|
மாணவர் கபிலநாத் கொலை வழக்கு விசாரணை தேடப்படும் ஜீவனின் தாயும் சகோதரியும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்
சாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் கடந்த 14ஆம் திகதி கடத்தப்பட்டுப் பின்னர் கடந்த 27ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபிலநாத்(வயது 16) கொலை வழக்கின் பூர்வாங்க விசாரணை நேற்று சாவகக்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் சுமார் 5 1/2 மணி நேரம் நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது இந்தக் கொலை தொடர்பான முதலாவது சந்தேக நபராகத் தேடப்பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் அல்லது ஜீவன் என்பவரது தாயாரான குமாரசிங்கம் திருப்பதி அம்மா, சகோதரியான குமாரசிங்கம் சுகன்ஜா ஆகி யோரை, சாவகச்சேரிப் பொலீஸார் கைது செய்து மன்றில் ஆஜர் செய்தனர். இவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் நேற்றுக்காலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தையாரான எஸ்.திருச்செல்வம் சகோ தரிகளான தி.தனுசியா, தி.கௌசிகா ஆகி யோர் நீதிமன்றுக்கு சமுகமளித்திருந்தனர்.
சந்தேகநபர்கள் தரப்பில் இந்த வழக் கின் முதலாவது சந்தேகநபரான குமாரசிங் கம் கேசவன் அல்லது ஜீவன் என்பவரின் தாயாரான குமாரசிங்கம் திருப்பதி அம்மா, சகோதரியான குமாரசிங்கம் சுகன்ஜா மற்றும் இரண்டாம் எதிரியான யோகேஸ் வரன் சாந்தீபன், கணேஸ்வரன் தயாராஜ், திவாகரசர்மா துஷாந்தன், ரவின் ரங்க ஆகி யோரை சாவகச்சேரிப் பொலீஸார் மன்றில் ஆஜர் செய்தனர்.
கொலைசெய்யப்பட்ட மாணவரின் சகோதரியான திருச்செல்வம் தனுசியா, திருச்செல்வம் கௌசிகா ஆகியோர் பொலீஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் மன்றில் வாசிக்கப்பட்டது. அதில் தனது சகோதரனைக் கடத்தியவர்கள் அவரது கைத்தொலைபேசி இலக்கத்திலிருந்து தமது வீட்டுக்குத் தொடர்புகொண்டு பேசினார்கள் என்று திருச்செல்வம் தனுசியா தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சனத்குமாரவின் வாக்கு மூலமும் நீதிமன்றத்தில் நேற்றுப் பதிவு செய்யப்பட்டது. கொலைசெய்யப்பட்ட மாணவரின் கைத்தொலைபேசி இரண்டாவது சந்தேக நபரான சாந்தீபனிடம் இருந்து மீட்கப் பட்டதாக சாவகச்சேரிப் பொலீஸ் நிலை யப் பொறுப்பதிகாரி தனது வாக்குமூலத் தில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கின் சந்தேகநபர்களில் திவாகரசர்மா துஷாந்தன், ரவின் ரங்க ஆகியோர் விடுதலை செய் யப்பட்டனர். ஏனைய சந்தேகநபர்களான யோகேஸ்வரன் சாந்தீபன், கணேஸ்வரன் தயாராஜ், குமாரசிங்கம் திருப்பதி அம்மா, குமாரசிங்கம் சுகன்ஜா ஆகியோரை எதிர் வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
|