் 3605 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்  அவர்களில் கிண்ணியாவில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2088 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.  கிண்ணியாவில் 900 பேரும் திருகோணமலை நகர் பகுதியில் 379 பேரும் மூதூரில் 418 பேரும் உப்புவெளியில் 266 பேரும் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.   (மேலும்) 17.03..2017

______________________________________________________________________________________________________________

நேர்காணல்

உண்ணும் முன் உன் உறவை நினை!“

“உண்ணும் முன் உன் உறவை நினை“ என்ற மந்திரச் சொல்லோடு ஆரம்பிக்கப்பட்டது பச்சிலைப்பள்ளி அபT.Loganathanிவிருத்திச் சங்கம். 2009 இல் இறுதிப்போரினால் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி மக்களையும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தையும் மீள் நிலைப்படுத்தி முன்னேற்றுவற்காக லண்டனில் இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அனர்த்தகால முதலுதவியாக உணரப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் இப்போது பன்முகப்பணிகளைச் செய்து முன்னிலைபெற்றிருக்கிறது. இந்தச் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் முக்கியமானவரான தம்பாப்பிள்ளை லோகநாதன் ( இரத்தினம்) சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி சங்கத்தின் மையப்பணிமனைக்கு லண்டனில் இருந்து வருகை தந்திருந்தார். புதிய திட்டங்கள், செயற்பாடுகளை வேகமூட்டுதல், பணிகளைத் தொடர் கண்காணிப்புக்குட்படுத்துதல் என புதிய ஆண்டில் சங்கத்தை மேலும் புதிதாகச் செயற்படுத்தும் நோக்கத்துடன் அவர் தொடர் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.  இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்து இந்த நேர்காணலைச் செய்திருந்தோம். பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தைப்போல ஒவ்வொரு பிரதேசத்துக்குமான அமைப்புகள் உருவாகுமானால் கணிசமான அளவுக்கு பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும். அந்த வகையில் ஏனையோருக்கு ஒரு தூண்டலாக இந்த நேர்காணல் அமையும் என நம்புகிறோம்.   (மேலும்) 17.03..2017

______________________________________________________________________________________________________________

அரசாங்கம் கோரினால் இலங்கையர்களை மீட்கத் தயார்: நிஸ்ஸங்க


சோமாலியாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை மீட்க அரசாங்கம் சட்ட ரீதியாக கோரிக்கை விடுத்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தான் இந்தப் பிரச்சினையில் தலையிடத் தயாராக இருப்பதாக, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.  2011 - 2016ம் ஆண்டு வரை கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த அனுபவத்தைக் கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் கூறியுள்ளார்.   எதுஎவ்வாறு இருப்பினும், தமது பாதுகாப்பு திட்டங்கள் இரகசியமானவை என்பதால் அவற்றை தற்போது வௌியிட முடியாது எனவும், அவ்வாறு கூறிவிட்டால் மாற்று திட்டங்களை எதிரிகள் வகுத்து விடலாம் எனவும் நிஸ்ஸங்க குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், இலங்கையர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களைக் காப்பாற்ற கடற் பாதுகாப்பு நிறுவனம் என்ற ரீதியில் நாம் முன்னிற்போம், ஆனால் அரசாங்கம் எழுத்து மூலம் சட்ட ரீதியாக இது தொடர்பில் கோர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

______________________________________________________________________________________________________________

மோனலிசாவின் புன்னகையில் தெரிவது மகிழ்ச்சியே! ஆய்வில் விளக்கம்

உலகப் புகழ்பெற்ற மோனலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது சோகமல்ல, மகிழ்ச்சியே என்று ஜெmonalisaர்மனியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் ஓவியர் லியோனார்டோ டாவின்ஸி 1500-ஆவது ஆண்டுகளில் வரைந்த மோனலிசா ஓவியத்தில் இடம்பெற்றுள்ள லிசா கெரார்தினியின் இதழ்களில் தவழும், சோகமா, மகிழ்ச்சியா என்பதை இனம் காண முடியாத புன்முறுவல்தான் மோனலிசா உலகப் புகழ் பெற்றதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த இந்தக் கருத்தைப் பொய்யாக்கும் வகையில், மோனலிசாவின் இதழ்களில் தவழ்வது மகிழ்ச்சியைக் குறிக்கும் புன்னகைதான் என்பதை ஆய்வு மூலம் விளக்கியுள்ளனர் ஜெர்மனியின் ஃப்ரீபெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மோனலிசாவின் இதழ் வளைவுகளில் கணினியின் மூலம் சிறிய கோண மாறுபாடுகளைச் செய்து அவை துன்பத்தை வெளிப்படுத்துவது போலவும், துன்பத்தை வெளிப்படுத்துவது போலவும் பல படங்களை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள்.   (மேலும்) 17.03..2017

______________________________________________________________________________________________________________

தாஜூடின் கொலையாளிகளை கைதுசெய்து, என்னை விடுவியுங்கள் - அனுர

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளanura, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ரொக்சி உத்தரவு பிறத்துள்ளார்.இதேவேளை, பிணை வழங்காமை மூலம் தனது மனித உரிமை மீறப்படுவதாக, அனுர சேனாநாயக்க, குற்றவாளி கூண்டில் இருந்தவாறு கருத்து வெளியிட்டபோது குறிப்பிட்டுள்ளார்.தன் மீது சாட்சியங்களை மறைக்க முற்பட்டதாகவே குற்றம்சுமத்தப்பட்டுள்ளது எனவும், இவ்வாறான வழக்குகளில் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.   (மேலும்) 17.03..2017

______________________________________________________________________________________________________________

சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் மக்களின் போராட்டங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.  பொறுப்பு வாய்ந்தோரிடம் கையளித்த உறவுகளை மீளக்கையளிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் பிராந்திய அலுவலகத்திடம் மகஜர் ஒன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கையளித்தனர்.   சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தி பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சட்டத்திற்கும், மனித உரிமைக்குமான கற்கை நிறுவகம், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தன   (மேலும்) 17.03..2017

______________________________________________________________________________________________________________

டிரம்ப்பின் புதிய குடியேற்றத் தடை உத்தரவு: அமெரிக்க நீதிமன்றம் மீண்டும் நிறுத்தி வைப்பு

6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதைத் தடை செய்யும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுக்கு, அந்த நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.trump   இராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கும் உத்தரவை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்தார்.  அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது தான் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர் அந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும், அந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை என்று குற்றம் சாட்டினர்.  எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெறும் பல்வேறு மாகாணங்களில், அந்த தீர்ப்புக்கு எதிராக மாகாண அரசுகள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த உத்தரவுக்கு தடை பெறப்பட்டது.டிரம்ப்பின் குடியேற்றத் தடை உத்தரவு, அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, அதற்கு நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதித்தன.   (மேலும்) 17.03..2017

______________________________________________________________________________________________________________

“ஜனாதிபதி அவர்களே எனது மகள் உயிரோடு இருக்கிறாள்”

                                         சுலோச்சனா ராமையா மோகன்

அது வெறும் காடு. வவுனியா மாவட்டம் நைனாமடு கிராமசேவகர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமம் இருட்டாகவே உள்ளது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியால் கட்டப்படும் பல வீடுகள் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ளwar2009ன, மற்றும் அதேபோலவே 4 மார்ச் 2009ல் காணாமற்போன தங்கள் மூத்த மகள் ஜெரோமியை தேடிக் கொண்டிருக்கும் காசிப்பிள்ளை குடும்பமும் அங்கு உள்ளது. ஆனால் 2015ல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரம் ஒன்றில் காணப்படும் புகைப்படம் ஒன்றில்; ஜனாதிபதி சிறிசேன அருகில் நிற்கும்; ஒரு தொகுதி பாடசாலை சிறுவர் சிறுமிகள் மத்தியில் அவர்கள் அவளை மீண்டும் உயிரோடு கண்;டுள்ளார்கள். அவர்களது மகள் வீடு திரும்பும் வரை அவர்களது புதிய வீட்டில் உள்ள மாடத்தில் விளக்கு ஏற்றப் போவதில்லை என்று காசிப்பிள்ளை சொல்கிறார், அவள் உயிரோடு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள் ஆனால் அதற்கு மேல் ஆழமாக எதையும் அவர்களால் அறியமுடியவில்லை.  காசிப்பிள்ளை தம்பதியினர் எங்கள் வருகைக்காக காத்திருந்தார்கள். வேலிக்கு குறுக்காக மாட்டியிருந்த மூங்கில் தடியை கீழே இறக்கிவிட்டு நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். இந்துக் கடவுள்களுக்கு முன்னால் இருந்த எண்ணெய் விளக்கு, காணாமற்போன அவர்களது மகள் என்று வீட்டுக்கு திரும்பி வருகிறாளோ அன்றுதான் ஏற்றப்படும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது.   (மேலும்) 16.03..2017

______________________________________________________________________________________________________________

பதவி பேராசையே தமிழ் சமூகத்தை அழிக்கிறது

வீ.ஆனந்தசங்கரி         செயலாளர் நாயகம்- த.வி.கூ

தமிழர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியும் பதவி பேராசையும் பொதsangary5ுவாக நாட்டையும், குறிப்பாக தமிழ் சமூகத்தையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது. தற்போது தமிழ் மக்கள் படுகின்ற துன்ப துயரங்களும் மனச்சங்கடங்களும் இன்று பெருமளவில் காணப்படுவதுபோல கடந்த காலங்களில் காணப்படவில்லை. எமது தலைவர்கள் மத்தியில் காணப்படுகின்ற ஒற்றுமையின்மை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எமது மக்களை ஒரே கொடியின் கீழ் பொது கொள்கையுடன் ஒன்றிணைக்க தவறுவோமேயானால் சுதந்திர இனமாக நாம் தப்பிப்பிழைப்பது முடியாமல் போய்விடும். எம் மத்தியில் பல தலைவர்களும் அத்துடன் பல தமிழ் கட்சிகளின் தலைவர்களும்; ஒவ்வொருவரும் எமது மக்களை வெவ்வேறு திசையில் இழுத்துச் செல்வதால் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இன்று எமக்கு வேண்டியதெல்லாம் ஒற்றுமையும் பொது தலைமையும் முக்கியமாக உணர்வுகளை தூண்டும் விடயங்களில் இணக்கப்பாடு அவசியமாகிறது.    (மேலும்) 16.03..2017

______________________________________________________________________________________________________________

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா

ெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2017 மார்ச் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டerintha sirakugalபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.  இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா அவர்களும், சிறப்பதிதிகளாக கொழும்புப் பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், இப்ராஹீமிய்யா கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார், கொடகே புத்தக நிறுவனர் திரு, திருமதி சிரிசுமண கொடகே ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.    (மேலும்) 16.03..2017

______________________________________________________________________________________________________________

பஷிலுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். pasil Rகடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இரண்டு கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா நிதியை பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட 50 இலட்சம் பஞ்சாங்க கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் முதலாவது குற்றவாளியாக பஷிலின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில், பஷில் ராஜபக்ஷவை விடுவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

______________________________________________________________________________________________________________

ஜனநாயகம் வாழ வாழ்த்திடுவோம்

தோழர் விஸ்வலிங்கம் சிவலிஙக்த்திற்கு  (16.03.17)அகவை 70வது

இன்றைய மனிதகுலத்தின் தேவைக்கு அப்பால் தனிபட்ட சுயநலத்திற்காக  ஜனநாயகம் என்ற சொல்லை பயன்படுத்துகின்ற இக்கால கட்டத்தில் ஜனநாயகத்திற்காக வாழ்கின்ற தோழர் சிவிலிங்கத்திந்கு எங்கள் பிறந்த தின வாழ்த்தsivalingamுக்கள்.  விஸ்வலிங்கம் சிவலிங்கம் மெல்லிய உடல்வாகு. குரலும் அப்படியே. தொனி மெலிதானாலும், சொல்லும் கருத்தில் வலுவிருக்கும், பிடிவாதமுமிருக்கும்.  சைவக்கடவுளின் பெயராக இருந்தாலும், வைதீக சைவ வேளாள உயர்குடிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவர். கம்யூனிஸ்ட்டு. நினைப்பிலும் செயலிலும் ஒரு இடதுசாரி. மறுபுறம் ஒரு ஜனநாயகப் போராளியும் கூட.    எமது ரிபிசி 90களில் ஆரம்பித்தவேiளை வானொலியின் ஏற்ற, இறக்க காலங்களில் என்றும் உடனிருந்தவர். தனக்கென ஒரு பாணியை வகுத்து இறுதிவரை தனது அரசியல்கருத்துக்களை உரத்துப் பேசிவந்தவர். போருடன் போர் தொடுத்தவர், சமரசத்தை சமரசம் செய்யாதவர்.  தனது இடது சாரிச் சிந்தனைகளுக்கூடாக போரினால் எமது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் அழிவுகளையும் இறுதிவரை வலியுறுத்தியவர். போருக்கு எதிரானகருத்துக்களை கூறி வானொலி நடத்திய என்னை விட எனது வானொலியின் நேரலைகளில் அதிகம் விமர்சனத்துக்குள்ளானவர், நிந்திக்கப்பட்டவர். ஆனால், அதற்காக தனது கருத்தில் இருந்து என்றும் விலக அவர் முன்வரவில்லை. அதில் சமரசம் எதுவும் செய்யவில்லை. மாறக தனது கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.   (மேலும்) 16.03..2017

______________________________________________________________________________________________________________

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைய புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.new pta   இலங்கையிலுள்ள அனைத்தும் மக்களும் பயமின்றி வாழும் உரிமையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான பயங்கரவாதத்தை தடுக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  இதில் இந்த நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி கமீட் அன்சாரி, நேபால் துணைப் பிரதமர் பிம்லேந்திரன் நிதி, சிங்கப்பூர் உள்விவகார அமைச்சர் கே.சண்முகம் உட்பட பிராந்திய நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதன்போது சாகல ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது,முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளின் பின்னர் ஜனநாயகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய இரண்டு விடயங்களில் இலங்கை மீண்டும் வலுப்பெற்று வருகிறது.    (மேலும்) 16.03..2017

______________________________________________________________________________________________________________

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மசோதா, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளை கொண்ட அமைப்பாக ஐரோப்பிய யூனியன் திகழ்ந்து வந்தது. இந்த அமைப்பை சேர்ந்த நாடுகளில் உள்ள மக்கள், பிற உறுப்பு நாடுகbritexitளில் சென்று வசிக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிகளை பெறவும் வழிவகை உள்ளதால், பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த ஏராளமான குடிமக்கள் இங்கிலாந்தில் குடியேறினர். இதனால் உள்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிவிட இங்கிலாந்து முடிவு செய்து, பொதுமக்களின் கருத்தை அறிய கடந்த ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக 51.9 சதவீதம் பேரும், ஐரோப்பிய யூனியனிலேயே தொடர வேண்டும் என 48.1 சதவீதம் பேரும் வாக்களித்தனர். மெஜாரிட்டி மக்கள் ஆதரவு அளித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதியானது. இருப்பினும் இதுதொடர்பாக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. உறுப்பு நாடுகளுடன் இங்கிலாந்து முறைப்படி பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டும   (மேலும்) 15.03..2017

______________________________________________________________________________________________________________

கொழும்பில் போராட்டங்கள்

 -  கருணாகரன்

“கொழும்பில் அடிக்கடி நடத்தப்படும் போராட்டங்களினால் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகிறது. நகரில் எப்போதுமே சற்றுப் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனால் தங்களுடைய colombo protest1இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆகவே, மக்களின் நலனையும் அவர்களுடைய விருப்பத்தையும் கவனத்திற்கொண்டு, வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் போராட்டங்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவேணும். மக்களுடைய வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். எனவே, இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கையை, அல்லது சட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.” என்று ஐ.தே.க. மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பிரதர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.   (மேலும்) 15.03..2017

______________________________________________________________________________________________________________

போர்க்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேன இப்போது தனது துருப்புக்கள்மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரவும் மறுத்து வருகிறார்

                                       அமல் ஜயசிங்க

போர்க்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தருவதாகவும், அவரது முன்னோடிகளின் கடுமையான வழி முறைhqdefaultகளில் இருந்து விலகி நிலையான சமாதானத்தை தனது உண்மையான முதல் நடவடிக்கையிலேயே வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தார். ஆனால் யுத்த காலத்து துஷ்;பிரயோகங்களை விசாரிப்பதற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட காலக்கெடு தவறவிடப்பட்டதுடன், தான் ஒருபோதும் தனது படை வீரர்கள்மீது வழக்கு தொடரப் போவதில்லை என பிரகடனம் செய்துள்ளதுடன், சர்வதேச விசாரணைக்கான ஐநா விடுத்துள்ள புதிய வேண்டுகோள்களையும் அப்பட்டமாக நிராகரித்துள்ளதால் அவர் மீதுள்ள நம்பிக்கை கடுமையான சோதனைக்கு உள்ளாகியுள்ளது.  ஸ்ரீலங்காவின் கடந்த யுத்த கால நிலமைகள்பற்றிய கவலைதரும் மெதுவான முன்னேற்றங்கள் பற்றி ஐநா விமர்சனம் செய்த அடுத்த நாளே, “எனது அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஒரு அரச சார்பற்ற அமைப்பு கட்டளையிடுவதை நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார். “எனது துருப்புகள்மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்கிற அவர்களது அழைப்புகளுக்கு நான் செவி சாய்க்கப் போவதில்லை” என்றும் சொன்னார்.  (மேலும்) 15.03..2017

______________________________________________________________________________________________________________

அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடindian fishermanவடிக்கைகளை எச்சந்தர்ப்பத்திலும் நிறுத்தப் போவதில்லையென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.  அதேபோன்று அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்தும் கைப்பற்றப்படுமென்றும் அவர் உறுதியளித்தார். மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை இந்திய மீனவர் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இந்தியாவினால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டினார்.குடாவெல்ல பிரதேசத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் அமரவீர இவ்வாறு கூறினார்.   (மேலும்) 15.03..2017

______________________________________________________________________________________________________________

சென்னையில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கி விட்டது; வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரவில்லை

பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீரைchennai water வைத்துக்கொண்டு இன்னும் 30 முதல் 35 நாட்களுக்கு தான் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். கோடை காலம் வருவதால் ஏரிகளை மட்டுமே நம்பி இருக்காமல் மாற்று வழியாக சென்னை புறநகர் பகுதிகளான மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி குடிநீருக்கு பயன்படுத்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி விரைவில் இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சென்னையில் குடிநீர் பஞ்சம் இப்போதே தலை தூக்கி விட்டது.சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய்களில் வந்த குடிநீர் பல இடங்களில் வரவில்லை. இதனால் பொதுமக்கள் தெருக்களில் உள்ள அடிபம்புகளை தேடிச் செல்லும் நிலை உள்ளது.   (மேலும்) 15.03..2017

______________________________________________________________________________________________________________

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிளிநொச்சி போராட்டத்திற்கு தென்னிலங்கை,உள்ளுர் அமைப்புக்கள் ஆதரவுkli.protest

கிளிநொச்சி இன்று செவ்வாய் கிழமை 23 ஆவது நாளாக இரவு பகலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்திற்கு தென்னிலங்கை மற்றும் உள்ளுர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.  தென்னிலங்கையில்ருந்து வருகைதந்திருந்த சுதந்திரத்திற்கான  மகளீர் அமைப்பு, சம உரிமை இயக்கம். மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டிருந்தனமேற்படி அமைப்புக்களைச் சேர்ந்த பலர் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்;துகொண்டு தங்களின் ஆதரவினையும் தெரிவித்துள்ளன்

______________________________________________________________________________________________________________

உதவித்தொகை கிடைக்காமல் அல்லலுறும் இலங்கை அகதிகள்

தமிழக அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மூன்று மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர் என செய்திகள் வௌியாகியுள்ளன. சென்னை புழல் அடுத்த காவாங்கரையில், இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அதில், 352 குடும்பங்களைச் சேர்ந்த, 1,387 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசு மூலம் ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் மாதந்தோறும், குடும்ப தலைவர்களுக்கு, 1,000 ரூபாய், பெண்களுக்கு, 750 ரூபாய், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 400 ரூபாய் வீதம், நிர்ணயிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த மூன்று மாதமாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, அகதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.கடந்த மூன்று மாதமாக, உதவித்தொகை கிடைக்காமல் சிரமப்படுகிறோம். அந்த பணம் மொத்தமாக கிடைத்தால், குடும்ப செலவுக்கு உதவும். மேலும் ரேஷன் கடையில் பருப்பு வகைகளும் கிடைக்கவில்லை எனவும் முகாமில் வசிப்போர் கூறியுள்ளதாக தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

ஈ.பி.டி.பி  அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும்  தண்டிக்கப்பட வேண்டும்   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்

ஈ.பி.டி.பி  அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும்  தண்டிக்கப்பட வேண்டும்  என chandrakumar-32017  முன்னாள்  பாராளுமன்ற  உறுப்பினர்  முருகேசு  சந்திரகுமார்  தெரிவித்துள்ளார்   இன்றையதினம் செவ்வாய் கிழமை  கிளிநொச்சியில் நடைபெறுகின்ற  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து மூன்று அமைப்புக்கள் வருகை தந்திருந்தனர் இன் நிலையில்  சமத்துவம் சமூக  நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போது  நீங்கள் முன்னர் ஈ.பி.டி.பி கட்சியின்  பாராளுமன்ற  உறுப்பினராக  இருந்துள்ளீர்கள் காணாமல் ஆக்கப்பட்ட  உறவினர்கள் சிலரால்  ஈ.பி.டி.பி யும்  தொடர்வுபட்டிருப்பதாக  குற்றம் சுமத்தப் படுகின்றது  இது  தொடர்பாக உங்களுடைய  கருத்து என்ன என ஊடகவியலாளர்களால்  தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அவர்  அவ்வாறு தெரிவித்தார் (மேலும்) 15.03..2017

______________________________________________________________________________________________________________

2015 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்த இலங்கை இணக்கம்

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.   ஐரோப்பா – இலங்கை ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நல்லாட்சி, சட்டவாச்சி மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழுவின் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட ஒன்றிணைந்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த செயற்பாட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்றும் (13) இன்றும் (14) கொழும்பில் நடைபெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.   (மேலும்) 15.03..2017

______________________________________________________________________________________________________________

வழிகளும் விழிகளும் திறக்கட்டும்.

         கருணாகரன்

யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு அல்லது அம்பாந்தோட்டைக்கு நீங்கள் ஈஸியாகப் போய் விடலாம். அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கும் கூட நீங்கள் உல்லாசமாகப் பயணிக்கலாம். உங்கள் பயணத்தில் களைப்போ அலுப்போmarthangkeni இருக்காது. நீங்கள் தூங்கி விழிக்கும்போது பயணம் நிறைவேறியிருக்கும். அல்லது ஏதாவது ஒரு நகரத்தையோ கிராமத்தையோ கடந்து கொண்டிருப்பீர்கள். ஆனந்தமாக அமைந்திருக்கும் உங்களுடைய பயணம். ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து கட்டைக்காட்டுக்கு அல்லது வெற்றிலைக்கேணிக்கு அப்படி நீங்கள் போய்விட முடியாது. இவ்வளவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வெற்றிலைக்கேணிக்கு அல்லது கட்டைக்காட்டுக்குமிடையிலான தூரம் தனியே 100 கிலோ மீற்றருக்குள்தான். அதிலும் பருத்தித்தித்துறையிலிருந்து கட்டைக்காடு, சுண்டிக்குளம் நோக்கிச்செல்லும் கடலோர வீதி ஆகக்கூடியது 60 கிலோ மீற்றர் மட்டும்தான். ஆனால், இந்த வீதியில் நீங்கள் பயணிப்பதாக இருந்தால், உங்கள் உடலின் பாகங்கள் கழன்று வேறு வேறாகி விடும். வண்டி ஓடுகிறதா, ஊர்கிறதா, வள்ளம்போல ஆடி அசைகிறதா என்று உங்களுக்கே சந்தேகம் வந்து விடும். இந்த 60 கிலோ மீற்றர் தூரத்தையும் கடப்பதற்கு உங்களுக்கு குறைந்தது மூன்று மணித்தியாலங்கள் தேவை. இதைக் கடப்பதற்குள் வாழ்க்கையே அலுத்துவிடும். அந்தளவுக்குப் படு மோசமாகச் சிதைந்து போயிருக்கிறது இந்த வீதி.   (மேலும்) 14.03..2017

______________________________________________________________________________________________________________

சுமந்திரன் மீதான கொலை முயற்சி - முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாகsumanthiran -20 தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  அவுஸ்ரேலியாவில் உள்ள ஆறாவது சந்தேக நபரை சர்வதேச பொலிசார் மூலம் கைது செய்யுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.   (மேலும்) 14.03..2017

______________________________________________________________________________________________________________

மலையக மக்கள் என்பதால்தான் எங்களின் விடயத்தில்  அக்கறைச் செலுத்தவில்லையா? அரசியல்வாதிகள் அதிகாரிகளை நோக்கி  பன்னங்கண்டி மக்கள் கேள்வி

நாங்கள் கடந்த காலத்தில் தென்னில்ங்கையில் ஏற்பட்ட வன் செயல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியமர்ந்துள்ளோம். இன்று வரை எங்களுக்கு நிரந்தர காணி வழங்கப்படவில்லை. நாங்கள் கிளிநpannangkandyொச்சிக்கு வந்த காலத்தில் இங்கு அதிகளவான அரச காணிகள் இருந்தன  அங்கு எங்களை குடியமர்த்தியிருக்கலாம்,  அதனையும் மேற்கொள்ளவில்லை நாங்க்ள இப்பொழுதும் காணியற்ற  மக்களாக சொந்த இடத்தில் அகதியாக வாழ்கின்றோம் இது ஏன் நாங்க்ள மலையக மக்கள் என்பதால் எங்களின் விடயத்தில் அக்கறையின்றி இருக்கின்றீர்களா? என  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை நோக்கி பன்னங்கண்டி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.   கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கள் கிழமை பத்தாவது  நாளாக தொடர்கிறது.   (மேலும்) 14.03..2017

______________________________________________________________________________________________________________

விஜய் சேதுபதியின் மனிதத்தன்மைக்குத் தலைவணங்குகிறேன்: உணர்ச்சிவசப்படும் இயக்குநர் சேரன்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்தது. அந்த நிர்வாகக் கvijay_sethupathiுழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.   நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.   இந்நிலையில் தயாரிப்பாளர் தேர்தலை முன்வைத்து நடிகர் விஷாலுக்கு இயக்குநர் சேரன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் அடுத்தப் படத்தை நடிகர் விஜய் சேதுபதியின் உதவியுடன் இயக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.  (மேலும்) 14.03..2017

______________________________________________________________________________________________________________

கேப்பாப்பிலவில் காணி விடுவிப்பை வலியுறுத்தி இருவர் முன்னெடுத்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இருவர் முன்pannagkandyனெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.  எனினும், தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு மக்கள் முன்னெடுத்துவந்த சாத்வீக போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த மூன்று நாட்களாக இவர்கள் இருவரும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தனர்.இன்று சில அரசியல்வாதிகள் அங்கு சென்று அவர்களை பார்வையிட்ட பின்னர் வழங்கிய அறிவுறுத்தலையடுத்து அவர்கள் உண்ணாவிரத்தை கைவிட்டுள்ளனர்.முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் மக்களின் நில மீட்பு சாத்வீக போராட்டம் 13 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.  சினியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களின் 128 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை, கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்கிறது.பல வருடங்களாக குறித்த பகுதியில் வசித்துவரும் தமக்கான காணி உரிமத்தை வழங்க வேண்டும் என்பதே பன்னங்கண்டி மக்களின் கோரிக்கையாகும்.

______________________________________________________________________________________________________________

சீனி, கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைய நீக்க முடிவு

வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் குறிப்பிட்டுள்ளார்.   வாழ்க்கைச் செலவு குழுவில் குறித்த இரண்டு பொருட்கள் தொடர்பிலும் நுகர்வோரின் தேவைப்பாடு, இறக்குமதி விலை மற்றும் சந்தை விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

______________________________________________________________________________________________________________

இனத்தை அழிக்கும் சட்டங்களை கொண்டு வரும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்

நாட்டையும் இனத்தையும் அழிக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்களை கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவmahinda Rித்துள்ளார்.   அவரது கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கையின் அரசியலமைப்பு, அரச கட்டமைப்பு, சட்டத்துறை என்பவற்றில் மாற்றம் செய்ய அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் உத்தியோகபூர்வமாகவும் அல்லது வேறு வழிகளில் ஊடகங்களில் வெளியான சில ஆவணங்கள் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகியுள்ளது.அரசியமைப்புச் சட்டவாக்க சபையின் 6 உப குழுக்களின் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணியின் அறிக்கை ஜனவரியில் வெளியாகியது.   (மேலும்) 14.03..2017

______________________________________________________________________________________________________________

கிளிநொச்சியில் இன்று கடும் மழை பல வெள்ளத்தில் முழ்கியது

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்து கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியது.இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது  மணி வரை IMG_4334தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது. வீதிகளில் வெள்ளம் நிரப்பி வழிந்ததோடு, பல கிராமங்களில் பல பகுதிகள் வெள்ளத்திலும் மூழ்கியது. குறிப்பாக மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட ஒரு வருட ஆயுளை கொண்ட தற்காலிக வீடுகளில் வசித்த மக்கள்ம பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். அத்தோடு காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக  நிறைவு பெறாத நிலையில் விவசாயிகள்  பாதிப்புக்களுக்குள்ளாகியதோடு, அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாது திண்டாடி வருகினன்றனர்.  (புகைப்படங்கள்)

______________________________________________________________________________________________________________

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்?

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார்

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்? இதற்கு யார் பொறுப்புச் சொல்வது? யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் யுmeeting-1த்தப் பாதிப்புகளில் இருந்து மக்கள் முழுதாக நீங்க முடியாதிருப்பது எதற்காக? இந்த நிலைமை தொடர்ந்து நீடிப்பது தமிழ்ச்சமூகத்துக்கு நல்லதாக அமையுமா? இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள் அதைச் செய்யாதிருப்பது ஏன்? இதை மக்கள் தட்டிக் கேட்க வேண்டிய காலம் பிறந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார். நேற்று 11.03.2017 புனகரி வாடியடியில் பிரதேச மக்களைச் சந்தித்து நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   (மேலும்) 13.03..2017

______________________________________________________________________________________________________________

இலங்கை இனப்படுகொலை: சர்வதேச நீதி விசாரணை கோரி கையெழுத்து இயக்கம்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நsathyarajடிகர் சத்யராஜ், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன்,

இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து உடனடியாக சர்வதேச விசாரணையைத் தொடக்க வலியுறுத்தி சென்னையில் கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.கையெழுத்து இயக்கத்தை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்துப் பேசியதாவது:ஜல்லிக்கட்டு மற்றும் நெடுவாசல் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தது போன்று, இலங்கைத் தமிழர்களுக்கான நீதி விசாரணைக்காகவும் போராட இளைஞர்கள் முன் வர வேண்டும். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து 18 மாதங்கள் ஆகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியையும் இலங்கை எடுக்காத நிலையில், விரைவில் சர்வதேச நீதிபதிகள் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார் நடிகர் சத்யராஜ்   (மேலும்) 13.03..2017

______________________________________________________________________________________________________________

இடைப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்

நாடளாவிய ரீதியாக இடைப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதாக காலநிலை அவIMG_4379தான நிலையம் தெரிவித்துள்ளது.  நாட்டின் பல பாகங்களில் ஆங்காங்கே பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென் கடற்பிராந்தியத்தில் காலை வேளையில் சிறியளவில் மழை பொழியக் கூடிய வாய்ப்புள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில அந்த பிரதேசங்களில் கடும் காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் விதமாக அவதானத்துடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

______________________________________________________________________________________________________________

11,792 பொலிசார் பணியில் நாடு முழுவதும் சோதனை; 1,246 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலிருந்து, 1,246  சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.police check  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் கீழ், நேற்று (10) இரவு 11.00 மணியிலிருந்து இன்று (11) அதிகாலை 4.00 மணி வரையான காலப் பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களால் குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையின்போது, விசாரணை செய்யும் பொருட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 1,246 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  இதில், குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட 110 பேரும் வான் படையிலிருந்து தப்பிச் சென்ற நால்வரும், கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற மூவரும் உள்ளடங்குகின்றனர். இவர்களது கைரேகைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.   (மேலும்) 13.03..2017

______________________________________________________________________________________________________________

மீனவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை

இந்திய மீனவர் ஒருவர் கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி;;ச் சூட்டுக்கு இலக்காகி மரணமானதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக்கு இந்திய கடலோர காவல்படையினரிடம் தகவல் கோரியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன இது பற்றி தெரிவிக்கையில், அவ்வாறான துப்பாக்கி;ச் சூடு ஒன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதற்கான எந்தவொரு சாட்சியும் இல்லை என தெரிவித்தார். எவ்வாறாயினும், அந்த சம்பவம் தொடர்பாக கடற்படையினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த விழாவில் கலந்து கொண்டு ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன் இந்த கருத்தை வெளியிட்டார்.

______________________________________________________________________________________________________________

சீனாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் 63,000 அதிகாரிகளுக்கு தண்டனை

சீனாவில் ஊழலுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் கடந்த ஆண்டில் 63,000 அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.china-2  சீன அதிபராக ஜீ ஜின்பிங் கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அதுமுதல், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.அந்த வகையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஆண்டில் 45,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 63,000 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதில், ஓய்வு பெற்ற 35 அரசு அதிகாரிகளும் அடங்குவர். 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும் என சீன உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ழ்ஸாகு கியாங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   (மேலும்) 13.03..2017

______________________________________________________________________________________________________________

காத்தான்குடியில் தயார் நிலையிலிருந்த பெற்றோல் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கர்பலா வீதியில் kathankudiஇரண்டு பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.   இன்று  (12) ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் இந்த பெற்றோல் குண்டுகளை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த வீதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக சுத்தம் செய்து கொண்டிருந்த குறித்த வீட்டுப் பெண், மர்மமான போத்தல்கள் இரண்டு காணப்படுவதை அவதானித்துள்ளார்.இதனையடுத்து, பிரதேசவாசிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து காத்தான்குடி பொலிசாருக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுதத்து பொலிசார் அங்கு விரைந்து இந்த பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளனர்.   (மேலும்) 13.03..2017

______________________________________________________________________________________________________________

நடிப்புச் சுதேசிகள்

கருணாகரன்

தற்போது தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதங்களை எழுப்பியிருப்பது, இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வழங்க வேண்டும் எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைTNA MPSப்பு கோரிய விவகாரம். இதைவிட வேறு சில விசயங்களும் உண்டு. ஆனால், இதுவே முதல்நிலையில் உள்ள விவகாரமாகும்.   இந்தக் குற்றச்சாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக உரத்த தொனியில் முன்வைத்திருக்கிறது. தமிழ் ஊடக வெளியும் சீறிக் கொண்டேயிருக்கிறது. இணையத்தளங்கள் கூட்டமைப்பைக் கிழித்துத் தோரணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. முகப்புத்தகங்களைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. அவை நெருப்பாக எரிந்து கொண்டிருக்கின்றன. இதில் முதலாம் நிலைக்  குற்றவாளியாக்கப்பட்டிருப்பவர் சுமந்திரன். இரண்டாவது, மூன்றாவது நிலைக் குற்றவாளிகள் சம்மந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர். ஏனையோர் அடுத்த வரிசையில் இருப்பவர்கள்.ஆனால், பொதுப்பார்வையில் ஒட்டமொத்தமாகக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தவறென்றே கருதப்படுகிறது. தனிப்பட்ட சிலரின் நலன்களுக்காக வரலாற்றுத் துரோகத்தைக் கூட்டமைப்பு இழைக்கிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறது.    (மேலும்) 12.03..2017

______________________________________________________________________________________________________________

அரசியலுக்குள் ஒரு கருணா உதயமாகி உள்ளதுடன் ஸ்ரீலங்காவின் எதிர்காலம்

                                     இஃப்ஹ}ம் நிஸாம்

கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனின் சமீபத்தைய நகர்வான தமிழர் ஐக்கிய சுதந்திர மkaruna2ுன்னணி என்கிற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை சில அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பாராட்டியுள்ளார்கள். கருணா அம்மான் சொல்வதின்படி, புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதின் நோக்கம் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விதவைகள் மற்றும் போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகள் செய்வது என்பனாகும். இந்த கட்சி கிழக்கு - மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் அதில் வாழும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தும்.   எனினும் சமூகத்தின் சில பகுதியினர், கருணா அம்மான் போன்ற நபர்கள் ஜனநாயக நடைமுறைக்கு மாறாக வேலை செய்தவர்கள் மற்றும் குறிப்பாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருந்தவர்கள் அதனால் இவர்கள் அரசியல் கட்சியின் அங்கமாக இருக்கக் கூடாது என நம்புகிறார்கள்.    கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன், ஒரு உயர்மட்ட இராணுவ தளபதியாகவும் ஒரு சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஆகவும் இருந்தவர்.  (மேலும்) 12.03..2017

______________________________________________________________________________________________________________

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற அவகாசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடு

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கடும் நிபநvavuniya tna meeting்தனையுடன் கால அவகாசம் வழங்க வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எஃப் கட்சி இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை என தெரிவித்திருக்கின்றது.   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபைகளின் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.   இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பது குறித்து நீண்ட நேரம் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு இறுதியில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அந்தத் தீர்மானம் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.     (மேலும்) 12.03..2017

______________________________________________________________________________________________________________

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மை நிலையை தெரிய வேண்டிய காலம் கனிந்துள்ளது.

வீ.ஆனந்தசங்கரி       

நான் பழையவற்றை கிளறுகிறேன் என எவரும் என்மீது குற்றஞ் சுமத்தமாட்டீர்கள். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்தத்தை பற்றியும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு sangary4காண்பதற்காக கட்சிக்கு அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் வரிசை கிரமமாக கடந்தகால சம்பவங்களை சரியாக பதிய வேண்டிய புனிதமான கடமை என்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி;, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பற்றிய விடயங்களின் எல்லைக்குள் என்னை வரையறுத்துக்கொள்வேன். இன்றைய தலைமுறையினர் எமது கடந்தகாலத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்தும் பூரணமாக தெரியாமலும் இருப்பதால் எனது முயற்சி பெரிதாக பாராட்டப்படுமென எண்ணுகிறேன். ஏனெனில் இது உண்மை சரித்திரம். சரித்திரத்தை பல கோணங்களிலும் ஆராயும் பக்குவத்தை கொண்டவனல்ல நான். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆரம்பகால உறுப்பினர் என்பதால் அவற்றினதும் அவற்றின் தலைவர்கள் பற்றிய வரலாற்றை கூறக்கூடிய தகுதிபெற்ற தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவன். அதுமட்டுமல்ல தற்போது இயங்குகின்ற இலங்கை தமிழரசு கட்சிக்கும், அதற்குப் பதிலாக தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டுச்சென்ற பெருந்தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழரசு கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை.   (மேலும்) 12.03..2017

______________________________________________________________________________________________________________

கருணாவின் புதிய கட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவkaruna officeர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   இன்று காலை மட்டக்களப்பு, கல்லடி, புதிய கல்முனை வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.   முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உபதலைவரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.    இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.    இதன்போது விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கட்சி தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யாத நிலையிலேயே தமிழர்களுக்கான புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக இங்கு உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

______________________________________________________________________________________________________________

கேப்பாப்பிலவில் இருவர் உண்ணாவிரதம்: நில விடுவிப்புப் போராட்டம் தீர்வின்றித் தொடர்கிறது

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்தில் இன்று இkeppapilavu-5ருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், கேப்பாப்பிலவு மக்களின் நில விடுவிப்புப் போராட்டம் தீர்வின்றித் தொடர்கின்றது.படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தின் பதினொராவது நாள் இன்றாகும்.சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களின் 128 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை, கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.பல வருடங்களாக குறித்த பகுதியில் வசித்து வரும் தமக்கான காணி உரிமத்தை வழங்க வேண்டும் என்பதே பன்னங்கண்டி மக்களின் கோரிக்கையாகும்.

______________________________________________________________________________________________________________

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.amithsha   மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.    (மேலும்) 12.03..2017

______________________________________________________________________________________________________________

காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்; இருவர் கைது

காத்தான்குடியில் நேற்று (10.3.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.   தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் (10.3.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெறவிருந்த நிலையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.   இந்த மோதல் சம்பவத்தில் வாள்வெட்டு மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் இரண்டு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்துள்ளதாகவும், அதில் வாள்வெட்டுக்கு இழக்கான ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்வீச்சினால் காயமடைந்த இருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் தெரிய வருகின்றது.   இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர்.   சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

______________________________________________________________________________________________________________

ஜெனிவா என்ற பெருந்திருவிழா ஒரு பம்மாத்து அரங்கு

           கருணாகரன்

“போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல், அரசியலமைப்புத்திருத்தம் போன்றவற்றில் இலங்கைக்குக் கால அவகாசத்தைக் கொடுப்பதற்காகச் சுமந்திரன் கடுமையாகப் பாடுபடுகிறார். இதற்காக ஜெனீவாவுக்குப்போய், அgenewaங்கே 13 நாடுகளின் முக்கிஸ்தர்களிடம் சுமந்திரன் இதைக் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்” என்று சுமந்திரன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார் கஜேந்திரகுமார். “இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் சுமந்திரனுக்கு ஏன் இந்தளவு கரிசனை?” என்று கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் கஜேந்திரகுமார்.   கஜேந்திரகுமார் இப்படிச் சொல்லும்போது சுமந்திரனின் மீது அநேகமான தமிழர்களுக்குக் கொதிப்பும் கோபமும் எழக்கூடும். அப்படி எழுந்துமிருக்கிறது. பலரும் சுமந்திரனையும் சம்மந்தனையும் திட்டித்தீர்க்கிறார்கள். ஜெனிவாவில் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது சனங்களின் கோபம் வரவரக் கூடி வருகிறது. அதிருப்தி பெருத்துக் கொண்டிருக்கிறது. கஜேந்திரகுமாரின் நோக்கமும் அதுதான். குழம்பிய குட்டையில் தனக்கான தங்க மீனைப்பிடித்துக் கொள்வது. இதனால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமை மீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்  தீவிரமாகச் செயற்படுகிறார். அதற்குத் தோதாக  இந்த மாதிரி விசயங்கள் கஜேந்திரகுமாருக்குப் பயன்படுகின்றன.   (மேலும்) 11.03..2017

______________________________________________________________________________________________________________

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்; அரசு ஆராய்வு

தலைநகர் கொழும்பில் நாளாந்தம் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்கFamers-protestள் காரணமாக நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டங்கள். ஊர்வலங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை இவ்வாறான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை வாரத்தில் ஒரு நாளில் மட்டும் நடத்தக்கூடியதான செயல் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களால் தலைநகரினதும், மக்களதும் இயல்புநிலை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கடந்த பல மாதங்களில் தினசரி ஏதாவது பிரச்சினையை முன்வைத்து நாட்டின் பொருளாதார கேந்திர நிலையமான கொழும்பு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றன.   (மேலும்) 11.03..2017

______________________________________________________________________________________________________________

தனி ஒரு சிகரட் விற்பனை செய்வதற்கான தடை வரவேற்புக்குறியது

தனி சிகரட் விற்பனை செய்வதை தடைசெய்வதற்கான சட்டம் இயற்றுவதற்கு அதிகcigaratteாரிகள் கவனம் செலுத்தி இருப்பதை வரவேற்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. b  அது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை விரைவாக தாக்கல் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்.  இலங்கையினுள் சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான 10 யோசனைகள் அடங்கிய பட்டியல் ஒன்று தமது சங்கத்தினால் இதற்கு 06 மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.  சிகரட்டுக்களை ஒவ்வொன்றாக அல்லது குறைந்தளவு சிகரட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட பெட்டிகளை விற்பனை செய்வது தடைசெய்யப்பட வேண்டும் என்பது அந்த யோசனைப் பட்டியலில் முதலில் கூறப்பட்டிந்த முக்கியமான விடயமாகும் என்று அவர் மேலும் கூறினார்.அதன்படி இப்போதாவது இதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருப்பது சந்தோஷப்பட வேண்டிய விடயமாகும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் கூறியுள்ளார்.

______________________________________________________________________________________________________________

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 77 பேர் இன்று விடுதலை சindian fishersெய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது. அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 இந்திய மீனவர்களும் மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விடுவிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது. அவர்களை இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரிடம் விரையில் ஒப்படைத்து, அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

ஜெர்மனி ரயில் நிலையத்தில் கோடரித் தாக்குதல்: 9 பேர் காயம்

ஜெர்மனியின் டஸல்டார்ஃப் நகர ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட கோடரித் தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்.  வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த அந்த சம்பவம் தொடர்பாக கொசோவோவைச் சேர்ந்த ஃபத்மீர் என்கிற 36 வயது நபர் கைது செய்யப்பட்டார்.  டுஸல்டாஃப் நகரின் பிரதான ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் இருந்து இறங்கிய அவர் தன்னிடமிருந்த கோடரியால் பயணிகளை திடீரென தாக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிரடிப் போலீஸார் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். தப்பியோட முயன்ற அந்த நபரை போலீஸார் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மிகுந்த பதற்ற நிலையில் இருப்பது தெரிய வந்தது. இது போன்ற செயலில் ஈடுபட்டால், போலீஸார் தன்னை சுட்டுக் கொல்வார்கள் என்று எதிர்பார்த்ததாக அவர் விசாரணையின்போது தெரிவித்தார்.

______________________________________________________________________________________________________________

வறட்சியில் இலங்கை; இலட்சக்கணக்கானவர்கள் பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடையை விட சுமார் 5 இலட்சத்து 45,000 மெட்ரிக் தொன் குறைவடைந்திருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.   பெரும்போகத்தில் சுமார் 19 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்ய எதிர்பார்த்த போதிலும் வறட்சி காரணமாக அது 13 இலட்சம் மெட்ரிக் தொன்களாக குறைவடையலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.   இதேவேளை எதிரில் ஏற்பட வாய்ப்புள்ள உணவு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்க தயாராகுமாறு ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.   எவ்வாறாயினும் இந்தோனேசியா, இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு அரிசி உதவி கிடைக்கப் பெறுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார்.   இதுதவிர நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக 03 இலட்சத்து 20,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 12 இலட்சம் பேர் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.   நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

அவுஸ்திரேலியா - மெல்பனில்   அனைத்துலக பெண்கள் தின விழா

பெண்களின் ஆளுமைப்பண்புகள் தொடர்பான நிகழ்ச்சிகளின் அரங்குகள்

சனிக்கிழமை 11 ஆம் திகதி (11-03-2017)

அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக  கலை இலக்கியப்பணிகளை முன்னெடுத்துவரATLAS Logo01ும்   தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான அனைத்துலக பெண்கள் தின விழா நாளை சனிக்கிழமை 11 ஆம் திகதி (11-03-2017) மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.    மெல்பனில் பல வருடங்களாக கலை, இலக்கியம், கல்வி, மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் ஏழு மூத்த பெண்மணிகள் இவ்விழாவை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள்.   கண்காட்சி, கருத்தரங்கு, மெல்லிசை அரங்கு, நடன அரங்கு, பட்டி மன்றம், ஆவணப்படக்காட்சி என்பனவற்றுடன் சிங்கப்பூரிலிருந்து வருகை தரும் எழுத்தாளர் திருமதி கௌரி அனந்தனின் சிறப்புச்சொற்பொழிவும் இடம்பெறும்.  அனுமதி இலவசம்.         (மேலும்) 10.03..2017

______________________________________________________________________________________________________________

பிரபாகரனின் வரலாற்றுத் தவறுகள்

                                          புறூஸ் தமிழ்சன்

முதலாவதாக சிறுபான்மை தமிழர்களுக்கும் மற்றும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் பல தசாப்தங்களாக ஒரு இனப்பிரச்சினை இருந்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை உpraba1ள்ளது. சேர். பொன் இராமநாதன் மற்றும் சேர்.பொன் அருணாச்சலம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் சிறுபான்மை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த திரு,ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் திரு.செல்வநாயகம் போன்ற மற்றவர்கள் தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காக அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ஆனால் பெரும்பான்மை சிங்களவர்கள் அவர்களை எப்படி நடத்தினார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் பல வழிகளில் தமிழர்கள் இன ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உள்ளானார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை மற்றம் அரசியல் நிலமைகள் வன்முறைகளை தெரிவு செய்வதற்கு தமிழர்களைக் கட்டாயப் படுத்தின. மற்ற எல்லா நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததின் பின்பே தமிழர்கள் வன்முறை நடவடிக்கைகளைப் பற்றிப் பிடித்தார்கள் என்பதை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நியாயமாகக் கருதலாம்.   (மேலும்) 10.03..2017

__

Theneehead-1

Vol: 14                                                                                                                                                21.03.2017

dantv

முதற்பக்கம்

இணையங்கள்

பூமரங்

இலங்கை மாணவர் கல்வி நிதியம்

முன்னைய பதிவுகள்