a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை
 

Asientribune
Lines-Magahzine
Srilankaguardian
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          03.09.2010

ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் இறக்குமதியின் பங்கு

( ஸ்ரீலங்கா கொள்கைக் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி சமன் கெலேகம   ஸ்ரீலங்கா வணிகக் கழகத்தின்  வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.)

ஸ்ரீலங்காவின் இறக்குமதித் துறையைப் பற்றி எனது கருத்துக்கள் சிலவற்றை இங்கே பங்கிடுவது பொருத்தமானதாக இருக்கும் என நான் நினைத்தேன். ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்துறையில் தற்சமயம் அது வகிக்கும் பாத்திரத்தையும் எதிர்காலத்தில் அது ஏற்கப்போகும் பங்கினையும் பற்றியே குறிப்பிடுகிறேன்.அதன்படி ஸ்ரீலங்காவின் இறக்குமதித் துறைக்குப் பொருத்தமான நான்குஅம்சங்களைப் பற்றி இங்கு விரிவாக கையாளப் போகிறேன்.

  1. ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்துக்குள் இறக்குமதி;களை நிலைப்படுத்தல்.
  2. ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்துக்கு மதிப்பு கூட்டுவதற்கேற்ற இறக்குமதிகள்.
  3. பொருளாதாரத்துக்கு இறைவரி வருமானம் ஈட்டக்கூடிய இறக்குமதிகள்.
  4. பொருளாதாரத்துககுள் வளரச்சியை ஒருங்கிணைக்கும் இறக்குமதிகள். 

ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்துக்குள் இறக்குமதிகளை நிலைப்படுத்தல் எனும் கருத்துடன் எனது விளக்கத்தை ஆரம்பிக்கிறேன். ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் இன்று இறக்குமதி(பொருட்கள்) சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் ஏற்றுமதி(பொருட்கள்) சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறது.இதில் இறக்குமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 விகிதமாகவும், ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விகிதமாகவும் தணிய வைக்கப்படுகிறது. இத்துடன் செலுத்தப்படும் இறைவரி வருமானத்தை கூட்டினால் அது சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவோ அன்றில் 7.5 விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகவோ இருக்கும் அதாவது 92 விகிதம் இறக்குமதி செலவுகளை  ஏற்றுமதி செய்யப்பபடும் பொருட்களின் வருமானமும் பெறப்படும் இறைவரி வருமானமுமே ஈடு செய்யும்.இதன்படி வெளிநாட்டு காப்பு இருப்புகள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நாடு அதன் இறக்குமதி(பொருட்கள்)க்கு கை கொடுக்க முடியும்.

ஸ்ரீலங்கா அதன் காப்பு இருப்புகளை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பேணுமாயின் நாடு ஒரு திருப்திகரமான சூழலில் இருக்கும். அதனால் 3மாதங்களுக்கும் மேற்பட்ட இறககுமதித் தேவைகளுக்கு நிதி வழங்க முடியும். காப்பு இருப்புகளை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பேணப்பட்டும் இறக்கமதிக்கான தொகை விஸ்தரிக்கப் படுமாயின் நாடு பாரிய சவாலை எதிர்நோக்கும் சமீப வருடங்களில் ஸ்ரீலங்காவின் இறைவரி எண்ணெய் இறக்குமதி தொகையை ஈடுகட்டப் பயன்படுகிறது இது ஒரு பயனற்ற செய்கை.

ஸ்ரீலங்காவிற்கு ஆகக்கூடுதலான இறக்குமதி இந்தியாவிலிருந்தே தருவிக்கப் படுகிறது (மொத்த இறககு;மதியில் 25 விகிதம்) அடுத்ததாக சீனா (கொங்கோங்கையும் சேர்த்து) ஐரொப்பிய ஒன்றியத்தை ஸ்ரீலங்கா இறககுமதி செய்யும் தனி ஒரு நாடாகக் கணக்கிட்டால் அதுவே இரண்டாவது பெரிய நாடாக வரும் சீனா அல்ல. ஸ்ரீலங்காவின் இறக்குமதியை உலக இறக்குமதி
உடன் ஒப்பிட்டால் அதன் விகிதாசாரம் 0.1 ஆகும்.

இதிலிருந்து ஒருவர் குறிப்பிடக் கூடியது என்னவெனில் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் 5 விழுக்காட்டிலும்அதிகம் வளர்ச்சி பெறுமாயின் அதனால் சாதாரணமாக 10 விழுக்காடு இறக்குமதி வளர்ச்சிக்கு உதவ முடியும். ஸ்ரீலங்காவின் வளர்ச்சி அவ்விதம் இருக்குமானால் அது இறககுமதியின் தீவிர வளர்ச்சியாகும். உதாரணத்துக்கு ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தின்  துரித வளர்ச்சித் துறைகளான கைததொழில்துறையையும் சேவைகள் பிரிவையும் எடுத்துக்கொண்டால் கைததொழிலின் வளர்ச்சி பிரதானமாக ஏற்றுமதிப் பொருட்களான தைத்த ஆடைகள்,மாணிக்கக் கற்கள் மற்றும் நகைகள் தோற்பொருட்கள் போன்றவற்றால் இயக்கப் படுகிறது. இவை யாவும் தீவிர ஏற்றுமதி பொருட்களாகும். ஸ்ரீலங்காவும் இந்தியாவும் கூட்டாகச் செய்துகொண்ட இருதரபபு; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காரணமாக வளரச்சி பெற்ற இரு ஏற்றுமதிப் பொருட்கள் வானஸ்பதியும் செம்பும் ஆகும்;.இவை இறக்குமதிப் பொருட்கள் கூட. .பாம்எண்ணெய் வானஸ்பதிக்குப் பதிலாகவும் இரும்பு மூலப் பொருட்கள் செப்பு உற்பத்திக்குப் பதிலாகவும் இறக்குமதி செய்யப் படுகின்றன. சேவைகள் வளர்ச்சி;ப்பிரிவில் மொத்த மற்றும் சில்லறை விற்பனைப் பொருட்கள் வியாபாரம்,சுற்றுலா, தொலைதொடர்பு என்பன சில முக்கிய இறக்குமதி வளங்களாகும்.

எந்த நாட்டிலும் தீவிர இறக்குமதி வளர்ச்சியின் ஆரம்பகட்ட அவதானிப்பு இப்படித்தான் இருக்கும. ;ஸ்ரீலங்காவின் இறக்குமதிக் கலவையின் புள்ளி விபரங்கள் மேலும் இதனைச் சாட்சிப் படுத்துகின்றன. பாவனையாளர்கள் பயன் படுத்தும் பொருட்களின் இறக்குமதி, சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் மொத்த இறக்குமதியின் 50 விழுக்காடு ஆகவிருந்தது. இன்று அது 19 விழுக்காடு ஆக மாறியுள்ளது.மறுபக்கத்தில் கைத்தொழில்களுக்கு பயன்படுத்தப் படும் இடைத்தரப் பொருட்களின் இநக்குமதி மொத்த இறக்குமதியின் 11 விழுக்காடு ஆக அன்று இpருந்தது, அது இன்று 20 விழுக்காடு ஆக இரட்டித்துள்ளது.தெளிவாகச் சொல்வதானால் ஸ்ரீலங்கா உள்வாங்கும் இறக்குமதிகளின் விகிதம் அதிகரித்துள்ளன.

சிலசமயங்களில் ஏற்றுமதியாளர்களினால் பணத்தின் மதிப்பிறக்கம் பற்றிக் குரலெழுப்பப்படுகிறது அவ்வேளைகளில் தீவர ஏற்றுமதிப் பொருட்களிலும்,தீவிர இறக்குமதி பொருட்களிலும்,இதன் தாக்கம் கவலை தரக்கூடியதாக இருக்கும்.இப்படி எல்லாவற்றையும் உட்படுத்திய வளர்ச்சியின் இடப்பெயர்ச்சியினால் இறக்குமதிகள் கூடுதல் விலையுள்ளதாகிறது.அதனால்தான் பணத்தின் மதிப்பிறக்கம் பற்றிய வேண்டுதல்களை நாட்டின் கொள்கை வகுக்கும் கருவியினால் கவனத்தில் எடுப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. இவை ஸ்ரீலங்காவின் இறக்குமதித் துறையின் பெறுமதியற்ற சில குணாதிசயங்களாகும்.

நான் இனி எனது இரண்டாவது தலைப்பான ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்துககு மதிப்பு கூட்டுவதற்கேற்ற இறக்குமதிகள் என்பதற்கு வருகிறேன்.தாராளமயமாக்கப் பட்ட இறக்குமதிகள் கூட பொருளாதாரத்தின் மதிப்பினை அதிகப் படுத்தும் ஒரு காரணியாகலாம். இதற்கு முற்றாகப்பிரிக்கப்பட்ட பாகங்களின் இறக்குமதிகளினை உதாரணமாக எடுப்போமானால், ஒருவர் சீருந்துகளினதோ,முச்சக்கரவண்டிகளினதோ,குளிரசாதனப் பெட்டியினதோ பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை உள்நாட்டில் பொருத்தி அதன் பெறுமதியினை சிறிதளவு கூட்டி விற்பனை செய்வது நல்ல உதாரணமாகிறது.அதிகரிக்கப்பட்ட பெறுமானம் சிறியதாக இருப்பினும்,இதை பெரிய அளவில் விஸ்தரிக்கும் போது பெறுமான அதிகரிப்பும் உயரும். நாம் இனி உயர் பெறுமானம் கொண்ட ஒரு இறக்குமதியினை ஆராய, மாணிக்கக் கற்கள் மற்றும் நகைத் தொழில்களை எடுத்துக் கொள்வோம், 1990 ன் ஆரம்பங்களில் மாணிக்கக் கற்களின் இறக்குமதியினை தாராளமயமாக்குமாறு வேண்டுதல்கள் விடுக்கப் பட்டன, சில ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின்பு அது நிறைவேற்றப் பட்டது. அதன் பெறுபேறாக ஸ்ரீலங்காவில் பலவித கற்கள் பதிக்கப்கட்ட நகைகளின் உற்பத்திகள் உருவாயின. ;.தாராளமயமாக்கப் பட்ட இறக்குமதிகள் இந்த விடயத்தில் நிச்சயமாக பொருளாதாரத்தின் பெறுமதி அதிகரிப்பினை உயர்த்தியுள்ளது என்று எவரும் சுலபமாகச் சொல்லிவிடலாம்.

ஆனால் நாங்கள் அறிய வேண்டியது தாராளமயமாக்கப் பட்ட இறக்குமதியாக்கம் பெறுமதி அதிகரிப்பினுக்கு வழங்கும் பங்கு நேராதனல்ல.உள்நாட்டுசந்தையில் போட்டிப் பொருட்கள் உலவுமாயின் தாராளமய இறக்குமதியாக்கம் பெறுமதி அதிகரிப்பினை நோக்கி முன்னேறாது. ஆனால் தாராளமய இறக்குமதியாக்கம் மூடப்பட்ட தொழிற்சாலைகளை முன்னேற்ற உதவும்.  ஸ்ரீலங்காவின் உற்பத்திகள் போட்டியினை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. இதனாலேயே இந்திய ஸ்ரீலங்கா இருதரப்பு கூட்டு சுதந்திர வர்த்தக உடனபடிக்கையில்;(ISLFTA) எல்லா விவசாய உற்பத்திப்பொருட்கள்  சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் என்பன எதிர்மறைப் பொருட்களின் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளன..சிஙகப்பூர் அவுஸ்திரேலிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SAFTA)>,ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கை (APTA)> பாகிஸ்தான் ஸ்ரீலங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (PSLFTA) எல்லாவற்றிலும் இந்த நுண்ணிய ஸ்ரீலங்கா உற்பத்திகள் எதிர்மறைப் பொருட்களின் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளன.

மேலும் சில தாராளமய இறக்குமதிகள் பெறுமான அதிகரிப்பை  உயர்த்தும் விடயத்தில் இவ் விவாதங்கள் நேரடி முன்மாதிரியாக அமையவில்லை. உதாணத்துக்கு ஸ்ரீலங்காத் தேயிலையை எடுத்துக் கொண்டால் அதற்கு ஓர் தொழில் அடையாளப் பெயர் இருக்கின்றது, தாராளமய இறக்குமதிக் கொள்கையைப் பொறுத்த மட்டில் இது நேரடி முன்மாதிரியாக அமையாது. ஏனெனில் தாராளமய இறக்குமதிக் கொள்கையை ஒரு வரம்பறைக்குள் செயற்படுத்தாவிட்டால் அது தொழிற் பெயரை நீர்த்துப் போகச் செய்து விடுவதோடு தேயிலையின் உள்நாட்டு விலையினையும் சரிவடையச் செய்துவிடும். தொழில் அடையாளப் பெயரினை மலிவடையச் செய்யும் மற்றோர் உதாரணத்துக்கு 10 விகித இலங்கைத் தேயிலையுடன் 90 விகித இந்தோனசியத் தேயிலையைக் கலந்து இலங்கைத் தேயிலை என்று விற்பனை செய்தால் தேயிலை விற்பனையாளர்கள் வேண்டுமானால் அதனால் பயன் பெறலாம் ஆனால் தேயிலை உற்பத்தியாளர்களும்,ஏற்றுமதியாளர்களும் முறையே உள்ளுர் விலை வீழ்ச்சியாலும் “இலங்கைத் தேயிலை” என்கிற அடையாளப் பெயரைப்பற்றியும் கவலையடைவார்கள் அதனாலேயே தேயிலையின் தாராள இறக்குமதி சூடான விவாதங்களை உருவாக்கும் தலைப்பாக மாறியுள்ளது.

இம்மாதிரி விடயங்களில் தேயிலை ஏற்றுமதியின் பெறுமான அதிகரிப்பு கூடியமேற்பார்வையுடனும் அதிக கவனத்துடனும் மேற்கொள்ளப் படவேண்டும்.சில நாடுகளில் தாராள இறக்குமதி மூலம் நல்ல பெறுபேற்றை அடைய மேற்பார்வையை அதிகரிப்பதற்காக விசேட ஏற்றுமதி உருவாக்க வலயங்களை  ஏற்படுத்தியுள்ளார்கள். இம்மாதிரியான விடயங்களில் நாம் தொடர்ச்சியாக விழிப்புடன் எவ்வாறு உலக நடப்புகள் மாற்றமடைகின்றன என்பதை அவதானித்து நாமும் நமது செயல்களைத் திறம்படக் கையாள வேண்டும்.

நாம்; இனி எனது மூன்றாவது தலைப்பான பொருளாதாரத்துக்கு இறைவரி வருமானம் பெற்றுத்தரக்கூடிய காரணியாக இறக்குமதி அமைய வேண்டும் என்பதற்;கு வருவோம்.சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இறக்குமதித் தீர்வை இறைவரிக்கு வழங்கியது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6;.2 விகிதம் இன்று அது சுமார் 2 விகிதமாகும், இங்கு நான ;குறிப்பிடுவது சுங்கவரிக் கட்டண விகிதத்தையே, பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் போது இறக்குமதித் தீர்வையினை நாம் .இறைவரியின் பாரிய காரணியாகக் கருத இயலாது. 1977 முதலே இறக்குமதித் தீர்வையின் .இறைவரி விகிதம் மாறுபட்டுக் கொண்டே வருகிறது.1977 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2;.27 விகிதமாகவிருந்த இறைவரி விகிதம் 1980 களின் பிற்பகுதியில் 4.1 விகிதமாக அதிகரித்தது இறக்குமதி கனளவு அதிகரிப்பு, தாராளமயப்படுத்தியதால் குறைவடைந்த சுங்க கட்டண வரி விகிதத்தில் ஏற்பட்ட குறைவைச் சரி செய்தது. ஆனால் 1990 களின் பிற்பகுதியில் சுங்கத் தீர்வைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.3 விகிதமாக வீழ்ச்சியடைந்தது,இன்னும் 2000ம்ஆண்டளவில் அது 2 விகிதமாகச் சுருங்கியது. இது  விளங்கிக்  கொள்ளகூடியது.

ஏனென்றால் இறக்குமதி கனளவு 1990 களின் நடுப்பகுதியில் அதிகரித்த போதும் உலக வியாபார அமைப்பு (WTO) சம்பந்தப் பட்ட கட்டண விகிதக் குறைப்பு,மற்றும்  இரு நாட்டு ஒப்பந்தங்களினால் ஏற்பட்ட சுங்க வரிக் குறைப்பு என்பனவற்றால் இறைவரி மேலும் குறைவடைந்தது.உதாரணத்துக்கு 1208 உற்பத்திகள் இந்தியாவிற்கு இந்திய ஸ்ரீலங்கா இருதரப்பு கூட்டு சுதந்திர வர்த்தக உடனபடிக்கையின்; ;;(ISLFTA)   கீழ் வரிவிலக்களிக்கப் பட்டதாகவும்,102 உற்பத்திகள் பாகிஸ்தான் ஸ்ரீலங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை(PSLFTA)  யின் கீழ் வரிவிலக்களிக்கப் பட்டதாகவும் மாறின,மொத்தம் 6500 சுங்க வரி கணிப்பீட்டு நிரல்களில் 2500 நிரல்கள் வரி விலக்கு அளிக்கப் பட்ட நிரல்களாக உள்ளன இதில் 746 மிகவும் சலுகை பெறும் நாடுகளுக்கான (MFN)   வரி விலக்கு அளிக்கப் பட்ட நிரல்களாகும். அத்தோடு 1992ல் உருவாக்கப் பட்ட முதலீட்டுச் சபையினால் BOI) வரி விலக்கு அளிக்கப் பட்ட இறக்குமதி மிக வேகமாக அதிகரித்தது. ; ஸ்ரீலங்காவின் மொத்த இறக்குமதியின் 65 வகிதம் வரி விலக்கு அளிக்கப் பட்டவையாகவோ,அல்லது சுங்க கணிப்பீட்டு வரி விலக்கு அளிக்கப் பட்டவையாகவோ உள்ளன.

எப்படியோ எல்லைகளில் சுங்க கணிப்பீட்டு வரி மட்டும் அறவிடப் படுவதில்லை. இன்னும் பல வகையான வரிகளும் காலத்துக்கு காலம் விதிக்கப் படுகிறது, அவைகளில் சில,(1) சுங்க வரியின் கட்டண உபரி வரி (2010 ஜூன்1 முதல் இது நீக்கப் பட்டுள்ளது.)(2) வாற் எனப்படும் பெறுமதி கூட்டப்பட்ட வரி(3)ஆயத் தீரவை (4)செஸ் எனப்படும் சரக்கு ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொகுதி (5) பல அபிவருத்தி வரிகளும் எல்லைகளில் அறவிடப் படுகின்றன அவையாவன துறைமுக மற்றும் விமானநிலைய தீர்வை(Pயுடு),சமூக பொறுப்பு தீர்வை (PAL)>, பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் தீர்வை (SRL)>,தேசிய கட்டட வரி (RIDL)> என்பன.இவ்வித மொத்த எல்லைகள் வரி கூட்டாக இறைவரிக்குச் செலுத்துவது,சுமார் 50 விகிதமாகும். இது மொத்த சுங்கவரிகள் இறைவரிக்குச் செலுத்துவதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில 8 வீதமாகத் தணிக்கிறது.

ஏன் இவ்வகையான வரிகள் நடைமுறையில் உள்ளன என்கிற கேள்வி எழுகிறது? இதற்கு பல காரணிகள் தங்கள் பரிணாமத்துக்கு ஏற்றவாறு பங்களிப்புச் செய்கின்றன.முதலாவதாக நடைபெற்ற யுத்ததிற்கு மேலதிக நிதி சேகரிக்க வேண்டி,இரண்டாவது காரணி அபிவிருத்திச் செலவினங்களுக்கு வேண்டி, மூன்றாவது உற்பத்தி அபிவிருத்தி அடைய வேண்டி, அதாவது இந்த வரிகள் அந்த தொழில்களைச் சென்றடைகின்றன உதாரணமாக தேயிலை,றபர்,தெங்குப் பொhருட்களினால் பெறப்படும் ஒருமுகப் படுத்தப் பட்ட நிதி. நான்காவது கைத்தொழில்கள் அணைவு தேடுவதைப் பாதுகாக்க,செஸ் மற்றும் உபரிவரி அறவிடப்படுவது அணைவு தேடும் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக.

இவை எல்லைகள் வரிக் கணிப்புக் கட்டமைப்பை மிகவும் சிக்கலாக்கியுள்ளன.இந்த வரிகள் திணிக்கப்பட்டது பலவகை வரிமதிப்பீடுகளின் அடிப்படையில்,ஆனால் இறக்குமதி நிலையில் அவை மேலும் சிக்கலடைந்துள்ளன. இறக்குமதிக்கான வரிக்கணிப்புகளை உருவாக்கும்போது நான்கு வகையான வரிக்கட்டமைப்பு உள்ளது, 2 விகிதம் முக்கிய மூலப்பொருளுக்கு,6விகிதம் பகுதி தயாரிக்கப் பட்ட மூலப்பொருளுக்கு, 15விகிதம் இடைத்தரப் பொருட்களுக்கு, 28 விகிதம் இறுதி உற்பத்திப் பொருளுக்கு.இக்கட்டமைப்பு சிக்கலாகியுள்ளது அபிவிருத்தியினால் மட்டுமல்ல வேறு பலவகை அபத்தமான வரிகளினாலும். ஆனால் சிகரட், மதுபானம்,சீருந்து போன்றவற்றுக்கு சுயமாகவே அதீத வரி அறவிடப் படுகிறது.

இந்த வரிகளைச் சுலபப்படுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டது.மேலதிக வரிகளை நீக்கி; விட்டு சாதாரண நிலையில் இறக்குமதி வரிகளை அனுசரிக்க வேண்டியது அவசியம் ஜனாதிபதியின் வரி;விதிப்பு ஆணையகத்தை இதைக் கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.அநேகமாக  செப்டம்பர் ஆரம்பத்தில் இதில் மாற்றங்கள் ஏற்படுவதை நிங்கள் காணக்கூடும்.

எனது இறுதித் தலைப்பான வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் இறக்குமதிகள்: என்பது பற்றிய விளக்கம்,மகிந்த சிந்தனையின் முன்பார்வை எதிர்நோக்குவது 8 விகித வளர்ச்சிpயை.இதைப் பெறவேண்டுமாயின்”வியாபாரம் செய்தல்” என்பதற்கு ஏற்ற சூழலை ஸ்ரீலங்காவில் உருவாக்குவது, அத்தோடு மூலதன வெளிப்பாட்டின் உயர்ச்சி விகிதத்தை 5 இலிருந்து 4 ஆக மாற்றுவதாலும்  முதலீடுகளை மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமானத்தின் 32 விகிதமாக உயர்த்துவதாலும் பெறமுடியும.; தற்போது முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமானத்தின் 24விகிதமாக உள்ளன,எனவே தேவையான மிகுதி 8 விகிதத்தில், 4 விகிதத்தை வெளிநாட்டு நேரடி வருமானம் மூலமும், எஞ்சிய 4 விகிதத்தையும் உள்நாட்டு தனியார் துறைகள் மூலமாகவும் ஈட்ட முடியும். குறிப்பிட்ட இந்த இலக்கினை முதலீடுகள் எட்ட முடியாது போயின்,நாம் ஒரு கூட்டு முயற்சியாக நுகர்வு வழியான வளர்ச்சியையும் முதலீடு வழியான வளர்ச்சியையும் செயலாக்க வேண்டும்.

பெரும்பான்மையான  நுகர்வு வழியான வளர்ச்சியானது தீவிர இறக்குமதியில் தங்கியுள்ளது. இறக்குமதி வரி குறைக்கப் பட்டபின் சீருந்து,மின்னணுப் பொருட்கள்,என்பனவற்றின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது .இது நுகர்வு வழியான வளர்ச்சியாகும். இந்த நுகர்வு வழியான வளர்ச்சியானது, புதியதோர் குத்தகை வாழ்வை குத்தகைத் தொழிலுக்கு வழங்கியுள்ளதோடு,மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கும் நன்மையளித்துள்ளது. உதாரணத்துக்கு சுற்றுலாத்துறையில் ஏற்படும் சவால்களைச் சந்திக்க 2016 ம் ஆண்டளவில் இங்கு 15000 புதிய அறைகள் தேவைப் படுகின்றன.உத்தேச மதிப்பீட்டின்படி ஒரு அறையை உருவாக்க கிட்டத்தட்ட 10 மில்லியன் ரூபா தேவைப் படுகிறது.இதில் சுமார் 60 வகிதத்துக்கு மேல்,நில விரிப்புகள்,கதவு யன்னல் திரைகள், குளிரூட்டிகள்,தொலைக்காட்சி உபகரணங்கள் போன்ற நானாவித பொருட்களின் இறக்குமதிச் செலவாகும்.

முதலீடு வழியான வளர்ச்சியும் தீவிர இறக்குமதியே.உதாரணத்துக்குத் தற்சமயம் நடைபெற்று வரும் வடக்கு – கிழக்கு மறுவாழ்வு மறுகட்டமைப்பு பணிகளுக்குத் தேவையான செலவும் தீவிர இறக்குமதியிலேயே தங்கியுள்ளது. இன்னோர் உதாரணமாக மகிந்த சிந்தனையின் ஐந்து மூட்டுக்கள் சேர்நது மையமான: வான்துறை, கப்பற்துறை, சக்தி, அறிவு, வணிகம், என்பன பாரிய வளர்ச்சி முனைகளாக உருவெடுக்கும். ஸ்ரீலங்காவை உலகத் தொடர்புகளிலிருந்து தனிமைப் படுத்தினால் இவை வளர்ச்சி பெறுமா? இல்லை. அவை வளர்ச்சி பெற வேண்டுமாயின் பொருளாதாரத்தை இன்னும் அகலமாகத் திறந்து விடுவதோடு, வெளிநாட்டு இறக்குமதியை மட்டுமல்லாது வெளிநாட்டு சேவைகளையும் மனந்திறந்து வரவேற்க வேண்டும்.

சிங்கப்பூர் ஒரு பிரதான எண்ணெய் மையமாகும்.ஆனால் அது எண்ணெய் உற்பத்தி செய்கிறதா? இல்லை.ஆனால் அது தாரளமாக எண்ணெயை இறக்குமதி செய்து பெறுமானத்தை கூட்டுவதில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூர் எண்ணெய்தாங்கிகள் பயணிக்கக் கூடிய பாரிய கடல் வழிப்பாதையைக் கொண்ட தளத்தகையான அமைவிடத்தில் உள்ளதால் பாக்கியம் பெற்றது. உலகிலே எண்ணெய் சுத்திகரிப்பும் ஏற்றுமதியும் செய்யும் நாடுகளில் இதுவும் ஒன்று. இங்குள்ள சிங்கப்பூர் பெற்றோலியக் கம்பனி லிமிட். க்கு மேற்படியாக உலகின் மிகப்பெரிய பல்தேசிய நிறுவனங்களாகிய எக்ஸோன், மொபில், றோயல்டச், செல், செரவோன், பிபி, டோட்டல், மறுபேனி மற்றும் மிற்சூயி போன்றவை சிங்கப்பூரின் எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. சிங்கப்பூர் நாளொன்றுக்கு 8.3 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்கிறது.அது உலகின் எண்ணெய் நுகர்வில் 10 விகிதமாகவும,; சிங்கப்பூரின் சொந்த நுகர்வின் 10 மடங்குகளாகவும் உள்ளது. இதை நான் சொல்ல நினைப்பது ஸ்ரீலங்கா ஒரு எண்ணெய் மையமாக மாறுவதற்கு அது ஒரு எண்ணெய் உற்பத்தி நாடாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, என்பதைத்தான.

ஸ்ரீலங்காவின் பிராந்தியப் பார்வையில் 5 மையப் பரப்புகளையும் நோக்கினால்: வான்துறை : இன்று 42 வீதத்தை அண்மிய ஸ்ரீலங்கன் விமானசேவையின் வருவாய் இந்திய பறப்புகளினாலேயே கிடைக்கிறது. வாரத்திற்கு 90 – 100 விமான சேவைகள் நடத்தப் படுகின்றன கப்பல்துறை : இன்று கொழும்புத் துறைமுகத்தில் 71 வீதத்தை அண்மிய மாற்றி ஏற்றும் சரக்குகள் இந்தியாவிலிருந்தே வருகிறது. சக்தி : இன்று 35 வீதத்தை அண்மிய எங்களது எண்ணெய் இறக்குமதி இந்தியாவிலிருந்து லங்கா ஐ.ஓ.சி மூலம் வருகிறது. அறிவு : தகவல் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், ஆயரவேத மற்றும் சுதேச மருந்து வகைகள் என இவைகள் எல்லாவற்றையும் நாம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறோம். ஸ்ரீலங்காவை ஒரு பிராந்திய மையமாக்குவதைப் பற்றிப் பேசும்போது முக்கியமாக இவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை ஒதுக்கிவிட்டு இந்த மையங்களை அபிவிருத்தி செய்வது இயலாத செயல் எனபதையே நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தக் கட்டத்தில் பிரேரிக்கப்பட்டிருக்கும் சட்டக வேலைத் திட்டமான “ விரிவான பொருளாதார பங்காளர் உடன்படிக்கை (CEPA) “ “ போன்றவை முக்கிய கவனத்தில் எடுக்கப் பட வேண்டும்.

விரிவான பொருளாதார பங்காளர் உடன்படிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. ஐரொப்பிய ஒன்றியத்தினுள் கூட “ஈரோ கோப்புகள்” மற்றும் “ஈரோ சந்தேகங்கள்” என இரண்டுவகை விவாதங்கள் இருக்கின்றன முக்கியமாக ஐக்கிய .இராச்சியத்துக்குள் ,தொடர்ந்தும் ஐரொப்பிய ஒன்றியத்திலிருப்பதா? அல்லது தனியாக இருப்பதா? என்கிற விவாதங்கள் தொடர்கின்றன. ஸ்ரீலங்காவைப் போலல்லாது அவை தொழில் தரத்தில் நடத்தப் படுகின்றன, தனிப்பட்டமுறையிலோ அல்லது தேசாபிமானி எதிர் தேசத்துரோகி என்ற .ஸ்ரீலங்காவில் இடம் பெறும் துயரமான தரத்திலோ அல்ல. இதன் காரணமாக அதிகமானோர் வெளிப்படையாக இதைப்பற்றி விவாதிக்கத் தயங்குகின்றனர்.

அது அப்படியே இருக்கட்டும். இனி வரும் வருடங்களில ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் இறக்குமதிகள் மிகப் பாரிய பங்கை வகிக்கப் போகின்றன. ஸ்ரீலங்கா தனது எல்லை வரிகளைச்தூய்மைப்படுத்தி இறக்குமதி வரிகளை எளிதாகவும் தெளிவாகவும் மாற்ற வேண்டும். இதை ஒழுங்கான வரையறைக்குள் பலப்படுத்தும் போது தேவையற்ற இறக்குமதிகளை கொண்டு வந்து குவிக்காமல் கண்காணிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் பிறப்பிடமாகவும்,பெறுமதி அதிகரிபிபை ஊக்குவிப்பதாகவும் ஆன முக்கிய பாத்திரத்தை இறக்குமதி வரப்போகும் வருடங்களில் வகிக்கப் போகின்றது.

( ஸ்ரீலங்கா கொள்கைக் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி சமன் கெலேகம   ஸ்ரீலங்கா வணிகக் கழகத்தின்  வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.)

தமிழில் எஸ்.குமார்
 

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4 / Page-5 /Page-6 / Page-7 / Page-8 /Page-9 /Page-10 / Page.11 /Page-12 /page-13 / Page-14 / Page-15 / Page-16 /page-17 /Page-18 / Page-19 / Page-20 / Page-21

wanni

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்