|
முன்னேறத் துடிக்கும் யாழ் பல்கலைக்கழகம்.
எழுதுவது தேசியத்தலைவர்
தமிழ் சமுதாயம் மட்டுமல்ல விடுதலைப்ப்புலிகளால் அழிக்கப்பட்டது. பல தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தொண்டு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள்; சீர்கெடுக்கப்பட்டன.. இதில் முதன்மையானது யாழ்ப்பாண பல்கலைக்கழகம். 86 களில் இந்த அழிவு தொடங்கியது. பின் விடுதலைப்புலிகள் -அரசு யுதத நிறுத்த காலத்தில இது உச்ச நிலையை அடைந்தது. இன்னும் அது மாறவில்லை என்பதற்கு அங்கிருக்கும் பொங்குதமிழ் பெயர்ப் பலகை உதாரணமாகும். இந்த அழிவை செய்தவர்களில் முதல்வராக இருப்பது அன்றும் இன்றும் பிரபலமானவர் முன்னாள் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம் பிள்ளை. இவர் புலிகளின் நலன் விரும்பியும், சேவகருமான துணைவேந்தர் துரைராசாவின் மறைவுக்குப் பின்பு பதவிக்கு வந்தவர். இவரது கைப்பாவையாகவே தற்போதைய துணைவேந்தரும் இயங்குகிறார்
முன்னாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம் பிள்ளை ஐரோப்பாவுக்கு சென்றபோது, அங்குள்ள புலிகள் ஊர் ஊராக, கூட்டம் கூட்டி இவரை அங்கு புலிகளின் எதிர்கால கல்வித் திட்டம், போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழகதின் பங்கு, புலம் பெயர்ந்தோர் புலிகளை ஆதரிக்க வேண்டியதன் நியாயப்பாடு பற்றி சொற்பொழிவார்ற வைத்தார்கள். இது அவர் அங்கு ஆற்றிய உரையின் சிறு நறுக்கு:
"..................... தம்பிமார் என்கட தலைவரை சும்மா நினைச்சிராதேயுங்கோ! ..கொஞ்சம் மெத்தப் படிச்சவயள் அவருக்கு இங்கிலீஷ் தெரியாது, எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கயில்ல, எண்டெல்லாம் மடக்கதை பறைவினம். அவர் எல்லாத்தையும் அறிஞ்சு வைச்சிருக்கிறார். 88இல இருந்து இண்டைக்கு வரைக்கும்; அவரட ஆலோசனையின் பேரில்தான் நாங்கள் இயங்கிறம் என்பது கவேர்மேன்டுக்கே தெரியும். ......
......இங்க நான் சந்திச்ச சிலபேர் பல்கலைக்கழகதின் ஆசிரியர்கள் சிலரும், மாணவர்களும் இயக்கத்தால சில வருடங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக என்னட்ட கேட்டினம்……
….தம்பியவய, நான் ஒண்ட மட்டும் சொல்லிறன்,….. ”நல்லா இருந்துதாம் நன்னி சுட்ட பணியாரம்” எண்டு ... இங்க இருந்து கொண்டு ஜனநாயகம் கதைக்கிறது நல்லாத் தான் இருக்கும். புல்லுபுடுங்கா விட்டா நெல்லு வளராது. அப்படிச் சில விசயங்கள் நடந்த படியால் தான், இண்டைக்கு நம்மட கொன்றோல்ல யுனிவெர்சிட்டி இருக்கு.
இதட அர்த்தமாகப்பட்டது இயக்கம் தான் செய்ததெண்டு அர்த்தமில்ல. அந்த காலத்தில Eprlf, Plote காத்தார், மூத்தார் எல்லாம் இந்தியனோட சேர்ந்து அட்டகாசம் பண்ணினவங்கள். அவங்கள் கூட செய்திருக்கலாம். .....அதைவிடுவம். இங்க நான் வந்திருக்கிறது, தலைவரின் ஆலோசனையின்படி கடல்சார் பல்கலைக்கழக வளாகம் முல்லைத்தீவில் ஆரம்பிக்க, ஐரோப்பாவில பணமும், தொழில் நுட்பமும் பெறத்தான்......அதுக்குத்தான் சொல்லுறன் தலைவரின் கைய பலப்படுதுங்கோ எண்டு........ "
இப்படி ஐரோப்பாவில், புலிப்பினாமிகளுக்கு முதுகு நக்கிய இவர்; பல்கலைகழகத்தில் ஜனநாயகம் கோரிய மாணவர்கள் பலரை புலிகளின் சிறைக்கு அனுப்பியவர். இதன் பின்பு பொங்கு தமிழால் எவ்வளவு பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டதற்கும் இவரே பொறுப்பு
இப்பதான் புலி இல்லையே, இப்பவுமா இவரின் அட்டகாசம் தொடருது என்ன நீங்கள் கேட்கலாம். நக்கிப் பழகியவனுக்கு; புலி என்ன எலி என்ன. மே 18, இக்கு அடுத்த நாளே சிறீதர் தியேட்டருக்கு முன்னாலே மாலையுடன் வரிசையில் நின்றவர்களில் இந்த மனிதரும்; ஒருவர்.
முன்பு புலிகள் பிட்டத்தால் சொன்னதை, தெய்வவாக்காக தன் நலனுக்காக சிரம் மேல் தாங்கிய இந்த கனவான், இப்போ அமைச்சர் டக்ளசின் தேவானந்தாவின் வாசல் காப்போனிற்கு சலுட் அடிக்கக் கூட தயாராக உள்ளார்
" கதைக்கப் படாதவை, கதைப்பதற்கு வழி செய்தவர் நமது அமைச்சர். எமது பல்கலைகழகத்தின், இருபத்தி ஐந்து வருடகால அடிமைத்தனம் விலகுவதற்கு ஆவனசெய்து; கல்விச் சூரியனாகவும், சுதந்தரத்தின் நடமாடும் உதாரணமாகவும் திகழ்கிறார், தம்பி தேவா. நான் அவரை தம்பி என்று கூறுவதை பெருமையாக கருதுகிறேன். அவர் ஒரு முறையில் எனக்கு உறவுதான். அவரது பரம்பரையும் எனது பரம்பரையும் யாழப்பாணத்தின் பெருமை சாற்றும் கல்வி சமுகத்தைச் சேர்ந்தது.
படிப்பறியாதவன்; கண்டவன் நிண்டவன் எல்லாம், அரசியல் செய்ய வெளிகிட்டுத் தான் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம். உங்களுக்குத் தெரியும், எமது மாணவர்கள், ஆசிரியர்கள் என்று எத்தினை பேரை இந்த மிருகங்கள் கொலை செய்ததென்று. தூரப்பார்வை இல்லாதவன், அண்டாட்டம் காச்சி எல்லாம் எமது தலை விதியை தீர்மானிக்க வெளிக்கிட்டான். எங்கிருந்து வந்தானோ அங்கேயே தன் வாழ்கையை முடித்துக் கொண்டான்.
ஆனல் தம்பி தேவா, தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவரது கையை நாம் பலப்படுத்த வேண்டும்…… .”
இது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முன்னால் நடந்த கூட்டம் ஒன்றில், இந்த மனிதர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி. இத்தேர்தலில் ளுடுகுP சார்பில் போட்டியிடவும் இவர் முனைந்தது, இன்னொரு கதை
இன்று ஊடகவியல் கற்கை பகுதிக்கு தலைவராக இருக்கும் இந்த பிரகஸ்பதி சார்பாக அமைச்சர டக்லஸ் தேவானந்தா கவனமாக இருத்தல் நல்லம். கண் அயர்ந்தால் டக்லஸ் கதி கவலைக்கிடமாகும். எனது கவலை அது அல்ல. இந்த மனிதர்களால் காட்டிக்கொடுக்கபட்டு, கசைக்கிப்பிழியப்படும் எம் மக்கள் பற்றி தான்........யாழ்ப்பாண மக்களின் முன்னேற்றம் யாழ்பல்கலைக்கழகத்தில் தங்கி இருக்கிறது
|