|
ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி
புதையுண்டு போகவிருந்த ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், அதள பாதாளத்தில் விழவிருந்த நாட்டை மீட்பதற்கும், தவறான பாதையிலிருந்து நாட்டை நல் வழிப்படுத்துவதற்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
குரோத மனப்பான்மையுடனும், இறு மாப்புடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும் தேர்தலில் போட்டியிட்டு தோல் வியை ஒப்புக் கொள்ள முடியாத காரணத்தால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் முன் வைக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் தேர்தல் நேர்மை யாக நடைபெற்றது என்றும் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளனர். எனினும், சரத்பொன்சேகா உள்ளிட்ட குழுவினர் மட்டும் தேர்தல்களில் மோசடிகள் நடைபெற்றதாக கூறுகின்றனர்.
நடந்து முடிந்த தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் தனித் தனியாக தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடன் கூடிய முடிவுகளின் பிரதிகள் வழங்கப்பட்டன.
வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லல் முதற் கொண்டு மிகவும் கவனமாக செய்யப்பட்டன. எந்த வகையிலும் மோசடிகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை.
தேர்தலுக்கு முன்னர் எமது கட்சி ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். “27 ஆம் திகதிக்கு பின்னர் பார்த்துக் கொள்வோம்” என சூளுரைத்தனர். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.
ழிவாங்கும் எண்ணத்துடனும், குரோதமனப்பான்மையுடனேயே எதிர்க்கட்சியின் பிரதான வேட்பாளர் பேசினார். ‘சிறைக்கூடங்களை நிறைப்பேன்” என்றார்.
தேர்தலில் வென்றால் எவ்வகையான பிரதிபலனை எதிர்பார்த்திருக்க முடியும் என்பது அவர்களது பேச்சிலும் செயலிலும் இருந்து தென்பட்டது.
இதற்கு மக்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் அமை ச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரி வித்தார்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் அரசுக்கு ஏதோ வொன்றை சொல்கிறார்கள் என்பது புலனாகிறது தானே? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,
தமிழ்த் தலைவர்கள் தவறான பாதைக்கு அந்த மக்களை தள்ளிவிட்டிருக்கிறார்கள். மக்கள் விரைவில் அதனை புரிந்து கொள்வார்கள். வரலாற்றுத் தவறை மீண்டும் தமிழ்த் தலைவர்கள் விட்டிருக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அனைவருக்கும் ஜனாதிபதி நான்தான் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார் என்பதையும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நினைவு கூர்ந்தார்.
தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ´
|