a_Pen

முதற்பக்கம்

கட்டுரைகள்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்             பெண்ணியம்        புதியபாதை                      அலை                       பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/  srilankans.org.au              www.lankamuslim.org   Communist party srilanka

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           29.01.2010

உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்ற பணி ஆரம்பம்: A – 9 வீதி 24 மணிநேரமும் திறப்பு

சரணடைந்த புலி உறுப்பினர்கள் 1000 பேர் விடுதலை

ஏ-9 வீதி 24 மணி நேரமும் திறந்திருக்கும் மென அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கு அபிவிருத் திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.

யாழ்ப்பாணத்திலும், யாழ் தீவகப் பகுதியிலும் நேற்று நடந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், இந்த அறிவிப்பை விடுத்தார்.

ஏ-9 நெடுஞ்சாலை 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருப்பதால் இதனூடாகப் பயணம் செய்வதற்கு எவ்வகையான முன்அனுமதியும் பெறத் தேவையில்லை என அவர் கூறினார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் பசில் ராஜபக்ஷ எம்.பியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

1000 பேர் விடுதலை

இதேவேளை, படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 1000 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்படுவதாகவும் பசில் ராஜபக்ஷ அறிவித்தார்.

வேலணை மத்திய கல்லூரியில் கடற்றொழிலாளருக்கு உதவி வழங்கும் வைபவம் இடம் பெற்றது. பெருமளவில் மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

யுத்த காலத்தில் சரணடைந்தவர்களில் 12,000பேர் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே 1000பேர் விடுதலை செய்யப்பட வுள்ளனரென்றார்.

ஏனையவர்களைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதெனவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயங்கனில் மீள்குடியேற்றம்

இதற்கிடையில் யாழ்ப்பாணக் குடா நாட்டில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கனில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய் பிரதேசங்களில் நேற்று 509 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டன.

இதுதொடர்பான நிகழ்வு, தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிநி, வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்னாண்டோ உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் இதில் பங்குகொண்டனர்.

தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய் பிரதேசங்கனில் முதற் கட்டமாக நேற்று 509 குடும்பங்களைச் சேர்ந்த 1862 பேர் மீள்குடியேற்றப்பட்டனர்.

மேற்படி பிரதேசங்கள் இதுகாலவரையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. ஏற்கனவே, 500 மீற்றர் தூரம் பாதுகாப்பு வலயங்களாக வரையறுக்கப்பட்டிருந்தன. இதனை முற்றாக `க்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியேற்றப்பட்டவர்களில் 491 பேர் மாணவர்களாகும். இவர்கள் உட்பட 1000 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பசில் ராஜபக்ஷ எம்.பி. இவைகளை வழங்கினார்.

இதைவிடவும், மீள்குடியேறிய ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக நேற்று ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5000 ரூபாவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நடந்த நிகழ்வை முடித்துக்கொண்டு பசில் ராஜபக்ஷ, Xரிமலை நகுலேஸ்வரத்திற்குச் சென்று வழிபாடுகனில் ஈடுபட்டார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நண்பகல் நடந்த நிகழ்வொன்நிலும் பசில் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

பின்னர் வேலணைக்குச் சென்ற அவர், பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாறறினார்.

அவர் அங்கு கூநியதாவது :-கொழும்பிலிருந்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் இருந்தாலும் சரி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தரும் அன்புத் தொல்லை அபாரமானது. வடக்கு வாழ் தமிழ் மக்கனின் பிரச்சினைகள் பற்றியே அவர் எங்களுடன் பேசிவருகிறார். அவரது சிந்தனை சதா வடக்கு மக்கள் பறறியதாகவே இருக்கிறது.

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்களுடன் வந்து தனிப்பட்ட விடயங்களே பேசுகின்றனர். விசா பெறுவதும், வெளிநாடு செல்வது தொடர்பாகவுமே பேசுகின்றனர். தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக அவர்கள் பேசுவதே கிடையாது.

பாராளுமன்றத்தில் எதிரணி அரசியலைச் செய்து கொண்டு செயற்படுகின்றனர். சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகின்றனர். அதி உயர் பாதுகாப்பு வலயத்தின் விஸ்தீரணத்தைக் குறைத்துள்ளோம். அது முற்றுமுழுதாகத் தீர்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

 
 

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4

wanni

இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையால  (துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

புலிப் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன்  கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்ப