|
இலங்கையர் ஜனநாயக முன்னணி – ஜேர்மனி (SLDF-Germany) இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்துள்ளது.
 |
யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான மருந்துப்பொருட்கள், உடைகள், அங்கவீன மானவர்களுக்கான வண்டிகள் ஆகியவை அடங்கலான கன்டெயினரை இலங்கையர் ஜனநாயக முன்னணி ஜெர்மனி (SLDF) அனுப்பி வைத்துள்ளது.
ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த ஒருமாதகாலமாக நிவாரணப்பொருட்கள் இலங்கையர் ஜனநாயக முன்னணி சேகரித்தது. குழந்தைகளுக்கான உடைகள் முதல்கொண்டு மருந்துப்பொருட்கள் அங்கவீனர்களுக்கான வண்டிகள் உட்பட சுமார் நான்கு தொன் வரையிலான நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. ஜேர்மன் ஸ்ருட்கார்ட் நகரில் இயங்கி வருகின்ற இலங்கையர் சங்கத்தினரும் இதில் இணைந்து கொண்டு தமது பங்களிப்பையும் வழங்கியுள்ளனர். நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சென்றடைவதில் சுமார் மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் வரை பிரயாணங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ்நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக இலங்கையர் ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. தமக்கு தமிழ்மக்கள் பலவழிகளிலும் ஒத்துழைப்பு தந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையர் ஜனநாயக முன்னணி 2006ம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள Bietiheim- Bissingen என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனநாயகத்தை நேசிக்கின்ற தமிழ்மக்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு தமிழ்மக்களுக்கான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் பல கலந்துரையாடல்களை நடாத்தி வந்துள்ளது. அது மட்டுமல்லாது யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதில் ஈடுபட்டும் வருகிறது. கடந்த 30வருடங்களாக நடைபெற்று வந்துள்ள யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 3லட்சம் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள் பாரியளவு தேவையாகவும் உள்ளன. வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்கள் உதவி புரிகின்ற பட்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் பல வழிகளிலும் உள்ளன. இத்தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் இலங்கையர் ஜனநாயக முன்னணி மேற்கொண்ட செயற்திட்டத்திற்கு புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் பெருமளவு உதவி செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு உதவிகளை மேற்கொள்ளவும் தாம் தயாராகி வருவதாகவும் இதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பையும் அவர்கள் எதிர்பார்த்திருப்பதாக கூறுகின்றனர்.
டன் தமிழ்ஒளி, ரி.பி.சி வானொலி, இணையத்தளங்கள் என இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உதவி கோரல் குறித்து அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. இவ் ஊடகங்களுக்கும் நிவாரணப்பொருட்கள் சேகரித்தவர்களுக்கும் அப்பொருட்களை தந்துதவியவர்களுக்கும் இலங்கையர் ஜனநாயக முன்னணியினர் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
வவுனியா சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்
நேரடித்தொடர்புகளுக்கு (வவுனியா)
தொலைபேசி இலக்கங்கள்: 0094244924467 - தொலைநகல்: 0094242225192
வெளிநாட்டுத்தொடர்புகட்கு:
இலங்கையர் ஜனநாயக முன்னணி
0049-7142-221771 - 0049-7154-181312 0049-7142-221771 - 0049-7154-181312
Sldf - e.V
Kreis Ludwigsburg Germany Ac no: 30058369 Blz .60450050
Int.Bank Account Number: DE56 6045 0050 0030 0583 69
SWIFT- BIC. : SOLADESILBG
சமூக சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்
Social Self – Employment Development Organization (SSDO)
No: 9, First Lane, Mathuramkulam Street, Sinnaputhukulam
Vavuniya – Srilanka
Commercial Bank, Station Road, Vavuniya.- Account No: 1610035477
|