Theneehead-1

Vol: 14                                                                                                                                                                17.04.2017

வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் க.சிவப்பிரகாசம் அமெரிக்காவில்  மறைந்தார்

( தகவல்: முருகபூபதி - அவுஸ்திரேலியா)

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கந்தசாமி சிவப்sivaபிரகாசம் கடந்த வெள்ளியன்று 14 ஆம் திகதி அமெரிக்காவில் வேர்ஜினியா மாநில மருத்துவமனையில்  காலமானார்.  கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவருக்கு வயது 83. 1966 ஆம் ஆண்டு முதல்,  ஆரம்பத்தில் வீரகேசரியின் இணை ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும்  1983 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார்.  1983 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.  அதன்பின்னர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். அங்கு நீண்டகாலம் பொஸ்டன் மாநிலத்தில் வசித்தார். அவருடைய அன்புத்துணைவியாரும் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் அவர்களுக்கு இரண்டு பேரக்குழந்தைகள்.  இலங்கையின் வடபுலத்தில் மாதகலில் பிறந்திருக்கும் சிவப்பிரகாசம்   1958  இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார  பட்டதாரியானவர்.   (மேலும்) 16.04..2017

______________________________________________________________________________________________________________

இளம் வயதிலேயே சிகிச்சை! ஸ்மார்ட்ஃபோன் அபாயம்!

அமெரிக்காவில் பதிமூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோsmarthoneன், வீடியோ கேம் போன்ற பல டிஜிடல் விஷயங்களுக்கு அதி வேகமாக அடிமையாகிவருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியாமல் அவதியுறுகிறார்கள் பெற்றோர்கள். இவர்களுக்கான சிகிச்சை சமீபத்தில் அறிமுகமாகிவிட்டது என்கிறது அமெரிக்க மீடியா செய்தி.  சியாட்டில் அருகில் ‘தி ரீஸ்டார்ட் சென்டர்’ (The reSTART Life Centre) எனும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் வீடியோ கேம்களுக்கு தீவிரமாக அடிமையாகிவிட்ட இளைஞர்களுக்கான சிகிச்சையை வழங்கப்படுகிறது என்கிறது ஸ்கை ந்யூஸ். 13 வயதிலிருந்து 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான இந்தச் சிகிச்சைக்கு செரினிட்டி மவுண்டன் (Serenity Mountain) என்று பெயரிடப்பட்டுள்ளது. மெய்நிகர் உலகில் எந்த திசையிலிருந்து, எத்தகைய ஆபத்து ஏற்படும், அது எந்த அளவுக்கு இளம் வயதினரை பாதிப்படையச் செய்துவிடும் என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாது.   (மேலும்) 16.04..2017

______________________________________________________________________________________________________________

மீத்தொட்டமுல்லயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமை இயற்கை அனர்த்தமா? விசாரணை ஆரம்பம்

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்kuppai1து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.  இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன இதனைக் கூறியுள்ளார். ராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ராணுவப் பேச்சாளர் அத தெரணவுக்கு தெரிவித்தார்.  இதேவேளை, மீத்தொட்டமுள்ள குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் அரசாங்க செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இன்று (15) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் கூடிய கொழும்பு மாவட்ட இணைப்பு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   (மேலும்) 16.04..2017

______________________________________________________________________________________________________________

நேரத்தை வீணடிக்கலாமா?

By எஸ். ஸ்ரீதுரை 

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று சேலம் மாநகரில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்தவரோ சமீப காலSALEMமாகப் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ள இளம் கதாநாயகி ஒருவர்.  பிரபலங்களைப் பார்க்க முண்டியடிப்பது நம் நாட்டில் சகஜம்தானே? அதுவும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்  என்றால் பொது மக்கள் அவரை ஒரு முறை தரிசித்து ஜென்ம சாபல்யம் அடைய முட்டி மோதுவது ஒன்றும் புதிதில்லையே. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்த இளம் நடிகையைப் பார்க்கவும் நூற்றுக் கணக்கில் இளைஞர்கள் கூடி விட்டனர்.நிகழ்ச்சி நடந்ததோ சேலம் நகரின் பிரதான சாலைகளில் ஒன்று (ஓமலூர் சாலை). ஆயிரக்கணக்கான வாகனங்கள் விரையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். பல அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமின்றி சேலம் மத்தியப் பேருந்து நிலையமும் அமைந்துள்ள பரபரப்பான இடம்.  (மேலும்) 16.04..2017

______________________________________________________________________________________________________________

போர்பதற்றம்: சீனாவில் இருந்து வட கொரியா செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்

சீனாவில் இருந்து வட கொரியா செல்லும் அனைத்து விமான சேவைகளையுமnordkorea் அந்த நாடு அதிரடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வடகொரியா இன்று அணுகுண்டு சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வடகொரியா சோதனை நடத்தினால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா படைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாப்படுகிறது.  வழக்கமாக அவரது பிறந்தநாளில் பிரம்மாண்ட ராணுவ ஒத்திகை அல்லது ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொள்ளும்.  இந்த முறை அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியதை அமெரிக்காவின் செயற்கைகோள் படங்கள் உறுதி செய்தன.இதையடுத்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் தலைமையிலான போர் குழுவை அனுப்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது தாக்குதலுக்கு தயாராக உள்ளது.    (மேலும்) 16.04..2017

______________________________________________________________________________________________________________

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் ஈரான் பிரஜை கைது!

இருபது கிலோகிராம் ஹெரோய்ன் பொதைப் பொருளுடன் நாட்டுக்கு வந்த ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். அவற்றின் பெறுமதி 20 மில்லியன் ரூபா என்று சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இவை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  நேற்று இரவு டுபாயில் இருந்து வந்த ஈ.கே. 648 என்ற விமானத்தில் வந்திருந்த குறித்த சந்தேகநபர் இன்று காலை வரை விமான நிலையத்தில் மறைந்து இருந்துள்ளார்.  சுங்க திணைக்கள அதிகாரிகள் சந்தேகங் கொண்டு குறித்த ஈரான் பிரஜையை சோதனைக்கு உட்படுத்தியதையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதுடன், அவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ கூறினார்.

______________________________________________________________________________________________________________

 சிரியா மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

சிரிய விமானத்தளம் ஒன்றின்மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்திருsyria conflictப்பதன்மூலம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களும் இதர அமெரிக்க ஜனாதிபதிகளைப் போலவேதான், சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதிப்பதற்கோ, சுதந்திரமான நாடுகளின் இறையாண்மையை மீறுவதற்கோ தயங்காதவர்  என்பதைக் காட்டிவிட்டார். சிரிய அரசாங்கத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிராக முதல் ராணுவ நடவடிக்கையை  மேற்கொண்டிருப்பதன் மூலம், டிரம்ப் குறித்து கற்பிதம் செய்யப்பட்டிருந்த பல செய்திகளை போலியானவை என்று அவரே முன்வந்து சிதறடித்துவிட்டார். அமெரிக்காவின் ஜனாதிபக்கான தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இதே டிரம்ப் அமெரிக்க அரசாங்கம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களில் மிகப் பெரிய அளவிற்கு செலவு செய்து வருவதாகக் கூறி இதனைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால் “ஆட்சி மாற்றம்” அவசியம் என்றும் கூறி வந்தார். உண்மையில், 2013இல் சிரிய அரசாங்கம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அதன்மீது ஒபாமா அரசாங்கம் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டபோது அவ்வாறு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என அதனை  டிரம்ப்  எச்சரித்திருந்தார்.  (மேலும்) 15.04..2017

______________________________________________________________________________________________________________

புத்தாண்டு செய்தி: சொல்லப்படாத அவலங்கள்

          கருணாகரன்

இன்று இந்த நாட்டிலே இன்னும் ஒரு தொகுதியினர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல், கண்ணீரும் கவலையுமாகத் தங்களுடைய நாளைக் கழித்துகvanni-6் கொண்டிருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல, இவர்கள் ஆண்டுக்கணக்காக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் கவலையோடும் கண்ணீரோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் “கண்ணீரோடும் கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்வதே தவறு. மகிழ்ச்சியாக இருந்தால்தான் யாராலும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். இல்லையென்றால், அது வாழ்க்கையாக இருக்காது. மரணக்களமாகவே இருக்கும். இப்படிக் கண்ணீரோடும் கவலையோடும் தினமும் இருப்பதென்பது, மெய்யாகவே தினமும் இறந்து கொண்டிருப்பதற்குச் சமம். தினமும் இறந்து கொண்டிருப்பவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இன்றைய நாளைக் கொண்டாட முடியும்?  இந்த நாட்டிலே இவர்களுக்குப் பண்டிகைகள் கிடையாது. மகிழ்ச்சி கிடையாது. கொண்டாட்டம் இல்லை. இன்று, இந்தப் பண்டிகை நாளிலும் இவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் முடிவு தெரியாமல், தகரக்கொட்டகைகளுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கைகளிலே பொங்கல் பிரசாதமோ இனிப்போ, மலர்களோ இல்லை. மனதிலே களிப்பில்லை. துக்கத்தாலும் அலைச்சல்களாலும் களைத்துப் போன உடலில் துயரம் இருளாக அப்பியிருக்கிறது. கைகளிலே மலர்களுக்கும் இனிப்புகளுக்கும் பதிலாக காணாமல் ஆக்கப்பட்ட இவர்களுடைய உறவுகளின் ஒளிமங்கிய புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. முன்பொரு காலம் இப்படியான புத்தாண்டு நாளில் காணாமல் ஆக்கப்பட்ட அந்த உறவுகள் தங்களோடு கூடிக் களித்திருந்த நினைவுகள் இவர்களுடைய நினைவுகளில் மேலெழுந்து வருகின்றன. கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது.   (மேலும்) 15.04..2017

______________________________________________________________________________________________________________

''வடை விற்ற முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?''-கேள்வி.

''ஏழு மாடியல்ல பத்து மாடிகள் கட்டுகிறேன்.''-பதில்!

எஸ். ஹமீத்

''ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்?'' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி   கொழும்பு ஊடகம் ஒன்றிடம் எழுப்பிய கேள்விக்கு '' நான் ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலையல்ல, பத்து மாடிகள் கொண்ட ஹோட்டலையே கட்டுகிறேன்!'' என்று முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.  ஏட்டிக்குப் போட்டியான இந்த அரசியல்வாதிகளின்  குற்றச்சாட்டும் பதிலும் இலங்கை அரசியல் அரங்கில் தற்போது நிலவும் சித்திரை வெயிலை விட மிக அதிகமான சூட்டுடன் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் விபரம் வருமாறு:''ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்? இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? சாமர சம்பத் இந்தப் பணத்தை வீட்டிலிருந்து கொண்டு வந்தாரா?   (மேலும்) 15.04..2017

______________________________________________________________________________________________________________

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தது; பல வீடுகளுக்கு சேதம்

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து kuppaiவிழந்ததில் அப்பிரதேசத்தில் சற்று அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. குப்பை மேடு சரிந்து விழந்ததன் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள பல வீடுகுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் காயமடைந்த 06 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி உரிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.  இதேவேளை குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றி அதனுள் பெகோ இயந்திரம் ஒன்று சிக்கியுள்ளதுடன், விமானப்படையின் பெல் 212 வகை ஹெலிகப்டர் தீயை அணைப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.  (மேலும்) 15.04..2017

______________________________________________________________________________________________________________

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் 40 பேர் இணைப்பு

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை விஸ்தரிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 40 பேர் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் குறிப்பிட்டது. விசேட தெரிவுக்குழுவொன்றின் ஊடாகவே இந்த உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.  இந்த குழுவினருக்கு நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் சென்று சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்தது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பில் 7292 பேர் கைது செய்யப்பட்டுள்ளதா

______________________________________________________________________________________________________________

எனக்கு ஒரு போன் செய்திருக்கலாமே? இளையராஜா மீது எஸ்பிபி ஆதங்கம்!

காப்புரிமை விவகாரம் தொடர்பாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தகவல் சொல்லியிருக்கலாம். அதற்குப் பதிலாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது மனத்தைக் காயப்படspb_duelுத்தியது என்று பாடகர் எஸ்பிபி பேட்டியளித்துள்ளார். திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னையை ஃபேஸ்புக்கில் தெரிவித்த எஸ்பிபி இவ்வாறு கூறினார்: இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.   (மேலும்) 15.04..2017

______________________________________________________________________________________________________________

மூன்று பிள்ளைகளுடன் படகில் இந்திய சென்ற பெண்ணிடம் விசாரணை

இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் பொலிசார் விசாரணை செய்து வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.women inguiry   மாமியாரின் கொடுமை காரணமாக இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளி தமிழ் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் நேற்று வியாழக்கிழமை 3 குழந்தைகளுடன் தத்தளித்த இலங்கை பெண் அகதியை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தங்கம் (28). இவரது குழந்தைகள் லட்சிகா (5), ஜஸ்னிகா (4), சுபிக்சன் (1) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலோரக் காவல் துறையால் மீட்கப்பட்ட இவர்கள் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.   (மேலும்) 15.04..2017

______________________________________________________________________________________________________________

தமிழ்க்கவி: தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

- கருணாகரன்

கரைச்சி கலாசாரப் பேரவை வெளியிட்டிருக்கும் “கரை எழில் 2016“ tamilkaviஎன்ற மலரில் தமிழ்க்கவி எழுதிய “கிளிநொச்சியும் மலையகத்தமிழரும்“ என்ற கட்டுரை பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தற்போது கிளிநொச்சியிலும் தமிழ்ச்சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மட்டங்களிலும் இந்த விவகாரம் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இதற்குக்காரணம், குறித்த கட்டுரையில் கிளிநொச்சியில் உள்ள மலையகத்தமிழ்ச் சமூகத்தினர் தமிழ்க்கவியினால் இழிவு படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுவதே. தமிழ்க்கவியைக் கடுமையாகச் சாடியும் ஆதரித்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன. சிலர் மட்டுமே கட்டுரையைப் படித்திருக்கின்றனர். பலர் கட்டுரையை முழுமையாக வாசிக்காமலே விவாதங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்படியானவர்கள் எத்தகைய பொறுப்பும் கண்ணியமும் இல்லாமல் மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைச் செய்திருக்கிறார்கள். சிலர் இன்னும் கீழிறங்கி, தமிழ்க்கவியைத்தனிப்பட்ட முறையில் வார்த்தைகளால் தாக்கியிருக்கிறார்கள். அவரை மண்டையில் போட வேணும். அவருக்கு வயதாகி விட்டதால், அறளை பேர்ந்து விட்டது என்றவாறெல்லாம் எழுதித்தள்ளியிருக்கிறார்கள்.   (மேலும்) 14.04..2017

______________________________________________________________________________________________________________

நினைவலைகள்:

வீரகேசரி  முன்னாள்  ஆசிரியர் க. சிவப்பிரகாசம்

இலங்கையில் நெருக்கடியான காலப்பகுதியில்  தமிழ் இதழியல்  பாதையில்  நிதானமாக  நடந்தவர்

                                                                                       முருகபூபதி

எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம்  வீரகேசரி,   எத்தனையோ காலமாற்றங்களை   சந்தித்தவாறு  தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது.  வீரகேசரி  துளிர்விட்ட  வருடம் 1930. siva விருட்சமாக  வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள்,  எத்தனைபேர்  அதற்கு  நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர்  அந்த  நிழலின்  குளிர்மையை  நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள்  என்பதெல்லாம் அதற்குத்தெரியாது.   வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே  நிற்கிறது. பின்னாளில்  அதன்வழிகாட்டுதலில்   வந்தவர்களில்  ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார்.   அவருக்கு  தற்பொழுது 82 வயதும்  கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம்.வருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள்  வீரகேசரியில் அவருடன்  இணைந்து பணியாற்றியவருமான  வீரகேசரியின்  முன்னாள் விநியோக - விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம்  நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில்  சொன்னார்.  அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு  வந்து  எனது  கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை  மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன்  மின்னஞ்சலில்  அனுப்பியிருந்தார்.   (மேலும்) 14.04..2017

______________________________________________________________________________________________________________

 புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்

 சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார்

 தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனரchandrakumar-04217், நம்பிக்கையோடு தெரிவ செய்த அரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர்.  இதனால்தான் மக்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்காக அணிதிரளும் நிலைக்குள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்  அமைப்பாளருமான முருகேசு சந்;திரகுமார் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பிரதேசத்தில்  சமத்துவம், சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்  மக்களின் உணர்வுகளையும், வலிகளையும் புரிந்துகொள்கின்ற அரசியல் தலைவர்கள் தற்போது இல்லை. இதனால், தமிழ் மக்களுடைய  அடிப்படை பிரச்சினைகள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை தீர்க்கப்படாது நீண்டு கொண்டிருக்கிறது. காணிப் பிரச்சினை.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, வேலையில்லா பிரச்சினை என எல்லாப்பிரச்சினைகளும்  தீர்வின்றி தொடர்கிறது. இதற்காக மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றார்கள்.  (மேலும்) 14.04..2017

______________________________________________________________________________________________________________

சிறுநீரக நோயினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்பு: அதிர்ச்சியில் தட்டான்குளம் கிராம மக்கள்

நாட்டில் மூன்று தசாப்தகாலம் நிலவிய யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, thattankulamபின்னர் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், சொல்லொண்ணாத் துயரங்களை சுமந்து நிற்கின்ற பலர் எம்மில் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் காரணமாக 1995 ஆம் ஆண்டில் வடக்கின் கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் வவுனியா தட்டான்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட ஒரு பகுதியினர் கடுமையான சிறுநீரகப் பாதிப்பிற்கு முகங்கொடுத்து வருகின்றமை பதிவாகியுள்ளது. வவுனியா, வெண்கல செட்டிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கிராமமே தட்டான்குளம்.  வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, வவுனியா – பூந்தோட்டம் மற்றும் நெலுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களில் 135 குடும்பங்கள் 2006 ஆம் ஆண்டில் தட்டான்குளம் கிராமத்தில் மீள்குடியேறினார்கள்.நாளாந்தம் தோட்டம் செய்தல், கூலித்தொழில் போன்றவற்றை செய்து தங்களின் சீவியத்தை நடத்திவரும் இந்த மக்களின் எமனாக சிறுநீரக பாதிப்பு மாறிவருகின்றது என்றால் மிகையாகாது.  (மேலும்) 14.04..2017

______________________________________________________________________________________________________________

மலாலாவுக்கு கனடா கெளரவக் குடியுரிமை!

கனடாவின் கெளரவக் குடியுரிமை பெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நாடாளுமன்றத்தில் உரையாற்றச் செல்லும் மலாலா யூசப்சாய்.mala

பாகிஸ்தானில் தலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பின்னர் பெண்கள் கல்வியை வலியுறுத்தி சமூக சேவையாற்றியமைக்காக நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய் (19), கனடாவின் கெளரவ குடியுரிமை பெற்றார். அவருக்கு கெளரவக் குடியுரிமை வழங்குவதாக கனடா கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. அது தொடர்பான அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி தலைநகர் ஒட்டாவாவில் புதன்கிழமை நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்ற வளாக கோபுரத்தில் பறக்க விடப்பட்ட தேசியக் கொடி அவருக்கு வழங்கப்பட்டது. குடியுரிமை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கனடா நாடாளுமன்றத்தில் மலாலா உரையாற்றினார்.  அப்போது அவர் குறிப்பிட்டதாவது: முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி7-இன் தலைமையை கனடா அடுத்த ஆண்டு ஏற்கவுள்ளது. ஜி7 தலைமைப் பொறுப்பு வகிக்கும் காலத்தில், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கல்விச் செல்வத்தை இழக்க நேரிடும் சிறார்களின் கல்வி உரிமையைக் காக்க கனடா குரல் கொடுக்க வேண்டும். வீட்டையும் நாட்டையும் இழக்கும் சிறார்கள் தங்களின் கனவுகளையும் இழந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று தனது உரையில் மலாலா குறிப்பிட்டார்.   (மேலும்) 14.04..2017

______________________________________________________________________________________________________________

வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்ப பெண் சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு கிணற்றில் இருந்து குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  வவுனியா, கூமாங்குளம், வள்ளுவர் கோட்டம் பகுதியியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் நேற்றுமதியம் 12.45 மணி முதல் காணாமல் போயிருந்தார். இவரை அவரது உறினர்கள் தேடிய நிலையில் இரவு 7.30 மணியளவில் வீட்டு வளவில் உள்ள கிணற்றில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சிறிகாந்தன் புஸ்பலதா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

______________________________________________________________________________________________________________

வடக்கில் இன்புளுவன்சா வைரஸ் பாதிப்பு விபரம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 510 பேர் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.  இதுவரை இவ்வருடம் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை 95 பேர்களின் இரத்தப் பரிசோதனையினை கொழும்புக்கு அனுப்பி இருந்தோம். அந்தவகையில் 36 பேருக்கு இந்த நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீ பவானந்த ராஐா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் H1,N1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று இன்று (13) யாழ் போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது..இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.H1, N1 என்பது இது புதியதாக இனகாணப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும்.   (மேலும்) 14.04..2017

______________________________________________________________________________________________________________

"ரசாயனத் தாக்குதல் 100% கற்பனை'

சிரியா ராணுவம் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தியதாகக் கூறப்படுவது 100 சதவீதம் கற்பனையானது என்று அதிபர் பஷார் அல்-அஸாத் கூறினார்.  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டassathியில் அவர் தெரிவித்ததாவது: சிரியாவிடம் இருந்த அனைத்த ரசாயன ஆயுதங்களையும் பல ஆண்டுகள் முன்னரே ஐ.நா.விடம் ஒப்படைத்து, அதன் மேற்பார்வையில் அழிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட எந்த ரசாயன ஆயுதமும் எங்களிடம் இல்லை. அப்படியொரு தாக்குதல் நடத்த யாரும் ஆணையிடவில்லை; தாக்குதலும் நடைபெறவில்லை. கான் ஷேகுனில் ரசாயனத் தாக்குதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது 100 சதவீதம் கற்பனை. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுப்பதற்கு ஏதாவது காரணம் வேண்டும் என்பதற்காக உருவாக்கிய கட்டுக்கதைதான் ரசாயனத் தாக்குதல் சம்பவம். பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா கூட்டு வைத்துள்ளது. அல்-காய்தாவின் கிளை அமைப்பிடமிருந்துதான் தாக்குதலுக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. விடியோ காட்சிகளை நம்ப இயலாது. பல போலி விடியோக்கள் வலம் வருகின்றன. பாரபட்சமில்லாத பன்னாட்டு விசாரணைக் குழு இதைப் பற்றி விசாரிக்க நான் அனுமதிப்பேன் என்றார் அவர்.

______________________________________________________________________________________________________________

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட எரிஸ் 13 கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு நாட்டை வந்தடைந்துள்ளனர். நேற்று மாலை டோஹாவில் இருந்து வந்த விமானம் ஒன்றில் அவர்கள் நாட்டுக்கு வந்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.  கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் 08 இலங்கையர்களுடன் எரிஸ் 13 என்ற கப்பல் கடத்தப்பட்டிருந்தது. பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டுடன் புட்லண்ட பாதுகாப்பு பிரிவினரால் கப்பலும் அதில் இருந்த இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.  இவ்வாறு விடிவிக்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

______________________________________________________________________________________________________________

கலாச்சார விழாக்கள்: மாறுதல் தேவை

 கருணாகரன்

ஊரே தோரணங்களினாலும் வாளைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருIMG_5849ந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம். கூத்தும் நடனமும் விருதும் விருந்துமாகக் கொண்டாடிக் கழிந்த இரவுப்பொழுது. ராஜாக்களின் (மன்னராட்சி) காலத்தில்தான்  இப்படியெல்லாம் இருந்ததாக அறிந்திருக்கிறோம். அது உண்மையா இல்லை, வெறும் கதைதானா என்று தெரியாது. ஆனால், இப்போது நடந்திருப்பது உண்மை. கிளிநொச்சியில் உள்ள மலையாளபுரம் என்ற ஊரிலேயே இதெல்லாம் நடந்திருக்கிறது. கிளிநொச்சியின் பெரும்பாலான இடங்களில் இருந்தும் கலைஞர்களும் சனங்களும் உத்தியோகத்தர்களும் நிர்வாக அதிகாரிகளும் வந்து கூடியிருந்தனர். தங்களுடைய கிராமத்தில் கலாச்சார விழா நடக்கிறது என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக மலையாளபுரம், பாரதிபுரம் மக்கள் ஊரை அலங்கரித்தே வெளிப்படுத்தியிருந்தார்கள். ஊர் கூடித் தேரிழுப்பதைப்போல, ஊர்கூடி விழாக்கொண்டாடியது. இந்தத்தடவை கரைச்சிப் பிரதேச செயலகத்தின் கலாச்சார விழா, மலையாளபுரம் கிராமத்தில் நடத்தப்பட்டது. வழமையாகப் பிரதேச செயலகங்களில் அல்லது நகரில் உள்ள பொது மண்டபங்களில் நடத்தப்படுகின்ற கலாச்சார விழா, கிராமத்தை நோக்கி நகர்ந்திருப்பது சிறப்பு. இது நல்லதொரு தீர்மானமும் கூட.   (மேலும்) 13.04..2017

______________________________________________________________________________________________________________

 சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்

நடேசன்

ரோமர்கள் சாபோ மலை உச்சியில் மிருகங்களைப் பலி கொடுத்து, அதavalagal-fbை எரிக்கும்போது அங்கிருந்து வந்த மரக்கரியும்(KOH) மிருகக்கொழுப்பும் மழையில் கழுவி அருவியுடன் சேர்ந்தது. அந்த அருவியுடன் கலந்த நீரோடையில் மிதந்து வந்த மிருக எச்சங்கள் கலந்த இடத்தில் ரோமன் மகளிர் துணிகள் துவைக்கும் போது அவை எதிர்பாராமல் பிரகாசமாக வந்தன.   இதுவே சவர்க்காரம் உருவாகிய கதை. இன்னமும் சவர்க்காரம் செய்வதை சபோனிபிக்கேசன் (Saponification) என்பார்கள்.  விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் தவிர்த்து, போராட்ட முடிவில் கிடைத்த ஒரு நன்மை என்பது இயக்கப்போராளிகளாக இருந்தவர்கள் இலக்கியவாதிகளாக மாறியதாகும்.  இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல இயக்கத்தை எதிர்த்து பேனை எடுத்த என் போன்றவர்களும் தமிழ்வெளிக்கு ரோமர் காலத்தில் கிடைத்த சவர்க்காரம் போன்றவர்களே.  அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் பிரான்சில் வதியும் சாத்திரி. அவரது தொடர்பு கவிஞர் கருணாகரனால் எனக்குக் கிடைத்தது.   (மேலும்) 13.04..2017

______________________________________________________________________________________________________________

மலையக மக்களை இழிவுப்படுத்தியதால் நிறுத்தப்பட்டது கரை எழில் நூல் விநியோகம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருkarai ezhilகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம்.  ஒவ்வொரு  வருடமும்  பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில்   கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் தமிழ்க்கவி என்பவரின் கட்டுரையும் வெளிவந்துள்ளது. குறித்த கட்டுரையில் எழுத்தாளர்  கிளிநொச்சி வாழ் மலையக தமிழர்களை மிக மோசமாக  இழிவுப்படுத்தும் வகையில்  கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றார்.  குறித்த கருத்துக்களுக்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக  கடந்த 08-04-2017 அன்று மலையாளபுரம் கிராமத்தில் இடம்பெற்ற காலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட 15 வரையான கரை எழில் நூல்களை தவிர ஏனைய நூல்களின் விநியோகம் நிறுத்தப்பட்டு சர்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது.   (மேலும்) 13.04..2017

______________________________________________________________________________________________________________

பட்டதாரிகளாக உருவாகியுள்ளவர்களின் போராட்டம் 50 நாட்களைக் கடந்துள்ளது

தடைகளைத் தாண்டி பட்டதாரிகளாக உருவாகியுள்ளவர்களின் போராட்டம் 50 நாட்களைக் கடந்துள்ளது.  hunger-strike   தாம் தெரிவு செய்த அரசியல்வாதிகள் தமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.  யாழ். மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் இன்று 45 ஆவது நாளைக் கடந்துள்ள நிலையில், அவர்கள் இன்று அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.   இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 ஆவது நாளாகவும் பட்டதாரிகள் தமக்கான நியமனங்களைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை, வெயில் பாராமல் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் 45 ஆவது நாளாகவும் திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் 42 ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வட மாகாணத்தில் சுமார் 3000 பட்டதாரிகளும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 8,500 பட்டதாரிகளும் தொழிலுக்காக காத்திருந்திருக்கின்றனர்.   (மேலும்) 13.04..2017

______________________________________________________________________________________________________________

5 மில்லியன் கொடுத்து காணிகள் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு - கேப்பாபிலவு மக்களின் காணிகள் மக்களிடம் வழஙslarmy2்கப்படும் என கூறியிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்க படையினர் கேட்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் வழங்கும் எனவும் மேலதிக காணி விடுவிப்பு தொடர்பில் 24ம் திகதி பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.  பனம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறப்பு விழாவுக்காக யாழ்.வந்த அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனிடம் கேப்பாவிலவு மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், கேப்பாபிலவு கிராமத்தில் படையினரிடம் உள்ள 399 ஏக்கர் நிலம் மக்களிடம் வழங்கப்படவுள்ளது.அதேபோல் அந்த காணிகளில் உள்ள படையினரின் கட்டிடங்களை அகற்றி மாற்று இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக படையினர் 5 மில்லியன் ரூபாய் நிதியை கேட்டுள்ளனர். அந்த நிதியை அரசாங்கம் வழங்கும். அதேபோல் எதிர்வரும் 24ம் திகதி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளேன்.   (மேலும்) 13.04..2017

______________________________________________________________________________________________________________

தந்தையில்லாத தனது மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை

யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயle1ாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை நடவடிக்கைகாக மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பதில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சியின்  மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து பத்து கிலோ மீ;ற்றருக்கு அப்பால்  உள்ள 1ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 01-04-2017 அன்று மது போதையில் நள்ளிரவு 11.27 மணிக்கு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முற்பட்ட போது குறித்த பெண் மற்றும்அவரது மகள் ஆகியோர்  வீட்டின் பினபுற வாயில் ஊடாக தப்பி வெளியேளி அருகில் உள்ள  வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.   (மேலும்) 13.04..2017

______________________________________________________________________________________________________________

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஓடுபாதை  4F சான்றிதழ் பெறப்படவில்லை.

ஓடுபாதை புனரமைப்பிற்காக கடந்த ஜனவரி 6 ஆம் திகதி முதல் 3 மாதங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.runway   இந்த காலப்பகுதியில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.  புனரமைப்புத் திட்டத்தின் ஊடாக விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை 45 மீட்டரில் இருந்து 75 மீட்டராக விஸ்தரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதுடன், உப ஓடுபாதை புனரமைக்கப்படும் எனவும் சமிக்கை கட்டமைப்பு மீண்டும் ஸ்தாபிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.  இதற்காக 7.2 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் 4F சான்றிதழ் பெறப்படவில்லை.  பெரிய விமானங்களைத் தரையிறக்குவதற்கு விமான நிலையங்கள் 4F சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   (மேலும்) 13.04..2017

______________________________________________________________________________________________________________

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வெப்பநிலை 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ். வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.  இதற்கிடையில், நேற்றைய தினம் தொடக்கம் மாலை 02 மணிக்கு பின் ஒடுங்கல் மழைக்கான சாத்தியமும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்த வெப்ப நிலையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையிலேயே யாழ்ப்பாண வானிலை அவதான நிலையம் தகவல் வௌியிட்டுள்ளது.  இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தகவல் தருகையில், இலங்கையின் மத்திய பகுதியில் உச்சம் கொண்டிருக்கும் சூரியன் ப

டிப்படியாக நகர்ந்து நாட்டின் வடபகுதிக்கு உச்சம் கொடுக்கவுள்ளது.இதன்படி, 15 ஆம் திகதியளவில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

______________________________________________________________________________________________________________

ஏப்ரல் போராட்டம்

                                       ஹிமால் கொத்தலாவல

பகுதி - 2

தலைவரின் கைது

பெப்ரவரி 27 1971, ஜேவிபி கிளர்ச்சிக்கு முன்னான அதன் கடைசி பொதுகjvp revolutionary்கூட்டத்தை கொழும்பு ஹைட் பார்க்கில் நடத்தியது. தொழிலாளர்கள்,விவசாயிகள் மற்றும் படை வீரர்களின் புரட்சி பற்றி மறைமுகமாக மென்மையான குறிப்புக்களைச் சுட்டிக்காட்டி விஜேவீர அந்தக் கூட்டத்தில் மூன்று மணி நேரம் பேசினார். மார்ச் 13ல் அவர் கைது செய்யப்பட்டு (இரண்டு வருடங்களில் இரண்டாவது முறையாக) யாழ்ப்பாணச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏப்ரல் மாதமும் வந்துவிட்டது மற்றும் விஜேவீர இன்னும் சிறையிலேயே இருந்தார். பொறுமை இலேசாக கரைந்து கொண்டிருந்தது, மற்றும் கட்சியின் படிநிலையில் உள்ளவர்கள் விஷயங்களை இயக்குவதில் ஆர்வமாக இருந்தார்கள். அரசமைப்புக்குழு நடவடிக்கைகளைப் பற்றி முடிவு செய்யும் நேரமாக அது இருந்தது.இந்திரதாஸ எழுதுவது “ வீஜேவீரவை கைது செய்து சிறையில் அடைத்ததின் பின்னர் எஞ்சியிருந்த தலைவர்கள் 1971 ஏப்ரல் 2ல், வித்யோதயா பல்கலைக்கழகத்தின் சங்கராமயா விடுதியில் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தினார்கள், அங்கு கட்சியின் உள் வட்டத்தை சேர்ந்தவர்கள், ஒரே நேரத்தில் சகல காவல் நிலையங்களையும் ஏப்ரல் 5, இரவு 11.30க்கு தாக்குவதுடன் புரட்சியை அணுகுவது என்று முடிவெடுத்தார்கள். அது ஒரு ஏகமனதான முடிவு. அந்தக் கூட்டம் யாழ்ப்பாணச் சிறையில் இருந்து விஜேவீர அனுப்பிய ஒரு செய்திக்கு மறுமொழியாகவே வெளிப்படையாகக் கூட்டப்பட்டது. விஜேவீர கூட தனது விடுதலையை மேற்கொள்வதற்காக 500 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு குழுவை யாழ்ப்பாணம் அனுப்பவேண்டும் என்று விரும்பியிருந்தார்.   ். (மேலும்) 12.04..2017

______________________________________________________________________________________________________________

வேலைவாய்ப்பு:  தொடரும் போராட்டங்கள்


-           கருணாகரன்

இந்திரகுமாருக்கு வயது 28. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணww9ப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் அவர்தான் முதலாவது பட்டதாரி. அவர் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியபோது குடும்பமே மகிழ்ச்சிக்கடலில் நீந்தியது. இருக்காதா பின்னே, குடும்பத்தில் முதலாவது ஆளாகப் பட்டதாரியாகப் போகிறார், படித்துத் தொழில் செய்யப்போகிறார் என்றால்....எவ்வளவு பெரிய மகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படும் அந்தக் குடும்பத்துக்கு!  இந்திரகுமாரைக் குறித்து மிகப் பெரிய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டது. சந்தோசத்தில்  தங்களுக்குச் சிறகுகள் முளைத்ததாகக் கூட உணர்ந்தனர். அந்த நாட்கள் பெரிய கொண்டாட்டமாகவே இருந்தன அவர்களுக்கு. நேற்றிரவு (01.04.2017) இந்திரகுமாரைச் சந்தித்தேன். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக உள்ள “வேலைகோரிப் போராடும் பட்டதாரிகளி”ன் கொட்டகையில் நண்பர்களோடிருந்தார். தாங்கள் நடத்துகின்ற போராட்டத்தைப்பற்றி மங்கிய ஒளியில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இரவு பகலாக அங்கேயே தொடர்ந்திருப்பதால் களைப்படைந்திருந்தது முகம். உடலும்கூடச் சோர்ந்தேயிருந்தது. “இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்” என்று கேட்டேன்.  (மேலும்) 12.04..2017

______________________________________________________________________________________________________________

ஜீ.எஸ்.பி. பிளஸ் வழங்க தகுதியாய்வு செய்யும் அதிகாரிகள் வருகை

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதி ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வந்துள்ளனர். நாட்டில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை, மனித உரிமைகள் மற்றும தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட ஏதுநிலைகள் பலவற்றை அவர்கள் அவதானிக்கவுள்ளனர். ஏற்கனவே சில பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு வந்து கண்காணிப்புகளை மேற்கொண்டனர்.அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

______________________________________________________________________________________________________________

உழைக்கும் மக்களின் பணத்திற்கான பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்anura dissanayake

உழைக்கும் மக்கள் கஷ்டத்துடன் சம்பாதித்த பணத்தின் முதலீட்டு பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க கூறினார்.  ஊழியர் சேமலாப நிதியத்திற்கு வரி அறவிட அரசாங்கம் திட்டமிடுவதாகவும், ஒரு போதும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் இன்று கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறும் போது, ஊழியர் சேமலாப நிதியம் என்பது 1350 பில்லியன் ரூபா பணம். 2,475,000 உறுப்பினர் கணக்குகள் உள்ளன. இது அரசாங்கத்தின் நிதியல்ல. தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களினதும், முதலாளிமார்களினதும் பணமாகும். அரசாங்கத்திற்கு இதனுடன் இருக்கின்ற தொடர்பு, அந்த நிதியின் பாதுகாப்பாளர் என்பது மாத்திரமே.  (மேலும்) 12.04..2017

______________________________________________________________________________________________________________

தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குமாறு மூதூர் ஆதிவாசிகள் கோரிக்கை

தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை – மூதூர் ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதிவாசி குடிகளுக்கான இணைப்பாளர் கே.சி.சிறிலாலை பாட்டாளிபுரத்தில் சந்தித்தபோதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.  பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும் பட்சத்திலேயே தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் எனவும் மூதூர் கிழக்கு பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.கிழக்கு மூதூரில் வசிக்கும் ஆதிவாசிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு, பிரதமரின் இணைப்பாளர் இன்று அங்கு சென்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

______________________________________________________________________________________________________________

ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பஸ் மீது வெடிகுண்டுத் தாக்குதல்


ஜெர்மனியின் பொருஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணி பயணம் செய்த பஸ்ஸில் மூன்று குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டன. முக்கிய வீரரான மார்க் பர்த்ரா கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மொமாகொ அணிக்கு எதிரான உள்ளூர் சாம்பியன்ஸ்லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க அந்த அணி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பஸ்ஸுக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஸ்டேடியத்தைச் சுற்றி எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அந்த அணியினர், ஜெர்மனியில் ட்வீட் செய்துள்ளனர். இதையடுத்து, கால்பந்துப் போட்டி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  ஹோசஸ்டன் என்ற பகுதியில், நகருக்கு வெளியே ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.  இதுதொடர்பாக அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொருஸியா டார்ட்மண்ட் அணி புறப்பட்ட சிறிது நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பஸ்ஸின் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பர்த்ரா முன்பு விளையாடிய பார்சிலோனோ கால்பந்து கிளப்பும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயும் பர்த்ரா விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் முன்னிலையில் உள்ள அணிகளில் நான்காவது முக்கிய அணி டார்ட்மன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.  . B.B.C

______________________________________________________________________________________________________________

'காற்று வெளியிடை’ விமரிசனங்களுக்கு மணி ரத்னம் ஆதாரபூர்வ விளக்கம்!


காற்று வெளியிடை படத்தில் சொல்லப்பட்ட முக்கியமான குறை ஒன்றுக்கு இயக்குநர் மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.kaartu காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜெயிலில் இருந்து தப்பிப்பதுபோல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது பல விமரிசகர்களால் குறை சொல்லப்பட்டது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் இருந்து குழி தோண்டி அதிலிருந்து கார்த்தி தப்பிப்பது போன்று அமைக்கப்பட்ட காட்சிக்கு நிறைய விமரிசனங்கள் எழுந்தன.இதற்கு மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இக்காட்சி பல உண்மைச் சம்பவங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. ஃபிளைட் லெஃப்டினண்ட் திலிப் பருல்கர் 1971 டிசம்பர் 10-ல் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டார். ஆனால் அழிவுக்கு நிகரான இந்தச் சம்பவத்தை அவர் துணிகரச் செயலாக மாற்றினார். ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்ட பருல்கர், மல்விந்தர் சிங், ஹரிஷ் ஆகியோர் அச்சிறையில் இருந்து 1972 ஆகஸ்ட் 13 அன்று தப்பி வந்தார்கள்.    (மேலும்) 12.04..2017

______________________________________________________________________________________________________________

நுகர்விற்கு உதவாத உணவுப் பொருட்கள் விற்பனை செய்த 2,716 உணவகங்களுக்கு எதிராக வழக்கு

கடந்த ஏழு தினங்களில் 19,730 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.  நுகர்விற்கு உதவாத உணவுexpired foods வகைகளை விற்பனை செய்த உணவகங்களே சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கையின் போது 2716 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாக அவர் கூறினார். மேலும் 3412 உணவகங்களில் காணப்பட்ட நுகர்விற்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.  பொது சுகாதார பரிசோதகர்கள், சங்க ஊழியர்கள் பண்டிகைக்கால விடுமுறையில் செல்லாது தொடர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

______________________________________________________________________________________________________________

இந்தியாவில் 2016-இல் யாருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை'

இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் யாருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' அமைப்பு தெரிவித்துள்ளது.  "தூக்குத் தண்டனைகளும், தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றமும்' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டில், சீனாவில்தான் அதிக எண்ணிக்கையில் தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அந்த எண்ணிக்கையைஅந்நாட்டு அரசு ரகசியமாக வைத்துள்ளது. எனினும், ஒட்டுமொத்த உலகம் முழுமைக்கும் 2016-ஆம் ஆண்டில், 1,032 தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், இதில், ஈரான், சவூதி அரேபியா, இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 87 சதவீத தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டில், இந்தியாவில் 136 தூக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகமாகும். ஆனால், இதில் ஒரு தண்டனை கூட நிறைவேற்றப்படவில்லை. அதேநேரத்தில், பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் எண்ணிக்கை 73 சதவீதம் குறைந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2015-ஆம் ஆண்டில் 326 தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அந்த எண்ணிக்கை, 2016-ஆம் ஆண்டில் 87-ஆக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

ஏப்ரல் போராட்டம்

                                       ஹிமால் கொத்தலாவல

பகுதி - 1

அது 1971ம் ஆண்டு ஏப்ரல் 9 பெரிய வெள்ளி தினம், மருத்துவர். றெக்ஸ் டீ கொஸ்தா என்கிற ஒரு ஓய்வுபெற்ற மற்றும் லெப்டினட் கேணல் என்old_may_dayகிற பதவியை அலங்கரித்த புகழ்பெற்ற மருத்துவப் பயிற்சியாளர் தென்பகுதியின் தெனியாய என்கிற இடத்தில், தனது குடும்பத்துடன் அவரது உத்தியோகபூர்வ விடுதியில் தங்கியிருந்தார். அன்றைய தினம் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. அந்தக் குடும்பம் அநேகமாக அவர்களின் காலை உணவுக்காகக் கூட இன்னும் அமர்வதற்கு ஆரம்பிக்கவில்லை. முற்பகல் சுமார் 9.00 மணியளவில் கதவுக்கு வெளியே சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஆயுதம் ஏந்திய ஒரு தொகை ஆண்கள் குழுவினர் - அனைவரும் ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் - அங்கு ஒன்றுகூடி மருத்துவர் டீ கொஸ்தாவை வீட்டிற்கு வெளியில் இறங்குமாறு கட்டளையிட்டார்கள். தனது குடும்பத்தினருக்கு தீங்கு ஏற்படுவதை விரும்பாத அந்த வயதான படை வீரர் கதவைத் திறந்தார். அவர் சில அடிகள் மாத்திரம் வெளியே வைத்திருப்பார், அவரது மனைவி எச்சரிக்கையாக அவருக்கு பின்னால் இருந்தபடி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்,  சரமாரியாக துப்பாக்கிக் குண்டுகளைச் சந்தித்தபோது மருத்துவர் டீ கொஸ்தா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். (மேலும்) 11.04..2017

______________________________________________________________________________________________________________

திருகோணமலையில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள்   வந்துள்ளது

திருகோணமலையில் தற்போது டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இதனை சுகாதார துறை மட்டுமல்லாது பல துறை சார்ந்த அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடனேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம், எனவும் பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளார் பி.கயல்விழி தெரிவித்துள்ளார். இன்று 10ம் திகதி திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இங்கு தொடர்ந்தும் கயல்விழி கருத்து தெரிவிக்கையில்,திருகோணமலை மாவட்டத்தில் 3438 பேர் டெங்கு நோயால் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார சேவைகள் பணி மனை பிரிவுகளில் 5 பிரிவுகள் உயர் டெங்கு தாக்க பிரதேசங்களாக கொள்ளப்படுகிறது. இதில் கிண்ணியாவில் 1344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் 9 பேர் இறந்துள்ளனர்.   (மேலும்) 11.04..2017


______________________________________________________________________________________________________________

அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!''

 ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!

எஸ். ஹமீத்.

''சிரியாவில் ஜனாதிபதி  அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்கiran-putinுப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.'' மேற்கண்டவாறு ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி.கடந்த சில தினங்களுக்கு முன்னம் சிரியாவில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் நடந்ததும் இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களென 75 ற்கு   மேற்பட்டோர் உயிரிழந்ததும், இத்தாக்குதலை சிறிய ஜனாதிபதி அசாத்தின் படைகளே நிகழ்த்தின என அமெரிக்கா, தெரிவித்ததும் அதற்குப் பதிலடியாக சிரிய இராணுவத் தளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியதும் நாமறிந்ததே. இந்நிலையில் அமெரிக்காவுக்கெதிராக ரஷ்யா பலத்த கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கு ஆதரவாக ஈரானும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.   (மேலும்) 11.04..2017

______________________________________________________________________________________________________________

ஊடகங்களுக்கான அறிக்கை..

ஈ.பி.டி.பி மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே  அவதூறு சுமத்தப்படுகின்றது

நெடுந்தீவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பவருக்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லை.EPDP flag_CI ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜேசுதாஸ் லக்சினி எனும் சிறுமியை கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்ததான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அச்செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள் 'நெடுந்தீவில் ஈ.பி.டி.பி வன்புணர்வு அராஜகம்' என்றும், தீர்ப்பின் பின்னர் 'ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு மரண தண்டனை' என்றும் வெளியிட்டிருந்தன. இதுபோலவே ஆதாரமற்ற பல்வேறு செய்திகளை ஈ.பி.டி.பியுடன் தொடர்புபடுத்தி சிலர் வெளியிட்டு சுய திருப்தி காண்பதையும் நாம் அவதானிக்கின்றோம். ஈ.பி.டி.பி. மீது அவர்களுக்கு இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறு செய்திகளை திட்டமிட்டு வெளியிடுவது தெளிவாகின்றது.   (மேலும்) 11.04..2017


______________________________________________________________________________________________________________

வெருகல் படுகொலை- பதின் மூன்று   ஆண்டுகள்

(முன்னாள் மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவ-சந்திரகாந்தன்  தடுப்புக்காவலில் இருந்து வெருகல் படுகொலை தினத்துக்காக அனுப்பியிருந்த சிறப்புரை, இன்று 10/04/2017 அன்று நிகழ்வில் ஆற்றப்பட்டு பிரசுர வடிவில் விநியோகிக்கப்பட்டது )

தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் இரத்தக்கறை படிந்த தினமானpillaiyan_01 சிவப்பு சித்திரை பத்தாம் நாளாகிய இன்று இந்த வெருகல் மலைப் பூங்காவில் நீங்கள் எல்லோரும் கூடியிருக்கின்றீர்கள். கடந்த ஆண்டை போலவே இம்முறையும் இந்த நிகழ்வுக்கு சமூகமளிக்க எனக்கு காலம் இடம்தரவில்லை.  எனது அரசியல் செயல்பாடுகளை முடக்கிவிடும் நோக்கத்தோடு என்னை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர் நீங்கள் அறிவீர்கள்.  ஆனால் இது சாதாரண பிள்ளையான் ஒருவனுக்கெதிரான சதியல்ல என்பதை நீங்கள் அனைவரும் நன்கே புரிந்து கொள்ளவேண்டும்.   வரலாற்றிலே முதல்தடவையாக கிழக்கிலே உருவாகிய அரசியல் எழிச்சியை அழித்தொழிக்கின்ற பாரிய சதியொன்று எனது கைதின் பின்னணியில் இருக்கின்றது. காலத்துக்கு காலம் இந்த மண்ணிலே உருவாக விளைகின்ற,   இந்த கிழக்கு மண்ணை வளப்படுத்த முனைகின்ற  தலைமைகளை திட்டமிட்டு அழித்தொழிக்கின்ற நடவடிக்கைகள் யாழ் மேலாதிக்க வாதிகளால் அரங்கேற்றப்பட்டே வந்திருக்கின்றன   (மேலும்) 11.04..2017

______________________________________________________________________________________________________________

வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

பண்டிகை காலங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்கின்ற உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் ஊடாக சுமார் 2000 திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

______________________________________________________________________________________________________________

சாவகச்சேரியில் வாள்வெட்டு: ஆவா குழுவுடன் தொடர்புடைய ஐவர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என யாழ். பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரெனிஸ்லஸ் தெரிவித்தார். இந்த சந்தேகநபர்கள் ஆவா குழுவுடன் ஏற்கனவே தொடர்புகளை வைத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

______________________________________________________________________________________________________________

மக்கள் நடத்துகின்ற போராட்டங்களில் ஜனநாயக சக்திகளும் மாற்றுச் சிந்தனையாளர்களும் பங்கேற்பது அவசியம்

          கருணாகரன்

இலங்கை அரசியலில் இது முக்கியமானதொரு காலகட்டம். தூர நோக்கைக் குறிக்கோளாகக் கொண்ட செயற்பாடுகளும் பொறுப்புணர்வும் நாடு தழுவிய அளவில், அதிகமாக இSriLankaTamilProtestருக்க வேண்டிய காலம். புதிய ஆட்சிக்கும் புதிய அரசியல் முறைமைக்கும் மக்கள் அங்கீகாரம் அளித்திருக்கும் காலம். குறிப்பாக நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்புத் திருத்தத்தை அல்லது அரசியலமைப்பு உருவாக்கத்தைச் செய்வதற்கு மக்கள் அங்கீகாரம் அளித்திருக்கும் காலம். கூடவே, நாட்டை அக – புற ரீதியாகப் புதிதாகவே மீள் நிர்மாணம் செய்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தி, அதற்கான அங்கீகாரத்தையும் மக்கள் வழங்கியிருக்கும் காலமும் இதுவாகும். ஆகவே இந்தக் காலத்தை அதற்குரியவாறு பயன்படுத்திக் கொள்வது ஒவ்வொருவருடைய பொறுப்புமாகிறது. மக்களுடைய விருப்பத்தையும் அங்கீகாரத்தையும் ஆணையையும் நிறைவேற்ற வேண்டியது முதலில் ஆட்சியாளர்களின் பொறுப்பு. அவர்களிடமே அதிகாரமும் உச்ச வளமும் உள்ளது. மட்டுமல்ல கடந்த அரசாங்கங்களை விட, புதிய தொனியில் ஆட்சியை அமைத்துக் காட்டுகிறோம். நாட்டின் தீராப்பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கண்டு முடிக்கிறோம் என்று அதிகாரத்துக்கு வந்தது இந்த அரசாங்கம்.   (மேலும்) 10.04..2017

______________________________________________________________________________________________________________

தலைக்கவசம் தொடர்பான வர்த்தமானி தற்காலிகமாக இரத்து

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமான இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.  குறித்த வர்த்தமானியில் அடங்கியுள்ள சில விடயங்கள் சர்ச்சைக்குரியது என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த சபையின் தலைவர் பேராசிரியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.  இதனையடுத்தே, குறித்த அறிவித்தலை தற்காலிகமான இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.  எதுஎவ்வாறு இருப்பினும், விரைவில் அதனை திருத்தி ஒரு மாத காலப் பகுதிக்குள் மீண்டும் வர்த்மானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சிசிர கோதாகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

______________________________________________________________________________________________________________

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.election-commission  வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.   (மேலும்) 10.04..2017

______________________________________________________________________________________________________________

காலப்பகுதியில் 30,486 டெங்கு நோயாளர்கள் பதிவு: மார்ச்சில் மாத்திரம் 11,547 பேர்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30,486 டெங்கு நோயாளர்கள் பதிவு: மார்ச்சில் மாத்திரம் 11,547 பேர்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30,486 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 11,547 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனவரி மாதம் 10,464 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8,475 பேரும் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.  மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

______________________________________________________________________________________________________________

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பல்: இந்திய, சீன கடற்படையினர் இணைந்து மீட்பு

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலை இந்திய, சீன கடற்படையினர் இணைந்து மீட்டனர். இதுதொடர்பாக, இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: ஓஎஸ் 35 என்ற வணிகக் கப்பல் மலேசியாவின் கெலாங் பகுதியிலிருந்து அரபு நாடான ஏமனைஒட்டியுள்ள ஏடன் வளைகுடா நோக்கி சனிக்கிழமை இரவு சென்றது. அந்தக் கப்பலில் 19 ஊழியர்கள் இருந்தனர். கப்பல் ஏடன் வளைகுடாவை நெருங்கியபோது, சோமாலி கடற்கொள்ளையர்கள் சிலர் அந்தக் கப்பலை சுற்றி வளைத்தனர்.இந்நிலையில், ஓஎஸ் 35 கப்பலில் இருந்தவர்கள் இதுகுறித்து பிரிட்டனிலுள்ள கடல்வழி வர்த்தக அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த அமைப்பினர் ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இந்திய, சீன கடற்படையினருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து, இந்திய கடற்படையினர் ஐஎன்எஸ் மும்பை, ஐஎன்எஸ் தர்காஷ் ஆகிய 2 போர்க் கப்பல்களை அங்கு அனுப்பி வைத்தனர். சீன கடற்படையினர், யூலின் என்ற போர்க் கப்பலை அனுப்பினர். இந்நிலையில், போர்க் கப்பல்கள் நெருங்குவதைக் கண்ட கடற்கொள்ளையர்கள் ஓஎஸ் 35 கப்பலிலிருந்து வெளியேறி தப்பினர (மேலும்) 10.04..2017

______________________________________________________________________________________________________________

பாக்குநீரிணையில் ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

மீனவர்கள் கடல் எல்லையை மீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்றமையை தடுnavy shipப்பதற்காக பாக்கு நீரிணையில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.  இந்திய - இலங்கை மீனவ பிரச்சினை தொடர்பான உயர்மட்ட குழுக்கூட்டம் கொழும்பில் கடந்த வௌ்ளிகிழமை இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் இரு நாட்டு அமைச்சர்களும், கடற்றொழில் அதிகாரிகளும், மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.  கொழும்பில் இடம்பெற்ற மீனவ பேச்சுவார்த்தையானது மிக பயனுள்ளதாக அமைந்துள்ளதென இலங்கை அதிகாரியொருவர் த ஹிந்துக்கு தெரிவித்துள்ளார்.  இந்திய மீனவர்களின் இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என இந்திய தரப்பினர் உறுதியளித்துள்ளனர். அத்துடன், இந்திய மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்கு ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தின் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

கிளிநொச்சியில் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு

கிளிநொச்சி – முறிப்பு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அக்கராயன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆறுமுகம் என்ற 62 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த விபத்தினை அடுத்து அப்பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டது

______________________________________________________________________________________________________________

40 நாட்களாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டம்!

சொந்த நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாபுலவு மக்கள் இன்றுடன் (09) 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம்  முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   கடந்த வாரம் மீள்குடியேற்ற அமைச்சரால் கேப்பாபுலவு மக்களின் காணிகள்  எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் கேப்பாபுலவு பூரர்வீக கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது. இவ்வாறும் பல போராட்டங்களை கடந்த காலங்களில் தாம் மேற்கொண்டிருந்த போதிலும் அந்த நேரங்களில் பலரால் இவ்வாறான வாக்குறுதிகள் பல வழங்கப்பட்டும்,  கடைசிவரை எந்த தீர்வும் தமக்கு வழங்கப்படாமல் தாம் ஏமாற்றபட்டதாகவும் இனியும் அவ்வாறானதொரு நிலையை தாம் விரும்பவில்லை எனவும், தற்போது அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதியானது விரைவில் நிறைவேற்றபட்டு தாம் சொந்த மண்ணில் கால்பதிக்க வேண்டும் எனவும் போராடிவரும் மக்கள் தெரிவித்தனர்.

______________________________________________________________________________________________________________

பிரதமர் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியமயம் மற்றும் தமிழ்நாடு மயமாக்க விரும்புகிறார்                                     

                                              கலாநிதி.தயான் ஜயதிலகா

ஒரு நாடு வருகை தரும் ஒரு வெளிநாட்டு பிரமுகருக்காக சிவப்பு கம்பளத்தை thayan jayatilakeவிரிக்கலாம் ஆனால் ஒரு நாடே கம்பளமாக மாற முடியுமா? சரி, நம்மிடையே அதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலிருந்து வருகை தரும் ஒரு பிரபலம், ஸ்ரீலங்கா பிரதம மந்திரியின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பேசும்போது வெளிப்படையாக விமர்சனம் செய்வதைப்பற்றி எதுவும் யோசியாமல் எங்கள் பழைய நண்பனான சீனாவுக்கு எதிராக எங்களுக்கு எச்சரிக்கை செய்யும் நேரத்திலுள்ள ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம்.அந்த நிகழ்வில் குறிப்பிட்ட பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தார்கள்.  காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர்  கடந்த புதன்கிழமை ஸ்ரீலங்காவில் சீனாவின் பிரசன்னம் பற்றி இந்தியாவின் கவலையை நிலைநாட்டும் வகையில் அவர் சுட்டிக்காட்டியது” வர்த்தகத்தின் போர்வையில் இராணுவ தலையீடுகள் உள்ளன என்றும் முந்தைய அவதாரமான பட்டுச் சாலைகள் ஆரம்பிப்பதிலும் கூட இது இருந்தது” என்றும். தினேஷ் வீரக்கொடியினால் எழுதப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் சுயசரிதையின் வெளியீட்டு விழாவில் அவர் இதுபற்றி பேசினார்.   (மேலும்) 09.04..2017

______________________________________________________________________________________________________________

மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுமார் 100 க்கும் அதிகமானdoctor strike சுகாதார சங்கங்களுடன் இணைந்து நேற்று நாடு முழுவதும் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நோயாளர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து கிராமிய ஆஸ்பத்திரிகள், தள வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அவசர நோயாளர் சேவைகள் மட்டும் ஆங்காங்கே நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசாங்க வைத்தியர்களின் போராட்டம் காரணமாக பெரும் எண்ணிக்கையான நோயாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நேற்று வழமைக்கும் மாறாக வெறிச்சோடிக் காணப்பட்டது. வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பில் ஏற்கனவே அறிந்திராத நோயாளர்கள் ஏமாற்றத்துடன் நேற்று வீடு செல்ல நேரிட்டது. அத்துடன் தூர இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.   (மேலும்) 09.04..2017

______________________________________________________________________________________________________________

கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது கரைச்சியின் கலாசார விழா

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் 2016 இற்கான கலாசார விழா மிகவும் சிறப்பாக  மலையாளபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.IMG_5849   நேற்றைய தினம் (07-04-2016) மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிராம மக்கள் கலைஞர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.வருடந்தோறும் கலாசார விழாக்கள்  நகரை அண்டிய பகுதிகளில் மண்டபங்களில் இடம்பெற்ற வந்த வழமை மாற்றப்பட்டு கிராமங்களை நோக்கி பிரதேச மட்ட கலாசார விழாக்களை நகர்த்தியது அனைவரினதும் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் 2016 இற்கான கரைச்சியின் கலாசார விழாவை மலையாளபுரம் கிராமத்தில் நடத்த தீர்மானித்தமையினால் குறித்த விழாவை தங்களுடைய விழாவாக கிராம மக்கள் கருதி அதில் பங்குதாரர்களாக மாறி மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். விழா நடந்த வீதியில் பொது மக்கள் வாழை தோரணங்கள் கட்டி கும்பம் வைத்து பண்பாட்டு விழிமியங்களை பிரதிபலிக்கின்ற  வகையில் விழா ஏற்பாடுகளை வழமைக்கு மாறாக மேற்கொண்டிருந்தனர். (மேலும்) 09.04..2017

______________________________________________________________________________________________________________

நாமல் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்ட மாஅதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.   நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமான நிறுவனமொன்றிற்கும், வேறொரு நிறுவனமொன்றிற்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களின் போது முறையற்ற விதத்தில் 30 மில்லியன் ரூபா நிதியை பெற்றுக் கொண்டமையானது, நிதி சலவை சட்டத்தின் பிரகாரம் தவறொன்று இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.   சுஜானீ போகொல்லாகம, நித்யா சேனானி சமரநாயக்க உள்ளிட்ட மேலும் இருவர் மீதும் சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

______________________________________________________________________________________________________________

சுவீடன் வாகன தாக்குதல் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு, 2 பேர் கைது

சுவீடன் வாகன தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமsweden lorryின் குயின் தெருவில் உள்ள ஒரு வணிகவளாகத்தின் முன்பாக நேற்று ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.அப்போது அங்கு லாரி ஒன்றை ஒருவர் வேகமாக ஓட்டி வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியை மக்கள் கூட்டத்தை நோக்கி இயக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்தை உடனடியாக முற்றுகையிட்ட போலீசார் அங்கிருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த ரெயில் நிலைய பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுரங்க நடைபாதைகளும் மூடப்பட்டன. இதுபற்றி சுவீடனின் மேற்கு பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஸ்டிபான் லோபன் கூறுகையில், ‘‘சுவீடன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது பயங்கரவாதிகள் கைவரிசை என்பதை அனைத்து தகவல்களும் உறுதி செய்கின்றன’’ என்றார். பின்னர், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் உடனடியாக தலைநகர் திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போதுவரை  2 பேரை கைது செய்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். தாக்குதலையடுத்து ஸ்வீடன் எல்லைப்பகுதிகளில்  பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

வடக்கில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு; மக்கள் மீள்குடியே வேண்டும்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.8 எக்கர் மக்களின் நிலம் நேற்று வௌ்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராட்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி விடுவிக்கும் பத்திரத்தைக் கையளித்தார். அரசாங்கத்தினால் விடுவிக்கப்படும் இடங்களில் மீள்குடியேறுகின்ற மக்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட சகல வசதிகளும் வழங்கப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறியுள்ளார். இதேவேளை நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்ற 40 குடும்பங்கள் மீள்குடியேற்றபடவிருப்பதாக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

______________________________________________________________________________________________________________

சிரியா மீது ஏவுகணை தாக்குதல்: ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷியா கடும் மோதல்

சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷியா இடையே கடும் மோதல் ஏற்பட்டது.US-Russia-clash   சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.   இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு சிரியா அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிரியா நாட்டிலுள்ள விமானப் படை தளத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவாதிப்பதற்காக 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்துக்கு ரஷியா அழைப்பு விடுத்தது.  (மேலும்) 09.04..2017

______________________________________________________________________________________________________________

யதார்த்தத்தை உணருகிறாரா விக்னேஸ்வரன்

        கருணாகரன்

சிலவேளை நாம் நம்ப முடியாத அளவுக்குக் காரியங்கள் நடப்பதுண்டு. அதைப்போல, நாங்கள் எதிர்பார்த்தேயிராத விதமாக சிலருடைய நடவடிக்கைகளில் மாற்றங்கcv1ள் நிகழும். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் அப்படியொரு மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த மாற்றம் நிரந்தரமானதா, சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரியானதா என்று தெரியவில்லை. ஏனென்றால், தன்னுடைய பதவியேற்புக்கான சத்தியப்பிரமாணத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் செய்தவர் விக்கினேஸ்வரன். கூடவே சம்மந்தியும் மகிந்த ராஜபக்ஸவின் வலதுகரமுமாகச் செயற்படும் வாசுதேவ நாணயக்காரவுடன் சேர்ந்து மகிந்த ராஜபக்ஸவை மையமாக வைத்துக் குடும்பப்படத்தையும் எடுத்துக் கொண்டவர். இதெல்லாம் நடந்து நான்கு மாதங்களில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் போர்க்கொடியைத் தூக்கினார் விக்கினேஸ்வரன். அதற்குப் பிறகு அரச எதிர்ப்பு அணியுடன் சேர்ந்து, அதற்குத் தலைவரானார். தற்போது இருந்தாற்போல தடாலடியாக “அரசுடன் கூட்டுச் சேர்வதே இப்போது பொருத்தமானது“ என ஒரு அதிரடி அறிவிப்பை விடுத்திருக்கிறார் விக்கினேஸ்வரன   (மேலும்) 08.04..2017

______________________________________________________________________________________________________________

கனடிய  அரசியல் கட்சிகளை நாறடிக்கும் தமிழர்கள்

தமிழர்களில் சிலர் சென்ற இடங்களில் எல்லாம் தம் கைவரிசையை காட்ட voterதவறுவதில்லை. அவர்களை  சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துவிட்டு கறிவேப்பிலை போல் தூக்கி எறியவும் தயங்கியதில்லை. குறிப்பாக கட்சி தலைமைத்துவ போட்டிகளின் போதும் கட்சி நியமன தேர்தல்களின் போதும் கட்டுக்கட்டாக உறுப்பினர்களை சேர்ப்பதில் தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது கனடிய மைய அரசியல் வாதிகளுக்கு  தெரிந்ததே.  சமீபத்தில் மார்க்கம் தொர்ன்கில் பகுதியில் நடந்த ஒரு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முணைந்த தாராளவாத கட்சியைச்  சேர்ந்த   ஒரு தமிழ் பெண்,  தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மளமள வென்று 2000 பேர்கள் வரை உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கையில்,  கட்சி  புதிய அங்கத்தவர் சேரும் இறுதி திகதியாக முன்னைய திகதியொன்றை குறிப்பிட்டு அறிவித்துவிட்டது. அக்கட்சிக்கு தற்போது அங்கத்துவப்பணம் சுழியம் 0 என்பதால் கட்சி இணையத்தில் கண்டபடி  பெயர்களை பதிந்து அங்கத்தவர் எண்ணிக்கையை கூட்டமுடியும் என்பது முக்கிய விடயம். அவர் கட்சியின் அந்த முடிவை சாடி, கட்சி ஜனநாயக படுகொலை செய்து விட்டது என்றவாறு  யாரோ எழுதி கொடுத்தது போல் ஒரு அறிக்கையை விட ஏனைய கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அவல் கிடைத்து,  கட்சித் தலைவரும் பிரதமருமான ஜூஸ்டுன் டுரூடோ நேரில் வந்து இடைத் தேர்தல் பிரசாரத்தில்  பங்கு பற்ற வேண்டியதாயிற்று.   (மேலும்) 08.04..2017

______________________________________________________________________________________________________________

"மக்களின் காணிகளை பறித்து வீதிகளில் அலைய விட்டிருக்கும் நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்...?"

NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

(NFGGஊடகப் பிரிவு)

"யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசாங்கம் மக்களின் காணிகளைப் பறித்து அவர்களை வீதியில் அலைய விட்டிருப்பது  பரிதாபமானது. abdul rahmanசொந்த இடங்களில் குடியேறி வாழுவதற்கான அடிப்படை உரிமைகளை வழங்காத நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்.  வனபாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் விவசாயம் செய்வதனை தடுத்து விட்டு, படையினரே அங்கு விவசாயம் செய்கின்றனர். வன பாதுகாப்பு பிரதேசத்தில் விவசாயம் செய்வது குற்றம் என்றால் படையினருக்கு அந்த உரிமையை வழங்கியது யார்..? படையினரின் கடமை பயிர்ச்செய்கை செய்வதா அல்லது மக்களை பாதுகாப்பதா..?  எனவே, மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்" நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.   (மேலும்) 08.04..2017

______________________________________________________________________________________________________________

நெடுந்தீவில் 12 வயது சிறுமி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.judgment   சம்பவம் தொடர்பான வழக்கு தீர்ப்பு யாழ். மேல்நீதிமன்றத்தில் நீதிபதி, மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று (07) வழங்கப்பட்டது.  அதற்கமைய கொலைக் குற்றத்திற்கு மரண தண்டணையும், பாலியல் வன்கொடுமைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டணையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.   மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனவும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக 05 வருட கடூழிய சிறைத்தண்டனையும் நீதிபதியால் விதிக்கப்பட்டுள்ளது.   (மேலும்) 08.04..2017

______________________________________________________________________________________________________________

கல்குடாவில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்புகள் வலுப்பெறுகின்றன

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைkalguda protestக்கப்படுவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்புகள் வலுப்பெற்றுவருகின்றன.  இந்ந நிலையில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவனயீர்ப்புப் பேரணியொன்று இன்று (07) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.   நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்றலில் இந்த கவனயீர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. காந்தி பூங்கா முன்றலில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றவர்கள், தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரிடம் வழங்கினர்.  பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிர்மாணிக்கப்பட்டு வரும் கல்குடா மதுபான உற்பத்திச்சாலையின் பின்னணிஸகல்குடா பகுதியில் 19 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டுவரும், டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் தலைமைப் பதவியை அர்ஜூன் அலோசியஸ் வகிப்பதாக மென்டிஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.   (மேலும்) 08.04..2017

______________________________________________________________________________________________________________

ஊடக அறிக்கை

07.04.2017.

அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

ஐரோப்பிய நாடுகளைவிட ஐந்து மடங்கு அதிகமாக எமது நாட்டிலே தனி நபர் மதுபான நுகர்வுப் பயன்பாடுகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இந்த வகையில் ஆசியக் கண்டத்திலdouglas devananthaேயே எமது நாடு முன்னிலை வகிப்பதாகவும், எமது நாட்டு சனத் தொகையில் 40 வீதமான மக்கள் மது பாவனையை மேற்கொள்வதாகவும் தெரிய வருகிறது. அதே நேரம், வெளிநாடுகளில் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம் என்கின்ற நிலையில் அங்கு மது பயன்பாடு குறைவாகவும், இலங்கையிலே மதுவுக்கு அடிமையானவர்கள் குறைவு என்கின்ற நிலையில், மது பயன்பாடு அதிகம் என்றும் தெரிய வருகின்றது. புகையிலை மற்றும் மது பானங்களால் அரசு ஈட்டுகின்ற வருடாந்த வருமானம் சுமார் 143 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில், அதனைப் பயன்படுத்துகின்றவர்களுக்கான சுகாதார இழப்புகளாக அரசு வருடாந்தம் சுமார் 212 பில்லியன் ரூபாவினை செலவு செய்ய வேண்டியிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் தெரிவித்துள்ளார்.   (மேலும்) 08.04..2017

______________________________________________________________________________________________________________

வடக்கில் அகதிகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்

வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெcv.ய்ஜி டெல் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயாஸ்தானிகராலய பணிப்பாளர் யாழ். மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர் அகதிகள் குறித்து ஆராய்வதற்கு வருகை தந்திருந்தனர். தெல்லிப்பளை பிரதேசத்தில் அகதிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறான நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென ஆராய்ந்தனர்.அதன்போது, யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பதனால், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் வரக்கூடும்.    (மேலும்) 08.04..2017

______________________________________________________________________________________________________________

அங்காடியில் லாரி மோதி தாக்குதல்: ஸ்வீடனில் 5 பேர் பலி

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் லாரியை வேகமாக ஓட்டி வந்து மோதி நிகழ்த்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.   இதனை பயங்கரவாதத் தாக்குதல் என்று பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வென் கூறினார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வீடன் வானொலி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது: தலைநகரில் வேகமாக லாரியை ஓட்டி வந்த நபர் பிரபல பல்பொருள் அங்காடிக்குள் மோதினார். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். லாரியை கடத்தி வந்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தியாகத் தெரிகிறது என்று ஸ்வீடன் வானொலி தெரிவித்தது. இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய இடங்களில் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து ஸ்வீடனிலும் அதுபோன்ற தாக்குதல் தற்போது நடைபெற்றுள்ளது.

______________________________________________________________________________________________________________

யார் வரவுக்காகக் காத்திருக்கிறது இந்த நிலம்?

-           கருணாகரன்

அமெரிக்காவில் உள்ள ஒரு கடைத்தெருவில் எதிர்பாராத விதமாக ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பார்த்தார். மிகச் சாதாரணமாக அங்கே போய்க்கொண்டிருந்தார் ரஜினிகாந். அப்படியொரு நிலையில்rajani-1 ரஜினியையும் எந்தப் பந்தாவும் இல்லாமல் அவர் அப்படிச் செல்வதையும் அந்த ரசிகர் எதிர்பார்க்கவேயில்லை. ஒரு கணம் அவருக்கு அந்தக் காட்சி திகைப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் சுதாகரித்துக் கொண்டு, ரஜினியை நெருங்கித் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார் அவர். ரஜினியும் பதிலுக்கு அவருக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்லிச் சென்றார். ரஜினிகாந் இலங்கைக்கு வந்திருந்தபோதும் ஏறக்குறைய இதைப்போன்ற ஒரு நிலையே இருந்தது. மிகச் சாதாரணமாக அவர் கொழும்பு வீதிகளில் நண்பர்களோடு திரிந்தார். ஸ்டைலாகச் சிகரெட்டைப் புகைத்தார். அவரைக் கண்டவர்கள் அவருக்குக் கையசைத்து வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு ரஜினியும் கையசைத்து வணக்கத்தைத் தெரிவித்தார். எல்லாமே மகிழ்ச்சியாக நடந்தன. இது நடந்தது 1981 இல். அப்போது, தீ படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வந்திருந்த ரஜினி, சில நாட்கள் கொழும்பிலும் பிற இடங்களிலும் தங்கியிருந்தார். படப்பிடிப்பு முடியத் திரும்பிச் சென்றார். எந்தப் பரபரப்பும் இருக்கவில்லை. யாரும் இதைப்பற்றி விவாதிக்கவும் இல்லை. எதிர்ப்போ, ஆதரவோ காட்டவும் இல்லை. பத்திரிகைகள் மட்டும் ரஜினியைப் பற்றியும் தீ படப்பிடிப்பைப்பற்றியும் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தன. அது ஒரு காலம்.   (மேலும்) 07.04..2017

______________________________________________________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்:

ஆயிரம் பக்கங்களில்  ' ஞானம் ' 200 ஆவது நேர்காணல் சிறப்பிதழ்

கருத்துக்களஞ்சியமாக வெளிவந்துள்ள கலை, இலக்கிய ஆவணப்பதிவு

                                                                                முருகபூபதி

ஆயிரம் பக்கங்களில் ஞானம் 200 ஆவது இதழ்  வெளியாகியிருக்கிறது. இதனை Dr_T_Gnanasekaranசிறப்பிதழ் என்பதா, சிறப்பு மலர் என்பதா என்று தீர்மானிக்க முடியாவிட்டாலும், ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு செழுமைசேர்த்த பல முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் கருத்துக்களஞ்சியமாக மதிப்பீடுசெய்யத்தக்க  பெரிய ஆவணத்தொகுப்பாக வெளியாகியிருக்கிறது  எனச்சொல்வதில் தயக்கமில்லை.  2000 ஆம் ஆண்டில் கண்டியிலிருந்து ஆரம்பமான ஞானம் இதழ் உள்ளடக்கத்தில் ஆழமும் அகலமும் கொண்டு, படிப்படியாக பொலிவுகண்டு தற்போது 200 ஆவது இதழையும் வரவாக்கியிருக்கிறது. குறிப்பிட்ட இதழ் 2017 ஜனவரியில் வெளியாகியதன் பின்னர் இம்மாதம் ஏப்ரில் வரையிலான இதழும் வந்துவிட்டது. தங்குதடையின்றி, சாக்குப்போக்கு ஏதும் சொல்லாமல் சீராக 2000 ஆம் ஆண்டு முதல் வெளியாகிவரும் ஞானம் இதழின் வளர்ச்சிக்கு அதன் ஆசிரியரின் கடின உழைப்பே பெரிய மூலதனம்.   (மேலும்) 07.04..2017

______________________________________________________________________________________________________________

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மbbc tamilொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.   கடந்த 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளை தொடுகிறது. சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.  ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.    (மேலும்) 07.04..2017

______________________________________________________________________________________________________________

பாராளுமன்றத்தில் அமளி: சபை அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமிளி துமிளி காரணமாக, நாளை வரை சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனை குறித்து கருத்து வௌியிட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு, 30 நிமிடங்கள் அவகாசம், சபாநாயகரால் வழங்கப்பட்டது.  எனினும், வழங்கப்பட்ட கால அளவு போதுமானதாக இல்லை எனக் கூறி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அமிளியில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, பாராளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

______________________________________________________________________________________________________________

தலாய் லாமா விவகாரம்: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சீனா தயங்கக் கூடாது: சீன ஊடகங்கள் கருத்து

திபெத் பெளத்த மதத் துறவி தலாய் லாமாவின் வருகையை அனுமதித்ததன் மூலம், மலிவான செயல்களில் இந்தியா ஈடுபட்டால், அந்நாட்டுக்கு சீன அரசு பதிலடி கொடுக்க வேண்டdalilamaும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, 9 நாள் பயணமாக தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் சென்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவில் இருந்து அரசு சார்பில் வெளியாகும் 'சீனா டெய்லி', 'குளோபல் டைம்ஸ்' ஆகிய நாளிதழ்கள், இந்தியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. 'சீனா டெய்லி' பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:சீன எல்லைக்கு உள்பட்ட தெற்கு திபெத் பகுதியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, அதற்கு 'அருணாசலப் பிரதேசம்' என்று பெயரிட்டு இந்திய அரசு உரிமை கொண்டாடி வருகிறது.சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு தலாய் லாமாவுக்கு இந்திய அரசு அனுமதியளித்ததுடன், அவருடன் பாதுகாப்புக்காக, உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் அனுப்பி வைத்துள்ளது. இது, சீனாவை இரு வழிகளில் அவமதிக்கும் செயலாகும்.   (மேலும்) 07.04..2017

______________________________________________________________________________________________________________

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு ஓடிய கான்ஸ்டபில் வசமாக சிக்கினார்

கொழும்பு - விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   குறித்த தங்கச் சங்கிலி 85,000 ரூபா பெறுமதியானது எனத் தெரியவந்துள்ளது.  இதனை கொள்ளையிட்டு தப்பி ஓடிய வேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் பூங்கா பாதுகாவலர்கள் உள்ளிட்ட குழுவினர், சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.  பின்னர் அவர் கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  இதன் பின்னரே அவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரியவந்துள்ளது.  சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இது குறித்த மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

______________________________________________________________________________________________________________

அசோகமித்திரனின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் நீடிக்கும்: கவிஞர் வைரமுத்து


மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து.vairamuthu

எழுத்தாளர் அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் அடுத்த நூற்றாண்டிலும் இருப்பார்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.  மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:  எல்லா மனிதர்களுக்கும் இரண்டு மரணங்கள் உண்டு. முதல் மரணம் பெளதீக மரணம், இறந்த பிறகும் அவனை நினைத்துக் கொண்டிருக்கும் கடைசி மனிதன் இறக்கும் போதே அந்த இரண்டாவது மரணம் நிகழும். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் அடுத்த நூற்றாண்டிலும் இருப்பார்கள்.அவரது எழுத்து அலங்காரமில்லாமல், எளிமையாக  பெரும் விளம்பரத்தை விரும்பாத அவர், வணிகச் சந்தையிலும் நல்ல எழுத்துகளையே எழுதினார். சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டவர்களே எழுத்தாளர்கள் என்பதை அறிந்தவர் அவர்.   (மேலும்) 07.04..2017

_

dantv