a_Pen

முதற்பக்கம்

கட்டுரைகள்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்             பெண்ணியம்        புதியபாதை                      அலை                       பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/  srilankans.org.au              www.lankamuslim.org   Communist party srilanka

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           29.01.2010

தீர்க்கம் மிக்க திருப்புமுனையில் தமிழர்கள் இன்று!

அன்று முதல் இன்று வரையில் இலங்கையின் அரசியலோடு தம்மைப் பிணைத் துக்கொண்டு, பலதரப்பட்ட விதங்களில் போராடி அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொண்ட தமிழ் அரசியல் தலைவர்கள், அவர்களின் வழி வந்தவர்களாக ஒருவிதத்தில் கருதப்படும் இன்றைய அரசியல் தலைவர்கள் குறிப்பாகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்து பவர்கள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  காத்திரமாகச் செயற்படாது குழம்பிப்போய்க் காலத்தை இழுத்தடிப் பதனால் சிதறுண்டு போகின்றனர் என்ற சாரப்பட அமைகிறது இந்த அரசியல் ஆய்வுக் கட்டுரை.

சந்துன் ஜீவந்த என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை 'ரிவிர' பத்திரிகையில் வெளியாகியது. அதன் தமிழ் வடிவமே இது.

ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாகத் தாம் எடுக்கவுள்ள தீர்மானம் எந்தவிதமானதாக அமையவேண்டியுள்ளது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை தர்மசங்கடமானதாகும். திரிசங்கு நிலையியே  இன்னமும் அது உள்ளது. அதன் பிரதிபலிப்பே ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வேட்புமனுத்தாக்கலாகும். தோஷம் பிடிப்பது இன் றல்ல, நாளையே எனக் கூறுவது போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மான மும் நாளுக்கு நாள் தாமதமாகிக்கொண்டே வருகின்றது. அந்த இடைவெளிக்குள் அதன் பொருத்துக்கள் (கட்சிகள்) ஒவ்வொன்றாகக் கழன்று செல்ல ஆரம்பித்துள்ளன.

இரண்டு மாற்று வழிகளே இப்போது எஞ்சியுள்ளனஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகப் புறம் பானதொரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவ தில்லையென்பதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. அதற்கமைய அவர்களுக்குத் தற்போது எஞ்சியிருக்கும் மாற்றுவழிகள் இரண்டாகும். அதாவது, ஒன்றில் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ் ரிப்பது அல்லது முன்னணி வேட்பாளர்கள் இருவருள் எவரேனும் ஒருவருக்கு ஒத்து ழைப்பு வழங்கி நிற்பது என்பதாகும். இந்த இரண்டு மாற்றுவழிகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும் கூட அவர்களுக்குப் பெரும் சிக்கலொன்றாகியுள்ளது. அவர்களது தீர்மானங்கள் தொடர்ச்சியாகத் தாமதமடைந்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் புறம்பாகப் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் தீர்மானம் மேற்கொண்டார்.

சிவாஜிலிங்கத்தின் போக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சிவாஜிலிங்கம் சிங்கள மக்களிடை யேயும் பிரபலமடைந்துள்ளார். கடந்த காலத்தில் சிங்களத் தொலைக்காட்சிச் சேவைகளில் இடம்பெற்ற அரசியல் விவாதங்களில் அவர் பங்களிப்புச் செய்திருந்தமையே அதற்குக் காரணமாகிறது.

2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான சிவாஜிலிங்கம் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவராவார்.ஸ்ரீசபாரத்தினத்தினால் ஆரம்பிக்கப் பட்ட ரெலோ அமைப்பானது அன்றைய கால கட்டத்தில் ஆயுதக்குழுவொன்றாகவே அறி முகமாகியிருந்தது. பிற்காலத்தில் ரெலோ அமைப்பானது, ஜனநாயக அரசியல் நீரோட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. இந்த அமைப்பின் தலைவரான ஸ்ரீ சபாரத்தினம் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விடு தலைப் புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டார்.

மேற்படி ரெலோ அமைப்பின் இன்றைய தலைமைத்துவத்தை ஏற்றிருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனேயாவார். இவரும் 2004 இல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட் டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். இவரை விடவும் மேலும் மூன்று ரெலோ உறுப்பினர்கள் நாடாளுமன் றத்தில் அங்கம் வகிக்கின்றனர். வினோ நோதராதலிங்கம், சிறிகாந்தா மற்றும் சிவா ஜிலிங்கம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே அவர்களாவர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்துக்கு பக்கபலமாக சிறிகாந் தாவும் ஒத்துழைப்பு வழங்கி நிற்கிறார். அதற் கமைய, ரெலோ அமைப்பானது இன்று இரண்டாகப் பிளவுண்டு போயுள்ளது. வடக் கின் பிரபல அரசியல் கட்சியொன்றான ரெலோ அமைப்பைப் பிளவுபடுத்தி விட எதிர்வரவி ருக்கும் ஜனாதிபதித் தேர்தலே காரணமாகி யுள்ளதெனக் கூறுவது தவறாக மாட்டாது.

கூட்டமைப்பின் மூத்தோர் சிவாஜிலிங்கத்துக்கு எதிர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங் கம் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதித் தேர் தலில் போட்டியிட்டாலும் கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மைத் தரப்பான மூத்த உறுப்பினர்கள் அவரது இத்தீர்மானத்துக்கு  விரோதமானவர்களே. கட்சியின் கருத்துக்கு எதிராக அவர் செயற் பட்டுள்ளார் என மாவை சேனாதிராஜா கருத்துக் கூறியிருந்தார். அத்தோடு இது விட யத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமி ருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் சிவாஜி லிங்கத்துக்குக் கிட்டமாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடாளுமன்றத்துக்குத் தாம் தெரிவான கட்சியின் ஒத்துழைப்புக் கூட அவருக்குக் கிட்டாத நிலையில், தமிழ் மக்களின் ஒத்துழைப்பு அவருக்குக் கிட்டக் கூடுமா என்பதும் பிரச்சினைக்குரிய தொன் றேயாகும். பெரும்பாலான தமிழ் அரசியல் நோக்கர்களின் கருத்து வெளிப்பாடுகளும் கூட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங் கத்துக்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு கிட்டமாட்டாது என்பதாகவே உள்ளது.

சிவாஜிலிங்கம் கடந்த 2004 இல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகப் போட்டியிட்டு 42 ஆயிரத்து 191 விருப்பு வாக்குகளைப் பெற் றிருந்தார். ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதைக் கடந்து செல்லும் வாக் குத் தொகையொன் றைப் பெறுவதென் பது சிவாஜிலிங்கத்துக் குப் பெரும் சிரமமான தொரு கருமமாகவே இருக்கலாமெனவும் மேலும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.

எதிரான கருத்துகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங் கம் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததன் பின்னர் அடுத்து வந்த தினத்தில் வெளி யான தமிழ்ப் பத்திரிகைக ளில் அவரது இக் கள மிறங்கல் குறித்து கடும் கவனம் செலுத் தப்பட்டிருந்ததைக் காணமுடிந்திருந்தது. சில பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங் கங்களிலும் கூட இக்காரணம் ஆழமாக ஆராயப்பட்டிருந்தது.

ஆனால், இவை எதுவுமே சிவாஜிலிங்கத் துக்கு சாதகமாக எழுதப்பட்ட கருத்துகளாக இருக்கவில்லை. பெருமளவு தமிழ்ப் பத்திரி கைகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கத்தின் இம்முயற்சி பலனற்றதொன்று என்றவாறே தமது பிரசுர ஆக்கங்களில் அவை கருத்து வழங்கியிருந்தன.  வரவிருக் கும் பொதுத் தேர்தலில் அவர் நாடாளுமன் றத்துக்குத் தெரிவாவதும் கூட, பெரும் சிக்கலானதொரு கருமமாகவே அமையலா மெனவும் சில பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் தெளிவுபடுத்தியிருந்தன. இவையனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் சிவாஜிலிங் கத்தின் தீர்மானத்துக்குத் தமிழ்ச் சமூகத் திடமிருந்து சாதகமான பிரதிபலிப்பு கிட்ட மாட்டாது என்பது தெளிவாகிறது.

தமிழ்ச் சமூகத்தின் கருத்து

அவ்வாறெனின், தமிழ்ச் சமூக்கத்தின் சாதகமான பிரதிபலிப்பு எவ்விதத்தில் அமையக்கூடுமென்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, பெருமளவு தமிழ்ப் பத்திரிகைகளின் கருத்து வெளிப்பாடுகளுக்கு அமைய இன்றைய சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களுக்குப் பெரிதும் இலாபகரமானதொரு தீர்மானமாக அமைவது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்கள் இருவருள் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கி நிற்பதேயாகும்.  அவர்களுள்ளும் வெற்றிகான சாதகங்கள் பெருமளவில் தென் படும் பிரமுகருக்கு ஒத்துழைப்பு வழங்கி நிற்பதே பெரிதும் புத்திசாலித்தன மானது என்பதே இக்கருத்தியல் வாதங்களி னூடாக மேலும் தெளிவுபடுத்தப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலத்தை இழுத்தடிக்கும் கொள்கைக்கு இதுவும் கூட, தாக்கத்தை ஏற்படுத்துமொரு காரணியாகிவிட்டுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்று வரையிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனோ அல்லது ஜெனரல் சரத் பொன்சேகாவுடனோ உத்தியோகபூர்வ மட்டத்தில் பேச்சுகளை ஆரம்பிக்கவில்லை. ஆனாலும், எமக்குக்  கிட்டியுள்ள தகவல்களுக்கு அமைய, இந்த இரு பிரமுகர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட மட்டத் தில் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர். அரச தரப்பினர் சார்பாக இக்கலந்துரையாடல்களில் நாடாளுமன்ற உறுப்பினரான பஸில் ராஜபக்ஷ பங்களிப்பு   வழங்கி வரு வதோடு,  எதிரணியின் சார்பில்  பங்களிப்பு வழங்குபவர் ரணில் விக்கிரமசிங்கவாவார்.

காலத்தை இழுத்தடித்தால் பிளவு, குழப்பம் நேரும்

இந்நிலையில், இந்த இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்தும் தம்மால்  பெறக்கூடியவைகள் எவை?  அவர்களது தேர்தல் பிரகடனங்களில் எந்தவிதத் திலான முன்வைப்புக்கள் இடம்பெறக் கூடும்? வடக்கு, கிழக்குத் தொடர்பாக அவர் கள் எந்த உருவிலான அரசியல் தீர்வை முன்வைக்கக்கூடும்? போன்ற காரணிக ளைத் தெரிந்து கொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுமையிழந்த நிலைக்கு உள்ளாகியுள்ளது. அவசரம் காட்டிவருகிறது. அதாவது, இவையனைத்தையும் தெரிந்து கொண்டு தமது தீர்மானத்தை வெளிப்படுத் துவதே அதன் உள்நோக்கமாகவுள்ளது. இருந்தபோதிலும், நாடாளுமன்ற உறுப்பி னர் சிவாஜிலிங்கத்தின் ஜனபதிபதி வேட்பா ளர் தீர்மானத்தின் காரணமாகப் பிளவுகளுக் கும்,குழப்பங்களுக்கும் உள்ளாகியிருப்பது போன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மீளவும் அத்தகைய தொன்றைச் சந்திப்ப தற்கு அதன் இந்த இழுத்தடிப்புக் காரணமாகக் கூடும்.

பகிஷ்கரிப்புக் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களில் யாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதென்ற வினாவுக்கு உறுதியானதொரு பதிலைக் கண்டறிய இயலாது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலத்தை இழுத்தடித்து வருகையில், தேர் தல் பகிஷ்கரிக்கப்பட வேண்டியுள்ளதாக முன்வைக்கப்படும் கருத்தியல் வாதமும் மீளவும் தலை தூக்கியுள்ளது. எந்தவொரு தரப்புக்கும் ஒத்துழைப்பு வழங்கக் கூடா தெனக் கடும் பிடியில் நிற்கும் நாடாளு மன்ற உறுப்பினர்களிடையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின்  தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம் பலம்(இவர், பிரமுகர் குமார் பொன்னம்பலத் தின் புதல்வராவார்) மற்றும் 2004ஆம் ஆண் டுப் பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் சார்பாகப் போட்டியிட்டு அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற (யாழ்ப் பாணத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து77 விருப்பு வாக்குகளைப் பெற்றவர்) செல்வ ராஜா கஜேந்திரனும் உள்ளனர். சிங்களப் படையை வீடுகளுக்கு அனுப்பி வைக்க சவப்பெட்டிகளைத்  தயார் செய்ய வேண்டி யுள்ளதாகக் கூறி கடந்த சந்தர்ப்ப மொன்றில் நாடாளுமன்றத்தினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நாடாளுமன்ற உறுப்பின ரும் இந்தக் கஜேந்திரனேயாவார்.

இவை எவ்வாறானாலும் பிரதான வேட்பாளர்கள் இருவருள் ஒருவருக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டியுள்ளது என்பதே இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருமளவு உறுப்பினர்கள் கொண்டுள்ள கருத்தாகியுள்ளது. இலங்கையில் முன்னணி வகிக்கும் தமிழ்ப் பத்திரிகையொன்று அண்மையில் தனது ஆசிரிய தலையங்கம் ஊடாக முக்கிய மானதொரு கருத்தை வெளிப்படுத்தியி ருந்தது  சுட்டிக்காட்டியிருந்தது. அதாவது, தமிழ் மக்களுக்குச் சரியான மார்க்கத்தைக் காட்டிநிற்பதற்கு தமிழ் அரசியல்  தலைவர் கள் தவறியுள்ளனர்  திறனற்றுப் போயுள் ளனர்  என்பதேயாகும். அத்தோடு நில்லாது தேர்தல்களின் போது மிகச்சரியான அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு விழிப் புணர்வை ஊட்டாது நின்றுள்ளதன் காரண மாகத் தமிழ்ச் சமுதாயம் பின்னடைவு நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறான போதிலும், இன்று தமிழ்ச் சமுதாயமானது தீர்க்கம் மிக்கதொரு கட்டத் திலேயே வந்து நிற்கின்றது. தமது வாக்குக ளுக்கு மிகச் சரியான பெறுமதியைப் பெற்று கொள்வதற்கான பொன்னான சந்தர்ப்ப மொன்று கிட்டியுள்ளதென்பதே இன்று சிங் களம், தமிழர்களென்ற பெருமள விலானோ ரின் நம்பிக்கையாகியுள்ளது.

சுயமான முடிவு ஒன்றை தமிழர்கள் எடுக்கக் கூடும்

இடம்பெற விருக்கும்  ஜனாதிபதித் தேர் தல் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எத்தகைய கருத்தை முன்வைத்தா லும்  என்னதான் கூறினாலும் தமிழ் மக்கள் சுயமானதொரு தீர்வை எடுப்பதற்கே முன் வரக்கூடுமென்பதற்காகவே  நாம் சந்தித்த தமிழ்ப் புத்திஜீவிகளின் தரப் பொன்று கருத்து வழங்கியுள்ளது. மேலும் தேர்தல் பகிஷ்கரிப்பு என்பது மடைமைத்தனமானது எனவும் அவர்கள் கருத்து வழங்கியிருந்தனர். சிங்களத் தலைவர்களுடன் பேச்சுகள் மூலம் கலந்துரையாடுவதன் வாயிலாகவே தமக் குரிய எதுவொன்றையும் வென்றெடுக்க இயலுமேயல்லாது அவர்க ளைப் பகிஷ்கரிப் பதால் அல்ல என்பதும்  இந்தப் புத்திஜீவி களின் கருத்தாயிருந்தது.

இது வடக்கு,கிழக்கு தமிழர் அரசியலின் புதிய அணுகு முறையாகும் புதிய தோற்ற முமாகும். இதுவரையிலும் இக்கருத்து தோட்டப்பகுதி அரசியல் தலைவர்கள் கைக் கொண்டிருந்த கருத்தியலாகவே இருந்துள்ளது. எப்போதுமே அரசுடன் ஒத்துழைத்துச் செல்வதையே தோட்டப்பகுதி அரசியல்வாதிகள் கைக்கொண்டிருந்தனர். அதை எள்ளிநகையாடி வந்தவர்கள் வடக்கு, கிழக்கு அரசியல் வாதிகளேயாவர். தமக்குள்ள  அவசியம், உள்ள அரசுடன் நயந்து பேசி எதையும் பெறுவதல்ல, தமது பாரம்பரிய கோரிக்கைகளை வென்றெடுப்பதே யென்பதாக வடக்கு , கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள்  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்து வெளிப்படுத்தி நின்றுள்ளனர். சிங்களத் தலைவர்களுடன் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் இல்லையென்பதாகவும்  அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், இன்று நிலைப்பாடு முழுவதுமாக மாற்றமடைந்துள்ளது. சிங்களத் தலைவர்களுடன் இணக்கப்பாடுகளை எட்டுவதன் முக்கியத் துவத்தை இன்று வடக்குக், கிழக்கின் தமிழ்த் தலைவர்கள் தெரிவுடுத்தி வருகின்றனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலம் கடந்தும் தாமதத்துக்குக் காரணமாகியிருப்பதும்  இந்தச் சிக்கலேயாகும். தாம் சிங்களத் தலைவர்களுள் யாரைத் தேர்ந்தேடுப்பது என்ற சிக்கலுக்கும் அவர்கள்  முகம் கொடுத் துள்ளனர்.

அதே சிக்கல்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டு போவதற்கும் காரணமாகியுள்ளது. விடுத லைப்புலிகள் அமைப்பின் தோல்விக்குப் பின்னர், விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ள அரசி யல் கட்சிகளும்  கூட தோல்வியைத் தழுவ  ஆரம்பித்துள்ளன.

இச்சரிவு நிலைக்குக் காரணமான  கருத்தியல் வாத ரீதியிலான ஏதுக்கள் ஏற்கனவே  ஆரம்பமாகி  முடந்து விட்டுள்ளன. இக்கட்சிகளின் மக்கள் செல்வாக்கென்ற அடித்தளத்துக்கு ஏற்படவிருக்கும் கதி எவ்வாறானதாக இருக்கக்கூடுமென்பதைக் கூறுவதற்கு இன்னமும் காலம் கனியவில்லை. ஆனால், ஒரு விடயத்தை இங்கு நேரடியாகவே கூறி விட முடியும். அதாவது, வழிவழி வந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகள் போன்றே அவர் களது வழிவந்த கருத்தியல் வாதங்களும்  கூட தீர்க்கம் மிக்கதொரு திருப்பு முனையில் வந்து நிற்கின்றன என்பதாகும். அவர்களது எதிர்காலமும் கூட, இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் மேற்கொள்ளும் தீர்மானத் துக்கு அமையவே அதன் முடிவும் தீர்மானிக் கப்பட்டவுள்ளது. அது , தமிழ் மக்களது எதிர்காலத்துக்கும் கூட, தீர்க்கமானதொரு தாக்கத்தை  ஏற்படுத்துவது நிச்சயமே.  *


தமிழில் : சரா

- உதயன் -

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4

wanni

இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையால  (துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

புலிப் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன்  கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்ப