|
சரியான முடிவுக்கு வருவதில் எவ்வித சிரமமும் இல்லை
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் வகிககும் முக்கியத்துவம் பற்றி அரசியல் வட்டாரங்களில் பரவ லாகப் பேசப்படுகின்றது.
முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களிலும் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கிய பாத்திரம் வகித்த போதிலும் இந்தத் தேர்தலில் அவற்றின் முக்கியத்துவம் கூடு தலாக உணரப்படுகின்றது.
சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை எனக் கூறியவர் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிப் பேசுவதையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்ட விரோதமானது எனத் தீர்ப்பு வழங்கியவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று இரு மாகாணங்களினதும் இணைப்பு பற்றிப் பேசுவதை யும் பார்க்கும் போது சிறுபான்மையினரது வாக்குகளின் முக்கியத் துவம் எவ்வளவுக்கு உணரப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள லாம்.
தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வது மாத் திரம் போதுமானதல்ல. சிறுபான்மையின மக்களும் இதை விளங்கிக் கொண்டு சரியான முடிவுக்கு வரவேண்டும்.
தேர்தல் காலங்களில் தாராளமாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆராய்ந்து பார்க்காமல் அவற்றை அப்படியே நம்புவது கானல் நீரை நம்புவது போலாகிவிடும். வாக்குறுதி களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு வேட்பாளருக்குக் கிடைக்குமா என்பது பற்றியும் அவரது வாக்குறுதிகள் யதார்த்த பூர்வமானவையா என்பது பற்றியும் வாக்காளர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்
-- தினகரன் தலையங்கம் -
|