a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

உரிமைக்குக் குரல் கொடுப்போம்! உறவுக்குக் கரம் கொடுப்போம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் தீர்வு காணவும் இன ஐக்கியம் மற்றும் இன சமத்துவம் ஆகியவற்றைப் பேணவும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் வாழ்வாதார பிரச்சினைகளையும்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் முன்நிறுத்தி பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது எனத் தீர்மானம் எடுத்துள்ளோம்.

அர்த்தமற்ற வெற்றுக்கோசங்களாலும் வேண்டப்படாத எதிர்ப்பு அரசியலாலும் வெறுமனே பழிவாங்கும் உணர்வுகளாலும் தமிழ் மக்களின் நியாயமான அரசியலுரிமைப் பிரச்சினையை பேசித்தீர்ப்பதற்கான கதவுகள் யாவும் பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளால் இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில்..

இதுவரை கால தமிழ் அரசியல் தலைமைகள் கிடைத்த சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்த மறுத்ததினால் தம்மைத் தாமே அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் இன்னும் இருப்பவர்கள் அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொள்ளாமல் சரியான வழிமுறையைத் தேட மறுத்து தொடர்ந்தும் வழிமாறி இதுவரை தோல்விகளை மட்டும் தந்திருந்த வழிமுறையில் சென்று கொண்டிருப்பதாலும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையை வென்றெடுப்பதற்கான பாரிய வரலாற்று கடமை என்பது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வழிமுறை மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில்..

நடைமுறை யதார்த்தங்களையும் சமகால அரசியல் சூழலையும் உணர்ந்து இன்னமும் அரச தரப்போடு உரிமைக்குக் குரல் கொடுப்போம்! உறவுக்கு கரம் கொடுப்போம்!! என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்காக பேசுவதற்காகவும் பெறுவதற்காகவும் கதவு திறந்து வைத்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்த வழியின் ஊடாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு தொடர்ந்தும் பேசி வருகிறது. இதன் அடிப்படையிலேயே எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது என நாம் உடன்பாடு கண்டிருக்கின்றோம்.

இந்த உடன்பாடானது தமது அரசியல் அபிலாசைகளுக்கும், வாழ்வாதார உரிமைகளுக்கும் மாறானது என்று தமிழ் மக்களோ அன்றி நாம் முன்வைத்திருக்கும் அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கான எமது மக்களின் நியாயங்களைத் தவறாக எண்ணி இலங்கைத்தீவின் இறைமைக்கும் ஐக்கியத்திற்கும் மாறானது என்று சிங்கள மக்களோ அச்சமடைய மாட்டார்கள் என்பதும் எமது நம்பிக்கையாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் முன்வைத்திருந்த பத்து அம்சக் கோரிக்கையினை மேலும் செழுமைப்படுத்தி அதையே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் முன்வைத்துள்ளோம். ஒன்றை விட்டுக்கொடுப்பது இன்னொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே. தற்காலிகமாக எங்கள் சின்னத்தை விட்டுக்கொடுப்பது நிரந்தரமாக நாங்கள் பின்வரும் விடயங்களை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே ஆகும்.

இதன் அடிப்படையில்

1 தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக 13 வது திருத்தச்சட்டத்தில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக கூடுதல் அதிகாரங்களைப் பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுதல்.

2. தமிழ் மக்கள் இலங்கையர்களாகவும் அதே வேளை தமிழர்கள் என்ற அடையாளங்களோடு இருப்பதற்கான விருப்பங்களையும் உறுதிப்படுத்துவதோடு தமிழ் மக்களுக்கான  சமத்துவ உணர்வையும் ஓர் இனக்குழுமம் என்ற அடிப்படையான பண்பாட்டையும் உறுதிப்படுத்தி இனங்களுக்கிடையிலான சமத்துவத்தைப் பேணுதல்.

3. கடற்தொழில், விவசாயம் பனம்பொருள் அபிவிருத்தி வர்த்தகம் சிறு கைத்தொழில் ஆகிய அனைத்து தொழிற்துறை சார்ந்தவர்களும் முகம் கொடுத்து வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு எமது வாழ்விடங்களை தன்னிறைவு கண்ட பிரதேசமாக உயர்த்துதல்!

4. வன்னியில் இருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளுக்கான செயற்திட்டங்களை விரைவு படுத்துதல்!

5. பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் என்பவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன்முறைகள் அற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல்.

6. அரசியல் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கும் சரணடைந்திருப்பவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதோடு காணாமற் போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்கு சுதந்திரமான குழு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்!

7. கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தியில் கவனிக்கப்படாமலும் யுத்த சூழல் காரணமாக அபிவிருத்தி காணப்படாமலும் உள்ள தமிழ் பிரதேசங்களுக்கு அபிவிருத்தியில் முன்னுரிமை அளித்தல்.

8. ஏ 9 வீதி உட்பட ஏனைய போக்குவரத்து பாதைகளிலும் உள்ள அனைத்துத் தடைகளையும் அகற்றி இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போன்று தடைகள் அற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்துதல்.

9. தமிழ் மொழிக்குரிய சம அந்தஸ்தை நிர்வாக ரீதியில் விரிவுபடுத்தி அரச நிர்வாகத்தில் எமது மக்கள் அந்நியப்பட்டவர்கள் என்ற நிலையை அகற்றி அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களுக்குரிய பங்காளித் தன்மையை உருவாக்குதல். மேலும் இலங்கையின் மத்திய பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளில் இன விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதை உறுதிப்படுத்தல்.

10. தமிழ் பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வரலாற்று வாழ்விடங்களில் இருந்து தாம் அகற்றப்பட்டு விடுவோம் என எழுந்திருக்கும் சந்தேகங்களை தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து நீக்கி ஐக்கிய இலங்கைக்குள் அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் அவர்களுக்கே உரியன என்ற நம்பிக்கையினை உறுதிப்படுத்துதல்.

இவைகளே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்திருக்கும் நடைமுறைச்சாத்தியமான நியாயமான தேவைகளாகும்.

பொதுவாக எந்தக் கோரிக்கைளும் அல்லது நிபந்தனைகளும் சரி தேர்தலின் பின்னர்தான் ஆளும் தரப்பால் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் முன்வைத்திருந்த பத்து அம்சக் கோரிக்கைகளில் பலதும் தேர்தலுக்கு முன்பாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் நிறைவேற்றப்பட ஆரம்பித்திருந்ததை சகலரும் அறிவார்கள். எமது கோரிக்கைகளில் இதுவரை ஆரம்பித்திருந்ததை தொடர்வதற்கும் தொடங்காதிருப்பதை ஆரம்பிப்பதற்குமான நம்பிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்..

மேலும் தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் இன்னும் சில அடிப்படைத் தேவைகளை இனங்கண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் எமது தேர்தல் உடன்பாட்டில் மேலதிகமாக இணைத்து அதையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் சமர்ப்பித்துள்ளோம். இதன் பிரகாரம் பின்வரும் விடயங்களை மேற்கூறிய 10 அம்சக் கோரிக்கைகளுடன் இணைத்திருக்கின்றோம்.

அவையாவன
 
கடந்த கால யுத்த சூழலினால் அழிந்து போன எமது வாழ்விடங்களை துரிதமான அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துதல்!

எந்தவொரு உற்பத்தியிலும் உருவாகும் இலாபங்களில் பெரும்பகுதி மக்கள் சமூகத்திற்கே என்ற அடிப்படையில் சமூக பொருளாதார அபிவிருத்தியை எமது வாழ்விடங்கள் தோறும் விரைவாக முன்னெடுத்தல்!

அரச முதலீடுகள் மற்றும் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதோடு உள்ளுர் உற்பத்திகளை பெருக்கி அதன் மூலம் எமது மக்களின் பொருளாதார வசதிகளைப் பூர்த்தி செய்து, வேலையற்றிருக்கும் அனைவருக்கும் அரச மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஊடாகவும் வேலை வாய்ப்பளித்தல்!

எமது மக்களின் வாழ்விடங்கள் தோறும் அனைத்து அரச நிர்வாகங்களிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் படித்த வேலையற்றவர்களுக்கான வாழ்வாதார பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்!

அனைத்து இளைஞர் யுவதிகளுக்குமான தொழிற்கல்வி மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு போன்றவற்றை விரைவாக முன்னெடுத்து இல்லாமை என்பதை இல்லாதொழித்தல்!

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு வந்து போவதற்கு மட்டுமன்றி மீள்குடியேறுவதற்கும் தமிழ் மக்களின் வாழ்வாதார உயர்வுக்காக எமது வாழ்விடங்கள் தோறும் தமது முதலீடுகளைப் பயன்படுத்துவதற்கும் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டே அவர்கள் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைகளைப் பெறுவதற்கும், எமது மக்களின் அரசியல் விடயங்களை
தீர்மானிப்பதில் பங்குதாரர்களாக ஆவதற்குமான ஏற்பாடுகளை உறுதி செய்தல்!

எமது சனத்தொகையில் சரி பாதிக்கு மேலாக இருக்கும் பெண்களுக்கான வாழ்வாதார வசதிகள் வேலை வாய்ப்பு மற்றும் கணவன்மாரை இழந்த பெண்களுக்கான விஷேட வாழ்வாதார கவனிப்பு போன்றவற்றை அவசரமாக முன்னெடுத்தல்.

பல்வேறு சூழ்நிலைகளால் குறைந்து போன எமது சனத்தொகையின் விகிதாசாரத்தை விருத்தி செய்யும் தாய்மார்களுக்கு விஷேட கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் மற்றும் அழிக்கப்பட்ட சொத்துக்களுக்குமான நிவாரணமாக நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொடுத்தல்

மனித நேய உணர்வுகளை இளைய சமுதாயத்தினர் மத்தியில் மேலும் ஊட்டுவதற்கான தொடர் கருத்தரங்குகளை நடத்துதல்!

சுதந்திரமாக எழுதவும் பேசவும் நடமாடவும் விரும்பிய அரசியல் வழிமுறையை ஆதரிக்கவும் எமது மக்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பை கோருதல்!

உள்@ராட்சி சபைகளுக்கான அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதன் மூலம் கிராமங்களும் சிறு நகரங்களாக மாற முடிந்த அபிவிருத்தியினையும் சிறந்த நிர்வாகத்தையும் முன்னெடுத்தல்.

வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த போது அவர்களால் கைவிடப்பட்டுள்ள மற்றும் சில தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவர்களது சொத்துக்கள் உடமைகள் வாகனங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த உபகரணங்கள் அனைத்தையும் வெகுவிரைவில் அவர்களுக்கு மீளப்பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக்குதல்.

நாளை நம் கைகளில் வரப்போகும் அரசியல் உரிமையினை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களில் மக்கள் சமூகம் பங்கெடுக்கும் வகையில் சகல மட்டங்களில் இருந்தும் பிரஜைகள் குழுக்களை அமைத்தல்!

இவைகளே ஈ.பி.டி.பி யினராகிய நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறவுக்குக் கரம் கொடுத்து எமது மக்களின் சார்பாக நாங்கள் கொடுத்து வரும் அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கான குரல்களாகும்.

மக்களின் மனச்சாட்சியாக. மத்தியில் கூட்டாட்சியாக. மாநிலத்தின் சுயாட்சி நோக்கி செல்ல நாங்கள் சொல்லும் இவைகள் அனைத்தையும் பெற்றுத்தருவதற்கான பொறுப்பை நாங்களே எடுக்கின்றோம்.

இதுவரை காலமும் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கான வழிமுறை என்பது இருந்த உரிமைகளையும் இழப்பதற்கே வழி செய்துள்ளது என்றும்

இனியாவது ஒரு விதி செய்ய தவறான வழிமுறைகளை சரி செய்ய
இழந்தவைகள் யாவையும் பெற்றிட வழி செய்ய  மக்கள் பலத்தில் எங்கள் நிலத்தில் நின்று உரிமைக்குக் குரல் கொடுப்போம்! உறவுக்குக் கரம் கொடுப்போம்!!

 

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!