|
தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?
(சாகரன்)
யார் அங்கே! தமிழ் தேசியக் கூட்டமைப்பா? அப்படி ஒரு அமைப்பு இலங்கையில் இருக்கின்றதா? அது என்ன சம்மந்தன் கோஷ்டியா….? சிவாஜிலிங்கம் கோஷ்டியா….? கிஷோர் கோஷ்டியா….? கஜேந்திரகுமார் பொனனம்;பலம் கோஷ்டியா….? அல்லது குதிரை கஜேந்திரன் கோஷ்டியா….? எந்தக் கோஷ்டியைக் குறிபிடுகின்றீர்கள்? புலிகளின்; ஆயுதப் பிரசன்னம் இருந்த காலகட்டங்களிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றொரு அமைப்புஃகட்சி ‘தனியாக’ இருந்ததாக வரலாறு, தடையங்கள் எதனையும் காண முடியவில்லை. ஒரு அரசியல் அமைப்புஃகட்சி இற்கு முதலில் அடிப்படையாக இருக்க வேண்டியவைகள் கொள்கை, கோட்பாடு, அமைப்பு, அரசியல் வேலைத்திட்டம். இதில் எதனையும் தன்னகத்தே இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகவோ, அமைப்பாகவோ எப்படிக் ஏற்றுக்கொள்ள முடியும். வெற்றுத் தாளில் கையொப்பம் இட்டு பிரபாகரனிடம் கொடுத்த 22 மந்தைகளின் கூட்டமே தமிழ் தேசியக் கூட்டமைப்பா? மரண சாசனத்தை பொட்டனிடம் ஒப்படைத்த இந்தக் கூட்டத்தை வேறு எப்படி அழைப்பது. தன்மானத்தை தமிழ் செல்வனிடம் அடகு வைத்த இவர்கள் மனிதர்களா? போருக்கு பிந்தைய 22 மந்தைகளின் பத்தரிகைப் பேட்டிகள் இவற்றிற்கு ஆதாரமாக அமைந்தன என்று நிறுவ வேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வன்னிக்கு அழைத்து தமிழ்செல்வனால் சேவக உத்தரவு இட்டபோது கை கட்டி, வாய் பொத்தி, மூச்சு அடக்கி நின்றபோது எம்மில் பலர் இதனைக்கண்டு ‘பூரித்து’ போனதுண்டு.
புலிகளுக்கு வால் ஆட்டும் நாய்களாகவும். தங்களின் பிழைப்புக்களை நடத்தும் சுயநலவாதிகளாகவும் நாற்காலிகளை கட்டிக்கொண்டு அழும் அழுகுண்ணிகளாகவும் மட்டுமே மேற்கூறிய கோஷ்டிகளால் உருவாக்கப்பட்டு மந்தைக் கூட்டமாக இருந்ததுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு . இவ் மந்தைக் கூட்டம் புலிகளின் கால கட்டத்தில் தமது ‘விருப்புக்கு’ இணங்க சுயமாக எதாவது முடிவுகளை, செயற்பாடுகளை கொண்டிருந்தார்களா? அப்படி யாரும் செயற்பட முற்பட்டிருந்தால் இன்று அவர்களின் சவக்கிடங்குகளின் மேல் புல்லு அல்லவா முளைத்திருக்கும்?
புலிகளுக்க சேவகம் செய்யும் கூட்டமாக இருந்ததே தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்த ஒரே ஒரு வேலைத்திட்டம். இதனை அவர்களும், பொதுமக்களும், புலிகளும், புலம் பெயர் தமிழர்களும் மறுக்க முடியுமா? சரி இவர்களின் எஜமானர்கள் புலிகளிடம் ஒரு கொள்கை, கோட்பாடு, அமைப்பு, வேலைத்திட்டம் என்று எதாவது இருந்தனவா? அப்படி இருந்திருந்தால் முள்ளிவாக்காலில் முழம்தாழ் இட்டு மண்யிட்டு போர் முடிந்திருக்குமா? கடந்த கால உலக வரலாற்றில் முள்ளிவாய்காலை விட மோசமான கொலைகளுடன் இல்லாமல் செய்யபட்ட? பல போராட்டங்கள் மீண்டும் முழு வீச்சுடன் புடம் போட்டு எழுந்து வந்ததற்கு முக்கிய காரணம் அவர்களிடம் இருந்த கொள்கை, கோட்பாடு, அமைப்பு, வேலைத்திட்டம் ஆகும். புலம் பெயர் நாடுகளில் உருத்திர குமாரனின் ‘நாடு கடந்த தனி அரசு’ மீண்டும் முழு வீச்சுடன் எழுந்து வரும் முயற்சி என்று யாரும் கதையளப்பீர்களானால்; உங்களை யாராலும் திருத்த முடியாத அறிவிலிகள் என்று கூறுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளவும். எனக்கு வேறு ‘நல்ல’ வார்த்தைகள் கிடைக்கவில்லை.
இவ்வளவு ஆலாபனைகளும் ஏன் என்று முணு முணுப்பது எனக்கு கேட்கின்றது. ஆமாம் இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக எடுத்த முடிவை யாபேரும் இன்ற ஊடக வாயிலாக அறிந்திருப்பீர்கள். இதில் அதிசயப்படவோ அல்லது இதனை முக்கியப்படுத்திப் பேசவோ ஏதும் இல்லை. வரும் ஜனாதிபதித் தேர்தல் இதனை நீரூபித்து காட்டும் முகமாக வெற்றிகள் நிர்ணயம் செய்யப்படும்.
தமிழ் காங்கிரசில் ஆரம்பித்து தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக புலிகள் வரை ஐக்கிய தேசியக் கட்சியைதான் தமது நண்பனாகவும், விசுவாசியாகவும், மீட்போனாகவும் சுவீகரிச்சுக் கொண்டு வந்தததே பிற்போக்கு தமிழர் கட்சிகளின் வரலாறு. இதில் இறுதியில் வந்த முடிவு, தற்போது தினம் தினம் கூடிக் கூடி இறுதியில் தாமே கரைந்து போன பின்பு சம்மந்தனும், சுரேஷ{ம் எடுத்த முடிவு சரத்பொன்சேகாவை ஆதரித்தல் என்ற முடிவு. ‘இல்லாத’ தமிழ் தேசியக் கூட்டமைப்பு அப்படியொரு முடிவை எடுக்க மாட்டாது என்று யாரும் எதிர்பார்த்தால் அதுதான் முட்டாள்தனமான எதிர்பார்பாக இருந்திருக்க முடியும்;.
தமது வர்க்க நலன்களை நிலைநாட்ட ஏகாதிபத்திய சார்பு ‘சிங்கள தலைகளும்’ ‘தமிழ் தலைகளும்’ எப்போதும் தமக்குள் சமரசம் செய்து இணைந்து கொள்வார்கள். இவர்களுடன் மலையக தோட்டத் துரைமார்களும், கொழும்பு தமிழ் பேசும் முதலாளி முதலைகளும் இணைந்து ஊதுவர். அமெரிக்காவுடன் ‘கதைத்து மீண்ட பின்பு’ சரத்பொன்சேகா எடுத்த முடிவே தேர்தலில் போட்டியிடுவது என்பது. சரத்தின் இந்த மீட்சியின் பின்னணியில் “சர்வதேச போர்க் குற்றவாளி’ விசாரணை ‘கிறின் கார்ட்’ சரத் பொன்சேகாவிற்கு ‘இல்லாமல்’ போனதன் பின்னணி இதுதான். அன்புக்கட்டளைகளுக்கு இணங்கவே தோல்வியை தன்னகத்தே கொண்ட ரணில் விக்கிரமசிங்காவும் மௌனமாக ஒதுங்கி வழிவிட்டார் என்பதும் ஆழமாக ஆய்வு செய்தால் புரிந்து கொள்ள முடியும்;.
சரிந்து சகதிக்குள் வீழ்ந்து வரும் அமெரிக்க காகித தரகுப் பொருளாதாரத்தையும் தாங்கிப்பிடிக்க முடியாமல் போவதும், தமது பாதுகாப்பிற்கு மனிதனின் உடல் உறுப்புக்களை ஊடுருவிப் பார்க்கும் ‘ஸ்கானர்’ களையும் நம்பும் அமெரிக்காவிற்கு சரத் பொன்சேகாவின் தோல்வி மீண்டும் ஒரு பாடம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து போயச்; சேரும்;. புஷ் போய் ஒபமா வந்தாலும் ஆளும் வர்க்கம் அப்படியே இருக்கும்வரை மீண்டும் ‘பழைய குருடி கதவைத்திறவடி’ என்பதை விட வேறு எதனை உலக மக்களால் அமெரிக்காவிடம் எதிர் பார்க்க முடியும்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம் இலங்கையில் தேசிய அளவில் ஜனாதிபதியாக ஒருவரை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் எல்லாம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் ஒவ்வெரு முறையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிற்கே தமது அதிகளவிலான ஆதரவை கொடுத்திருக்கின்றனர் என்பதே புள்ளிவிபரங்கள் சொல்லும் செய்திகள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவர் போட்டியிட்ட காலத்திலும் இதுவே நடைபெற்றது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தை சமாதான பிராந்தியமாக பேணுவதில் இதுவரை இலங்கை மக்கள்(குறிப்பாக தமிழ் பேசும் மக்கள்) சரியான நிலைப்பாட்டையே எடுத்து ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதனை நீரூபிப்பார்கள் மக்கள். ஆப்கானிலும், பாகிஸ்தானிலும், பிலிப்பைன்சிலும், ஈராக்கிலும் ‘சமாதானம்’ செய்யும் வெடிகுண்டுகளை இலங்கையிலும் சர்வதேச சமாதானப் படைகள் என்ற போர்வையில் நுளையவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதில் வியட்நாமுடனும், சீனாவுடனும், இந்தியாவுடனும், ரஷ்யாவுடனும், ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் கை கோர்பார்கள் என நாம் நம்புகின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களிக் அனுமதிக்கப்பட்டிருந்தால் மேற் கூறிய வரலாற்றுப் பதிவு மீண்டும் வெள்ளிடைமலையாக நிருபிக்கப்பட்டிருக்கும். எனவே ஜனவரி 26 நடைபெறப் போகும் தேர்தலில் சம்மந்தன் கோஷ்டியின் சரத்பொன்சேகா ஆதரவு நிலைப்பாடு சரத் பொன்சேகாவிற்கு வாக்குக்களை அள்ளி வழங்காது. மாறாக மகிந்தாவிற்கே அதிக வாக்குக்களை வடக்கு கிழக்கு மக்கள் அள்ளி வழங்கப் போகின்றார்கள். சம்மந்தரும், சுரேஸ{ம் வெற்றி பெறுபவரிடம் மீண்டும் ஒரு பதவிச் சமரசத்திற்கு தூது போவதை நாம் எம் வாழ் நாளில் பார்க்கத்தான் போகின்றோம். அது வேறு யாரிடமும் அல்ல ராஜபக்ஷ சகோதர்களிடம்தான்.
சரத்பொன்சேகாவிற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தேர்தலில் குதித்திருந்தால் சரத் பொன்சேகாவைவிட ஒரு வாக்கு ஆகினும் வடக்கு, கிழக்கில் இருந்து பெற்று இருப்பார். கருணாவின் பிரிவிற்கு நானே காரணம் என்று ‘வீரையா’ என்று முண்டாசு கட்டியதை சற்றே மறந்து விட்டு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ‘நண்பனுக்கு’ ஒரு மாலையேனும் கூடப் போட்டிருப்பார்கள். என்ன செய்ய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் என்று ஒட்டியிருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவிடாமல் ரணிலின் எஜமானர்கள் கைக் கட்டு அல்லவா போட்டு விட்டார்கள்.
ரணில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகிந்தாவிற்கே கூடுதல் வாக்குக்கள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களால் வழங்கப்பட்டிருக்கும். வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை என்று பார்க்கும் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைமைகளே கடந்த காலங்களில் அதிகம் காணப்பட்டு வந்திருக்கினறன. இம்முறை போரினால் ஏற்பட்ட வடுக்கள் வன்னி மக்களை தேர்தலில் சற்ற ஆர்வம் அற்று இருக்கும் நிலைமைகளுக்கு தள்ளினாலும் ஏனைய வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீதான வெறுப்பின்மை ஐக்கிய தேசியக்கட்சியின் மீதான வெறுப்பின்மையை விட குறைவாகத்தான் இருக்கும் நிலைமைகளே அங்கு இருக்கின்றன என்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சரத் பொன்சேகா மீதான ‘விசுவாசக் காந்தர்வ மணம்’ ‘தமிழர், முஸ்லீம்கள் இலங்கைக்கு வந்த விருந்தாளிகள். அவர்கள் ‘சும்மா’ இருந்து விட்டு போகட்டும்’, ‘யுத்தத்தின் பின்னால் மேலும் இராணுவ முகாங்களை தமிழர் பகுதியில் அமைக்க வேண்டும்’. ‘அகதி முகாம்களில் உள்ளவர்களை உடன் விடுதலை செய்யத் தேவையில்லை’ ‘சரணடைய வந்தவர்களை கொல்லுமாறு கோதபாய உத்தவிட்டார் என்று கூறிவிட்டு பின்பு நான் கூறவில்லை’ போன்ற காதல் மொழிகளினால் ஏற்பட்டது என்பதை நாம் நம்புவோம். கூடவே இணைந்திருந்த வடக்கு கிழக்கை அவசரமாக சட்ட மூலம் நீதி மன்றத்தால் பிரிப்பதே வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் என்பதை தன்னகத்தே கொண்ட ஜேவிபியின் பொது வேட்பாளரை நாம் ஆதரிப்பதே மிகச்சரியான முடிவு என்று செயற்படும் சம்மந்தன் கோஷ்டிக்கு தமிழ் பேசும் மக்கள் இத் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும், புகட்டுவார்கள். கூடவே சந்திரிகா அம்மையாரின் முன் மொழிந்த சிறந்த அரசியல் தீர்வுத்திட்டதை சம்மந்தன் கோஷ்டியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பாராளுமன்றத்தில் இல்லாமல் செய்ததை நாம் மறக்கவில்லை என்பதை இந்தத் தேர்தல் மூலம் தமிழ் பேசும் மக்கள் உணர்த்த வேண்டும். உணர்த்துவார்கள்
அது சரி பொன்சேகாவிற்கு வெறும் 40 நாட்கள்தான் அரசியல் வேலை அனுபவம் உண்டு. அவரிடம் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டததை எதிர்பார்க்க முடியாது? ஆனால் 60 வருடகாலத்திற்கு மேலான வரலாறு கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியிடம் என்ன தீர்வுத் திட்டம் உள்ளது?. இரண்டு ஆயுதப் போராட்டங்களையும் 40 வருடகால அரசியல் அனுபவத்தையும் உடைய ஜேவிபி இடம் எதாவது தீர்வுத் திட்டம்(வரைபு) உள்ளதா? புலிகளின் மணடி;யிடலுக்குப் பின்னர் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வரைகின்றோம் என்ற புறப்பட்ட சம்மந்தன் கோஷ்டியிடம் இதோபோல் எதாவதை எதிர்பார்கலாமா? இவர்கள் எல்லோரிடமும் இரக்கும் முக்கிய ஒற்றுமை, இவர்கள் யாரிடமும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வத்திட்ட வரைபுகள் ஏதும் இல்லை. கூடவே சரியோ பிழையோ வரைபில் ஈடுபட்ட திஸவிதாரணவுடன் இணைந்து வேலை செய்த அனுபவமும் இல்லை. இவர்களை நம்பி தமிழ் மக்கள் வோட்டு போடுவார்களாம்? ம்….. நல்லாத்தான் கயிறு விடுகின்றார்கள், திரிக்கிறார்கள்.
அது சரி சிவாஜிலிங்கம் சம்மந்தர் முன் தோன்றினால் சம்மந்தர் என்ன பேசிக் கொள்வார் சிவாஜிலிங்கத்திடம்?
(சாகரன்) (தை 06, 2009)
|