|
வடபிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகள்
ஒப்பீட்டளவில் வடபகுதி இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண் டாக வேண்டும். அபிவிருத்தியில் பின்னடைவு. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தில் பின்ன டைவு. நிர்வாகக் கட்டமைப்பிலும் பின்னடைவு. அண்மைக்கால யுத்தமே இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுவாகக் கூறப்படுகின்றபோதிலும் இப்பிரதேசத்திலிருந்து காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்பட்ட அர சியல் தலைமைகளின் தூர நோக்கற்ற செயற்பாடுகளே பிரதான காரணம்.
மற்றைய மாகாணங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தத்தமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் காட்டிய அக்கறையின் மிகச் சிறு பகுதியையாவது வட பிரதேச அரசியல் தலைவர்கள் காட்டவில்லை. அபிவிருத்தியில் வட க்கு பின்னடைவு கண்டதற்கு இது பிரதான காரணம்.
ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் அப் பிரதேச மக்கள் நேரடியாகச் சம்பந்தப்படக் கூடியதான நிர்வாகக் கட்ட மைப்பு பிரதான பங்களிப்புச் செய்யக்கூடியதாகும்.
மற்றைய மாகாணங்களில் இயங்கும் மாகாண சபைகள் இத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன. வடபகுதி அர சியல் தலைவர்கள் இத் தேவைக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படாததால் மக்கள் நேரடியாகச் சம்பந்தப்படும் நிர்வாகக் கட்டமைப்பு அங்கு இல்லாமற் போனது. மாகாண சபை நிர்வாகத்தை நிராகரித்ததன் பாரதூரமான விளைவை இப்போதாவது அத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் இன்று சில முன்னேற்றமான காரியங்கள் இடம் பெறுகின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வட பிரதேசத்தின் பாரம்பரிய வளங்களை மையமாகக் கொண்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியும் பெருந்தொகைப் பணச்செலவில் இடம்பெறுகின்றது. இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திலும் அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது.
இவை வட பிரதேச மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எனக் கூறுவதற்கில்லை. ஆனால், வட பிரதேசத் தில் அத்தியாவசியமாக இடம்பெற வேண்டிய செயற் பாடுகள் என்பதில் யாரும் சந்தேகம் தெரிவிக்க முடி யாது. இப்பிரதேச மக்களின் நலனில் அக்கறை உள்ள வர்கள் இச் செயற்பாடுகளை வரவேற்பதுடன் ஊக்க மும் ஒத்துழைப்பும் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அபி விருத்திச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை விளங் கிக்கொள்ளாததாலோ அல்லது அகவய காழ்ப்புணர்வு காரணமாகவோ கண்டும் காணாதவர் போல் இருக்கின் றனர். குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் மக்கள் சார்ந்த தங்கள் கடப்பாடு நிறைவுறுகின்றது என்று இவ ர்கள் கருதுகின்றார்கள் போல் தெரிகின்றது.
வடபகுதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர் பான குறைபாடுகள் இல்லையென யாரும் கூற முடி யாது. அக்குறைபாடுகளை வெளிப்படுத்தும் உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு இருப்பதை எவரும் மறுதலிக்கவும் முடியாது
ஆனால் குறைபாடுகள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் அவை தீரப்போவ தில்லை. சரியான வழிமுறையைப் பின்பற்றித் தீர்வுக் காக முயற்சிக்கவும் வேண்டும். முன்னேற்றகரமான செய ற்பாடுகள் இடம்பெறும்போது அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கவும் வேண்டும்.
வடக்கின் வளர்ச்சிக்கும் அம் மக்கள் முகங்கொடுக்கும் பிர ச்சினைகளின் தீர்வுக்கும் உரிய வகையில் செயற்படுப வர்களே வட பிரதேச மக்களின் உண்மையான பிரதி நிதிகளாவர்.
|