a_Pen

முதற்பக்கம்

ஆனந்தசங்கரி

ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈ.பி.டி.பி

ஈரஅனல்

நெருப்பு

புளொட்

தூ

டெலோ நியூஸ் 

இலங்கைநெற் 

மீன்மகள்

 சூத்திரம்   

மகாவலி 

உண்மைகள்  

கவிமலர்

கிருத்தியம்

அலை    

 பூந்தளிர்    

 எங்கள்தேசம்

சலசலப்பு   

நோயல்நடேசன் 

வளர்பிறை  

எங்கள்பூமி 

தமிழ்யுகே   

புயல்  

புளொட்யுகே 

யாழமுஸ்லீம் 

புண்ணியாமீன் 

யவ்னா ருடே  

எஸ்.ஆர்.லெம்பட்

பஷீர்     

தமிழ்யூஎன்  

கவசங்களைதல் 

தூங்காத கண்கள்

யாழ்மண்

தமிழ்குரல்

துருவம்

தினசரி

இலங்கை முஸ்லீம்

ஆயுள்

ARRR

Asientribune

The lka academic

Tamil Week 

The Hindu

Daily News

Sunday Times

Daily Mirror

The island

The Sunday Leader

ColomboPage

Sunday Times

CNN

BBC

Newsnow

 

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.10                                                        02.02.2012

3 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி , தமீழிழ விடுதலை புலிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல.எவ்) ஆகிய கட்சிகளின் பதிவுகளை தேர்தல் திணைக்களம் இன்று புதன்கிழமை இரத்து செய்துள்ளது.

பதிவினை பாதுகாப்பதற்காக வருடாந்தம் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினாலேயே தேர்தல் ஆணையாளர் குறித்த கட்சிகளின் பதிவினை நிராகரித்துள்ளார்.

புதிய சட்டத்திற்கிணங்க அனைத்து அரசியல் கட்சிகளும் வருடாந்த கணக்கறிக்கையினை தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகள் மக்கள் முன்னணி 1989ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் அரசியல் பிரிவாக உருவாக்கப்பட்டது. விடுதலை புலிகளின் பிரதி தலைவரான மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இக்கட்சியின் தலைவராகவும் யோகரட்னம் யோகி பொதுச் செயலாளராகவும் செயற்பட்டனர். இக்கட்சியின் சின்னமாக புலி காணப்பட்டது.

1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற அனைத்து கட்சி மாநாட்டில் விடுதலை புலிகள் மக்கள் முன்னணி பார்வையாளராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் அழைக்கப்பட்டது.

இக்கட்சி 1990 இல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து வாபஸ் பெற்றது.

இக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1990ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடக்கம் மார்ச்ச 1ஆம் திகதி வரை வாகரையில் இடம்பெற்றது. சுமார் 15,000 பேர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கட்சியின் விஞ்பானமும் யாப்பும் அங்கீகரிக்கப்பட்டது.

இதேவேளை, 2000ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய அரசியலில் நுழைவதற்கு பாலமாகவே தேசிய ஐக்கிய முன்னணியை மறைந்த அமைச்சர் அஷ்ரப் ஸ்தாபித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சிங்கபூருக்கான இலங்கை தூதுவரும் மறைந்த அமைச்சர் அஷ்ரபின் மனைவியுமான பேரியல் அஷ்ரப் பின்னர் அக்கட்சியின் தலைவராக செயற்பட்டார்.

புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளிலிருந்து பிரிந்த குழுவினரே 1987ஆம் ஆண்டு ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை ஸ்தாபித்தனர்.
கே. பத்மநாபவை தலைவராக கொண்ட ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் இராணுவ பிரிவு தலைவராக ஈ.பி.டி.பி கட்சியின் தலைவரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு முதலீட்டு அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த செயற்பட்டார்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை புளொட் பரந்தன் ராஜனுடன் இணைந்து ஸ்தாபித்தாபிப்பதில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தலைமை தாங்கினார்.

இந்த புதிய கட்சி விடுதலை புலிகளின் அன்றைய செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கு இந்திய சமாதான படையினருக்கு ஆதரவளித்தது. பின்னர் அக்கட்சியிலிருந்து பிரிந்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பியை ஸ்தாபித்தார்.

 

முன்னைய பதிவுகள்

10years thenee-1

yarltv

Yarl TV Live

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்

யாழ்ப்பாணத்தின் அவலம்!

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-1)

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-2)

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!

தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள்

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (1)

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (2)