Theneehead-1

                            Vol:17                                                                                           25.05.2018

 சிவாஜிலிங்கத்திடமே கேட்டு விடலாமா?

-          கருணாகரன்

“தேசியக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தலைகீழாகவும் ஏற்றுவோம். அதை யாரும் கேட்க முடியாது” என்று  சவால் விட்டிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் எsivahiம்.கே. சிவாஜிலிங்கம்.“மே – 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மாகாணசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படியே, அரைக்கம்பத்தில் மே 18 அன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஏனைய இடங்களிலும் அன்று அரைக்கம்பத்தில் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு மாகாணசபையினால் கோரப்பட்டிருந்தது. இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கூட்டுத்தீர்மானம். இதில் மத்திய அரசோ, அமைச்சர்களோ தலையிட முடியாது. அவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கட்டும். அதைப்பற்றியெல்லாம் நாங்கள் அக்கறைப்படவில்லை” என்று சொல்கிறார் “வீர” சிவாஜி.   ஆனால், “இது இலங்கையின் அரசியல் யாப்பு விதிமுறைக்கும் நடைமுறைக்கும் முரணானது. ஆகையால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துகம பண்டார.ரஞ்சித் மத்துகம பண்டாரவின் அறிவிப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கேட்டபோதே சிவாஜிலிங்கம் இவ்வாறு சவால் விடுத்திருக்கிறார்.     (மேலும்)  25.05.2018

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கையே - அங்கம் -03

களனி தொகுதி பிரதிநிதி மற்றும் ஒரு "நாயகன்"

 " நீங்கள் நல்லவரா..? கெட்டவரா...?

                                                                   ரஸஞானி

களனி மேர்வின் சில்வா, வாயைத்திறந்தால் என்ன பேசுவார் mervynஎன்ன பேசமாட்டார் என்பதும் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரியாது. ஒரு தடவை தேர்தல் காலத்தில் கிளிநொச்சிக்கு சென்ற மேர்வின் சில்வா, அங்கு தமிழர்களைப்பார்த்ததும், " வாங்க மச்சான் வாங்க..." என்று தமிழிலேயே பாடத்தொடங்கிவிட்டார்.  நல்லவேளை அதனைக்கேட்ட எவரும், அந்தப்பாடலின் அடுத்த வரியான "...  வந்த வழியப்பார்த்துப் போங்க..." எனப்பாடவில்லை.    ஐ.நா. சபையின் பிரதிநிதி நவநீதம்பிள்ளை இலங்கை வந்தசமயத்தில், அவரை திருமணம் செய்யவும் விரும்புவதாக ஒரு பெரிய குண்டையும் தூக்கிப்போட்டு, இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு சிக்கலை ஏற்படுத்தியவர்தான்  இந்த மேர்வின் சில்வா.    மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரதேசத்திற்கு இவர் அமைச்சராகச்சென்றபோது, ஒரு அதிகாரி அவ்விடத்திற்கு உரிய நேரத்திற்கு வராமல் தாமதித்தமைக்காக ஒரு மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்தியுமிருக்கிறார்.இவ்வாறு பல விவகாரமான பக்கங்கள் இவருக்கிருந்தாலும் இயல்பில் சில முன்னுதாரண குணங்களுக்கும் சொந்தக்காரர்தான் இந்த களனி தொகுதி பிரதிநிதி.முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடந்துவந்த வேள்வித்திருவிழாவில் ஆடுகள் பலியிடப்பட்டுவந்ததை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு எதிராக குரல் கொடுத்து ஆலயமுன்றலில் ஆர்ப்பாட்டம் செய்தவரும் மேர்வின்சில்வாதான்.       (மேலும்)  25.05.2018

_______________________________________________________________________

சீரற்ற வானிலையால் 19 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக 19 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.wather caterstr    அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. மழையுடன் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 13 பேர் மரணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டின் பல மாகாணங்களிலும் இன்று இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.   வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக அதிகரிக்கின்றமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.        (மேலும்)  25.05.2018

_______________________________________________________________________

'பல் கலைக் கழகம்'   கேள்விகளுக்குப் பதில்களை யாரிடம் எதிர்பார்ப்பது?

இராஜேஸ்வரி பாலசப்பிரமணியம்-24.5.18

18.5.18,முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, நான் லண்டனிலிருக்கவில்லை. உலகத்தின் மிகப் புராதான தீவுகளில் ஒன்றான 'மால்ட்டா'வுக்குச் சென்றிருந்தேன்.rajeswary   பத்தாயிரம் வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்ட அந்தத் தீவில் பிரயாணங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன்.   இன்று,'மனிதப் பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரலவத்தை அரங்கேற்றம் 'வல்லமை'தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு' என்ற ப.தெய்வீகனின் வார்த்தைகள் நெஞ்சில் நெருப்பாய்ச் சுட்டன. (தேனியில் வந்த கட்டுரை).அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சிகளில் திருகோணமலை, மட்டக்களப்புப் பிராந்தியத்தைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளவில்லை' என்ற  செய்திகளும் வந்து விழுந்தபோது எனக்கு வந்த அதிர்ச்சியையும் துயரையும் விளங்கப்படுத்த எந்த வார்த்தைகளும் கிடைக்கவில்லை.முப்பதாண்டு போரில்,கிழக்குவாழ்; தமிழர்கள் உயிர், உடமைகளை இழக்கவில்லையா, ஆயிரக் கணக்கில் போராளிகளாக வீரமரணத்தைத் தழுவிக் கொள்ளவில்லையா?      (மேலும்)  25.05.2018

_______________________________________________________________________

கொட்டும் மழையிலும் பல்லைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

திருகோணமலை - கண்டி வீதியை மறித்து பல்லைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை 10 மணியளவில் மேற்கொண்டதாக செய்தியாளர் தெரிவிprotest uni studentsக்கின்றார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.   தமது அடிப்படைத் தேவைகள் குறித்து தொடர்ச்சியாக பல அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் தமக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்காததை அடுத்தே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கணேஷன் சந்தியில் ஆரம்பித்த மாணவர்களின் நடை பவனி, தலைமை பொலிஸ் சந்தி ஊடக அபயபுர சந்தியை அடைந்த நிலையில் பின்னர், கண்டி - திருகோணமலை வீதியை மறித்த வண்ணம் ஆர்ப்பாட்டமாக மாறியதாகவும்  செய்தியாளர் தெரிவிக்கின்றார்.   சுமார் நான்கு மணித்தியாலயங்கள் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதி ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து பல்கலைகழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு ஒன்றுக்கு செல்ல மாணவர்கள் உடன்பட்ட நிலையில் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

_______________________________________________________________________

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.      no talks      இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். ''பெருங்கோபம் மற்றும் திறந்த விரோதத்தின்'' அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வடகொரியா குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிம்மை 'மற்றொருநாள்' சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.         (மேலும்)  25.05.2018

_______________________________________________________________________

ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு - தீர்ப்பு ஜூன் 14

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (24) கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காண்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.  2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

திருமணமான 15 நிமிடங்களில் விவாகரத்து: இது துபை 'ஸ்டைல்'

துபை: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான துபையில் மணமகன் திருமணமான 15 நிமிடங்களில் தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   இஸ்லாமிய நாடுகளில் பெண்ணைத் திருமணம் செய்யும் இளைஞன் பெண் வீட்டாருக்கு 'மகர்' எனப்படும் திருமணப் பணம் வழங்குவது வழக்கம். அந்த வகையில். துபையினைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 10000 திர்ஹாம் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன், என்று மணமகளின் தந்தையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பநதப்படி, ஷரியத் நீதிமன்ற அலுவலகத்தில் திருமண ஒப்பந்த பத்திரத்தில் தம்பதிகள் கையெழுத்திட்டவுடன் 5000 திர்ஹாமும், அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் மீதி 5000 திர்ஹாமும் கொடுப்பதாக ஏற்பாடு. பின்னர் அனைவரது முன்னிலையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஒப்பந்தப்படி கையெழுத்திட்டதும் முதலில் 50000 திர்ஹாமை மணமகன் தனது மாமனாரிடம் வழங்கியுள்ளார்.        (மேலும்)  25.05.2018

_______________________________________________________________________

லண்டனில் இலங்கையர் கொலை – கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் விளக்கமறியலில்

லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இலங்கையர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பில் மணிமாரன் செல்லய்யா என்ற மற்றுமொரு இலங்கையர் கைதாகியுள்ளார்.குறித்த சந்தேக நபர் ஏற்கனவே வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவர் நேற்று விம்பிள்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது

_______________________________________________________________________

(நேற்றைய தொடர்ச்சி)

முள்ளிவாய்க்காலின் எதிரொலி அன்றும் இன்றும்

அங்கம் -02    

கடன்காரனின் பிணத்துக்கு  கொள்ளிவைக்க  வங்கிக்காரன்  வந்த கதையாகிப்போனது!

                                                                                     ப. தெய்வீகன்

மனிதப்பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரவலத்தை அரங்கேற்றும் "வல்லமை" தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு என்பதை உலகெங்கும் பறை சாmm20181ற்றும் வகையில் முள்ளிவாய்க்காலில் சென்று களமாடிவிட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அவருக்கு பெரியதொரு ஒளிவட்டத்தை கீறி - நினைவு மேடையில் ஏற்றிவைத்தது மாத்திரமல்லாமல் - அவரது சாவு வீட்டு அரசியலுக்கு சாமரம் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்.      இந்தப்பேரவல நினைவுநாளுக்கு திரளும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக விக்னேஸ்வரன் அடுத்த வருடம் அரசாங்கம் கொடுத்த - தனது முதலமைச்சர் - வாகனத்துக்கு முன்பாக துலா ஒன்றைக்கட்டி தூக்குக்காவடி எடுத்துக்கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை போலிருக்கிறது. இவ்வளவு துரிதமாக தமிழர்களின் அரசியல் தறிகெட்டு பயணிக்கும் என்று யாரும் நம்பவில்லைத்தான். ஆனாலும் வரலாறு அதனை சாத்தியமாக்கிக்கொண்டு செல்கிறது என்பதை கண் முன்னே பார்க்கும்போது விரக்தியும் கோபமும்தான் எஞ்சுகிறது.        (மேலும்)  24.05.2018

_______________________________________________________________________

 ஜெகநாதனையும் இழந்தோம்.

கருணாகரன்

“அளவெட்டி மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தின்ர தலைவராக இருந்த ஜெகநாதனும் மகனும் கரண்ட் அடிச்சு பலியாகீட்டினம. இண்டைக்குக் காலமைதான் சம்பவம் நடந்திருக்கjeganathan1ு” என்று சொல்லி, அந்தச் செய்தியை வாசித்தார் கே.கே என்று நான் எப்போதும் அன்பாக அழைக்கும் ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் .கிருஸ்ணகுமாரின் குரல் தளம்பியது.  அது ஒரு சகோதரனின் இழப்பினால் உண்டான சோகத்தின் தவிப்பு. தத்தளிப்பு. காலையில் ஜெகநாதன், தங்கள் வீட்டுத் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பைச் சரிபார்க்கும்போது மின்சாரம் தாக்கியதாகச் செய்தி கூறியது. கேபிள் இணைப்புச் செய்கின்றவர்கள், இணைப்பு வயரை அலட்சியமாக வீசியதால், அந்த வயர் உயர் மின்னழுத்த மின்னிணைப்பில் தொடுக்கப்பட்டிருந்திருக்கிறது. இதைத் தெரியாமல் ஜெகநாதன் அந்த வயரைத் தொட்டிருக்கிறார். அப்படியே அவரை மின்சாரம் தாக்கியது. தந்தையைக் காப்பாற்றுவதற்காக மகன் முயன்றிருக்கிறார். மகனையும் தாக்கியது. அடுத்த மகன் ஓடிவந்து இருவரையும் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அதில் அவருக்கும் காயம் என்றது இன்னொரு சேதி.உடல் தளர்ந்து அப்படியே நிலத்தில் இருந்து விட்டேன்.       (மேலும்)  24.05.2018

_______________________________________________________________________

kogila

_______________________________________________________________________

இன்று முதல் புதிய பஸ் கட்டணங்கள் (கட்டண அட்டவணை  இணைப்பு)

பஸ் கட்டண அதிகரிப்பு இன்று (23) முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கு 12.5 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இதனடிப்படையில் புதிய திருத்தங்களுக்கு அமைய குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களினதும், தனியார் பஸ்களினதும் கட்டண விபரங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. (விபரங்கட்கு)

_______________________________________________________________________

வடக்கில் காடழிப்பை தடுக்க சுற்றுநிரூப ஆலோசனை

வட மாகாணத்தில் உள்ள அனைத்து காடுகளும் அழிக்கப்படுவதை தடுப்பதற்காக சுற்றுநிரூப ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்forestளார்.நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா முன்னதாக ஜனாதிபதியிடம் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்த கேள்வி ஒன்றுக்கு, ஜனாதிபதி சார்பில் இன்று பதில் வழங்கிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும், அவற்றை உரிய முறையில் பாதுகாக்கவும், நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   வட மாகாணத்தில் ஏதாவது காடழிப்பு செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய மார்க்கமாக அவதானிக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய, வான் படையினரும் வனபாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து செயற்ப்படுகின்றனர்.  இந்த நிலையில், காடழிப்பு செயற்பாடுகள் ஏதேனும் இடம்பெறுமாயின் அது குறித்து, வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.       (மேலும்)  24.05.2018

_______________________________________________________________________

தூத்துக்குடியில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புkamal3 தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

பாராளுமன்ற உறுப்பினர்  பதவியை இராஜினாமா  செய்த பாராளுமன்ற உறுப்பினர் நவவி ​


அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.இவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

இயற்கை அனர்த்தங்களின் போது செயற்பட அவுஸ்ரேலிய அரசாங்கம்  89 மில்லியன் ரூபா உடன்படிக்கை கைச்சாத்து

உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன இணைந்து மூன்று வருட காலத்திற்கான (2018-2020) வேலைத்திட்டங்கள் அடங்கிய உடன்படிaustralien aidக்கை ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.இலங்கை எதிர்நோக்கியுள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு உடனடியாக செயற்படுவதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் 89 மில்லியன் ரூபா நிதி (AUD 750,000) அடங்கிய உடன்படிக்கை ஒன்றையே இவ்வாறு அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.வெள்ளம், கடும்காற்று, வரட்சி முதலான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, உலகளாவிய காலநிலை மாற்ற தரவுகளுக்கு அமைவாக இலங்கை இந்த பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ளது.இதற்கமைவாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருணாகலை, புத்தளம், அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் இந்த சவால்களை எதிர்கொள்ளும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களின் முன்னெச்சரிக்கைக்கான நடவடிக்கைகளை அதிகரித்தல், சிரமங்களை குறைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உதவும் வகையிலேயே உலக உணவு வேலைத்திட்டம் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

_______________________________________________________________________

 சீரற்ற காலநிலை - 105,352 பேர் பாதிப்பு - 11 பேர் பலி

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களை சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிரவு முதல் சற்று அதிகரிக்ககூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

_______________________________________________________________________

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் டீசல் வாகனங்களுக்குத் தடை

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வரும் 31-ஆம் தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புகையால் ஏற்படும் மாசுபdieselாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்ட முதல் நகரம் ஹாம்பர்க் என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுக நகரமான ஹாம்பர்க்கில் ஏராளமான கன்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்தது. இதையடுத்து, மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜெர்மனி அரசு தீவிரமாகப் பரிசீலித்தது.அதன்படி வரும் 31-ஆம் தேதிக்குப் பிறகு யூரோ-6 புகைத் தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்கள் எதையும் நகரில் இயக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இப்போது புழக்கத்தில் உள்ள 90 சதவீத டீசல் வாகனங்களை ஹாம்பர்க் நகருக்குள் இயக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.         (மேலும்)  24.05.2018

_______________________________________________________________________

barathi

_______________________________________________________________________

முள்ளிவாய்க்காலின் எதிரொலி அன்றும் இன்றும்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஓலமிட்ட பெருந்துயர்

                                                                                ப. தெய்வீகன்

அங்கம் -01

ஆஸ்திரேலிய பெரு நகரங்களின் வீதிகளெங்கும் தமிழர்களின் சிவப்பு மஞ்சள் கொடிகள் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் அது. வார விடுமுறைகளில் மாத்திரம் protest sydney1வசதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திய சம்பிரதாயங்கள் எல்லாம் கடந்து, மக்கள் வார நாட்களிலும் வேலைகளுக்கு செல்லாமல் - விடுப்பெடுத்துக்கொண்டு - குடும்பத்தோடு வந்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் கரைந்து கிடந்த காலம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் என்று இன்று அறிவித்தால்கூட மெல்பேர்னின் மத்தியில் federation சதுக்கத்திலும் சிட்னியின் Martin சதுக்கத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் அலைபோல திரண்டு வந்து நின்ற காலம்.   ஒன்பதாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஓலமிட்ட பெருந்துயர் கணங்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன். ஆர்ப்பாட்டங்களில் வந்து திரளுமாறு "இன்பத்தமிழ் ஒலி" பிரபாகரன் பெருங்குரலெடுத்து இரவு பகல் பாராது கூவியழைத்துக்கொண்டேயிருப்பார். சிட்னி - கன்பரா - மெல்பேர்ன் வீதிகளில் சாரி சாரியாக எம்மவரின் வாகனங்கள் ஏதோவொரு எதிர்பார்ப்போடு ஓடிக்கொண்டிருக்கும்.        (மேலும்)  23.05.2018

_______________________________________________________________________

சொல்லத்தவறிய கதைகள்- அங்கம் 12

மூன்று  தலைமுறையாக  இலங்கை  அரசியலில் ஒலிக்கும்  இரண்டு  எழுத்துக்கள்

நூற்றுக்கணக்கான   மலர்  மாலைகள்  மண்ணில் சருகாகின!  

65 பவுண்  தங்கமாலைக்கு  என்ன  நேர்ந்தது....?

                                          முருகபூபதி - அவுஸ்திரேலியா

(2)

தலைவருக்கு   அந்த  ஆண்டு  65  வயது  பிறந்தது.   அதனை முன்னிட்டும்   அவர்  ஐ.நா. சபைக்கு   சென்று   வெற்றியுடன் திரும்பியதற்காகவும்   அவருடைய  ஊரில்  பெரிய gg.p பாராட்டு  விழாவும்  அவரை  கௌரவிக்கும்  முகமாக  65  பவுணில்  ஒரு தடித்த  தங்க மாலையும்  அணிவித்தார்கள்.அன்று  கட்டுநாயக்கா  வரவேற்பில்   அவருக்கு  அணிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான  மலர்  மாலைகள்  எதனையும்   அவர்  தமது மனைவியிடம்   கொடுக்கவில்லை.   அவை  அனைத்தும்  ஒரு வாகனத்தில்  ஏற்றப்பட்டு  சருகாகி  காய்ந்து கருகி எவருக்கும் பயனற்றுப்போயிருக்கலாம்!   தற்காலத்தில் தமிழ்நாட்டில் மயானங்களுக்கு  வரும் பூதவுடல்களுக்கு  அணிவிக்கப்படும்  மலர்  மாலைகள்  மற்றும்  மலர் வளையங்களை   தாவரங்களின்  பசளையாக  உரத்திற்கு பயன்படுத்தவிருப்பதாக    ஒரு  செய்தி வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற  செய்திகள், முயற்சிகள் அக்காலத்தில் வெளிவரவில்லையே என்பது  எனது தற்கால  ஆதங்கம்  அவ்வாறே    இந்தப் பொன்னாடைகளுக்கும்  ஏதும்  சமூகப்பயன்பாட்டு மாற்று   வழிகளை   யாராவது  கண்டு பிடித்தால்  தமிழ்  சமூகம் முன்னேறி விடும். ஏழைப்பெண்கள், குழந்தைகளுக்கு ரவிக்கை, பாவாடை தைப்பதற்கு கொடுக்கலாம்!        (மேலும்)  23.05.2018

_______________________________________________________________________

சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி - 38,040 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை களனி, களு, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதாகத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மா ஓய மற்றும் அத்தனகலு ஓயவை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

_______________________________________________________________________

ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலsterlight1் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.   10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உட்பட 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோருக்கு வயிற்றுப் பகுதிக்கு மேல்தான் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. இதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான காவல்துறையின் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.       (மேலும்)  23.05.2018

_______________________________________________________________________

பத்மநாபா மக்கள் முன்னணி ஜெர்மனி

France இல் "மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக."...... என்னும் நூல் வெளியீட்டு விழா

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பparis-1ாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட "மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக."...... என்னும் நூலின் வெளியீட்டு விழா France இன் தலைநகரான Paris இல் 20.05.2018 அன்று மாலை 15.00 இலிருந்து 19.00 வரை நடைபெற்றது.   பல்வேறு வகையான சமுக செயற்பாட்டாளர்களும் சமுக ஆவலர்களும் இந் நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்டார்கள். லக்ஸ்சுமி அவர்கள் இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமையேற்று நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி நடத்தினார்.தோழர் சுகுவினுடைய பால்ய நண்பரும் தோழருமான சிறி (முத்து London), மற்றும் France இன் சமுக செயற்பாட்டாளர்களான அசுரா (நாதன் Paris), உதயகுமார் (Paris) ஆகியோர் நூல் விமர்சனத்துக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.அவர்கள் ஒவ்வருவரினுடைய ஆய்வுகளும், விமர்சனங்களும் இந்நூல் தொடர்பான வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டபோதும் நுலிலுள்ள குறை நிறைகளை மிகவும் ஆழமான முறையில் ஆய்வு செய்ததை காணக்கூடியதாகவிருந்தது.       (மேலும்)  23.05.2018

_______________________________________________________________________

பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன்

பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமல்நாதன் தெரிவித்துள்ளார்.கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படையைச் சேர்ந்த 5000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால், காலி மாவட்டத்தின் நாகொட, வெலிவிட்டிய, திவித்துர, பத்தேகம, போப்பே, பொத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களும், வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.அவசர நிலைக்கு முகங்கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

முல்லைத்தீவு / யானை மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.    குறித்த தோட்டத்தை தற்போது பராமரிக்கும் இராணுவத்தின் 683ஆவது படைப்பிரிவில் பணியாற்றும் குறித்த அதிகாரி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் மரணித்த குறித்த யானை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   குறித்த பழச்செய்கை தோட்டத்துக்கு அருகில் உள்ள கோயிலுக்கு அனுமதியற்ற நிலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் மோதி யானை உயிரிழந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட குறித்த அதிகாரி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.       (மேலும்)  23.05.2018

_______________________________________________________________________

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழasraff hospitalமை பிற்பகல் 3.00 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலை பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.   தீயணைப்பு நடவடிக்கையில் வைத்தியசாலை ஊழியர்களும் பொது மக்களும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.  இத்தீபரவலுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

_______________________________________________________________________

இலங்கை அரசியல்:

தமிழ் இன அழிப்பு தினம் என்று முதலமைச்சர். விக்கினேஸ்வரன் அறிவித்தபோது மிதவாத தமிழ் தலைவர்கள் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை

                          ககானி வீரக்கோன்

மே 2009ல் உலகின் மிகக்கொடிய இராணுவ அமைப்பு என்று வகைப்படுத்தப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்புக்கும் மற்றும் அரசாங்கப் படைகளுக்கும் mmஇடையிலான ஆயுத மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்ததின் பின்பு இன்னொரு ஆண்டும் கடந்து போய்விட்டது. அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல நாடுகள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை ஒரு பயங்கரவாதக் குழு என்றுகூறி அதைத் தடை செய்துள்ளன. 1992ல் அப்படிச் செய்த முதல் நாடு இந்தியா ஆகும், அதற்கு ஆறு வருடங்களுக்குப் பின்பு 1998ல் ஸ்ரீலங்கா அந்த அமைப்பைத் தடை செய்தது.   எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப் பட்டதிலிருந்தே இறந்தவர்களை யார் நினைவு கூருவது என்பதில் வடக்கும் கிழக்கும் பிளவுபட்டு நின்றன. அதேவேளை புலிக்கொடிகளை அல்லது எல்.ரீ.ரீ.ஈ தலைவரின் சுவரொட்டிகளையோ காட்சிப்படுத்தி வடக்கில் நினைவாஞ்சலிகளை நடத்துவது 2009 முதல் 2015 ஜனவரி வரை தடை செய்யப்பட்டிருந்தது, யகபாலன அரசாங்கம் மெதுவாக நடுநிலை வகிக்கும் ஒரு கொள்கையை  பின்பற்றியது.பாதுகாப்பு படைகளின் இராணுவ வலிமையை வெளிக்காட்டும் வெற்றி அணிவகுப்புகள் காட்சிப்படுத்தப்படும் இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன, போரில் உயிழந்த வீரர்களின் நினைவாஞ்சலிகள் புனிதமான கொண்டாட்டங்களாக இடம்பெற்றன.     (மேலும்)  22.05.2018

_______________________________________________________________________

கிளிநொச்சியில்  விலைவாசி உயர்வை கண்டித்து  ஆர்ப்பாட்டம்

நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துசம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒIMG_0472ன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இன்று(21) காலை பத்து மணிக்கு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று  திரண்ட  பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை ஊர்வலமாக  பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது   பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே, அரசியல் தீர்வா விலைவாசி உயர்வா?, அரசே விலையைக் குறை கூட்டமைப்பே மௌத்தைக் கலை,  அரசியல் தீர்வுக்கு பரிசு விலைவாசி உயர்வா?, உள்ளுர் உற்பத்திக்குச் சந்தையைத் தா வெளிநாட்டு இறக்குமதிக்கு தடையே போடு,வேலைவாய்ப்பை தா விலையேற்றத்தை குறை, விவசாயிகள் பாடு திண்டாட்டம் முதலாளிகள் பாடு கொண்டாட்டம், சிறு கடன் தொடர் கடன் பெருங்கடனில் நாங்கள் கூட்டாட்சி நல்லாட்சி கொழுத்த ஆட்சியில் நீங்கள்,       (மேலும்)  22.05.2018

_______________________________________________________________________

சொல்லத்தவறிய கதைகள்- அங்கம்

மூன்று  தலைமுறையாக  இலங்கை  அரசியலில் ஒலிக்கும்  இரண்டு  எழுத்துக்கள்

நூற்றுக்கணக்கான   மலர்  மாலைகள்  மண்ணில் சருகாகின!  
65 பவுண்  தங்கமாலைக்கு  என்ன  நேர்ந்தது....?

                                          முருகபூபதி - அவுஸ்திரேலியா

(1)

1965  ஆம்  ஆண்டு.   எனக்கு  14  வயதிருக்கும்.  அந்த ஆண்டு    இலங்கையில்  நடந்த  பொதுத்தேர்தலில்  ஐக்கிய தேசியக்கட்சி  வெற்றிபெற்றது.   அந்த  அரசில்  டட்GGchelvaலி  சேனாநாயக்கா பிரதமரானார்.  தமிழரசுக்கட்சியும்  அகில  இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியும்   அந்த  அரசுக்கு  ஆதரவு  அளித்தன. இவ்வாறு அன்றும் ஒரு நல்லிணக்க ஆட்சி வந்தது!    டட்லி,     இக்கட்சித் தலைவர்களிடம்  தமது  அமைச்சரவையிலும் இணைந்து கொள்ளுமாறு  கேட்டபொழுது  செல்வநாயகமும் ஜி.ஜி.பொன்னம்பலமும்   அதனை   ஏற்கவில்லை.   ஆனால்,  தமது தரப்பில்  நியமன  அங்கத்தவரான  வழக்கறிஞர்  திருச்செல்வம் அவர்களை   சிபாரிசு  செய்தார்கள்.    இவர்கள்  மூவரும்  எப்படிப்பட்ட புகழ்பெற்ற  வழக்கறிஞர்கள்  என்பதை   ட்ரயல்  அட்பார் விசாரணையில்தான்   பார்த்தேன்.   இம்மூவரும்   விசாரணை   முடிந்து  நீதிமன்ற  வளாகத்தைவிட்டு  வெளியே வந்தபொழுது அவர்களை    ஒன்றாக  நிற்கவைத்து  எமது  வீரகேசரி  படப்பிடிப்பாளர் ரொட்றிகோ  எடுத்த  படம்  பிரசித்தமானது.        (மேலும்)  22.05.2018

_______________________________________________________________________

இலங்கை தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தென்மேற்கு லண்டனில் வசித்து aruneshவந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (20) Mitcham பகுதியில் உள்ள வீதியில் அருணேஷ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  அதிகாலை 3.30 மணியளவில் அவசர உதவிப்பிரிவு பொலிஸார் அவரை மீட்டு காப்பாற்ற முயற்சித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை லண்டனில் 65 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை

அ.விஜயன்

சிவகங்கை மாவட்டம் தாழையூர் முகாமில்  வசித்துவரும்,  சுரேஸ்குமார், சிவாஜினி தம்பதிகள் யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்தவர்கள்.இலங்கையில் எற்பட்ட அsrilanka-refugeesசாதாரன சூழ்நிலையால் 2009 இல் அகதிகளாக தழிகத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள்  வினோதரன், சாதுரியா என இரண்டு பிள்ளைகள் இதில் வினோதரன் தேவகோட்டையில் உள்ள இன்பான் ஜீசஸ் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.   வினோதரனுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருப்பதை கண்டறிந்த பள்ளி நிர்வாகம் அவனை அதற்கான போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளது. வட்டார அளவில் வெற்றியை பெற்ற வினோதரன் மாவட்ட அளவில் இலகுவாக தேர்வாகியுள்ளார். இதனால் அவர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியிலும் தேர்வாகியுள்ளார். அதன் பின்னர் அவர் தேசிய அளவில் தேர்வானபோது அதனில் பங்கேற்க  அவருக்கு வாய்ப்பளிக்காமல் தடைசெய்துள்ளார்கள்.என்ன காரணம் என அவரது பெற்றோர் சென்று விசாரித்துள்ளனர் அதற்கு அவர்கள்  இந்தியர் இல்லை என காரணம் காட்டி  அவர் தேசிய அளவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு நழுவிச் சென்றுள்ளது.        (மேலும்)  22.05.2018

_______________________________________________________________________

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு - மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு பணிப்பு

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங், களு, களனி, அத்தனகலு ஓய மற்றும் மா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் பின்வரும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  நில்வளா - மாத்தறை, கடவத் சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுபிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகள். கிங் - பத்தேகம, போப்பே, போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியகம, தவலம, நெலுவ பிரதேச செயலக பிரிவுகள்.  களு - களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள். களனி - கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, ஹன்வெல்ல, தொம்பே, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகலா பிரதேச செயலக பிரிவுகள்.   அத்தனகலு ஓய - நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுகள்.மா ஓய - பன்னல, திவுலப்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள்.

_______________________________________________________________________

சூட்சமமான முறையில் கடத்தியும் சுங்கப்பிரிவினரிடம் சிக்கிய நபர்கள்

சட்டவிரோதமான முறையில் 4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளை நாட்டிற்கு கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த விமானம் ஒன்றில் வருகை தந்த மாத்தறையை சேர்ந்த 55 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.பாதணியின் அகங்கால் பகுதியில் மற்றும் போலி பட்டிகளிலும் மறைத்து வைத்தே இவர்கள் தங்கக்கட்டிகளை கொண்டு வந்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் மற்றும் கட்டுநாயக்க காவல் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_______________________________________________________________________

 தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என் முன்னாள் வௌியுறவு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

_______________________________________________________________________

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் கஞ்சிக் கதையும்

-    கருணாகரன்

முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரலைச் செய்வதைப் பற்றி மாகாணசபையினருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் நடந்த இழுபறிகளும் ஆளாளுக்கு மாறி மாறி விதித்த நிபந்தனைகளும் ஈழத்தமிழ்ச் சூழலில் இதைப் பற்றிய சரியானsa புரிதல்கள் இல்லை என்பதைத் தெளிவாக்கின. வெட்கப்பட வைத்தன. பலரும் துக்கப்பட்டதும் உண்டு. புலிகளின் மூத்த உறுப்பினர் பஸீர் காக்கா உள்படப் பல்வேறு தரப்பினருடைய சமரச முயற்சிகளுக்குப்பிறகு, ஒருமித்து நிகழ்வை நடத்துவதற்கு இரண்டு தரப்பும் சம்மதம் தெரிவித்தபோதும் நினைவு கூரலின் போது இடையிலிருந்த ஒவ்வாமை தெளிவாகவே தெரிந்தது. ஒரு ஒழுங்கில் நிகழ்வுகள் நடக்கவேயில்லை. இந்த இரண்டு தரப்புகளையும் நிராகரித்து மேலெழுந்து நிகழ்வைச் சரியாக – பொதுமக்கள் நிலை நின்று - நடத்தக் கூடிய செயற்பாட்டியக்கங்களும் ஆளுமைகளும் தமிழ்ச்சூழலில் இல்லாமற் போய் விட்டன. அப்படிச் செய்யக் கூடிய சிலரையும் தமிழ் ஊடகப் பரப்பும் அரசியல் தரப்பும் அனுமதிக்கவும் இல்லை. இதனால் போராட்டத்திலும் யுத்தத்தின்போதும் களத்தில் நின்றவர்களே களம் அகற்றப்பட வேண்டியதாயிற்று. இது ஒரு மோசமான நிலை.இதனால் நினைவு கூரல் நிகழ்வுகளில் ஒரு பக்கமாக சனங்கள் தங்கள் பாட்டில் தங்களுடைய துயரத்தை அழுது ஆற்ற முயன்று  கொண்டிருந்தனர். அதுவே அவர்களுக்கு முக்கியமானது. ஆனால், அதற்குரிய அவகாசத்தைக் கொடுக்காமல் மறுபக்கத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று வெளியே தெரியாமல் நடந்து கொண்டிருந்தது.      (மேலும்)  21.05.2018

_______________________________________________________________________

 நிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்

                                                                           மு.தமிழ்ச்செல்வன் -

இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைத்தீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 iran2பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும்.  1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைத்தீவில் வாழ்ந்த சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள்.   இவர்களை அப்போது இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு  குடியேற்றப்பட்டனர். அன்று முதல்  கடந்த 15 ஆம் திகதி  வரை இந்த மக்கள் இரணைமாதாநகரிலேயே வாழ்ந்து வந்தனர். இரணைத்தீவு எனும் அந்தக் சிறிய தீவு 1992 ஆம்  ஆண்டு முதல்  இன்று வரை இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற தீவு. 2009 க்கு முன் யுத்தகாலத்தில் இந்த  தீவுக்கு  அருகில் சென்று  கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்தது.        (மேலும்)  21.05.2018

_______________________________________________________________________

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா?.

யுhழில் இருந்து வெளியாகும் இணையத்தளத்தில் இருந்து வெளியான செய்தி அதிர்ச்சியளிக்குமாறு இருந்தது. அதாவது முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 18ம் திகதிmotorbike விடுதலைப்புலிகளின் தொப்பியை வைத்து சிலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந் நிலையில் அவ்வாறு அஞ்சலி செலுத்தியவர்களும் அதைப் புகைப்படம் எடுத்தவர்களும் இலங்கைப் புலனாய்வாளர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படம் எடுத்த அவர்களின் நண்பர்களில் ஒருவரே புலனாய்வாளரிடம் முதலில் சிக்கிக் கொண்டார். சிக்கியவுடன் அவர் செய்த முதல் வேலை ஏனையவர்களையும் உடனடியாகக் காட்டிக் கொடுத்ததுதான். பிடிக்கப்பட்ட நண்பரால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களும் பிடிபட்டவர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவர்கள் என புலனாய்வாளர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர்கள் அழுது குழறி குறித்த புலனாய்வாளர்களிடம் கெஞ்சியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இவர்கள் பிடிபட்டது தொடர்பாக கொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு இணங்க புலனாய்வாளர்கள் குறித்த மாணவர்களை விடுவித்துள்ளனராம்.       (மேலும்)  21.05.2018

_______________________________________________________________________

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் ஆவா குழுவின் உறுப்பினர்கள் நான்கு பேர், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் ஆவா குழுவின் உறுப்பினர்கள் நான்கு பேர், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொடிகாமம் பிரதேச காவல்துறையினரால் நேற்றைய தினம் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகத்துக்குரியவர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகளுடன், இரண்டு வாள்கள் உட்பட சில ஆயுதங்களும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது  செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

_______________________________________________________________________

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் உடனடியாக அதிரிக்கக்கூடும் என்பதனால், கடல் பிரதேசத்தில் உடனடி கொந்தளிப்பு இடம்பெறும்.புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும். இந்தப் பிரதேச கடல் கொந்தளிப்பாக காணப்படும்.கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென்று திணைக்களம் கேட்டுள்ளது.

_______________________________________________________________________

kevalar

_______________________________________________________________________

நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரித்துள்ள மகிந்த!!

நல்லிணக்கம் என்ற போர்வையில் நாட்டில் நெருக்கடியான நிலையொன்று உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.ஹோகந்தரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.யுத்த வெற்றியை கொண்டாடுவது நல்லிணக்கத்திற்கு பாதகமானதென கூறி அதனைத் தடுத்துள்ளனர்.எனினும் வடக்கில் யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் கருப்புக் கொடிகளை ஏற்றுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.   இராணுவ வாரம் கொண்டாடப்படுகின்ற நிலையில், இராணுவத்தினர் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலைகளுக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில், நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சூழல் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 02

அரசமரத்தின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் சதி

                                                                          ரஸஞானி

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சந்திரோதயம் படத்தில்  "புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா ஏழை நமக்காக! கங்கை, யமுனை, காவிரி , வைகை ஓடுவதெதற்காswrd1க? நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக! " என்ற பாடல் வருகிறது.   இந்தப்பாடலை கவிஞர் வாலி இயற்றியிருப்பார். டி.எம். சௌந்தரராஜன் பின்னணிக்குரல் கொடுத்திருப்பார்.இலங்கைக்கு முதலில் புத்தரும் பின்னர் காந்தியும் வந்திருக்கிறார்கள்.  எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர். இலங்கையில் ஓடும் கங்கைகளும் நாளும் உழைத்து தாகம் எடுத்த மக்களுக்காகத்தான். கங்கைக்கரைகளில் விவசாயம் நடக்கிறது. வர்த்தக பொருளாதாரத்திற்கும் இந்த கங்கைகள் உதவுகின்றன. மக்களின் குடிநீரும் கங்கைகளிலிருந்தே பெறப்படுகிறது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் காவிரி நதி அரசியலாகியிருக்கிறது. இலங்கையில் நதிகளினால் இதுவரையில் பிரச்சினை இல்லை. அவை வற்றாத ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.        (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

வடக்குக் கிழக்கிற்கு வெளியே   வடக்குக் கிழக்குத் தமிழர்கள்

-    கருணாகரன்

(01)

“வடக்குக் கிழக்கிற்கு வெளியே – குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட தென்பகுதியில் வாழ்கின்ற வடக்குக் கிழக்குத் தமிழர்களின் நிலை என்ன? அவர்களுடைய எதிர்காலம் எப்tamils colomboபடி அமையும்?   “அவர்களுடைய அரசியல் தெரிவுகள், விருப்பு வெறுப்புகள், சுயாதீனத்தன்மை, அரசியல் நிலை அல்லது அரசியல் உறுதிப்பாடு போன்றவை எல்லாம் எப்படி வெளிப்படுத்தப்படுகின்றன? அவற்றின் பெறுமானம் என்ன? “அவர்களின் பண்பாடு, அடையாளம், இருப்பு போன்றன எவ்வாறு பேணப்படுகிறது? எப்படி வளர்த்தெடுக்கப்படுகிறது? “அவர்களுடைய சமூக, பொருளாதார நிலை என்ன?   இப்படிச் சில கேள்விகளை கொழும்பில் நீண்டகாலமாகவே குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் ஆய்வாளரிடம் கேட்டேன்.அவரிடம் தெளிவான பதில் இல்லை. “யோசிக்கத்தான் வேணும்” என்றார்.சைவத் தமிழ்ப் பாரம்பரியம், இடதுசாரிய ஈடுபாடு, ஆயுதப்போராட்டம், பின்னர் தமிழ்த்தேசிய அரசியல் என்ற வழிகளினூடாகப் பயணித்தவரிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லாமலிருப்பது வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் அடையாளத்தையும் இருப்பையும் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.        (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

4 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட இந்தியர் இலங்கயைில் சிக்கினார்

ஒரு தொகை தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோகிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதுடைய ஒருவர் இன்று காலை 08.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மேலதிக சுங்க ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய கூறினார்.  அவர் அணிந்திருந்த காற்சட்டை பையில் இருந்து 100 கிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

_______________________________________________________________________

காணாமல் போயிருந்த தவில் வித்துவானின் சடலம் கண்டெடுப்பு


யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் இன்று (19) சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.jeyam1   யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம் - வயது (66) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.5 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை பெண் ஒருவர் யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து இறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக அந்த பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார்.  கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். யமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.       (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

அரசாங்கம் கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை தருகிறது

– நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

(NFGG ஊடகப்பிரிவு)

பலஸ்தீன் மக்கள் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கடந்த மே மாதம் 15 ஆம nfgg logo் திகதியுடன் 70 ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.    பலஸ்தீன் மக்கள் தமது பூர்வீக பூமியை இஸ்ரேல் ஆக்கி ரமிப்பாளர்களிடம் இழந்து 7 தசாப்தங்களை கடந்த நிலையில், பலஸ்தீன் மக்களினதும் உலக முஸ்லிம்களினதும் புனிதஸ்தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெரூசலத்தில் அமெரிக்கா தனது இஸ்ரேலுக்கான தூதரகத்தை கடந்த 15ஆம் திகதி நிறுவியமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஒரு தலைப்பட்சமான இந்த முடிவு பலஸ்தீன் மக்களின் விடுதலையினை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன் பலஸ்தீன் மக்களுக்கு நீதியும் நியாயமும் விடுதலையும் கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்து வரும் ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் இவ்விடயம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.      (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

உயிர் தியாகம் செய்த வீரர்களை இனப் படுகொலையாளர்களாக சித்தரிக்கின்றனர் -  மஹிந்த ராஜபக்ஷ

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் மக்களுக்கு சுதந்திரத்தையும் உயிர் வாழ்வதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு, தமது சொந்த வாழ்வை, தமது உடல் உறுப்புக்களை தியாகம் செய்து அmahinda-1ர்ப்பணித்தவர்கள் அனைவருமே மகத்தான மனிதர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் அத்தகைய ஒரு மகத்தான மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் சித்தரிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.   அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதனை இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த யுகத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய துரோகம் என்று அவர் கூறியுள்ளார்.       (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

மாற்றுக்கருத்துக்களை செவிமடுக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள்.

லோகநாதன், ஜெர்மனி

கடந்த 13.05.2018 ஞாயிறன்று ஜெர்மனியின் வடமேற்கு “றைன்“ நதித்தீரத்திலுloganathaள்ள “நொயிஸ்“எனும் நகரத்தில் புத்தகஅறிமுகவிழா ஒன்றுநடைபெற்றது. இது மண்டபம் நிரம்பியமக்களுடன் களைகட்டியது. “புத்தகவெளியீடு அல்லது அறிமுகத்துக்கென இவ்வளவு மக்கள் திரண்டதைநாம் கண்டதில்லை“ எனவிமர்சகர்கள் நால்வரும் வியந்துபேசத் தவறவில்லை. பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்  அணியிலிருந்து தற்போது“தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (ளுனுPவு) பத்மநாபா“அமைப்பின் தலைவரும் செயற்பாட்டாளருமாகத் தொழிற்படுபவரான தோழர் “சுகு“ என அறியப்பட்ட திருநாவுக்கரசு சிறீதரன் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு நூல்! இது ஏறத்தாழ 1986–2016வரையான30 ஆண்டுகால ஆக்கங்களின் தொகுப்பாக இலங்கையில் வெளியிடப்பட்டு பிறநாடுகளில் அறிமுகமாகி வருகிறது. கட்டுப்பாடுகள் எதுவுமற்ற பொதுவெளி அறிவித்தலாக ஒழுங்குபடுத்தப்பட்ட“நொயிஸ்“நிகழ்வில் இலங்கையின் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புக்களிலிருந்தும் மாக்ஸிஸ அமைப்பு சார்ந்தவர்களும் எனகட்சிகள், அணிகள் வேறுபாடின்றி ஆர்வத்தோடு மக்கள் வருகை தந்திருந்தனர்.       (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

 கர்நாடகத்தில் அரசியல் திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.-yeddymain    உருக்கமாகப் பேசிய எடியூரப்பா அடுத்த முறை 150 இடங்களைப் பாஜக கைப்பற்றும் என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் 28 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்றும் கூறி பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று கூறி எடியூரப்பா முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். தேவைப்படும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவர் ராஜினாமா செய்தார். கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 உறுப்பினர்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் வழக்கு தொடர்ந்தது.உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இன்றுமாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கைவாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.      (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

அடுத்த மாதம் 03ம் திகதி முதல் வேலை நிறுத்தம்

May 19, 2018  10:00 pmஜூன் மாதம் 03ம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகமவின் தலையீட்டால் கைவிடப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் பொது செயலாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.

_______________________________________________________________________

கியூபா நாட்டில் விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி?


கியூபா நாட்டில் நடந்த விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.cubaair   கியூபா நாட்டின் தலைநகர் ஹவானா. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, போயிங் 737–201 ரக பயணிகள் விமானம் அந்த நாட்டின் ஹோல்கியுன் நகருக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.அதில் 104 பயணிகளும், 6 ஊழியர்களும் பயணம் செய்தனர்.   ஆனால் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர்       (மேலும்)  20..05.2018

_______________________________________________________________________

முள்ளிவாய்க்கால்: தந்திரமான பக்கம்

                                           எம்.எஸ்.எம் அயூப்

போரின்போது  கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவது, ஈழமக்கள் ஜனநாயக முன்னணியைத் (ஈபிடிபி) தவிர வடக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளாலும் இப்போதmullivaukkal memorial2018ு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும் மற்றும் வடக்கு மாகாணசபை இந்த நினைவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.  பிரதான நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இன்று (18.05.2018) நடைபெற உள்ளது, அங்குதான் அரசாங்கப் படைகளுக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.ரீ.ரீ.ஈ) இடையிலான இறுதி யுத்தம் நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்து முதல் சில வருடங்கள் வடக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவாஞ்சலி வெளிப்படையாக நடைபெறவில்லை. மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தலைமையிலான சிறியதொரு அரசியல்வாதிகள் குழு மட்டுமே இத்தகைய நிகழ்வுகளுக்காக முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றார்கள். எனினும் இப்போது பிரதான தமிழ் அரசியல் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) மற்றும் ஒரு அரசாங்க அங்கமான வடக்கு மாகாண சபை கூட இந்த நிகழ்வுகளைக் கொண்டாட முன்னணியில் உள்ளார்கள். ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) அவர்களது இரண்டு கிளர்ச்சிகளின்போதும் உயிர்நீத்த அவர்களின் சகாக்களின் நினைவாஞ்சலியை இரண்டு வெவ்வேறு தினங்களில் அனுட்டிப்பதைப் போலவே வடக்கு அரசியல்வாதிகளும் கூட இனவாத யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாஞ்சலியை இரண்டு வெவ்வேறு நாட்களில் நினைவு கூருகிறார்கள்.        (மேலும்)  19..05.2018

_______________________________________________________________________

‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’


இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கThanakaruna.aminும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையை பொறுத்தவரை, மே மாதம் இங்கு போர் முடிவுக்கு வந்த காலம். தமிழ் மக்களை பொறுத்தவரை மே 18 ஆம் தேதியை அவர்கள் முள்ளிவாய்க்கால் தினம் என்ற பெயரில், இறுதிப்போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர பயன்படுத்துகிறார்கள்.   போரில் இறந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தமிழ் மக்கள் என அனைவரையும் நினைவுகூரும் தினமாக அது அனுசரிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கம் இந்த தினத்தை அனுசரித்த நிலையில், அன்றைய தினத்தில் நினைவு விளக்குகளை ஏற்ற அனுமதி மறுத்தது. ராணுவத்தினர் அதனை தடுத்து வந்தனர். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அந்தத் தினத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது அனுசரிக்க அனுமதி வழங்கப்படுகின்றது.       (மேலும்)  19..05.2018

_______________________________________________________________________

முகமூடி மனிதர்கள்

ஆசி கந்தராஜா

அந்த நிகழ்வு, முன்னும் பின்னுமாக ஏராளமான நினவுச் சுவடுகளைக் கோத்துக் கொண்டு என் முன்னே எழுந்து நின்றது. ஒரு போதும் என்னால் நேற்றைக்குள் போகமுடியாதென்பது எனjail-1க்குத் தெரியும். இருந்தாலும் அதை நான் எதற்காகச் செய்தேன், அதற்கான  காரணம் என்ன? என்ற கேள்விகள், என் சிந்தனையைக் கலைத்துப் போட்டு, மன நிம்மதியைக் கெடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத் தமிழன் நான். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தம்பலகாமம் கிராமத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவுக்கு தம்பலகாமத்தில் அதிகமான நெல் வயல்கள் இருந்தன. கிராமத்தின் விவசாய சங்கத் தலைவரும் அவர்தான். பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தால் அப்பா என்னை திருகோணமலையிலுள்ள பாடசாலையில் சேர்த்துவிட்டார்.    பாடசாலைவிடுதியிலேயே தங்கிப் படித்தேன். என் வாழ்க்கையில் அற்புதமான அநுபவத்தை அருளிய நாட்கள் அவை. படிப்பும், விடுமுறைக்கு வீடுமென மகிழ்ச்சியாக வாழ்ந்த காலமது. பத்தாம் வகுப்பில் எல்லாப் பாடத்திலும் அதிவிசேஷ சித்திகள் பெற்று மாகாணத்திலேயே முதலாவதாக வந்தேன். தம்பலகாமம் கிராமமே என்னைக் கொண்டாடியது. உள்ளூர் பத்திகையில் என் படத்துடன் செய்தியும் வெளிவந்தது. பதினொராம் வகுப்பு முடிந்து நான் பன்னிரண்டாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் எங்கள் வீட்டிலே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நினைக்கவே திகிலடிக்கிற மிகக் கொடூரமான நிகழ்ச்சி அது.        (மேலும்)  19..05.2018

_______________________________________________________________________

 இராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி

இராக் அரசியல் சூழல் பற்றிய குப்பைவாத புரிதல்களைக் கேள்விக்குடiran comunist்படுத்தும் விதமாக இராக் தேர்தலில் அதன் புனித நகரில் 2 பெண்கள், அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றி அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மத ரீதியாக பாரம்பரியக் கட்சியான சதரிஸ்ட் கட்சியுடன் மதச்சார்பற்ற ஐசிபி கட்சி கூட்டணி மேற்கொண்டுள்ளது, அமெரிக்க, இந்திய, வலதுசாரி மனங்களுக்கு ஆச்சரியமாகவும் திகைப்பூட்டுவதாகவும் தெரியும். ஆனால் அது ஒரு அபாரமான கூட்டிணைவையும் வெற்றியையும் சாத்தியமாக்கியுள்ளது.அமெரிக்க எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் சதரிஸ்ட் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1934இல் உருவாக்கப்பட்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முதல்முறைாயக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.       (மேலும்)  19..05.2018

_______________________________________________________________________

முள்ளிவாய்க்கால் 2018

கருணாகரன்

நான் அழப்போவதில்லைmv2018
யாரும் யாரையும் அழ வைக்க வேண்டியதுமில்லை
புலம்பல்களின் பாதையை மூடிச் செல்வோம்
துயரைக் கடந்ததே வீரர்களின் வழி
அதுவே அவர்களுக்கான அஞ்சலி
சாக்காட்டிடை வெந்து
துயரில் மடிந்து நாம் இற்றுப்போன போதெங்கோ
இருந்தவரெல்லாம் கூடியின்று வருகிறார்
அலங்கரிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடலோடும்
சோடிக்கப்பட்ட சாவு இசையோடும்.
சாவிளைந்த நிலத்தில் திருவிழா, பெருவிழா எல்லாம் களை பெருக்க
பிள்ளையை எண்ணிக் கதறுகிறாள் தாய்         (மேலும்)  19..05.2018

_______________________________________________________________________

அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு

வட மாகாணத்தினுள் இன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என கூறிய மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் அதனால் அரசாங்கத்திற்கு பிரச்சினை இல்லை எனக் கூறிய அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரமேநாத் சி.தொலவத்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தது.அரசியலமைப்பை மீறிய இவர்கள் இருவருக்கு எதிராகவும் விரைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அதன் ஊடாக கோரப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

அனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளிலmulli2018் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் இன்று (18) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.  ஈகை சுடரினை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில் இழந்த யுவதி கேசவன் விஜிதா ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து, ஏனையவர்களும் சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் முயற்சி காரணமாக அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சிவில் சமுக அமைப்புக்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இன்று ஒரு சில தீர்மானங்கள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அவையாவன,       (மேலும்)  19..05.2018

_______________________________________________________________________

2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்

2.87 மில்லியன் இலங்கை நாணயத்தாள்கள், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்


குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் நேற்று (17) ஆரம்பித்த தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை 9 மணியளவில் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

 நினைவு கூரலின் அர்த்தம்

கருணாகரன்

சந்தேகமேயில்லை, நாடு இன்னும் இரண்டுபட்டேயிருக்கிறது. தமிழ்த் தரப்பு, யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலைச் செய்கிறது. பmullivaikal memorial1லத்த இழுபறிகள், போட்டிகளுக்குப் பிறகு ஒருவாறு ஒரு ஒழுங்குக்கு வந்து, தற்போது முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலைச் செய்கிறது.   மறுதரப்பான அரசு, யுத்தத்தில் மரணமடைந்த படையினருக்கான நினைவு கூரலை கொழும்பில் செய்யவுள்ளது என இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது (16.05.2018) கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.  இங்கும் பிரச்சினைதான். பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.க வெற்றிவிழாவைக் கொண்டாட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. காரணம், அப்படி யுத்த வெற்றியைக் கொண்டாடினால், அதில் ராஜபக்ஸக்களின் பங்களிப்புகளைப் பற்றிப் பேச வேண்டி வரும். ஆகவே அதைத் தவிர்க்கவே ரணில் தரப்பு விரும்புகிறது என.    ஆனால், ஜனாதிபதி மைத்திரி தரப்பு யுத்தவெற்றி விழாவைக் கொண்டாடவே விரும்புகிறது. யுத்தம் வெற்றியடைந்தபோது ஆட்சியிலிருந்தது சுதந்திரக் கட்சி என்பதுடன், அப்பொழுது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே இருந்தார் என்பதால், இந்த வெற்றியின் அடையாளத்தைத் தாம் பெறலாம் என இந்தத் தரப்பு சிந்திக்கிறது.       (மேலும்)  18..05.2018

_______________________________________________________________________

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனைmr

இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை ஒன்று கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.நேற்று(16-05-2018) மாலை  ஆறு மணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.ஒருவொரு வருடமும் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது  வழக்கமாகும்.

_______________________________________________________________________

மகிந்த, ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

இராணுவ வீரர்கள் தினக் கொண்டாட்டத்தை நடத்தவும், இராணுவ நினைவுத் தூபியை நிர்மாணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரியுள்ளதாMahinda rajaக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   கடுவலை பகுதியில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   30 ஆண்டுகளாக நாட்டில் நீடித்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.    மே மாதம் 19 ஆம் திகதி அதனை கொண்டாட வேண்டும். எனினும், அரசாங்கம் தற்போது அதனைக் கொண்டாட பின்வாங்குகின்றது என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனினும், யுத்தத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூற யாழ்ப்பாணத்தில் நிகழ்வு நடத்தப்படுகிறது.  இந்த நிலையில், 19 ஆம் திகதி விளக்கேற்றி இராணுவத்தினரை நினைவுகூறும் பொறுப்பு தமக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.        (மேலும்)  18..05.2018

_______________________________________________________________________

58 கோடி போலி கணக்குகளை முடக்கியது முகநூல் நிறுவனம்

நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கணfacebook2க்குகளை முடக்கியிருப்பதாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் பாலியல்ரீதியான பதிவுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு, 5 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முகநூல் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.  இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியிருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மேம்படுத்தப்பட்ட தகவல்தொழில்நுட்பங்களின் உதவியுடன், வன்முறை, பயங்கரவாதம், பாலியல்ரீதியான படங்கள் மற்றும் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.        (மேலும்)  18..05.2018

_______________________________________________________________________

யாழ் பன்னாலை மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே இன்று (17) வழங்கி வைத்துள்ளார

யாழ் பன்னாலை மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே இன்று (17) வழங்கி வைத்துள்ளார்.    யாழ் றொட்டிக்கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.   பாடசாலை அதிபர் திருமதி சுலைமாமதி கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் பிரதேசசபை உறுப்பினர் ரூபன் றொற்றிக்கழகத்தின் தலைவர் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

_______________________________________________________________________

மன்னாரில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியை இரண்டாவது நாளாகவும் பார்வையிட்ட நீதவான்

மன்னாரில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியை மன்னார் mannar1மாவட்ட நீதவான் இன்று இரண்டாவது நாளாகவும் நேரில் சென்று பார்வையிட்டார்.மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் இருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, மீட்கப்பட்ட மனித எலும்புகளையும் பார்வையிட்டுள்ளார்.களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுணர், சட்டத்தரணிகள், விசேட தடயவியல் நிபுணத்துவ காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிளும், நீதவானுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை பார்வையிட்டுள்ளனர்.எனினும், இன்றைய தினம் எந்தவித அகழ்வு பணிகளும் இடம் பெறவில்லை. இந்த நிலையில், அகழ்வு மற்றும் ஆய்வுப் பணிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு?

இன்று எரிபொருள் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணவீர கூறியுள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,கொழும்பு மேயரின் வீட்டிலுள்ள மலசல கூடத்தை திருத்தம் செய்வதற்காக 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேயரின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசாங்கம் மக்களை ஏமாற்றி உள்ளதாகவும், மேலும் மக்களை ஏமாற்றாமல் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

_______________________________________________________________________

இலங்கையர்கள் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைப்பு

இலங்கையர்கள் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேறிகள் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துருக்கி ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.  ஆவணங்கள் அற்ற அவர்கள், துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களுள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிரியா, பாலஸ்தீன் மற்றும் ஈராக் முதலான நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக சிரியாவில் சிவில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் குடியேறிகளுக்கு துருக்கி பிரதான வழியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

தன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்


பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதmallikaிர்ப்புத் தெரிவித்து தன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் அடைத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.    மிகவும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான இந்த விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் இருந்து நடிகர் – நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.   குழந்தை கடத்தல் மற்றும் அவர்கள் மீதான பாலியல் சுரண்டலுக்கு எதிரான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உலக அளவிலான பிராண்ட் அம்பாஸிடராக இருக்கும் மல்லிகா ஷெராவத், அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் ஒரு விடயத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் செய்துள்ளார்.       (மேலும்)  18..05.2018

_______________________________________________________________________

அரச வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 08.00 மணி முதல் பரந்தளவிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்ததை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.தமது கோரிக்கைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை வழங்காவிட்டால் எதிரில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

_______________________________________________________________________

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

வௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று (17) மதியம் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கூறப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இந்த விடயத்தை கூறியுள்ளது.இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் நேரத்திற்கு பணியாற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

_______________________________________________________________________

அஞ்சலிக்குறிப்பு:

" எழுத்துச்சித்தர் "பாலகுமாரன் நினைவுகள்

ஈழப்போராட்டம் பற்றியும் கேள்விஞானத்தில்  நாவல் எழுதவிரும்பியவர்

                                                                 முருகபூபதி

" என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். " என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசைbalakumaranயில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன். இவரது  நாவலான ' மெர்க்குரிப்பூக்கள்' இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது.  சின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவையே,  ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரைகள் என்பன.  இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.       (மேலும்)  17..05.2018

_______________________________________________________________________

தமிழர் தேசிய பிரச்சினை மற்றும் ஸ்ரீலங்காவில் தமிழர்களின் கிளர்ச்சி

                                     இம்தியாஸ் ரஸாக்

2009 மே 17ல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ), சிங்களவர் ஆதிக்கம் நிறைந்த ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான போரில்; தோல்வியை ஒப்புக்கொண்டு தங்கள் ஆwar conflictயுதங்களை மௌனிக்கச் செய்வதாக உறுதியளித்தார்கள். ஸ்ரீலங்காத் தீவில்;; வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களுக்கு இன ரீதியாக ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக மூன்று தசாப்தங்கள் நீண்ட வன்முறையான பிரச்சாரத்துக்கு தலைமை தாங்கிய எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 18ல் ஒரு துப்பாக்கிச் சமரில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படைகள் அறிவித்தன, அது ஆசியாவில் நடைபெற்றுவந்த மிக நீண்ட இராணுவ மோதலுக்கு திறமையான ஒரு முடிவு ஏற்பட்டதை அடையாளப்படுத்தியது.  முன்பு எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசம் 2009 நடுப்பகுதியில் இருந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது, பெருமளவு தமிழர்களும் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்களும் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட வட பிராந்தியத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி வாக்களித்திருந்தார         (மேலும்)  17..05.2018

_______________________________________________________________________

நாவற்குழி சுற்றிவளைப்பு: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு பரிசீலனை


1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவ சுற்navatkuzhiறிவளைப்பின் போது 24 பேர் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.   யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த ஆட்கொணர்வு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட​து. இதன்போது, மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹேக்கித்த குணசேகர ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.   சம்பவம் இடம்பெற்று 22 வருடங்களுக்கு பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, யாழ்ப்பாணத்தில் எந்த பகுதியில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது தொடர்பில் மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.        (மேலும்)  17..05.2018

_______________________________________________________________________

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளன இளம் பெண்கள்; யாழில் சம்பவம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.   மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.   விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்டபோது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.        (மேலும்)  17..05.2018

_______________________________________________________________________

 பெரிய பரந்தன் பிரதேசத்தின் புதிய மதுபானசாலைக்கு   மக்கள் மூன்றாவது  தடவையாக எதிர்ப்பு

கிளிநொச்சி  கரைச்சி பிரதேசத்தின் பெரியபரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ள மதுபானசாலைக்கு  பிரதேச  மக்கள்  மூன்றாவது தடவையாகவும் எதிர்ப்புத் தெரிவித்து மகஜர்கParanthan protestளை  கையளித்துள்ளனர்.   இன்று (16-05-2018) பெரிய பரந்தன் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும்   மகஜர்களை மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்துள்ளனர்  இந்த மகஜருடன் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மற்றும், கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி பாடசாலை சமூகத்தினரால் நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்ட எதிர்ப்பு  கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.    பல பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது குறித்த புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனதிதிரேசா பெண்கள் கல்லூரி, விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் என்பன காணப்படுகின்றன. பெரிய பரந்தன் கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன     (மேலும்)  17..05.2018

_______________________________________________________________________

பஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.  இந்நிலையில் 12.5% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாவை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததைகளை அடுத்தே பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  எவ்வாறாயினும் நேற்று (16) 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

வீதிகளுக்கு விடுதலை புலிகளின் பெயர்களா?

வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த முன்னாள் உறுப்பினர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத் தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.வடக்கு அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதே போன்று தென்னிலங்கை அரசியல்வாதிகளும் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.  இவ்வாறான குற்றச்சாட்டுக்கள், அரசியல் இலாபம் கருதி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு முன்வைக்கப்படுகின்றன.ஆகவே இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

_______________________________________________________________________

அமெரிக்காவுடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும்: வடகொரியா திடீர் எச்சரிக்கை

அணுஆயுதத்தை தன்னிச்சையாக கைவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அமெரிக்காவுடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும் என்று வடகொரியா திடீரென எச்சரkimtrumphித்துள்ளது.   அணுஆயுதம் தொடர்பாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென்கொரியா, வடகொரியா நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அந்த இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் சிறிது தணிந்தது. இதேபோல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் வரும் ஜுன் மாதம் 12ஆம் தேதி அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "மேக்ஸ் தண்டர்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ராணுவம் ஒத்திகை நடத்தியது. இதைக் கண்டித்து, தென்கொரியாவுடன் புதன்கிழமை நடக்கவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து, அமெரிக்காவுடனான மாநாட்டையும் ரத்து செய்ய நேரிடும் என வடகொரியா எச்சரித்துள்ளது.     (மேலும்)  17..05.2018

_______________________________________________________________________

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கட்சி கூட்டத்திற்கு சபை வாகனத்தை பயன்படுத்திய சர்ச்சையால் சபை  ஒத்திவைப்பு

கரைச்சி பிரதேச சபையின்  இரண்டாவது அமர்வு இன்று (16-05-2018) சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.kili lo.meeting   முன்னதாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக  அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்த போது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தாம் எடுத்துச் சென்ற சிட்டி விளக்குகளை வைத்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்த சபையின் அனுமதியை கோரினார்கள். அதற்கு  சபையும் அனுமதி வழங்க 35 உறுப்பினர்களும் சபையில் விளக்கேற்றி  பொது மக்களுக்கு தங்களின் அஞ்சலியை செலுத்தினார்கள்.தொடர்ந்து சபை அமர்வு இடம்பெற்றது. இன்றைய அமர்வில் பல்வேறு  பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. இதன் போது எதிர்தரப்பு உறுப்பினர் தா.ரஜினிகாந் தவிசாளர் முழங்காவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு சபையின்  உத்தியோகபூர்வ வானத்தை எடுத்துச் சென்றிருகின்றார். இது ஏற்புடையதல்ல குற்றம் சுமத்தினார்          (மேலும்)  17..05.2018

_______________________________________________________________________

மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் 300 வீடுகள்

மன்னார் மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 300 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்த திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.  அதற்கமைய இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. குறித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக குறித்த 300 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

மெலிஞ்சிமுனை சைமன்  (1938-2018)

ஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடிய கலைஞர்

- கருணாகரன

சவால்களின் மத்தியில் ஒரு புதிய கிராமத்தை உருவாக்குவதென்பது இலகுவான ஒன்றல்ல. அதுவும் ஆதிக்கத் தரப்புகளுடைய எதிர்ப்புகளின் மத்தியில் புதிய கிராமத்த012ை உருவாக்குவது இலகுவானதல்ல. எல்லாவற்றுக்கும் சவாலாக இருந்தது அன்றைய சமூக நிலவரங்களும் அரசியற் சூழலுமாகும். அன்று அதிகாரத்திலிருந்த தமிழரசுக்கட்சி கரம்பன் கத்தோலிக்க ஆதிக்கச் சமூகத்தினருக்குச் சார்பாகச் செயற்பட்டது. இதைச் சமநிலைப் படுத்துவதற்கு அல்லது எதிர்கொள்வதற்கு அந்த அரசியலுக்கு மாறான ஒரு அரசியற் தேர்வைச் சைமன் தரப்புச்செய்ய வேண்டியதாயிற்று. சைமன் தேர்ந்தெடுத்தது அல்பிரட் துரையப்பாவின் அரசியலை. துரையப்பா சனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற அரசியலைச் செய்தார். இதனால், அப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக அல்லது எதிராக அல்பிரட் துரையப்பா பலமானதொரு தரப்பாக யாழ்ப்பாணத்திலிருந்தார். அல்பிரட் துரையப்பாவின் செல்வாக்குத் தீவுப்பகுதி வரை பரவியிருந்தது. அல்பிரட் துரையப்பாவுடன் தொடர்பு கொண்டு, மெலிஞ்சிமுனையின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை உதவிகளைப் பெற்றுக் கொண்ட சைமன், சில காலம் துரையப்பாவுடன் இணைந்து பொதுப்பணிகளைச் செய்தார். இந்தச் சந்தர்ப்பத்திலேயே மெலிஞ்சிமுனைை.      (மேலும்)  16..05.2018

_______________________________________________________________________

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கிறது; குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றமில்லை

பஸ் கட்டணத்தை இன்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 6.56% ஆல் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும் குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.  இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.அதன்படி பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கு நேற்று மாலை கூடிய நிபுணத்துவ குழுவினால் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

_______________________________________________________________________

90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்!

கார்த்திகா வாசுதேவன்

 பாலகுமாரன் அல்ல சிலருக்கு அவர் என்றென்றும் ப்ரியமாக பாலா...

150 நாவல்கள், 100 சிறுகதைகள், 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம். பிரபல தமிழ் வாரப் பத்திரிகைகளின் தொடர் எழுத்தாளர் என்று பன்முக அவதாரத்துக்குச் balakumaran2சொந்தக்காரரான எழுத்தாளர் பாலகுமாரன் இன்று நம்மோடு இல்லை. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல லட்சோபலட்சம் பாலகுமாரன் விசிறிகளுக்கும் தான்.இணைய விவாதங்களிலும், நேரடி விவாதங்களிலும் பாலகுமாரனுக்காக உருகும் இவர்களுக்கு பாலாவைத் தவிர வேறு உன்னதமான எழுத்தாளர்கள் எப்போதும் கண்ணில் பட மாட்டார்கள். அந்த அளவுக்கு பாலகுமாரன் நாவல்களின் தாக்கம் அவர்களுக்குள் இருந்தது. காரணம் பாலகுமாரன் தனது நாவல்களில் பெரும்பாலும் விரித்து எழுதியது சாமானியர்களின் வாழ்நாள் அபிலாஷகள் குறித்தும் அவற்றின் நல்வினை, தீவினைகள் குறித்துமே என்பதால் வாசகர்களால் அவரது படைப்புகளுடன் இயல்பாக ஒன்றிப் பயணிக்க முடிந்தது. இது தான் பாலகுமாரன் நாவல்களின் மிகப்பெரும் வசதி. வாசிக்கும் எவரையும் தமது வாழ்வோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளத் தக்க வகையிலான கதைகள் அவருடையவை. அதுவே பாலகுமாரன் நாவல்களின் வெற்றி.        (மேலும்)  16..05.2018

_______________________________________________________________________

யாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள்

யாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோலreginold and arnold்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.    நேற்று (14) பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தில் விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.எதிர்வரும் ஜீன் 5ம் திகதி தேசிய மரம் நடுகை தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ் நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர். இதேவேளை யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் பாடசாலை அதிபர்களை ஆளுநர் செயலகத்திற்கு அழைத்து மரம் நடும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார். பசுமையாக்கும் திட்டத்திற்கு மாணவர்களின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

_______________________________________________________________________

 அரசின் விலைவாசி உயர்வு மக்களுக்கு எதிரான நடவடிக்கையே -   மு. சந்திரகுமார் கண்டனம்

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு,  நல்லெண்ணம், அரசியல் தீர்வு போன்றவைகளில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய நல்லாட்சி அரசchandrakumar1618ாங்கம், அவற்றைச் செய்யாமல், விலைவாசியை மட்டும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதனால் வறிய, நடுத்தர சமூக அடுக்கு நிலையில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக இலங்கைத்தீவில் வறுமையிலே மிகப் பாதிப்பைச் சந்தித்து, முதலிடத்தில் இருக்கின்ற கிளிநொச்சி மாவட்ட மக்களை இந்த விலைவாசி உயர்வு கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் கண்டனத்தை வெளிப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கையை மக்கள் பங்கேற்புடன், எதிர்வரும் 23. 05. 2018 திங்கள்கிழமை அன்று நடத்துவதற்கு அது தீர்மானித்துள்ளது என அந்த அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் “நாட்டிலே உற்பத்தித்துறையை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் இறக்குமதி செய்வது” என்ற தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும்.       (மேலும்)  16..05.2018

_______________________________________________________________________

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71), இன்று (மே 15) சிகிச்சை பலனின்றிக் காலமானார்.balakumar    தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் பாட்ஷா, நாயகன், குணா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல சினிமாவிலும் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடைய எழுத்துக்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் பலர். அவரால் எழுத்தாளரானவர்களும் உள்ளனர். சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன், உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். ரசிகர்களின் அன்பால் எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்படுபவர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதியுள்ள மெர்க்குரி பூக்கள், உடையார் உள்ளிட்ட பல நாவல்கள் மிகவும் பிரபலமானது. பெரும் வாசகப் பரப்பின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி பாலகுமாரன். சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.       (மேலும்)  16..05.2018

_______________________________________________________________________

மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக....... என்னும் நூலின் வெளியீட்டு விழா

பத்மநாபா மக்கள் முன்னணி ஜெர்மனி

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்neuss-1பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக....... என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று மாலை 14.30 இலிருந்து 17.30 வரை நடைபெற்றது.தோழர் அலெக்ஸ் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற பல்வேறு அனர்த்தங்களினால் மரணித்த மக்களுக்கான மெளன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந் நிகழ்வினை திருமதி சசிப்பிரியா ஜெயந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.நூலாசிரியரை கௌரவிக்கும் முகமாக செல்வி றொசானி தம்பித்துரை அவர்கள் பூங்கொத்தை வளங்கினார். இந்த நூலிற்கான ஆய்வினை இலங்கையின் பொதுவுடமை அரசியல் பாரம்பரியத்தை சேர்ந்தவரும், போராளி பத்திரிகைக்குழுவின் ஆசிரியரும், 1980கயளில் பொதுவான சமூக, மாணவ ,இளைஞர் இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரும் புலம் பெயர்ந்து அறுவை சஞ்சிகையை நடாத்தியவருமான தோழர் லோகநாதன் மாஸ்ரர் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.         (மேலும்)  16..05.2018

_______________________________________________________________________

மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்

மீனவர்களுக்கு பழைய விலைக்கே மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் மீனவர்கள் இன்றும் கடலுக்குச் செல்லாமல் தவிர்த்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதன்காரணமாக நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களில் பிரதான மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்ய முடியாது போயுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நீர்கொழும்பு கரையோர மீன்பிடிப்பாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் கடலுக்குச் செல்லாமல் தவிர்த்து எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர்.அதேநேரம் சிலாம் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் தவிர்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

வடகொரியாவின் அணு குண்டு ஹிரோஷிமாவை தாக்கியதை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது

கடந்த ஆண்டு வட கொரியா நடத்திய அணு குண்டு சோதனை காரணkimமாக, 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அருகில் இருந்த மௌண்ட் மன்டாப் என்ற மலை வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளது.   வடகொரியா கடந்த ஆண்டு நடத்திய மிகப்பெரிய, நவீன அணு குண்டு சோதனையின் மூலம், ஒரு மலையே வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளது. இந்த அணு குண்டு, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் டெக்னாலஜிகல் பல்லைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.   வட கொரியாவின் மௌண்ட் மன்டாப் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி பூமிக்கு அடியில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டது.       (மேலும்)  16..05.2018

_______________________________________________________________________

கனகபுரம் வீதியில்  உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது - பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட டிப்போ கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது என கரைச்சி பிரதேச சபையின் எதிர்தரப்பு   உறுப்பினர் தா.ரஜினிகாந் தெரிவித்துள்ளார். ஆதாவது கரைச்சி பிரதேச சபையினால் மேற்குறித்த வீதியில் அமைந்துள்ள  வியாபார நிலையங்களில் பெரும்பாலானவை அனுமதி பத்திரம் பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவற்றை  அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைந்துள்ள வர்த்தகர்களை மேலும் பாதிக்கும் குறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த வியாபாரிகளில் பலர் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் வியாபார நிலையங்களை அமைக்கும் போது பிரதேச சபையும் இருந்தது எனவே அப்போது அமைதியாக இருந்துவிட்டது. இப்போது அனுமதி பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து  அவர்களுக்கு எதிரான நடவடிக்கைச் செல்வது பொருத்தமற்றது இந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை எமது வியாபாரிகளின் நலன்களை கருத்தில் எடுத்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

_______________________________________________________________________

400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை (16) பத்தரமுல்ல, சுகுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது.உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க கூறினார்.கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் கூறினார்.

_______________________________________________________________________

அணு ஆயுத மையம் அழிப்பு: தென் கொரிய செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையம் அடுத்த வாரம் அழிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக தென் கொரிய செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தென் கொரிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன் இடையிலான சந்திப்புக்கு முன்னதாக, வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையங்களை அழிப்பதாக அந்த நாடு வாக்குறுதி அளித்துள்ளது. தன்படி, மே மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அணு ஆயுத சோதனை மையங்களை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுவதற்கு தென் கொரியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு விடுக்கப்படும் என்றும் அந்த நாடு கூறியிருந்தது.அதன் ஒரு பகுதியாக, தென் கொரியாவைச் சேர்ந்த 8 செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

_______________________________________________________________________

தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மல்லிகை ஜீவாவை உரியமுறையில் கௌரவிக்க தமிழ்ச்சமூகம் முன்வரல் வேண்டும்

                                                        முருகபூபதி 

 நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ்,  தொடக்கத்தில் யாழ்ப்பாணmallikai1த்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற)  சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த  மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது  அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து,  இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர்  தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.ஒரு  சிகையலங்காரத ்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக ்கருத்துக்களினால்  ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகி விடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர்  ஜீவா.சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை   தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார்.  இந்தச்சரிதை  ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.      (மேலும்)  15..05.2018

_______________________________________________________________________

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்


தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போர் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரை பணயம் வைத்து தாயகம் திருமsl refugees sea்பி வருகின்றனர்.இவர்கள் தாயகம் திரும்ப காரணம் என்ன என்பது குறித்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு நேரடியாக சென்று விசாரித்தபோது, அவர்களின் பிரதான கோரிக்கை எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே. இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டபோதும் ராமேஸ்வரத்துக்கு அகதிகளின் வருகை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.  தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.        (மேலும்)  15..05.2018

_______________________________________________________________________

 முள்ளிவாய்கால் நினைவு கூரல்  மக்களின் ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். சமத்துவம் சமூக நீதிக்கான  மக்கள் அமைப்பு

முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரல் நிகழ்வு, ஒரு நாள் சடஙchandrakumar0518்காக அமையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். இந்த நிகழ்வானது இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நிறைவடைந்து விடக் கூடாது. உறவுகளை இழந்த மக்களின் உளத்தை ஆற்றுப்படுத்துவதற்கும் அவர்களுடைய அரசியல் மற்றும் வாழ்க்கையை  ஈடேற்றுவதற்குமாக அமைவது அவசியமாகும். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அவ்வமைப்பின் தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது“முள்ளிவாய்க்கால்” என்பது எமது அரசியற் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. இங்கே முடிவடைந்த யுத்தமும் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளும் எமது மக்களை விட்டு நீங்கவில்லை. இந்தப் பாதிப்பின் வலியோடுதான் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மக்கள் முள்ளிவாய்க்காலில் பெருந்துக்கத்தோடு ஒன்றிணைகிறார்கள்.       (மேலும்)  15..05.2018

_______________________________________________________________________

மாகாணசபையை வலுப்படுத்த த.தே.கூட்டமைப்பு சட்டத்திருத்தத்தை பாராளுமன்றில் முன்வைக்க வேண்டும்.- வரதராஐபெருமாள்;


ஜேவிபி 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றில் தனிநபர் பிரேரvaratharணையாக முன்வைப்பது போல் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் மாகாணசபையை வலுப்படுத்த ஓர் திருத்தத்தை முன்வைக்க வேண்டுமென முன்னாள் வடக்குகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கோரியுள்ளார்.இலட்சியகொள்கையில் முன்னேறும் முயற்சியில் ஈடுபடும் அதேவேளை நடைமுறையில் பெறவேண்டியதை பெற்றுக்கொள்வதன் ஊடாக தமிழ்சமூகத்தை வலுப்படுத்த முடியுமென்ற ரீதியில் கூட்டமைப்பு தலைமை அரசியல் யாப்பு திருத்தத்தை கொண்டு வருவது அவசியமானதெனவும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துக்கு இன்னும் 18மாதகாலம் உள்ள நிலையில் புதிய அரசியலமைப்புக்கு சாத்தியமில்லை. எனவே குறைந்த பட்சம் 18 மாத காலப்பகுதியில் அதிகாரப்பகிர்வுக்கான ஓர் அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் பெறக்கூடியவற்றை பெறுவது அவசியமானதுஎனவே 13வது திருத்தத்தை மாற்றியமைக்க ஓர் திருத்தத்தை கொண்டுவந்து மாகாணசபையை வலுப்படுத்த வேண்டும்.      (மேலும்)  15..05.2018

_______________________________________________________________________

பத்மநாபா மக்கள் முன்னணி ஜெர்மனிsugu-5

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அவர் தற்போது France இல் தங்கியுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் 00337522212538 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். அவர் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக....... என்னும் நூலினை இலங்கையில் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக France இல் அவருடைய புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது. 20.05.2018 அன்று மாலை 14.00 மணிக்கு 21 Rue Villot, La Couneve,France முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும்

_______________________________________________________________________

24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது


24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை தனது பயணப்பையில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக எடுத்துவந்த நபரொருவரை இன்று (14) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொழும்பு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 122 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.  சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் பெறுமதியான 4 தங்ககட்டிகளை மீட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_______________________________________________________________________

இரணைத்தீவுக்கு சென்ற முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில், வடமாcm irantivuகாண சபை உறுப்பினர்கள் குழு ஒன்று, இரணைத்தீவில் குடியேறியுள்ள மக்களை சென்று பார்வையிட்டனர். அங்குள்ள பொதுமக்களது காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதுள்ள போதும், தங்களது காணிகளை கோரி போராட்டம் நடத்திவந்த மக்கள், கடந்த சில வாரங்களாக அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்களால், தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி  கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாள் வரை எவ்வித தீர்வும் இன்றி தொடர்ந்த நிலையில் பொறுமையிழந்த மக்கள் தாங்களாகவே தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவுக்குச் சென்று குடியேறினர்.       (மேலும்)  15..05.2018

_______________________________________________________________________

காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 52 பேர் பலி

காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 52 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனgassa palர். மேலும், இதில் 2400 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது. ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள். ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.  தூதரக திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா தனது கணவரோடு பங்கேற்க உள்ளார்.       (மேலும்)  15..05.2018

_______________________________________________________________________

மக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விரோதமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது”

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கண்டனம்!

(NFGG ஊடகப்பிரிவு)

“அரசாங்கத்தின் தீர்மானங்களும்   நடவடிக்கைகளும்  மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மாற்றமும், தொடNFGG-Logoர்ச்சியான விலையேற்றங்களும்  அதனையே உறுதி செய்கின்றன. எஞ்சியிருக்கும் காலங்களிலாவது மக்களின் எதிர்பார்ப்புகளை  அரசாங்கம் அமுல்படுத்த முன்வர வேண்டும்.  இல்லையேல்,  கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையினை இந்த அரசாங்கமும் சந்திக்க வேண்டி வரும்”  என  நல்லாட்சிக்கான தேசிய முனன்ணி (NFGG) தெரிவித்துள்ளது.அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக NFGG வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:“மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து பொது நலன்களை முதன்மைப்படுத்தும் ஆட்சி முறையொன்றை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்திற்கான ஆணையினை மக்கள் வழங்கினார்கள். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் இந்த எதிர் பார்ப்பை ஏமாற்றமடையச் செய்வதாகவே தொடர்ந்தும் இருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றம் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விலை அதிகரிப்புக்கள் என்பன இதனையும்  உறுதிப்படுத்துகின்றன.       (மேலும்)  15..05.2018

_______________________________________________________________________

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

ஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழங்காலில் வைத்து தனது அடிப்படை உரிமைகளை மீறியதாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட எட்டு பேரை பிரதிவாதிகளாக உள்ளடக்கி தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பாவணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  ஊவா மாகாண முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவருடைய பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாத காரணத்தால் தன்னை முழங்காலில் வைத்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதாக மனுதாரரான அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனால் தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் முதலமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டாலும், அதில் எந்தவொரு நீதியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் செயலால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தீர்ப்பு வழங்குமாறும் அதற்காக உரிய நட்டஈட்டை பெற்றுத்தருமாறும் மனுதாரரான அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

_______________________________________________________________________

சரிவடையும் இலங்கையின் பொருளாதாரம்

பொறுப்பேற்பது யார்?


கருணாகரன்

அரசாங்கம் பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. முதலில் எரிவாயுவின் விலை உயர்ந்தது. பிறகு பால்மா. அதற்கடுத்து பருப்பு. இப்பொழுதுeconomy எரிபொருள். இன்னும் என்னவெல்லாவற்றுக்கும் உயர்வு ஏற்படும் என்று தெரியாது.  இப்படி அடுத்தடுத்து அரசாங்கம் செய்திருக்கும் விலையேற்றத்தைப் பற்றி, அதனால் உண்டாகப் போகும் விளைவுகளைப் பற்றி எங்கள் தெருவில் இருக்கிற “விசுவர்” என்ற விசுவநாதன், இப்படிப் பாடினார். விசுவருடைய பாடல் இந்தக் காலத்தைப் பிரதிபலிக்கும் அசல் கண்ணாடி. இதொன்றும் பகடியான சங்கதியல்ல. அல்லது விசுவர் என்ற சாதாரண மனிதர், ஏதோ பொழுதுபோக்காகப் பாடி விட்டுப் போயிருக்கிறார் என்று எளிதாகக் கடந்து செல்லக்கூடிய பாட்டோ சங்கதியோ அல்ல.  நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு, ஆட்சிச் சிறப்பு, ஐக்கியம், நல்லெண்ணம் போன்றவைகளில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கம், அவற்றைச் செய்யாமல், விலைவாசியை மட்டும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. ஏனையவற்றைச் செய்யாமல் விலைவாசி உயர்வை மட்டும் செய்தால் எப்படி மக்களும் நாடும் வீழ்ச்சிக்குள்ளாகி வேண்டிவரும், எல்லாமே சீரழிவில்தான் போய் முடியும் என்பதை மிக எளிதாக விளக்கியிருக்கிறார் விசுவர். ஆகவே இது ஒரு சமகால அரசியல் ஆய்வு. சமகால நடத்தைகளைப் பற்றிய விமர்சனம். மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருத்தமான கவனக்குறிப்பு.சாதாரண மனிதர்களின் அனுபவங்களும் அவதானிப்பும் சாதாரணமாக இருப்பதில்லை. அவை பெறுமதியானவை. அனுபவத்தில் விளைகின்றவை. ஆனால் அதிகாரத்திலிருப்போர் அவற்றைப் பொருட்படுத்துவது குறைவு. அல்லது இல்லை எனலாம்.         (மேலும்)  14.05.2018

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனிகங்கையே

இலங்கைத் தலைநகரை ஊடறுத்துச்செல்லும் நதியின் பின்னணியில் தொடரும் கதைகள்

                                                                                 ரஸஞானி

"நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா..?"  என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவkalaniிஞர் ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும்!   நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப் பார்க்கமுடியாது! இந்த புதிய தொடரில் வரும் இலங்கையின் தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் உண்மைப்பெயர் என்ன தெரியுமா...? கல்யாணி. நடிகர் திலகமாவதற்கு முன்னர் வி. சி. கணேசன், முதலில் தோன்றிய திரைப்படம் பராசக்தியில் இறுதியில் வரும் நீதிமன்றக்காட்சியில், கலைஞர் கருணாநிதியின் அனல் கக்கும் வசனங்களை பேசுவார். அதில் ஓரிடத்தில், " ஓடினாள்... ஓடினாள்.... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் கல்யாணி...." என்ற வரிகள் வரும். எங்கள் தேசத்தின் கல்யாணியும் சிவனொளி பாதை மலையிலிருந்து ஊற்றெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறாள்.       (மேலும்)  14.05.2018

_______________________________________________________________________

கிழக்கு தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இனைஞர் யுவதிகளுக்கு அநீதி.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது இதனை இந்து சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த தெரிவுகளை இரத்துச்செய்து விட்டு மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய  கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்தார்.  வடக்கு கிழக்கில் கடந்த முப்பது வருட யுத்த காலப்பகுதியில் பல சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் நாட்டைவிட்டு ஓடாமல் எமது இனத்தின் வேர்களான மாணவச் செல்வங்களுக்குப் பெரும் சேவையாற்றி தன்னையும் தனது குடும்பத்தையும் ஆகுதியாக்கியவர்கள் எமது தமிழ் இளைஞர்கள்.  பல்கலைக்கழகங்களில்  கலாநிதிப்பட்டங்கள் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் மத்தியில் எமது தொண்டராசிரியர்களின் பணி அளவிடமுடியாதது.இவ்வாரான சந்தர்ப்பத்தில் தற்போதைய நேர்காணல் முடிவுகள் தொண்டர் ஆசிரியர்களுக்கும் அவர்களின் குடம்பங்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. தமிழ் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களுக்காக பத்துவருடங்களுக்கு மேல் பணியாற்றிய தொண்டராசிரியர்களை ஏதோ காரணங்களைக் கூறி வெட்டியகற்றிவிட்டு அதே தமிழ் பாடசாலைகளுக்கு அராஜகமாக முஸ்லிம்  ஆசிரியர்களை நியமிப்பதென்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. இது வெறுமனே ஒரு ஆரிரியர் நியமனத்தோடு சம்பந்தப்பட்ட விடயமாகத் தெறியவில்லை.        (மேலும்)  14.05.2018

_______________________________________________________________________

 மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது

-சீத்தாராம் யெச்சூரி

(லண்டனில் 2018 மே 5 அன்று மார்க்ஸ் 200:சர்வதேச மாநாட்டில் ஆற்றிய உரை)

காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக லண்டன் மsitaram in london on 5th Mayாநகருக்கு உலகம் முழுதுமிருந்து மார்க்சிஸ்ட்டுகள், அறிவுஜீவிகள் வந்துகுழுமியிருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் சார்பாக, என் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள அமைப்பாளர்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்த இறுதி அமர்வு “மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது” என்பது குறித்து விவாதித்திட திட்டமிட்டிருக்கிறது.   இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சர்வதேச அளவில் மார்க்சியத்தை எப்படிக் கொண்டுசென்று கொண்டிருக்கிறோம் என்பதைச் சுருக்கமாக விளக்கிட விரும்புகிறேன்.       (மேலும்)  14.05.2018

_______________________________________________________________________

fra

_______________________________________________________________________

இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் காத்திருக்கும் அபாயம்

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலா பயணிகள் அருகில் சslfallsென்று பார்வையிட முடியாது என ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஊடாக நீர்வீழ்ச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். பண்டாரவளை, பதுளை, ஹல்துமுல்ல போன்ற பகுதிகளில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

வடக்கு, கிழக்கில் மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் பல நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.    தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் பொது மக்களுக்கு சொந்தமான குறித்த காணிப்பகுதிகள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிப்பதற்கான ஆய்வு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத்தகவல்கள் தெரிவித்துள்ளன.   இதேவேளை, கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகளை மீண்டும் அந்த மக்களுக்கு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.       (மேலும்)  14.05.2018

_______________________________________________________________________

கண்டி – திகன சம்பவம் : மனித உரிமை ஆணைக்குழுவிடம், 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடு!!!

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர்  தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்kandyriots1ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள தீபிக உடகம, கண்டி  வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.டிவி வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "எங்களிற்கு 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 100 பேரிடம் நேரில் பார்த்த சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம். கண்டி வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.அனைத்து தகவல்களையும், தரவுகளையும் ஆராய்ந்த பின்னர் நாங்கள் அறிக்கையொன்றை தயாரிப்போம். எங்கள் அறிக்கையில் பரிந்துரைகளும் காணப்படும்.இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்போம்.   இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்த வன்முறைகள் ஏன் இடம்பெற்றன?, யார் இதனை தூண்டினார்கள்?, அரச அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது." எனவும் அவர் தெரிவித்துள்ளார்

_______________________________________________________________________

ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்றுப் பொருளையும் இன்று (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாக பளைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

_______________________________________________________________________

ஸ்ரீலங்காவில் காலனித்துவ இரட்டை ஆட்சி மீண்டும் வருகிறதா?

                                         லக்சிறி பெர்ணாண்டோ

கடந்த மூன்று நான்கு மாதங்களாக ஸ்ரீலங்கா அது செயற்பட வேண்டியதைப் போல முன்னோக்கி நகரவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பொருளாதாரம் மற்றும் மக்Ranil and sridenaகளின் வாழக்கை நிலமைகள் என்பனவே. கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பு மற்றும் சுதந்திரமான விமர்சனம் என்பன இருந்தபோதிலும் அரசாங்கத்தால் எந்தவிதமான அரசியல் அடக்குமுறையும் பிரயோகிக்கப் படாததுதான். இருந்தும் கடந்த கால அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயல்பின் காரணமாக அது அரசியல் அடக்குமுறை என்று பிரபலமாகக் கருதப்படுகிறது. பல மிதமான தமிழ் வாக்காளர்களின் அதிருப்தி காரணமாக இராணுவத்தால் கையகப் படுத்தியிருந்த தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்ததைத் தவிர நல்லிணக்கமும் பெரிய அளவில் முன்னேற்றமடையவில்லை. அம்பாறையில் கலவரம் பற்றிய முன்னெச்சரிகைகள் இருந்தபோதிலும், கடந்த மார்ச் மாதத்தில் கண்டியில் முஸ்லிம் சமூகத்தினரைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலமைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றி மக்கள் வாதிட்டு வருகின்றனர் மற்றும் இந்தப் பிணக்கினை எப்படித் தீர்ப்பது என்பதில் ஆட்சி ஆழமாகப் பிளவுபட்டுள்ளது.       (மேலும்)  13.05.2018

_______________________________________________________________________

காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று முதல்

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் தெரிவிக்கின்றது.மன்னார் பிரதேசத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார்.உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்வது அவர்கள் அரசாங்கத்திடம் எதிபார்க்கின்ற பதில் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளன.இதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.நிர்வாக அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்ததுடன், விசாரணை அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நாட்களில் கோரப்பட உள்ளன.

__