a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக பிடியாணை விதிக்கப்பட்டுத் தேடப்படும் ஜீவன் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகாமில் இயங்கியவர்!

- பொலிஸ் அத்தயாட்சகரின் கடிதத்திற்கு உதயன் பதில்

சாவகச்சேரி மாணவன் கபிலநாத் படு கொலை தொடர்பாக சாவகச்சேரி நீதிமன் றம் விதித்த பிடியாணையின் பேரில் தேடப் பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவர் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகாமுக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர்  (சாள்ஸ்) என்பவரின் கீழ் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிய வந்தி ருக்கின்றது.

மேற்படி மாணவன் படுகொலை தொடர்பாக நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற பூர்வாங்க விசார ணைகளின் பின்னர் நீதிவான் த.பிரபா கரன் விடுத்த உத்தரவில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

தேடப்படும் ஜீவனைக் கைது செய் வதற்கான பிடியாணை கடந்த 24ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளமையை தமது நேற்றைய உத்தரவில் மீண்டும் ஞாபகமூட்டியுள்ள நீதிவான் ஜீவனை  உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சாவகச்சேரி சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத்குமாரவுக்கு நேற்றுத் திரும்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்படி ஈ.பி.டி.பி. முகாமுக்குப் பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவருக்கு அவரது முகாமில் இருந்து செயற்பட்டு வந்த ஜீவன் என்பவரால் தொலைபேசி அழைப்பு மூலமாக கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பந்தப்பட்ட சடலம் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டு அது தோண்டி எடுக்கப்பட்டது என்பதை பொலிஸார் குறிப்பிட்டமையை நீதிவான் தமது நேற்றைய உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஈ.பி.டி.பி. முகாமுக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டருக்கு (சாள்ஸுக்கு) இந்த வழக்கின் சந்தேக நபரான ஜீவனால் கூறப்பட்ட விக்கி தொடர்பாகவும், செல்வம் தொடர்பாகவும் அவர்களுக்கு இந்த வழக்கில் ஏதேனும் விதத்தில் சம்பந்தம் உள்ளதா என்பது தொடர்பாகவும் இவ் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள இரண்டாவது சந்தேக நபரான லோகேஸ்வரன் சாந்தீபனின் வாக்கு மூலத்தை சிறையில் வைத்து பதிவு செய்யவும் நீதிவான் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்றின் நேற்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்ட ஈ.பி.டி.பி. சாவகச்சேரி முகாம் பொறுப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவர் ஈ.பி.டி.பி. சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில்  வெற்றிலைச் சின்னத்தில் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே சமயம், இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக "உதயன்', "சுடர்ஒளி' நாளிதழ்கள் கடந்த திங்களன்று "சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டன.

அந்தச் செய்தி குறித்து "உதயன்", "சுடர்ஒளி" நாளிதழ்கள் மீது வழக்குத் தொடரப்போகின்றார் என அன்றைய தினமே அறிக்கை வெளியிட்ட ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்படி செய்தியானது தமது கட்சி மீது திட்டமிட்டு சுமத்தப்படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்றும் வசை பாடியிருந்தார் என்பது தெரிந்ததே.

மேலும் மேற்படி இரு விடயங்களிலும் தமது கட்சி மீது சுமத்தியிருப்பது திட்டமிடப்பட்ட அவதூறுப் பிரசாரங்களே அன்றி இதில் உண்மைத் தன்மை எதுவும் இல்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் அடித்துக்கூறியிருந்தார்."அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பரப்பப்பட்டு வரும் இது போன்ற மோசமான அவதூறுப் பிரசாரங்களால் நடந்து முடிந்த படுகொலையின் சூத்திரதாரிகளை கண்டு பிடித்து விடமுடியாது''  என்றும் கூட அவர் வியாக்கியானம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குறிப்பு

மேற்படி செய்திகள் தொடர்பாக இடம்பெற்ற இரண்டு விடயங்களை வாசகர் கவனத்துக்கு கொண்டு வருவது முக்கியமானது எனக் கருதுகின்றோம்.

01. மேற்படி படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. உறுப்பினருக்கு பிடியாணை என்ற செய்தி திங்களன்று வெளியானமையை அடுத்து, அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் "உதயன்" அலுவலகத்துக்கும், கொழும்பில் "உதயன்', "சுடர்ஒளி' ஆசிரியரின் கைத்தொலைபேசிக்கும் தொடர்பு கொண்ட சிலர், கொழும்பில் உள்ள அரச சார்புப் பத்திரிகையின் செய்தியாளர்கள் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு மேற்படி செய்தி தொடர்பாகத் தாங்களும் கட்டுரை ஒன்று வரைய உள்ளனர் எனத் தெரிவித்தனர். அதனால் அந்தச் செய்தியின் மூலத்தை தெரியப்படுத்தும்படி "நைசாக" அவர்கள் கதை விட்டனர். ஆனால் அவர்கள் அழைத்த 0772622638 என்ற தொலைபேசி இலக்கம் சம்பந்தப்பட்ட கொழும்புச் செய்தியாளர்களுடையது அல்ல என்பதையும் அதில் பேசும் குரல்கள் அச் செய்தியாளர்களுடையவை அல்ல என்பதையும் "உதயன்', "சுடர்ஒளி"ஆசிரியர் நேரடியாக சுட்டிக்காட்டி செய்தி மூலத்தை அறிய சிலர் எடுத்த முயற்சியை முறியடித்தார்.

02. அதே சமயம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் அஜித் சமரக்கோன் பெயரில் ஒப்பமிட்டு றப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப்பட்டு கடிதம் ஒன்று "உதயன்" ஆசிரியருக்கு முகவரியிடப்பட்டு "உதயன்" யாழ்.அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

"2010.03.29 ஆம் திகதி "உதயன்' பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தவறான செய்தி தொடர்பான விடயம்" என அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு அதில் "மேற்படி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரோ அல்லது கைது செய்யப்படவுள்ள சந்தேக நபரோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தொடர்புள்ளவர்கள் என்றோ அன்றி அக் கட்சியின் பிரதிநிதிகள் என்றோ இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் இருந்து தெரியவரவில்லை. எனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்ற வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அச் செய்தியின் பிழையை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்''  என்று அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு அதன் பிரதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் தொடர்பில் பின்வரும் விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்:

அ) ஈ.பி.டி.பியைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய உண்மைக்கு முரணான விடயம் அடங்கிய கடிதத்தை "உதயன்" அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய தேவை பொலிஸ் அத்தியட்சகருக்கு இல்லை. அத்தோடு இவ்வாறு மறுப்பு பிரசுரிக்கும்படி கோரும் அதிகாரமும் அவருக்கு கிடையாது. ஆகையினால் இவ் விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து "உதயன்", "சுடர்ஒளி" நாளிதழ்கள் ஆராய்ந்து வருகின்றன.

ஆ) தூய தமிழில் நல்ல கணனி தட்டச்சில் இக் கடிதம் யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலிருந்து எமக்கு கிடைத்தது மகிழ்ச்சியே.

ஆனால் அந்தக் கடிதத்தின் கணனி எழுத்து அளவும், கடிதத்தின் தலைப்புக்கான எழுத்து அளவும் வகையும் (Font Size and Type) வழமையாக ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் பத்திரிகை அறிக்கைகளில் உள்ளவற்றை அப்படியே ஒத்திருந்தன. அது இக் கடிதத்தின் மூலம் குறித்து "எங்கேயோ இடிக்கின்றதே.....!' என்ற கருத்தை நம்மிடம் ஏற்படுத்தவும் தவறவில்லை.

 

உதயன் பத்திரிகைச் செய்தி தொடர்பில் யாழ் பொலிஸ் அத்தியட்சகர் விளக்கம்!

கடத்தப்பட்ட மாணவனின் படுகொலை ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியானை எனும் தலைப்பின் கீழ் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரின் விளக்கம். விபரங்கட்கு

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!