a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

கொழும்பில் ஐ.தே.க வேட்பாளர் கைது

- B.B.C News

susil இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் பெண்ணொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

சுசில் கிந்தல்பிட்டிய என்ற இந்த வேட்பாளர், தன்னுடனான தொடர்பை பகிரங்கப்படுத்த வேண்டாம் என பெண்ணொருவரை அச்சுறுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடகாலம் இவருடன் தொடர்பு வைத்திருந்தார் எனக்கூறிய பெண்ணே அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார்.

 ''தேர்தல் காலமாக இருந்தாலும், தேர்தல் வேட்பாளராக இருந்தாலும் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’

இதனையடுத்து கொழும்பின் புறநகர்ப்பகுதியான மிரிஹானவிலுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாகவும், அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற ஒருவரும் இந்த வேட்பாளருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எம்.டி.வி-சிரச ஊடகவலையமைப்பின் முன்னாள் செய்திப் பணிப்பளரான சுசில் கிந்தல்பிட்டிய எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

எம்.டி.வி சிரச ஊடகவலையமைப்பு கடந்த சில காலமாக ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவந்துள்ளதுடன் சில தடவைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இதேவேளை வேட்பாளர் சுசில் கிந்தல்பிட்டியவின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, ஐக்கிய தேசியக்கட்சியின் மற்றுமொரு கொழும்பு மாவட்ட வேட்பாளரான ரவி கருணாநாயக்க, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

 ''பொலிசார் நிரபராதிகளை குற்றவாளி என்கின்றனர். குற்றவாளிகளை நிரபராதி என வெளியில் செல்லவிடுகின்றனர்''
 
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை பல்வேறு வழிகளிலும் ஒடுக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!