a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

உணர்ச்சியூட்டும் பேச்சுகளால் அறுபது வருடங்கள் வீணாகின உருப்படியான கொள்கை தேவை

ஜீவகன்

இப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள ஒரு கட்டுரையில் கூறியிருப்பது போல, எப்போதும் போல் இந்தத் தேர்தலிலும் இனப் பிரச்சினையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பிரச்சினையாக முன்வைக்கின்றது. ஒவ்வொருதேர்தலிலும் தமிழ் மக்கள் ‘இனப் பிரச்சினையின் தீர்வுக்காக’ வாக்களித்த போதிலும் இன்னும் தீர்வு கிட்டவில்லை. பூதம் வளர்வது போலப் பிரச்சினை வளர்கின்றது.

இந்த மாதிரிப் போனால், இனப் பிரச்சினை சதாகாலப் பிரச்சினை ஆகிவிடும். காலப் போக்கில் அது மக்களை விழுங்கிவிடும். அந்த நிலை வருவதற்கு முன் மக்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இனப் பிரச்சினைக்கு வருவதற்கு முன் இன்னொரு விடயம். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்ற தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் சிறிதளவேனும் அக்கறை இல்லாததற்கான காரணம் விளங்கவில்லை.

உதாரணத்துக்கு வட மாகாணத்தை எடுத்துப் பார்ப்போம். தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை இந்த மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தசாப்தங்களாக மாகாண அபிவிருத்தியில் அக்கறை செலுத்தவில்லை. வட மாகாண மக்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தான் வடக்கு அபிவிருத்தியைக் காண்கின்றது. ஆனால் இதற்கும் இந்தத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இந்த அபிவிருத்திக்குக் காரணகர்த்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இனப் பிரச்சினைக்கு வருவோம் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஆரம்பிக்கும் தேர்தலாக இத் தேர்தல் அமைவதை உறுதிப்படுத்த வேண்டியவர்கள் வாக்காளர்கள். உணர்ச்சியூட்டும் வார்த்தைகளுக்காக அல்லாமல் உருப்படியான கொள்கைகளுக்காக வாக்களிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும்.

உலக சாதனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிச் சிலர் கூறும் ஒரு சங்கதி இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகின்றது. இரண்டு உலக சாதனைகளுடன் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றதாம்.

சொந்த இனத்தவர்களையே பேரழிவுக்குள் தள்ளியது ஒரு சாதனை. தனிநாட்டுக்காகப் புலிகள் ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களின் பேரழிவுக்கு வழிவகுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் தொடர்ந்து செயற்பட்டதும் புலிகளின் அரசியல் முகமாகவே. எனவே புலிகளினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இவர்களும் பொறுப்பாளிகள்.

தீர்வுக்கான கொள்கை இல்லாமலே இனப் பிரச்சினை பற்றியும் தீர்வு பற்றியும் பேசுவது இரண்டாவது சாதனை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடிக் கட்சிகள் ஏதாவதொரு கொள்கையை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டன. தமிழரசுக் கட்சி சமஷ்டியை முன்வைத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் போட்டியிட்ட போது புலிகளை ஏக தலைமையாகப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் அதுவும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. இப்போது கூட்டமைப்பு அதன் கொள்கைத் திட்டத்தை இதுவரை வெளியிடவில்லை.

தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்றுதான் நேற்று வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். தீர்வுக்கான கொள்கை கூட்டமைப்பிடம் இல்லை என்றும் இப் பத்தி சுட்டிக்காட்டிய பின் சம்பந்தர் புதுக்கதை பேசுகிறார்.

ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்திருப்பதாகவும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இத் திட்டம் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் என்றும் திருமலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சம்பந்தன் கூறினார்.
 
சம்பந்தனின் இக் கூற்றிலிருந்து பல கேள்விகள் எழுகின்றன.

தீர்வுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கின்றதென்றால் அதை அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கலாமே. மக்களுக்குத் தெரியாமல் மூடுமந்திரமாகத் தீர்வுத் திட்டத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் வாக்குக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? தாங்கள் எதற்காக வாக்களிக்கின்றார்கள் என்பதை மக்கள் அறியக் கூடாதா?

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இத்திட்டம் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் என்றால், இத் தீர்வுத் திட்டம் பற்றி எந்த முடிவும் இப்போது வேட்பாளர்களுக்கு இல்லை என்பதே அர்த்தம். இனிமேல் தான் அவர்கள் இதுபற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் அக் கட்சியின் பிரதான கொள்கை பற்றிய தெளிவான முடிவு இல்லாமலே வாக்குக் கேட்கின்றார்கள் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

முரண்பாடுகள்

மேலே கூறிய முரண்பாடுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் கூட்டமைப்பிடம் இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. எவ்வாறாயினும், ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலான தீர்வுத் திட்டம் இருப்பதாக அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் சில கேள்விகள் எழுகின்றன.

ஒஸ்லோவில் பிரகடனம் எதுவும் வெளியிடப்படவில்லை. நோர்வே வெளிவிவகார அமைச்சு பத்திரிகை அறிக்கையொன்றை மாத்திரம் வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் சாத்தியத் தன்மை குறித்து ஆராய்வதற்கு இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர் என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம். இதுவொன்றும் தமிழ் அரசு வழிச் சமூகத்துக்குப் புதியதல்ல. தமிழரசுக் கட்சியின் கொள்கை சமஷ்டி, பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டது.

சமஷ்டித் தீர்வு இப்படித்தான் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இல்லை. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சமஷ்டி முறைகள் உள்ளன. உதாரணமாக, இந்தியாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டிக்கும் கனடாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டிக்குமிடையே வேறுபாடு உண்டு.

எனவே, சமஷ்டித் தீர்வு என்று பொதுப் படையாகக் கூறாமல் அது எவ்வாறானது என விளக்கமாகக் கூறவேண்டிய கடப்பாடு அத்தீர்வை முன்வைக்கும் கட்சிக்கு உண்டு.

தீர்வொன்றை முன்வைப்பது மாத்திரம் போதாது. அதை வென்றெடுக்கவும் வேண்டும். வென்றெடுப்பதற்குப் பொருத்தமான வழிமுறைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தீர்வுக் கோரிக்கை தன்பாட்டில் கடதாசியில் இருக்கும். பிரச்சினை தன்பாட்டில் வளரும். பாதிக்கப்படுபவர்கள் மக்கள்.

இன்றைய நிலையில் தீர்வை வென்றெடுப்பதற்கு எவ்வாறான அணுகுமுறையைக் கூட்டமைப்புத் தலைவர்கள் பின்பற்றப் போகின்றார்கள் என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. ஏனென்றால் இனப் பிரச்சினை தீர்க்கப்படாததால் இதுவரை பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் மக்களே.

தலைவர்கள் சுகபோகத்துடனேயே வாழ்கின்றார்கள்.

சரியான அணுகுமுறையைப் பின்பற்றாமல் எந்தத் தீர்வை முன்வைத்தாலும் அது அறுபது வருட கால சூன்யத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும்.

ஐ.தே.கவின் நிஜமுகம்

சிறுபான்மையினரின் நண்பன் என்ற முகமூடியுடனேயே ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் தேர்தல் களத்துக்கு வருகின்றது. இந்த முகமூடி வட கொழும்பில் கிழிந்து நிஜமுகம் கோரமாகத் தெரிந்தது.

ஐ. தே. கவின் வடகொழும்புப் பிரமுகர் ராம். இவருடைய பெயர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்தது. கடைசி நேரத்தில் அவரது பெயரைக் கட்சித் தலைவர் நீக்கிவிட்டார். ரவி கருணாநாயக எதிர்ப்புத் தெரிவித்ததே காரணம். ராம் என்ற தனி மனிதனின் பெயர் நீக்கப்பட்டதாக இதைக் கருத முடியாது. கொழும்பு மாவட்டம் முழுவதிலும் வாழும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களான தமிழ் மக்களின் அடையாளமாகவே ராமைக் கருதவேண்டும். ஏனென்றால் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அவர் ஒருவர் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்காரரான தமிழர். அவரை நீக்கியதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களான தமிழர்கள் அனைவரினதும் முகத்தில் ரணில் கரி பூசிவிட்டார்.

இதுதான் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்கு நீட்டும் நேசக்கரம்.

சரத் என். சில்வா

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்து நீதித்துறை சார்ந்தவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கின்றது. பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது எனப் பிரகடனப்படுத்துமாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்றது.

நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயமொன்று தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.பாராளுமன்றத்திலும் அனுமதிக்கப்படமாட்டாது. பிரதம நீதியரசராகப் பதவி வகித்தவருக்கு இது தெரியாததல்ல.

அப்படியிருந்தும் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என்று இவர் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த கதைபோல, முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்த கருத்தின் உடனடிப் பிரதிபலிப்பாகப் பல அழுக்குகள் பகிரங்க சலவைக்கு வருகின்றன.

இவர் பதவியில் இருந்த கால சம்பவங்கள் பலவற்றறைப் பலர் கிளறுகின்றார்கள். பாராளுமன்றத் திடல், வீட்டுக்குச் செல்லும் போது, வெலிக்கடை பொலிஸ் நிலையம் என்றெல்லாம் பேச்சுகள் அடிபடுகின்றன.

இவர் வழங்கிய தீர்ப்புகளை மீள் பரிசீலனை செய்ய ஆணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்குகின்றது.

- தினகரன்

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!