a_Pen

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்    மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்          மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்       தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்               

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr            srilankan-diaspora.org/              
media.athirady.org/

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           28.07.2009

யாழ் நகரை மீண்டும் கட்டியமைப்போம்

புலம் பெயர்ந்த கட்டடக் கலைஞர்கள்

Jaffnaஇரண்டாம் உலக மகாயுத்தத்தில் யப்பானும் ஜேர்மனியும் தோல்வியுற்று சரணடைந்தன. ஆனால் இந்த இரு நாடுகளுமே தோல்வியின் பின்னர் தொழில் நுட்பத்தில் அதீத. வளர்ச்சியடைந்து உலகப் பொருளாதாரத்தை பங்கு போட்டுக் கொண்டன. 60களின் பின்னர் இந்த இரு நாடுகளின் உற்பத்திப் பொருள்களே உலகச் சந்தைகளை நிரப்பின. அத்தோடு யுத்தத்தால் சிதைந்துபோன அவர்களுடைய நகரங்கள் புதுப் பொலியுடன் மீண்டும் எழுந்தன. நவீன கட்டடக்கலையை புதிய பரிணாமத்திற்க்கு எடுத்துச் சென்ற அதேவேளை தமது பாரம்பரிய அமைப்பையும் சேதாரமில்லாமல் மீட்டெடுத்தனர். யுத்தத்தில் தோல்வி அவர்களின் வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டது என குறிப்பிடுவதில் எந்தத் வரலாற்றுத் தவறுமில்லை

இன்று எமது மக்களும் தோல்வியுணர்வில் துவண்டுபோய் உள்ளனர். எமது நகரங்கள் யுத்தத்தால் பேரழிவுகளைச் சந்திக்காவிட்டாலும் நீண்ட காலம் வளர்ச்சி இல்லாமல் மலடாகிக் கிடக்கிறது. யப்பானுக்கும் ஜேர்மனிக்கும் அன்று கிடைத்த வாய்ப்பு இன்று எமது நகரங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களைப் போலவே புத்திசாலித்தனமாக அபிவிருத்தி செய்யப்போகிறோமா அல்லது பழைய குருடி கதவை திறவடி எண்ற போக்கில் சீர்குலைக்கப் போகிறோமா என்பது எங்கள் அரசியல் தலமைகளைப் பொறுத்ததே. இந்தச் சந்தேகம் வருவதற்கு தற்போது நடக்கும் ஒரு சம்பவமே காரணியாகியது.

யாழ்ப்பாணத்திற்கு புதிய மாநகர கட்டடத்திற்கான வரைபடங்கள் தயாராகிவருவதாக செய்தி கிடைத்தது. ஓரு சாதாரண கிராமசபையின் சின்ன வாசிகசாலையை கட்டுவதானால் கூட தகுதியான கட்டடக் கலைஞர்களிடையே போட்டி வைத்து திறமையான கட்டடக்கலைஞரை தெரிவு செய்யும் மேற்கத்தைய பாரம்பரியத்தில் வாழும் எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை. தங்களுக்கு தெரிந்த நித்திய மேளத்திடம் எந்தவித தெரிவுமின்றி கொடுத்திருக்கிறார்கள். புதிய மாநகரசபை மக்களால் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் அவசரவசரமாக இது நடந்திருக்கிறது. ஒரு சாதாரண அலுவலகக் கட்டடம் என்ற மதிப்பைக்கூட மாநகரசபைக் கட்டடத்திற்கு நிர்வாகம் கொடுக்கவில்லை.

யாழ்ப்பாண நகரம் நீண்ட கால பாரம்பரியம் மிக்கது. போத்துக்கேய ஒல்லாந்த பிரித்தானிய கட்டடக்கலையின் வெளிப்பாடுகள் இன்னும் அதன் மூலவடிவங்கள் கெடாத வகையில் எஞ்சியிருக்கின்றன. இந்தப் பாரம்பரியஙகளின் எச்சங்கள் நகரின் வரலாற்றில் ஆழப் பதிந்து கிடக்கிறது. யுத்தத்தினால் யாழ்பாணத்தின் தனித்தவத்தை அடையளாப்படுத்திய அமைப்புக்களான டச்சுக் கோட்டையும் பழைய மாநகர கட்டடமும் பிரதான தபால் நிலையமும்; அழிக்கப்பட்டது வரலாற்றுச் சோகமே. இவை மீண்டும் பழைய வடிவிலே மீளமைக்கப்பட்டால் நாம் அதிஸ்டசாலிகளே. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் நகரில் அமைக்கப்பட்ட புதிய தபால் நிலையம் கலையுணர்வு இல்லாதவனையும் கசிந்துருகவைக்கும். சூழல் பற்றிய எந்த சுரணையுமில்லாமல் ஒரு பெரிய வீட்டின் தோற்றத்தில் வண்ண வண்ண செங்கல்லுகளால் சோடித்த்து கட்டியிருக்கிறார்கள் சுதந்திரத்திற்கு பின்னர் நகரின் பழமையை அனுசரித்து சூழலுக்கு இயைபாக திராவிடக் கட்டடக்கலையில் உருவான ஒரே ஒரு சொத்து யாழ் நூல் நிலையம் மட்டுமே. அக்காலத்தின் கட்டக்கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியாவில் பகழ்பெற்ற கட்டடக்கலைஞரான நரசிம்மனை தருவித்து அதை உருவாக்கிய நிர்வாகிகளுக்கு தமிழர்கள் கடமைப்பட்டவர்கள். எரிந்த நூல்நிலையத்தை முன்னர் இருந்தது போலவே மீளமைத்தவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

சுதந்திரத்துக்கு பின்னர் அமைக்கப்பட்ட மற்ற பொதுக் கட்டடங்களைப் பற்றி சொல்லது வெட்கக்கேடானது. எல்லாமே நகரின் கட்டடக்கலை வரலாற்று பகைப்புலத்தை கருத்தில் கொள்ளாது அல்லது புரிந்து கொள்ளாது உருவான அரைவேக்காட்டுப் படைப்புகளே. அவை பழைய கட்டடங்களுடன் இணங்கவில்லை. அல்லது திராவிட கட்டடக்கலையை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக வெளிப்படுத்தின. அல்லது நவீன கட்டடக்கலையை அரைவேக்காட்டுத்தனமாக பிரதி பண்ணின. யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட சகல கட்டடங்களிலும் இந்த அம்சங்களைக் காணலாம். யாழ் நவீன சந்தையின் வடிவமைப்பில் கட்டடக்கலைஞரின் பங்களிப்பே இல்லை. இது ஒரு பொறியியலானரால் வடிவமைக்கப்பட்டது. கட்டடக்கலைஞரே கலையை காற்றில் பறக்க விடுமபோது பொறியிலாளரின் அமைப்பில் கலையைத் தேடுவது விசமத்தனமே.

மாநகரசபை கட்டடமே ஒரு மாநகரத்தின் மிக முக்கியமான கட்டடமாகும். அது அந்த மக்களின் வரலாற்றை, கலையை, கலாசாரத்தை, தொழில் நுடபத்தை வெளிப்படுத்தும் சின்னமாகும். அதனாலேயே உலகெங்கும் அதன் வடிவத்தில் மிகுந்த அக்கறையெடுத்து போட்டிகள் மூலம் கட்டடக்கலைஞரை தெரிவு செய்கின்றனர். சில மாநகர கட்டங்களுக்கு சர்வதேசப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு. இப்போது நமக்கிருக்கும் பயமெல்லாம் நவீன தபாலகம் போல நவீனமும் இல்லாமல் நமதாயும் இல்லாமல் ஒரு அரைவேக்காட்டு மாநகரசபை கட்டடம் எமது நகருக்கு வாய்த்துவிடுமோ என்பதே. மாநகர நிர்வாகம் இதன் முக்கியத்தை உணராமலோ அல்லது தமக்கு வேண்டியவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவோ எந்தவித பொறுப்புணர்வுமில்லாமல் அவசரவசரமாக கட்டி முடிக்கப் பார்க்கிறார்கள். சர்வதேசக் கட்டடக்கலைஞருகளுக்கிடையே போட்டி வைக்காவிட்டாலும் கூடப் பரவாயில்லை உள்ளுர் கலைஞர்களிடையே போட்டியை நடாத்தியிருக்கலாம். அல்லாவிடில் ஆகக் குறைந்தது புகழ் பெற்ற இலங்கை அல்லது இந்திய கட்டடக்கலைஞரொருவரை அணுகியிருக்கலாம். அதை விட்டு தமக்குத் தெரிந்த நித்தியமேளங்களுக்கு வேலை கொடுப்பது நாங்கள் இன்னும் மாறவில்லை மாறவே மாட்டோம் என்று அடம்பிடிக்கும் குறுகிய யாழ்பாண பண்பையே வெளிப்படுத்தும்.

மக்கள் சொல்லொண்ணா துயரை அனுபவிக்கும்போது மாநகரக் கட்டடத்தின் கலைப்பற்றி இப்போது நினைப்பது அவசியமா எனச் சிலர் நினைக்கலாம். உண்மையிலே எங்களுடைய கேள்வியும் அதுதான். இன்றைய சூழலில் அவசரவசரமாக மாநகரசபைக் கட்டடம் கட்டவேண்டிய அவசியமென்ன. அப்படிக் கட்டுவது தேவைதான் என்றால் செய்வன திருந்திச் செய். பிறகு பிரச்சனைகள் தீர்ந்த பின்னர் உடைத்துவிட்டு  சரியான கட்டடத்தை கட்டமுடியாது. இதுவே காலம் காலமாக எமது மக்களைப் பிரதிபலித்தக்கொண்டிருக்கும். நவீன தபாலகம் போல யாழ் நகரை அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கும்.

நிர்வாகிகளுக்கும் இனி வரவிருக்கும் மாநகரசபை ஆட்சியாளருக்கும சில கருத்தக்களை சொல்லிவைப்பத அவசியமென உணர்கிறோம். வரலாற்றில் ஆட்சியாளர்கள் அவர்களுடைய கட்டுமானப் பணிகளின் மூலமே அறியப்படுகிறார்கள் போற்றப்படுகிறார்கள். மன்னராட்சிக்காலத்தில் அவர்கள் கட்டிய கோவில்கள் குளங்கள் மூலமாகவே இன்றும் அவர்களுடைய பெயர் நிலைத்து நிற்கின்றன. அதை அமைத்த சிற்பிகளைக் கூட ஒருவருக்கும் தெரிந்திருப்பதில்லை. தஞ்ஞைப் பெரியகோயிலை தாஜ்மகாலை வடிவமைத்த சிற்பியை ஒருவருக்கும் தெரியாது. ஆனால் ஷாஷஹானும் ராஜராஜ சோழனும் அந்தக் கட்டடங்களாலேயே இன்றும் நிலைத்திருக்கிறார்கள்.  இன்றைய ஜனநாயக உலகில் வடிவமைத்த சிற்பியையும் நிறுவிய அரசையும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதனாலேயே வரலாற்றில் இடம்பிடித்த பெரும் தலைவர்களெல்லாம் தமது காலத்தில் அழியாச் சின்னங்களை கட்டிவைக்கத் தவறவில்லை.

முன்னள் இலங்கை ஜனாதிபதி ஜேயார் பொது வேலைத் திணைக்களகத்தினால் திட்டமிடப்பட்ட புதிய பாராளுமன்ற வடிவமைப்பை நிராகரித்துவிட்டு சர்வதேசப் புகழ்பொற்ற இலங்கை கட்டடக்கலைஞரான ஜிவ்ரி பாவாவை அழைத்து தற்போதுள்ள புதிய பாராளுமன்றத்தை நிறுவப் பணித்தார். அதன் மூலம் இலங்கை உலகக் கட்டடக்கலைக்கு வளம் சேர்க்கும் பாராளுமன்றத்தை தனதாக்கிக்கொண்டது. அரசியலில் எத்தனை குழப்பங்களை உருவாக்கியபோதும் இந்தப் பாராளுமன்றத்தை அமைத்த பெருமை ஜேயாருக்கு உரியதே. இப் பாரளுமன்றம் பாரம்பரிய பௌத்த சிங்கள கட்டடக்கலையின் சமகால வடிவம் எனக் கருதமுடியும். இதேபோல முன்னள் இந்திய பிரதமர் தனது காலத்தில் புதிதாக உருவான ஹரியான மாநில தலைநகரான சண்டிக்காரை உருவாக்கும் பொறுப்பை நவீன கட்டடக்கலையின் பிதாமகரான பிரான்ஸை சேர்ந்த லி கொபூசியரிடம் ஒப்படைத்தார். இன்று சண்டிக்கார் உலக கட்டடக்கலை ஆர்வலர்கள் தரிசிக்க விரும்பும் நகராக அறியப்படுகிறது. வங்காள தேசத்தின் பாராளுமன்றத்தை அமைக்கும் பொறுப்பை அப்போதைய பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி நாட்டின் பிரதான கட்டக்கலைஞரின் ஆலோசனையின் அடிப்படையில் உலகின் அதிசிறந்த கட்டக் கலைஞரான லுயி கானிடம் ஒப்படைத்தார். ஒரு யூதரான லுயி கான் இஸ்லாமிய பாரளுமன்றத்தை அமைக்க அனுமதிக்க முடியுமா என எதிர்கட்சிகள் எழுப்பிய கூக்குரல்களை அதிபர் கணக்கெடுக்கவில்லை. இன்று தனிநாடாக விளங்கும் பங்களாதேஸின் பெருமைமிக்க பாரளுமன்றமாகவும் லுயி கானின் மிகக்சிறந்த படைப்பாகவும் இஸ்லாமிய பாரம்பரிய கட்டடக்கலையின் நவீன வெளிப்பாடாகவும் இக்கட்டடம. அறியப்படுகிறது.

மேற்குலக தலைவர்கள் கட்டடக்கலைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. அண்மையில் பிரான்சின் அதிபராயிருந்த மிற்ரராண்ட பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறு வருட ஞாபகார்த்தமாக ஐந்து மிகப்பெரிய நிர்மாணப்பணிகளை சர்வதேச போட்டியினூடாக உலகின் தலைசிறந்த கட்டக்கலைஞர்களைத் தெரிவுசெய்து அமைத்தார். பின்னர் நடந்த தேர்தலில் தோல்வியுற்றபோதும் பிரெஞ்சு பக்களால் அதிகம் விரும்பப்பட்ட தலைவராக இறக்குமட்டும் மதிக்கப்பட்டதற்கு அவரின் இந்த ஐந்து நிர்மாணப்பணிகளே காரணமாயிருந்தன.

எமது யாழ்நகர் அரசியலால் அறியப்பட்டளவுக்கு அதன் நகரமைப்பு அறியப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் மீள்கட்டுமானம் பற்றி பேசப்படும் இன்று எமது நகரை உலகின் தலைசிறந்த ஓரு நகராக கட்டியமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்குரிய வசதிகளும் உலகப் பார்வையும் எம்மிடம் இப்போது நிறையவே உள்ளது. எமக்கு தேவையானதெல்லாம் தொலைநோக்குள்ள தலைமையே. நகரின் எதிர்கால வடிவமைப்பை திர்மானித்து தற்கால கட்டுமான பணிகளை கட்டுப்படுத்தும் திட்டவரைவு அமைக்கப்படவேண்டும். அத்திட்ட வரைவு எந்த செல்வாக்குக்கும் உட்படாதவிதத்தில் கடுமையாக நிறைவேற்றப்படவேண்டும். பொதுக்கட்டடங்களின் வடிவங்கள் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கட்டடக்கலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆதற்கு முன்னோடியாக நகரின் முதன்மையான மாநகரசபைக் கட்டடம் மிகச் சிறந்த கட்டடக் கலைஞரால் வடிவமைக்ப்படவேண்டும். ஓரு உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞரால் எமது நகர மண்டபம் உருவாக்கப்டவேண்டும் என எதிர்பார்ப்பது ஒன்றும் பேராசையல்ல. எமது இனமும் நாடும் அதற்கு தகுதியற்றதுமல்ல.

அமெரிக்க அரசில் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்ய ஒரு அமெரிக்கருக்கு மாதம் ஒரு இலட்சம் டொலர்களை புலம் பெயர்ந்த மக்களால் தாரை வார்க்க முடியுமானால் அதைவிட மிகக் குறைந்த செலவில் உலகின் தலைசிறந்த கட்டிடக்கலைஞரைக் கொண்டு எமது நகரின் பிரதான கட்டடத்தை அமைக்க முடியாதா?

நிச்சயமாக முடியும். தாயகத்தின் அரசியல் தலைமை சரியான வழிகாட்டினால்; எம்மால் அழிக்க மட்டுமல்ல ஆக்கவும் முடியும் என தமிழர்கள் நிச்சயமாக நிரூபிப்பார்கள்.

இது யாழ் நகரை குறித்து எழுதப்பட்ட போதும் எமது பிரதான நகரங்களான மட்டக்களப்பு திருகோணமலைக்கும் இதே கருத்து பொருந்தும்.
 

Front Page / Page-1 /Page-2

childbehindfence

சிந்தனை செய் மனமே ‘தமிழ் மனமே’

இலங்கையர் ஜனநாயக முன்னணி – ஜேர்மனி

யாழ்ப்பாணம் வவுனியா நகர மக்கள், தமிழர் வாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனைக்கு கால்கோள் இடவேண்டும்!

 

இந்தியா புலிகளுக்கு எதிராக இலங்கைக்கு உதவ ரஜீவ் காந்தி கொலைமாத்திரம் காரணமல்ல.

புலிகளின் உள்நாட்டு ஆலோசகர் திருநாவுக்கரசு தமிழகத்திற்கு தப்பியோட்டம்!

சமத்துவமா? அடிமைத்தனமா?

மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும்

தமிழர் போராட்டம்:  தவறுகள் தந்திரோபாயத்தால் மட்டும்தானா?

தானிஸ் அஷ்ரப்  கவிதைகள்!