|
தற்போதை சூழ்நிலையில் தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து செயற்பட வாய்ப்புகள் இல்லை
- தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன்
புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவுடன் சந்திப்பு
சிறுபான்மை தமிழ்கட்சிகள் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைகளை எடுத்து கூறுவதற்க்காக தனித்துவத்துடன் செயல்படவேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் கடமை என ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் அக்கட்சியின் வன்னி மாவட்ட தலைமைவேட்பாளருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறுதுறை செயலாளர் நிருபாமா ராவ்யை சந்தித்தித்து அம்மக்களின் நாளாந்த தேவைகள் தொடர்பாக எடுத்து கூறியதாகவும் அதனை மிகவும் அக்கறையுடன் செவிமடுத்தாகவும் தெரிவித்த அவர் வன்னிமக்கள் தமது உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்வதால் அவர்களின் அடிப்படை தேவைகளை நிவிர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொள்ளுவதாகவும் தெரிவித்தார். தற்போது நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்ற அதேவேளை பல புதிய புதிய அரசில் கட்சிகளையும் பல சுயோட்சை குழுக்களையும் அரசாங்கம் உருவாக்கி இத் தேர்தலில் போட்டியிட வைத்துள்ள போதிலும் மக்கள் மிக தெளிவாக அவர்களை இனம் கண்டுகொண்டு உள்ளதாகவும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் அக்கட்சியின் வன்னி மாவட்ட தலைமைவேட்பாளருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்
தற்போதை சூழ்நிலையில் தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து செயற்பட வாய்ப்புகள் இல்லை என தெரிவித்த அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒஸ்லே பிரகடனத்தின் அடிப்படையிலும் தமிழர் விடுதலை கூட்டணி இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான அதிகாரமுறை போன்றும் தமிழ்காங்கிரஸ் இருதேசம் ஒரு நாடு என்ற முறையிலும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா மற்றும் தமிழ் ஈழ் மக்கள் விடுதலை கழகம் சமஸ்டிமுறையிலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பதிமூன்றாவது அரசியல் அமைப்பு சட்டதிருத்தபடியும் தீர்வுதிட்டங்களை முன்வைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு உள்ளதாக சுட்டிகாட்டிய அவர் தேர்தல் முடிந்தவுடன் தெரிவுசெய்படுகின்ற நாடளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட எண்ணம் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்
அண்மையில் பிரித்தானியாவில் உலக தமிழர் பேரவையினரால் கூட்டபட்ட கூட்டத்தில் பிரித்தானியாவின் வெளியுறுதுறை அமைச்சர் கலந்து கொண்டதும் அதன் பின்பு பிரித்தானியா பிரதமர் சந்திப்புகளை நடாத்தியுதும் பிரித்தானியாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்தலில் தமிழர்களின் வாக்குளை பெறுவதற்காகவே என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளிநாடுகளில் நடைபெறும் நாடுகடந்த தமிழ் ஈழம் வட்டுகோட்டை தீர்மானம் போன்றவைகளை பற்றி இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அக்கறை கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார் எதிhவரும் நாடளுமன்ற தேர்தலில் மட்டகளப்பிலும் வன்னியிலும் நங்கூற சின்னத்திலும் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியினர்ருடன் இணைந்து மெழுகுவர்த்தி சின்னத்திலும் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார் இக்கலந்துரையாடலில் ரிபிசியின் அரசியல் ஆய்வாலர்களான விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனியில் இருந்து ஜெகநாதன ரிபிசியின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவுடன் சந்திப்பு
- புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திரு.தி.சிறீதரன் ஆகியோர் நேற்றுமாலை 7.00 மணியளவில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவுடன், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, உதவித் தூதுவர் விக்ரம், அரசியல் செயலர் சியாம் ஆகியோரும் புதுடில்லியிலிருந்து வருகை தந்திருந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தேர்தல் நிலை சம்பந்தமாகவும், வடக்கில் மீள்குடியேற்றங்கள் மற்றும் அகதி முகாம்களின் நிலைமைகள் தொடர்பிலும் நிருபமா ராவ், சித்தார்;த்தன் மற்றும் சிறீதரன் ஆகியோரிடம் விரிவாக கேட்டறிந்து கொண்டார். இதன்போது தற்போதைய தேவைகள் சம்பந்தமாகவும் முக்கியமாக மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுடைய போக்குவரத்துக்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டதுடன், அவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட வேண்டுமென்ற விடயத்தையும் இவர்கள் நிருபமா ராவுக்கு எடுத்துக் கூறினார்கள். அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தமது உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்களையும், வாகனங்களையும் இழந்துள்ளதை சுட்டிக்காட்டியதுடன், ஏதோவொரு வகையில் அவர்களுக்கு உழவு இயந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள விவசாய அமைப்புக்களின் ஊடாக வழங்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்கள். அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்படுதல், இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படுதல், தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட சிறார்களை விடுவித்தல் என்பன தொடர்பிலும் இந்திய வெளியுறவுச் செயலரிடம் இருவரும் எடுத்துக் கூறினார்கள். இதனையடுத்து இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நிருபமா ராவ் கருத்துரைக்கையில், தமிழ்க் கட்சிகளிடையே புரிந்துணர்வொன்று ஏற்பட்டால் மாத்திரமே அரசியல் தீர்வு விடயத்தில் தாங்கள் ஏதோவோரு விதத்தில் உதவ முடியுமென்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். அப்படியான ஒரு புரிந்துணர்வோ அல்லதொரு ஒன்றுமையோ தேர்தலுக்கு முன்பு வர முடியாதென்பதையும், தேர்தலின் பின்பே வரமுடியுமென்பதையும் சித்தார்த்தன் அவர்கள் இதன்போது இந்திய வெளியுறவுச் செயலருக்கு எடுத்துக் கூறினார்.
|