Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி.நியூஸ்
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
காந்தீயம்
நம்நாடு
தாயகம்
தம.வி.கழகம்(புளொட்)
தமிழலை
த.வி.கூட்டணி
தமிழ்நியூஸ்வெப்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
எங்கள் தேசம்

Asian Truth

Asian Guardian

Asientribune

Independentsl

Lines-Magazine

Lanka Muslims

lankaguardian.Blog

Srilankanmic

Membres.Lycos

Tamilaffairs

Sldf

The lka academic

Tamil Week

Uthr

a_Thenee_head02

14.05.2008                   Vol.8                       Issue: 75

தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியின் 'இலங்கை இனப்பிரச்சனையில் எமது ஐக்கியம்" கருத்தரங்கு

 பிரான்ஸில் நடைபெற்ற கருத்தரங்கு தொடர்பான பத்திரிகை அறிக்கை

04-05-2008 ஞயிறு பிரான்ஸில் தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியினால் 'இலங்கை இனப்பிரச்சனையில் எமது ஐக்கியம்" என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று ‘சபாலிங்கம் நினைவு மண்டபத்தில்’ நடைபெற்றது. காலை 11மணியில் இருந்து மாலை வரை நடைபெற்ற இன் நிகழ்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து குறிப்பாக கனடா, நோர்வே, சுவிற்ஸலாந்து, பிரித்தானியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் பல அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வாக தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்துப் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தோழர் கிருபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் இரு தசாப்த்தங்களிற்கு பின் அரசியல்கட்சிகள் இணைந்து பிரான்சில் இவ்வாறான கருத்தரங்கை நிகழ்த்துவது வரலாற்று நிகழ்வு என்றும், இந்த நிலமை உருவாகுவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழர்கள் நண்பர்கள் குறிப்பாக சமகாலத்தில் எம்மோடு அரசியல் இலக்கிய பணியாற்றி மறைந்த தோழர்கள் சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஐ பராமாஸ்ரர் போன்றொரையும் நினைவு கூர்ந்தார்.

 தோடர்ந்து மோகன் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சிகளை சிறப்பாக நெறிப்படித்தி நடத்தினார்.

ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக இணைந்து வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்கள். அதில் முக்கியமாக ஒற்றை ஆட்சிக்கு அப்பால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட வேண்டும், வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் உருவாக்கப்பட வேண்டும், வேவ்வேறு சமூகங்களின் தனித்துவங்கள் அங்கிகரிக்கப்படவேண்டும், என்பதுவே எமது பிரதான நிலைப்பாடாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.  இவ் அறிக்கையை தோழர் றஞ்சன் அவர்கள் வாசித்தார்.

பிரித்தானியாவில் இருந்து கலந்துகொண்ட அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் உரையாற்றுகையில், இலங்கையில் அரசியல் கூட்டணி அமைப்பது அவசியத் தேவையாகியுள்ளது எனவும், குறிப்பாக சிங்கள பிரதான அரசியல் கட்சிகளும் அவ்வப்போது வௌ;வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதையும் குறிப்பிட்டார். இதே போன்றே தமிழ் கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றன எனவும், இதன் அடிப்படையிலேயே தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா என்பன இணைந்து தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியை அமைத்துள்ளன எனவும் குறிப்பிட்ட அவர், இக் கூட்டணி தேன்னிலங்கையில் உள்ள இடது சாரிகளுடனும் இணைப்பை ஏற்படுத்தியிருப்பது தமிழ் அரசியலில் புதிய பரிமாணம் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கியத்தில் ஊடகங்களின் பங்களிப்பு பற்றி தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் பணிப்பாளர் ராமராஐன் உரையாற்றுகையில், புலம்பெயர்ந்த நாடுகளில் செயல்படும் ஊடகங்கள் இனங்கள் மத்தியில் பிளவுகளையும், முரண்பாடுகளையும், திட்டமிட்டு வளர்ப்பதாகவும், இனவாத கருத்துக்களை புலிகளின் அரசியல் போக்கிற்கு ஏற்றவாறு திரித்து பிரச்சாரப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் இன ஐக்கியத்திற்காகவும், சமூக முன்னேற்றதிற்காகவும், இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் ஆயுத வன்முறைகளுக்கு எதிராகவும், ஐனநாயக பூர்வமாக குரல் கொடுப்பதில் TBCவானோலி கணிசமான பங்கை வகிப்பதாக குறிப்பிட்டார்

இக் கருத்தரங்கில் தமிழ் ஐனநாயக தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஐக்கியத்தை வலியுறுத்திப் பேசினர.;; தோழர் ஜெகநாதன் இலங்கை இனப்பிரச்சனையில் ஐக்கியத்தின் அவசியம் பற்றியும், தோழர் அலெக்ஸ் தமிழ் ஐனநாயக தேசிய கூட்டணியின் உருவாக்கம் பற்றியும், தோழர் சிவா ஐக்கிய முன்னணியின் வேலைத்திட்டங்கள் தோடர்பாகவும,; தோழர் ராஐன் இலங்கை இனப்பிரச்சனையில இளம் சந்ததியினரின் பங்களிப்பு குறித்தும் உரையரற்றினர்.

இதன் பின்னர் இடம் பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு அரசியல் சார்ந்தவர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான ஐக்கிய முன்னணியின் அரசியல் நிலைப்பாடு பற்றியும், மற்றைய தமிழ் அரசியல்கட்சிகளுடனான ஐக்கியம்பற்றியும், சமகால அரசியல் தொடர் பாகவும் சமூக, பிரதேச ரீதியான தனித்துவங்கள் தோடர்பாகவும், தென்னிலங்கை இடதுசாரிகளுடனான ஐக்கியம் தொடர்பான கேள்விகளையும் எழுப்பினார்.

தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியின் வேலைத்திட்டங்களில் இவை தோடர்பாகவும், மேலும் பல விடையங்கள் தோடர்பாகவும் கவனம் எடுக்கப்படும் என பதில் கூறப்பட்டது.

இறுதி நிகழ்வாக தோழர் கரன் நன்றி உரை நிகழ்த்தினார், இவ் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் இவ் நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நிகழ்ச்சி பற்றிய செய்திகளை பிரசுரித்த தேனி மற்றும் இணைய ஊடகங்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்த TBC வானொலிக்கும் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது.

தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணி - பிரான்ஸ் T.D.N.F

 

Refugees_India2

இந்தியாவில் இலங்கை அகதிகள்:

ஜே.வி.பிக்குள் மேலும் பல உடைவுகள் ஏற்படலாம்    

தமிழ் கட்சிகள் - இடதுசாரிகள் கூட்டு எதுவரை?

திபெத் நெருக்கடியின் உண்மையும் பொய்யும்

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை -முள்ளை முள்ளால் எடுக்கும் இராணுவம்

வன்னி கிளைமோர் தாக்குதல்கள் எழுப்பும் சில கேள்விகள்!

“மனித உரிமைவாதி” கருணாரட்ணம் அடிகளாரின் அகால மரணம்