|
அடம்பன் நகர் படையினர் வசம்: ஆலங்குடா படையினர் கட்டுப்பாட்டில்
அடம்பன் நகர் பகுதியை இன்று வெள்ளிக்கிழமை காலை படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 15 புலி உறுப்பினர்வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ தரப்பில் இரு இராணுவ வீரர்கள் பலியானதாகவும் 7 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுக்காப்பிற்க்கான ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆலங்குடா படையினர் கட்டுப்பாட்டில்
மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆலங்குளம் பிரதேசத்தின் ஒரு பகுதியை படையினர் கைப்பற்நியுள்ளனர். அதேவேளை, மாதோட்டம் பகுதியிலுள்ள புலிகளின் ் மூன்று பதுங்கு குழிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஆறு பதுங்கு குழிகள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னாரில் விசேட படைநகர்வு ஒன்றை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர்ஆலங்குளம் காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தை இலக்கு வைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அங்கு மூண்ட கடும் மோதலின் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆலங்குளம் பிரதேசத்தின் 600 தொடக்கம் 400 வரையான சதுர மீற்றர் நிலப்பரப்பை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை ஆரம்பமான விசேட படை நகர்வு காலை 10.00 மணி வரை நீடித்துள்ளது. அதன் பின்னரே ஆலங்குளம் பிரதேசத்தின் ஒரு பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாலம்பிட்டிப் பிரதேசத்தை படையினா; கைப்பற்றினா;!
புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்படும் வவுனியா பாலம்பிட்டிப் பிரதேசத்தை கடும் சமரின் பின்னர் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல் காரணமாக புலிகள் தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்ட அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 5 புலிகள் கொல்லப்பட்டதாக புலிகளின் தொடர்பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.இதேவேளை மணல்ஆற்றுப் பிரதேசத்தில் முன்னேறும் இராணுவத்தினருக்கு ஆதரவாக நேற்று விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது
|